கலைச்சொற்கள்
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ச ஞ ட த ந ப ம ய ர ல வ ன ஜ ஷ ஸ ஹ ஏனையவை
சொற்பதம் |
சுருக்கச் சொல் |
விபரணம் |
அட்டை உடமையாளர் | அட்டை வழங்குநரொருவரினால் வழங்கப்பட்ட கொடுப்பனவு அட்டையொன்றைப் பயன்படுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் நபராவார். | |
அட்டை சரிபார்த்தல் பெறுமதி | அ.ச.பெ | அட்டை சரிபார்த்தல் பெறுமதி என்பது கொடுப்பனவு அட்டையின் பின்புறத்தில் மூன்று இலக்கங்களை பொதுவாக காட்டுகின்ற இலக்கமொன்றாகும். கொடுப்பனவை மேற்கொள்ளும் போது (உதாரணம்: இணையவழி அட்டை கொடுக்கல்வாங்கல்கள்) அட்டை உடமையாளர் நேரடியாக பிரசன்னமாகாத போது அட்டை சரிபார்த்தல் பெறுமதி பயன்படுத்தப்படுகின்றது. |
அட்டை வழங்குநர் | கொடுப்பனவு அட்டையை வழங்கி அதன்மூலம் அட்டைஉடமையாளருடன் ஒப்பந்த ரீதியான தொடர்பினுள் நுழைகின்ற நிறுவனமொன்றாகும். | |
அடித்தள அளவுக் குறியீட்டு முறி | ஒப்பீட்டு நியமமொன்றினை வழங்குகின்ற முறி. இதன் அடிப்படையில் மற்றைய முறிகளின் செயலாற்றத்தினை அளவிட முடியும். அரசாங்கத்தின் முறிகள் அடிக்கடி அடித்தள அளவுக்குறியீட்டு முறியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது “அடித்தள அளவுக்குறியீட்டு வழங்கல்” எனவும் குறிப்பிடப்படுகிறது. | |
அடிப்படை அளவீடு | ||
அடிப்படைப் புள்ளிகள் | ||
அண்மிய கள தொடர்பூட்டல் | குறுகிய வீச்சிலான கம்பியற்ற தொழில்நுட்பவியலாகும். பௌதீக ரீதியாக கருவியைத் தொடுவதன் மூலம் அல்லது மிக அண்மிய இடமொன்றில் வைப்பதன் மூலம் ஒருவர் மற்றொருவருடன் நிச்சயமான முறையில் தொடர்பு கொள்வதற்கு அண்மிய களதொடர்பூட்டல் சிப் உடன் கூடிய கருவியை அனுமதிக்கிறது | |
அதிகாரமளிக்கப்பட்ட பணத் தரகர் | அதிகாரமளிக்கப்பட்ட பணத் தரகர் என்பது,2013ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க பணத் தரகுத் தொழில் ஒழுங்குவிதிகளின் கீழ் 2013இன் அதிகாரவளிப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டு, இலங்கையிலுள்ள பணம், பிணையங்கள் மற்றும் வெளிநாட்டு செலாவணிச் சந்தைகளிலும் ஏனைய அங்கீகாரமளிக்கப்பட்ட பன்னாட்டுச் சந்தைகளிலுமுள்ள வாடிக்கையாளர்களுடன் நிதியியல் சாதனங்களின் கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் பணத்தரகு, வெளிநாட்டுச் செலாவணித் தரகு, வங்கிகளுக்கிடையிலான பணத் தரகு வியாபாரங்களில் ஈடுபட்டுள்ள நிதியியல் இடையேற்பாட்டாளர்களைக் குறிக்கிறது. | |
அதிகாரமளிக்கப்பட்ட வணிகர் | 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் கீழ் வங்கியொன்றிற்கு உரிமம் வழங்கப்படுவதன் மீது 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் வெளிநாட்டுச் செலாவணியினைக் கையாள்வதற்கான வணிகராக அதிகாரமளிக்கப்பட்ட வங்கியொன்று. | |
அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்கள் | ||
அதிகாரவரம்பு | அதன் ஒழுங்குவிதிகள் மற்றும் வழிகாட்டல்களுக்கிணங்க அதிகாரியொருவரினால் கட்டுப்படுத்தப்படும் கணனிகளினதும் கருவிகளினதும் வலையமைப்பாகும். | |
அதேநேர மொத்தத் தீர்ப்பனவு | அ.நே.மொ.தீ | |
அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமை | அ.நே.மொ.தீ.மு | அதேநேர தீர்ப்பனவு கொடுப்பனவுகளை இயலச்செய்கின்ற முறைமைகளின் பங்கேற்பாளர்களுக்கிடையிலான கொடுக்கல்வாங்கலில் (மொத்த) அறிவுறுத்தல்களை அல்லது ஏனைய கடப்பாடுகளை தனிப்பட்ட முறையில் மாற்றல்செய்கின்ற முறைமை. இலங்கையிலுள்ள அதே நேர மொத்த தீர்ப்பனவு முறைமை இலங்கை மத்திய வங்கியினால் உடமையாக்கப்பட்டு தொழிற்படுத்தப்பட்டுள்ளது. |
