மாகாண ரீதியான குறிகாட்டிகளைப் பயன்படுத்தி தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஆண்டுக்கான பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தித் எண் தொகைகளைப் பிரிப்பதன் மூலம் இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் மதிப்பிடப்பட்ட மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தியானது நாட்டின் பெயரளவிலான மொ.உ. உற்பத்தியின் பாரியளவிலான பங்கிற்கு மேல் மாகாணம் தொடர்ந்தும் வகை கூறியது என்பதனைக் காண்பிக்கின்றது. எவ்வாறாயினும், அண்மைக்காலப் போக்குகளுக்கமைய மொ.உ.உற்பத்தியில் அதன் பங்கு வீழ்ச்சியடைந்து 2017இல் பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் குறுக்கமடைவதற்கு பங்களிப்புச் செய்தது. மத்திய மற்றும் வட மேல் மாகாணங்கள் பெயரளவிலான நியதிகளில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அதிகூடிய பங்களிப்புச் செய்வதில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை வகித்தன.
2017 காலப்பகுதியின் போது, கிழக்கு, வட மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் மாகாண மொ.உ. உற்பத்திப் பங்கில் அதிகரிப்புக்களை அவதானிக்கக்கூடியதாகவிருந்த அதேவேளை மேல், தென், வட மத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாணங்களில் குறைவடைந்தது. மத்திய மற்றும் வட மாகாணங்களின் பங்குகள் மாறாதிருந்தன.