இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு, பஹ்ரைன் இராச்சியத்தின் நிதியியல் உளவறிதல் தேசிய நிலையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை மேற்கொண்டிருக்கின்றது

இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது, பணம் தூயதாக்குதல் மற்றும் அதனுடன் இணைந்த ஊகக் குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடுவதுடன் தொடர்பான குற்றங்களுடன் தொடர்பான நிதியியல் உளவறிதல்களைப் பரிமாறிக்கொள்வதற்காக பிரான்சின் பாரிசில் நடைபெற்ற எக்மவுன்ட் குழுமத்தின் 30 ஆவது கூட்டத்தில், 2024 யூன் 04ஆம் நாளன்று பஹ்ரைன் இராச்சியத்தின் நிதியியல் உளவறிதல் தேசிய நிலையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை மேற்கொண்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது, 2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில் இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

உலகம் முழுவதிலுமுள்ள நிதியியல் உளவறிதல் பிரிவுகள், பெருமளவிற்கு அடிக்கடி பன்னாட்டு ரீதியாக தொடர்புடையனவாகவும் பரந்தளவு குற்ற நடவடிக்கைகளிலிருந்து தோன்றுகின்றனவாகவுமிருக்கின்ற பணம் தூயதாக்கல்/ பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தலின் பொருட்டு, தகவல்களை பரிமாற்றிக்கொள்வதனூடாக அவர்களது உலகளாவிய இணைத்தரப்பினர்களுடனான ஒத்துழைப்புக்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுவருகின்றன. நிதியியல் உளவறிதல் தேசிய நிலையம் - பஹ்ரைன் பணம் தூயதாக்கல்ஃ பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் தொடர்பான தகவல்களை சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றுக்கான மத்திய மையமாக பணியாற்றுகின்றது. நிதியியல் உளவறிதல் பிரிவு - இலங்கையும் இலங்கைக்கான பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் கட்டமைப்பிற்கான மையமாக விளங்குவதுடன் பணம் தூயதாக்கலுக்கெதிரானஃ பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் தொடர்பான சந்தேகத்திற்குரிய நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அல்லது வேறேதேனும் சட்டத்திற்குமாறான நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பரப்புகின்ற மையமாகவும் தொழிற்படுகின்றது.

முழுவடிவம்

Published Date: 

Wednesday, June 19, 2024