அநுசரணை | அநுசரணை எந்திரமானது வலையமைப்பினை அணுகுவதற்கான சேமிப்பியாக, வாடிக்கையாளராக அல்லது ஏதேனுமொரு கணனியாக இருக்க முடியும். | |
அரச ஒப்பந்ததாரர்களுக்கும் வழங்குநர்களுக்கும் சேர வேண்டிய வெளிநின்ற நிலுவைக் கொடுப்பனவுகளின் ஏற்றுக்கொள்ளல் கடிதம் | கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுக் காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட விசேட கடன் திட்டங்களின் கீழ் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளிலிருந்து கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கான பிணையொன்றாக கடிதமொன்றினை ஒப்பந்ததாரரும் வழங்குநர்களும் பயன்படுத்துவதனை இயலச் செய்யும் விதத்தில் அரசாங்கத்திடமிருந்து, வெளிநிற்கின்ற கொடுப்பனவுகளை உறுதிப்படுத்தும் விதத்தில் அரசாங்கத்தின் ஒப்பந்தாரர்களுக்கும் வழங்குநர்களுக்கும் அரச திறைசேரியினால் வழங்கப்படும் கடிதமாகும். | |
அரசல்லா அமைப்புக்கள் | 1980ஆம் ஆண்டின் 31ஆம் இலக்க தன்னார்வ சமூக பணி அமைப்புக்களின் (பதிவுசெய்தல் மற்றும் மேற்பார்வை) சட்டம் மற்றும் அவை தொடர்பான ஏதேனும் திருத்தங்கள் தொடர்பிலான நியதிகளில் அரசல்லா அமைப்புக்களுக்கான தேசிய செயலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட தன்னார்வ சமூக சேவை அமைப்பு | |
அரச பிணையங்கள் மீதான விளைவு வீதங்கள் | ||
அரச தனியார் பங்குடமை | PPP | |
அரசாங்கத்தின் குறைச் சேமிப்பு | ||
அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் | அரசாங்கத்தின் சார்பில் வர்த்தக நடவடிக்கைகளில் பங்கேற்கச் செய்யும் பொருட்டு அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட சட்ட ரீதியான நிறுவனமொன்றாகும். இது, ஒன்றில் பகுதியளவில் அல்லது முழுமையாகவே அரசாங்கத்திற்குச் சொந்தமானதாக இருப்பதுடன் உண்மையில் இவற்றிடம் குறித்துரைக்கப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான பொறுப்புக்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. | |
அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில் முயற்சிகள் | SOBEs | |
அரசிற்கான தேறிய கொடுகடன் | NCG | |
அலகு உடமையாளர் | முதலீட்டு நம்பிக்கைப் பொறுப்பொன்றின் ஒன்று அல்லது கூடுதலான அலகுகளுக்குச் சொந்தமான முதலீட்டாளரொருவராவர். ஒரு அலகு என்பது பங்கொன்றுக்கு அல்லது வட்டியின் பகுதியொன்றுக்குச் சமமானதாகும். அலகு உடமையாளர்களுக்கு நம்பிக்கைப் பொறுப்பு நடவடிக்கைகளை ஆளுகின்ற நம்பிக்கை பொறுப்பு பிரகடனத்தில் காட்டப்பட்டிருக்கும் குறித்துரைக்கப்பட்ட உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. | |
அலுவலக உதவியாளர் வகுப்பு | அ.உ.வ | |
அலுவலர் பணிகள் முகாமைத்துவத் திணைக்களம் | அ.ப.மு.தி | |
அழுத்தப் பரீட்சிப்பு | குறிப்பிட்ட துறை/ நிறுவனமொன்று குறிப்பிட்ட நிச்சயமற்ற அல்லது நிச்சயமாகத் தோன்றக்கூடிய சம்பவங்களிலிருந்து அல்லது பேரண்ட – நிதியியல் மாறிகளின் அசைவுகளினால் தோன்றக்கூடிய சாத்தியமான பாதிக்கப்படும் தன்மைகளை எதிர்த்து நிற்கக்கூடிய உறுதிப்பாட்டினைக் கொண்டுள்ளதா என்பதனைத் தீர்மானிப்பதற்கு அழுத்தப் பரீட்சிப்புப் பயன்படுத்தப்படுகிறது. | |
அனர்த்த மீட்பு | இது, ஏதேனும் அனர்த்த சூழ்நிலையின் போது தரவு, தொழில்நுட்பவியல் மற்றும் முறைமைகளை மீட்டுக் கொள்வதுடன் தொடர்பான நடைமுறைகள் பற்றிக் குறிப்பிடுகின்ற தடங்கலற்ற வியாபாரத்தின் ஒரு துணைப் பிரிவு. | |
