கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2024 யூலையில் உயர்வடைந்தது, இருந்தும் இலக்கிற்கு கீழேயே காணப்பட்டது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2024 யூலையில் 2.4 சதவீதமாகக் காணப்பட்டது. பணவீக்கமானது இவ்வுயர்வடைதலின் பின்னரும்கூட 5 சதவீதம் கொண்ட இலக்கிடப்பட்ட மட்டத்திற்கு கீழேயே தொடர்ந்தும் காணப்படுகின்றது.

உணவுப் பணவீக்கம், 2024 யூனின்  1.4 சதவீதத்திலிருந்து 2024 யூலையில் 1.5 சதவீதத்திற்கு சிறிதளவு உயர்வடைந்தது. மேலும், உணவல்லாப் பணவீக்கமும் 2024 யூனின் 1.8 சதவீதத்திலிருந்து 2024 யூலையில் 2.8 சதவீதத்திற்கு உயர்வடைந்தது. 

மாதத்திற்கு மாதம் அடிப்படையில், உணவு வகையிலுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட 0.03 சதவீதம் கொண்ட விலை அதிகரிப்புக்களினதும் உணவல்லா வகையின் பொருட்களில் அவதானிக்கப்பட்ட 0.47 சதவீதம் கொண்ட விலை வீழ்ச்சிகளினதும் இணைந்த தாக்கம் காரணமாக  2024 யூலையில்;; கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண், 0.44 சதவீத வீழ்ச்சியொன்றைப் பதிவுசெய்தது. அதேவேளை, பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2024 யூலையில்; 4.4 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது. 

அண்மைய காலத்தில் பணவீக்கமானது 5 சதவீதம் கொண்ட இலக்கிற்கு கீழ் இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. பணவீக்கமானது, நடுத்தர காலத்தில், பொருத்தமான கொள்கை வழிமுறைகளின் மூலம் துணையளிக்கப்பட்டு, இலக்கிடப்பட்ட மட்டத்துடன் படிப்படியாக அணிசேர்ந்தும் அண்மித்தும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.  

முழுவடிவம்

Published Date: 

Wednesday, July 31, 2024