பிரதேச அலுவலகம் - கிளிநொச்சி
இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய காரியாலயமானது, ‘வணிகங்கள் மீதான கொவிட் 19 பரவலின் தாக்கமும் கையாளும் வழிமுறைகளும்’ பற்றிய இணையவழிக் கருத்தரங்கொன்றினை 08 சனவரி 2021 அன்று நடாத்தியிருந்தது. இக்கருத்தரங்கின் வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்பு திணைக்களத்தைச் சேர்ந்த பிரதி பணிப்பாளர் முனைவர். இ. சிறிதரன் அவர்கள் பங்களித்திருந்தார். இக்கருத்தரங்கில் வணிகர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல தரப்பட்டவர்கள் பங்குபற்றி பயன்பெற்றிருந்தனர் என்பதுடன;;; இது தொடர்பில் ஆர்வமுடையோருக்காக இலங்கை மத்திய வங்கியின் உத்தியோக முகநூல் பக்கத்தில் பதிவுசெய்யப்பட்ட காணொலியானது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய காரியாலயமானது, “நிதியியல் அறிவு” எனும் தலைப்பிலான பயிற்றுவிப்பாளர்களுக்கான இணையவழிப் பயிற்சியொன்றை வங்கித்தொழில் கற்கைகள் ஆய்வு நிலையத்துடன் இணைந்து 25 சனவரி 2021 அன்று யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நடாத்தியிருந்தது. யாழ் மாவட்ட செயலகம் மற்றும் பல்வேறு பிரதேச செயலகங்களிலிருந்து 94 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இவ் இணையவழிக் கருத்தரங்கில் பங்குபற்றி பயனடைந்திருந்தனர். இலங்கை மத்திய வங்கியின் பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த பிரதிப் பணிப்பாளர் முனைவர். இ சிறிதரன் அவர்கள் வளவாளராக பங்களித்திருந்தார்.
இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைக்களத்தின் கூட்டிணைப்புடன் கிளிநொச்சிப் பிரதேச அலுவலகத்தினால் 25 அபிவிருத்தி அலுவலர்களுக்காக 2022 ஒத்தோபர் 28 அன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
இணையப் பக்கம் வடிவமைத்தல் மீதான மெய்நிகர்பயிற்சி நிழ்ச்சித்திட்டம் யாழ்ப்பாண மாவட்டம் மற்றும் வன்னிப் பிராந்தியத்தில் முறையே 2021 நவெம்பர் 05 மற்றும் 19ஆம் திகதிகளில் இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிரதேச அலுவலகத்தினால் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
செல்திறன் வாய்ந்த கொடுகடன் முகாமைத்துவம் மற்றும் வெளிநாட்டிலிருந்து பணவனுப்பல் பற்றிய விழிப்புணர்வு நிழ்ச்சித்திட்டம் சனச அபிவிருத்தி வங்கியின் 25 வாடிக்கையாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிரதேச அலுவலகத்தினால் 2021 திசெம்பர் 03 அன்று கிளிநொச்சியில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.