அனர்த்த மீட்பு அமைவிடம் | ||
அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் | ASPI |
சொற்பதம் |
சுருக்கச் சொல் |
விபரணம் |
ஆசிய அபிவிருத்தி வங்கி | ||
ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கம் | கடந்த ஆண்டில் இதே மாதத்தின் நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை விட நடைமுறை மாதத்தில் நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் சதவீத மாற்றம் | |
ஆண்டுச் சராசரி அடிப்படைப் பணவீக்கம் | கடந்த 12 மாதங்களின் சராசரி நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினதும் முன்னைய 12 மாதங்களுக்குரிய சராசரி நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினதும் சதவீத மாற்றம் | |
ஆர்வலர் ஈடுபாட்டுக் குழு | SEC | ஆர்வலர் ஈடுபாட்டுக் குழுவானது தலைசிறந்த தொழில்சார் நிபுணர்கள், கல்வியலாளர்கள் மற்றும் தனியார் துறை ஆளணியினர் உள்ளடங்கலாக பல்தரப்பட்ட ஆர்வலர்களை உள்ளடக்கியுள்ளது |
ஆரம்பச் சந்தை நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு வீதங்கள் | ||
ஆள் | எவரேனும் இயற்கையான அல்லது சட்ட ரீதியான ஆள். |
சொற்பதம் |
சுருக்கச் சொல் |
விபரணம் |
இடர்நேர்விலுள்ள பெறுமதி | ||
இடர்நேர்வில் வளர்ச்சி | இடர்நேர்வில் வளர்ச்சிக் கட்டமைப்பு, பேரண்ட நிதியியல் நிபந்தனைகளின் சுட்டெண்ணொன்றின் மீதான மொ.உ.உற்பத்தியின் வளர்ச்சி பங்கீட்டினை ஊகிக்கிறது. கட்டமைப்பானது வளர்ச்சி நியதிகளில் பேரண்ட முன்மதியுடைய இடர்நேர்வினைக் கணிப்பதுடன் தொடர்பான காலப்பகுதியில் பொருளாதார நடவடிக்கைக்கு ஏற்படக்கூடிய இடர்நேர்வின் பரிணாம வளர்ச்சியையும் கண்காணிக்கிறது. | |
இடர்நேர்வு அளவீட்டு முறை | ||
இடர்நேர்வு ஆளுகைக் கட்டமைப்பு | ||
இடர்நேர்வு ஏற்புக் கூற்று | ||
இடர்நேர்வு ஒருங்கிணைப்பு அலுவலர்கள் | ||
இடர்நேர்வு நிகழும் தன்மை | ||
இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட மூலதனப் போதுமை விகிதம் | இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களின் மூலம் கிடைக்கத்தக்க மூலதனத்தினை வகுப்பதன் வாயிலாகக் கணிக்கப்படுகின்ற விகிதம். | |
இடர்நேர்வு முகாமைத்துவத் திணைக்களம் | இ.மு.தி | |
இடர்நேர்வு முகாமைத்துவக் கொள்கைக் கூற்று | RMPS | |
இடர்நேர்வு முகாமைத்துவப் பணிப்பார் | DRM | |
இடர்நேர்வுப் பெறுமதி | நாட்களின் குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதியொன்றில் குறித்துரைக்கப்பட்ட நம்பிக்கையுடன் ஏற்படக்கூடிய உயர்ந்தபட்ச இழப்பாகும். | |
இணங்குவித்தல் இடர்நேர்வு | ||
இணைத்தரப்பு | ||
இணைத்தரப்பு கொடுகடன் இடர்நேர்வு முகாமைத்து வழிகாட்டல் | ||
இணைந்த விகிதம் | காப்புறுதிக் கம்பனியொன்று அதன் நாளாந்தத் தொழிற்பாடுகளில் அது எவ்வாறு நன்கு செயலாற்றியிருக்கின்றது என்பதனை அளவிடுவதற்காக அதனால் பயன்படுத்தப்படுகின்ற இலாபத்தன்மை பற்றிய அளவிடலொன்றாகும். இணைந்த விகிதமானது உறப்பட்ட இழப்புக்கள் மற்றும் செலவுகளின் கூட்டுத்தொகையினை ஈட்டப்பட்ட மிகைப்பணத்தினால் வகுப்பதன் மூலம் கணிக்கப்படுகிறது. | |
இணையத்தள குறிப்புப் பத்திர முகவரி |
"ஒவ்வொரு கணனிக்கும் பிரத்தியேகமாகவுரிய ஒரு அடையாள இலக்கம் உ-ம்:192.168.101.1" |
|
இணையவழி இலத்திரனியல் விலைக்குறிப்பீட்டு முறைமை | AS 400 முறைமையென்பது திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ் ஏலங்களை நடத்துவதற்கும் பங்கேற்கும் நிறுவனங்கள் துணைநில் வசதிகளை அடைவதற்கும் வசதியளிக்கின்ற முறைமையாகும். | |
இயலளவுப் பயன்பாடு (வி.தோ.அளவீட்டில்) | கடந்த ஆண்டின் தொடர்பான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் நடப்புக் காலாண்டுப் பகுதியில் பயன்படுத்தப்பட்ட இயலளவினையும் (கூலிகள், வசதிகள் போன்றவை) அடுத்த காலாண்டிற்கான எதிர்பார்ப்புக்களையும் எடுத்துக் காட்டுகின்றது. | |
இரண்டாந்தரச் சந்தை | முதலாந்தரச் சந்தையில் பிணையங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் வாங்குநர்களுக்கும் விற்பவர்களுக்குமிடையே பிணையங்கள் வர்த்தகப்படுத்தப்படுகின்ற மற்றும் பரிவர்த்தனை செய்யப்படுகின்ற சந்தையாகும். | |
இராசதந்திர ஆளணியினர் | இராசதந்திர பணிமனைகளினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்ற வெளிநாட்டு பிரசைகள் | |
இராசதந்திர பணிமனைகள் | தூதரகம், உயர் ஸ்தானிகராலயம், காவற் தூதகரங்கள், ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிரந்தர பணிமனை, ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு, பன்னாட்டு நாணய நிதியம், மீள்கட்டுமானம் மற்றும் அபிவிருத்திக்கான பன்னாட்டு வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி அல்லது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அநுசரணைப் பிரிவினால் காலத்திற்குக் காலம் இராசதந்திர பணிமனைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள வேறு ஏதேனும் இவற்றையொத்த அமைப்புக்கள் | |
இராசதந்திர ரூபாக் கணக்கு | இலங்கையிலுள்ள இராசதந்திர பணிமனைகள்/ தனியாட்களுக்கான இலங்கை ரூபாக் கணக்கு | |
இராசதந்திர வெளிநாட்டு நாணயக் கணக்கு | இலங்கையிலுள்ள இராசதந்திர பணிமனைகள்/தனியாட்களுக்கான வெளிநாட்டு நாணயக் கணக்குகள் | |
இரட்டைப் பற்றாக்குறை | ||
இருபுடை வர்த்தக உடன்படிக்கை | இரு நாடுகளுக்கு மத்தியில் வர்த்தகத்தில் ஈடுபடுவதுடன் தொடர்புடைய முறையானதொரு உடன்படிக்கை | |
இலங்கை அபிவிருத்தி முறிகள் | ||
இலங்கை அரசாங்கம் | ||
இலங்கை சமூக பொருளாதார தரவேடு | இ.ச.பொ. தரவேடு | சட்டைப் பைகளில் வைத்திருக்கக்கூடிய அளவினைக் கொண்ட, நாடுகளின் ஒப்பீடுகளை உள்ளடக்கிய சமூக பொருளாதார மாறிகள் மீதான புள்ளிவிபர அட்டவணைகளையும் வரைபடங்களையும் உள்ளடக்கிய வருடாந்த வெளியீடாகும். இந்நூல் அச்சு மற்றும் இலத்திரனியல் வடிவம் இரண்டிலும் அனைத்து மூன்று அரசகரும மொழிகளிலும் கிடைக்கத்தக்கதாகவுள்ளது. |
இலங்கை சுபீட்சச் சுட்டெண் | இ.சு. சுட்டெண் | இலங்கை சுபீட்சச் சுட்டெண், நாட்டின் சுபீட்ச மட்டத்தினை அளவிடுவதற்காக இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் தொகுக்கப்படுகின்ற ஒரு கூட்டுக் குறிகாட்டியாகும். விலைச் சுட்டெண்ணானது மூன்று துணைச் சுட்டெண்களை அதாவது பொருளாதாரம் மற்றும் வியாபாரச் சூழல், மக்களின் நலனோம்புகை மற்றும் சமூக பொருளாதார உட்கட்டமைப்பு என்பனவற்றை உள்ளடக்கிய சுபீட்சத்தின் வேறுபட்ட அம்சங்களைப் பிரசன்னப்படுத்துகின்ற 41 மாறிகளைப் பயன்படுத்தி அளவிடப்படுகிறது. |
இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்பும் முறிகள் | ||
இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு | இ.பி.ப.ஆ | |
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் | ||
இலங்கை பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்கள் | இ.பொ.ச புள்ளி விபரங்கள் | இலங்கை மற்றும் அயல் நாடுகளுடன் தொடர்பான பொருளாதாரம் மற்றும் சமூக புள்ளிவிபரங்களை உள்ளடக்குகின்ற தகவல்களைக் கொண்ட தனியான மூலமொன்றினை வழங்கும் குறிக்கோளுடன், ஆண்டு அடிப்படையில் இலங்கை பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்கள் இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நூலானது அச்சு மற்றும் இலத்திரனியல் வடிவம் இரண்டிலும் அனைத்து மூன்று அரசகரும மொழிகளிலும் கிடைக்கத்தக்கதாகவுள்ளது. |
இலங்கை மத்திய வங்கி | இ.ம.வ | |
இலங்கை மத்திய வங்கியினால் தொழிற்படுத்தப்பட்டு பேணப்பட்டு வரும் மத்திய வைப்பக முறைமை | ம.வை.மு | |
இலங்கை மத்திய வங்கியின் உடமையிலுள்ள அரச பிணையங்கள் | ||
இலங்கை மின்சார சபை | CEB | |
இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறைமை | இ.வ.கொ.மு | முக்கியமாக சம்பளங்கள் போன்ற குறைந்தளவு பெறுமதிகொண்ட மொத்த கொடுக்கல்வாங்கல்களை வசதிப்படுத்துகின்ற வங்கிகளுக்கிடையிலான சில்லறை கொடுப்பனவு முறைமை |
இலங்கையில் வதியும் ஆட்கள் | 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 31ஆம் பிரிவின் கீழ் விடுக்கப்பட்ட கட்டளையின் நியதிகளில் ‘வதிகின்றவர்’ எனத் தீர்மானிக்கப்பட்ட ஆட்கள். | |
இலண்டன் வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதம் | இது இலண்டன் வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதமாகும். இவ்வீதமானது பன்னாட்டு வங்கித்தொழில் சந்தைகளினால் தொடர்பு வீதமொன்றாகப் பயன்படுத்தப்படுவதுடன் இது கடன்வழங்கல்/ கடன்படுதல் எல்லைகள் நிர்ணயிக்கப்படுவதற்கான பொதுவான அடிப்படையாகவும் பயன்படுத்தப்படுகிறது. | |
இலத்திரனியல் ஊடகமூடான கொடுப்பனவிற்கான கொடுப்பனவு விபர கோப்பு | இ.ஊ.கொ.கொ.வி.கோ | |
இலத்திரனியல் ஊடகமூடான கொடுப்பனவிற்கான பங்களிப்பு விபர கோப்பு | இ.ஊ.கொ.ப.வி.கோ | |
இலத்திரனியல் கூற்று | இ.கூ | |
இலத்திரனியல் நிதிய மாற்றல் அட்டை | பற்று, வரவு அல்லது வேறு ஏதேனும் வடிவத்தில் பணத்தினை மாற்றல் செய்வதற்கு பயன்படுத்துநரை இயலுமைப்படுத்துகின்ற கொடுகடன் அட்டைகள், பற்று அட்டைகள் மற்றும் சேமிப்புப் பெறுமதி அட்டைகள் உள்ளிட்ட அட்டை அல்லது கருவியொன்றாக இருப்பதுடன் இதில் கொடுக்கல்வாங்கல் விபரங்கள் வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகளைச் செய்யும் நோக்கத்திற்காக அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களினால் அடையாளம் காணப்படுகின்றன. | |
இலத்திரனியல் வர்த்தகப்படுத்தல் | இது, வர்த்தகப் பொறிமுறைகளை இயலுமைப்படுத்துகின்ற தகவல் தொழில்நுட்பவியலாகும். முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட உருவ/ அருவ வகையிலான விடயங்களுக்கான இடம், கட்டளைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என்பனவற்றை இயலுமைப்படுத்துகின்றது. | |
இலத்திரனியல் வர்த்தகப்படுத்தல் தளம் | ||
இலாபத்தன்மை (வி.தொ.அளவீட்டில்) |
கடந்த ஆண்டின் தொடர்பான காலாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு காலாண்டுப் பகுதியின் இலாப மட்டங்களையும் அடுத்த காலாண்டிற்கான எதிர்பார்ப்புக்களையும் எடுத்துக்காட்டுகிறது. | |
இலாபம் மற்றும் பங்கிலாபம் |
||
இல்லாத சொத்துக்களை விற்பனை செய்தல் | விற்பனை செய்யும் நேரத்தில் விற்பனையாளருக்கு சொந்தமாயிராத சொத்தினை (பிணையம்/பங்கு, பண்ட முற்பேர ஒப்பந்தம், கம்பனி அல்லது நாட்டிற்கான முறி) விற்பனை செய்வதை குறிக்கும். இல்லாதவற்றை விற்பனை செய்தல் இரண்டு வகைப்படும். அவையாவன, “வெளிப்படையாக இல்லாதவற்றை விற்பனை செய்தல்" மற்றும் “மறைக்கப்பட்ட விதத்தில் இல்லாதவற்றை விற்பனை செய்தல்". | |
இ-வர்த்தகம் | இது, வர்த்தகப் பொறிமுறைகளை இயலுமைப்படுத்துகின்ற தகவல் தொழில்நுட்பவியலாகும். முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட உருவ/ அருவ வகையிலான விடயங்களுக்கான இடம், கட்டளைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என்பனவற்றை இயலுமைப்படுத்துகின்றது. | |
இணங்குவிப்பு கண்காணிப்பு அலுவலர் | ||
இணங்குவிப்பு முறைமை | HS | பன்னாட்டு வர்த்தகத்தில் பொருட்களை வகைப்படுத்தும் பொருட்டு உலக சுங்க அமைப்புக்களினால் உருவாக்கப்பட்ட முறையொன்றாகும் |
இறக்குமதி அளவுச் சுட்டெண் | நடைமுறைக் காலப்பகுதிக்கும் அடியாண்டிற்கும் மத்தியிலான இறக்குமதி அளவுகளின் விகிதம் | |
இறக்குமதி அலகுப் பெறுமதிச் சுட்டெண் | இறக்குமதிப் பெறுமதிச் சுட்டெண் மற்றும் இறக்குமதி அளவுச் சுட்டெண் என்பவற்றிற்கு மத்தியிலான விகிதம் | |
இறக்குமதிப் பெறுமதிச் சுட்டெண் | நடைமுறைக் காலப்பகுதிக்கும் அடியாண்டிற்கும் மத்தியிலான இறக்குமதிப் பெறுமதிகளின் விகிதம் | |
இறுக்கமான நாணயக்கொள்கை நிலைப்பாடு | ||
இறுதிக் கடன் ஈவோன் | ||
இறை ஊக்குவிப்பு வழிமுறைகள் | ||
இறை நிலுவைகளின் தேய்வு | ||
இறை முகாமைத்துவச் (பொறுப்பாண்மை) சட்டம் | FMRA | |
இறைத் திரட்சி |
சொற்பதம் |
சுருக்கச் சொல் |
விபரணம் |
ஈட்டினால் பிணையமிடப்பட்ட வீட்டுக் கடன்கள் | ||
ஈடு-துணையளிக்கப்பட்ட பிணைகள் |
சொற்பதம் |
சுருக்கச் சொல் |
விபரணம் |
உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் | நிதியியல் நிறுவனங்கள் அல்லது குறித்துரைக்கப்பட்ட நிதியியல்லா வியாபாரங்கள் மற்றும் தொழில்சார்ந்தவர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளும் போது வாடிக்கையாளரின் அடையாளத்தினை இனங்கண்டு கொள்வதும் சரிபார்ப்பதும் கட்டாயமான செயற்படாகும். | |
உடனடிக் கொடுக்கல்வாங்கல்கள் | பிணையங்களின் சொத்துரிமை (உரித்து) கொள்வனவாளருக்கு நிரந்தரமாக மாற்றல் செய்யப்படும் கொடுக்கல்வாங்கல்களை குறிக்கின்றது. | |
உண்மைச் சொத்து முதலீட்டு நம்பிக்கைப் பொறுப்பு | பரிவர்த்தனையொன்றில் பட்டியலிடப்பட்டு வர்த்தகப்படுத்தப்படுகின்ற கம்பனியொன்று அல்லது நிதியம். இவர்களின் நோக்கம் சொத்தில் அல்லது நிதி வருமானமீட்டுகின்ற உண்மைச் சொத்து/உட்கட்டமைப்பில் முதலீடு செய்வதாகும். உண்மைச் சொத்து முதலீட்டு நம்பிக்கைப் பொறுப்பு பல்வேறு முதலீட்டாளர்களின் மூலதன அமைப்பாக இருப்பதுடன் சமவாய நிதியம் போன்று, அம்முதலீடுகளிலுள்ள பங்குகளை விற்பதுடன் செய்வதுடன் அவர்களாகவே எந்தவொரு சொத்துக்களையும் வாங்காமலும் முகாமைப்படுத்தாமலும் அல்லது நிதியிடாமலும் உண்மைச் சொத்து முதலீடுகளுக்கான இடர்நேர்வுகளிலிருந்து உடமையாளர்களுக்குப் பாதுகாப்பினை வழங்குகிறது. | |
உண்மையான நாணயத் தாள்கள் | இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணயத் தாள்கள். | |
உண்மைப் பொருளாதாரம் | ||
உண்மைத் தாக்கமுள்ள செலாவணி வீதம் | REER | உண்மைத் தாக்கமுள்ள செலாவணி வீதமானது கூடையில் உள்ளங்கப்பட்டுள்ள நாணயங்களுக்குரிய நாடுகளின் பணவீக்க வேறுபாடுகளுக்கான பெயரளவுத் தாக்கமுள்ள செலாவணி வீதத்தினை சீராக்குவதன் மூலம் கணிக்கப்படுகின்றது |
உதவி ஆளுநர் | உ.ஆ | |
உதவித் தொழில் ஆணையாளர் | உ.தொ.ஆ | |
உபாய ரீதியான இடர்நேர்வு | ||
உபாய ரீதியான சொத்து ஒதுக்கீடு | ||
உபாயச் சொத்து ஒதுக்கு | உ.சொ.ஒ | |
உயர் உரை மாற்றல் குறிப்புப் பத்திரம் | இணையத்தளம் தொடர்பில் உலகளாவிய வெப் தரவுடன் பரஸ்பரம் தொடர்புபடுவதற்கு பயன்படுத்துநரை இயலுமைப்படுத்துகின்ற தகவல் முறைமைகளினால் பயன்படுத்தப்படும் விதிகளின் தொகுப்பு. உலாவியில் URL பதிவுசெய்யப்படும் போது உயர் உரை மாற்றல் குறிப்பு அறிவுறுத்தல் வெப் சேமிப்பிக்கு அனுப்பப்பட்டு தேவையான வெப்தளத்தினைக் கண்டறியவும் தேடவும் தேவைப்படுத்துகிறது. | |
உயர் மட்ட கருத்தரங்குகள் | உ.ம.க | குறித்த விடயமொன்றின் வேறுபட்ட அம்சங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வெளிநாட்டு வெளிப்படுத்தலைக் கொண்டு பேச்சாளர்களதும் குழு உறுப்பினர்களதும் பங்கேற்புடன் சரியான நேரத்தில் வழங்கப்படுகின்ற தலைப்பை மையப்படுத்திய கலந்துரையாடலாகும். உயர் மட்ட கருத்தரங்குகளின் அவையோர் தொடர்புடைய பகுதிகளிலிருந்த உயர் மட்ட தொழில்சார் நிபுணர்களாக காணப்படுகின்றனர். |
உயர்ந்தபட்ச சில்லறை விலை | MRP | |
உயர்ந்தளவிலான இடர்நேர்வு மிகை | ||
உயர் வகுப்பு அலுவலர் | உ.வ.அ | |
உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் | LSBs | |
உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் | LFCs | |
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் | LCBs | |
உலகளாவிய ரீதியில் வங்கிகளுக்கிடையிலான நிதியியல் தொலைத்தொடர்பூட்டலுக்கான சங்கம் | சுவிப்ற் | உலகளாவிய ரீதியில் வங்கிகளுக்கிடையிலான நிதியியல் தொலைத்தொடர்பூட்டல்களுக்கான சங்கம் (சுவிப்ற்) என்பது உலகளாவிய உறுப்பினர்களுக்குச் சொந்தமான கூட்டாண்மையாக இருப்பதுடன் பாதுகாப்பான நிதியியல் செய்திச் சேவைகளை வழங்கும் உலகின் முன்னணி அமைப்பாகவும் விளங்குகிறது |
உலகளாவிய பொருளாதார தோற்றப்பாடு | WEO | |
உழைக்கும் போதே செலுத்தும் வருமான வரி | PAYE tax | |
உள்நாட்டுப் பணச் சந்தை | ||
உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை | ||
உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவு | DBU | |
உள்நாட்டு வேளாண்மை அபிவிருத்தி | உ.வே.அ | |
உள்நாட்டு வேளாண்மை அபிவிருத்தி – முன்னோடிச் செயற்றிட்டம் | உ.வே.அ. – மு.செ | |
உள்நாட்டுத் திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் | ||
உள்நாட்டுத் தொழிற்பாடுகள் திணைக்களம் | உ.தொ.தி | |
உள்நாட்டுத் தொழிற்பாடுகள் முறி கடன்பாட்டுக் கணக்கு | இக்கணக்கு, முறிகள் கடன்பாட்டுத் திட்டத்தின் கீழ் மூன்றாந்தரப்பினரிடமிருந்து கடன்பட்ட திறைசேரி முறிகளை தற்காலிகமாக திறந்த சந்தைத் தொழிற்பாடுகளுக்காக திறைசேரி முறிகளை மாற்றுவதற்கு இலங்கை மத்திய வங்கியை இயலுமைப்படுத்துகின்றது. | |
உள்நாட்டுப் படுகடன் முகாமைத்துவக் குழு | ||
உள்முக முதலீட்டுக் கணக்கு | வதிவற்ற முதலீட்டாளர்களினால் இலங்கையில் அனுமதிக்கப்பட்ட மூலதனக் கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் உள்முக பணவனுப்பல்களை வழிப்படுத்துவதற்காகவும் அத்தகைய முதலீடுகளின் ஏதேனும் வருமானத்தினை தாய்நாட்டிற்கு அனுப்புவதற்குமாக அறிமுகப்படுத்தப்பட்ட கணக்கு. | |
உள்ளக முதலீட்டு மேற்பார்வைக் குழு | ||
உள்ளகக் கணக்காய்வுத் திணைக்களம் | உ.க.தி | |
உள்ளார்ந்த இடர்நேர்வு | ||
உள்ளார்ந்த கேள்வி அழுத்தங்கள் | ||
உள்ளீட்டு விலைகள் (வி.தோ. அளவீட்டில்) | கடந்த ஆண்டின் தொடர்பான காலாண்டுடன் ஒப்பிடப்படுகின்றவாறு, நடப்புக் காலாண்டுப் பகுதியில் உள்ளீட்டு விலைகளை (மூலப்பொருள் விலைகள் அல்லது தொழிலாளர் போன்ற ஏனைய உள்ளீடுகள்) அடுத்த காலாண்டுப் பகுதிக்கான எதிர்பார்ப்புக்களையும் எடுத்துக்காட்டுகின்றது. | |
உறுதிப்படுத்தல் | கோருவதற்கான அவர்/அவளை ஆளொருவராக பயன்படுத்துநரைச் சரிபார்க்கின்ற அடையாளம் காணும் செய்முறை | |
உறுதிப்படுத்தல் சான்றிதழ் | 2013ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க பணத் தரகுத் தொழில் ஒழுங்குவிதிகளின் (திருத்தப்பட்டது) கீழ் பணத் தரகுத் தொழிலில் ஈடுபடுவதற்கு 2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கம்பனியொன்றிற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் உறுதிப்படுத்தல் சான்றிதழ் வழங்கப்படுகிறது. |
சொற்பதம் |
சுருக்கச் சொல் |
விபரணம் |
ஊழியர் சேமலாப நிதிய முதலீட்டு மேற்பார்வைக் குழு | ||
ஊழியர் சேமலாப நிதிய முதலீட்டு மேற்பார்வைக் குழு | ஊ.சே.நி.மு.மே.கு | |
ஊழியர் சேமலாப நிதிய முதலீட்டுக் குழு | ஊ.சே.நி.மு.கு | |
ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களம் | ஊ.சே.நி.தி | |
ஊழியர் சேமலாப நிதியம் | ஊ.சே.நி |
ஓய்வூதிய நன்மைகளை அனுபவிக்காத, தனியார் மற்றும் அரசுசார் துறை ஊழியர்களுக்கான கட்டாயப் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமொன்றாகும். இது இலங்கையிலுள்ள மிகப் பெரிய ஓய்வூதிய நிதியமாக விளங்குகிறது. |
ஊழியர் நம்பிக்கை நிதியம் | அரச ஓய்வூதிய திட்டத்திற்கு உரித்துடையவராயிராத, அனைத்து அரச துறை ஊழியர்களும் அனைத்துத் தனியார் துறை ஊழியர்களும் இந்நிதியத்தின் உறுப்பினர்களாகவுள்ள வேளையில், அவர்களது தொழில்தருநர்கள் அவர்களது ஊழியர்களின் மொத்த வருமானத்தில் 3 சதவீதத்தினை நிதியத்திற்கு மாதாந்தம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். எனவே, ஊ.சே.நிதியத்தினைப் போலன்றி, ஊழியர்கள்/ உறுப்பினர்களின் சார்பில் தொழில்தருநர் மாத்திரமே பங்களிப்புக்களைச் செலுத்துவதனால் இது உறுப்பினர்களுக்கான பங்களிப்புச் செய்யப்படாத நன்மையாகக் காணப்படுகிறது. | |
ஊழியர் பங்குடமைகள் திட்டம்/ ஊழியர் பங்குகள் தேர்வுத் திட்டம் | இலங்கைக்கு வெளியே கூட்டிணைக்கப்பட்ட கம்பனியொன்று அதன் பங்குகளை அல்லது கம்பனிகளின் குழுமங்களது பங்குகளை இலங்கையிலுள்ள அதன் கிளைகளது அல்லது துணை நிறுவனங்களது ஊழியர்கள் பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பமொன்றினை வழங்குகின்ற திட்டம் அல்லது செயற்றிட்டமெனப் பொருள்படும். |
சொற்பதம் |
சுருக்கச் சொல் |
விபரணம் |
எஞ்சியுள்ள இடர்நேர்வு | ||
எதிர்பார்க்கப்பட்ட இழப்பு | ||
எதிர்வுகூறல் மற்றும் கொள்கைப் பகுப்பாய்வு முறைமை | FPAS | முன்னோக்கிய பார்வையிலமைகின்ற நாணயக்கொள்கை உருவாக்கத்திற்கு ஆதரவளிக்கும் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ள கருவிகள் மற்றும் தொடர்புடைய செய்முறைகளின் முறைமையானது பொருளாதார தரவுகள் மற்றும் பகுப்பாய்வுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது |
எதிர்வுத் தீர்வைகள் | பொதுவான சுங்கத் தீர்வை நீங்கலாக ஏனைய இறக்குமதி வரிகள் |
சொற்பதம் |
சுருக்கச் சொல் |
விபரணம் |
ஏட்டு விகிதத்திற்கான விலை | ஏட்டிற்கான விலை விகிதம் என்பது கம்பனியின் நடைமுறைச் சந்தைப் பெறுமதியினை அதன் ஏட்டுப் பெறுமதியுடன் ஒப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற நிதியியல் விகிதமாகும். | |
ஏட்டுப் பெறுமதி | சந்தை வீதங்களில் அரச பிணையங்களின் பெறுமதி | |
ஏற்றுக்கொள்ளப்பட்ட இடர்நேர்வு மட்டம் | ||
ஏற்றுமதி அபிவிருத்திச் சபை | ஏ.அ.ச | |
ஏற்றுமதி அளவுச் சுட்டெண் | நடைமுறைக் காலப்பகுதிக்கும் அடியாண்டிற்கும் மத்தியிலான ஏற்றுமதி அளவுகளின் விகிதம் | |
ஏற்றுமதி அலகுப் பெறுமதிச் சுட்டெண் | ஏற்றுமதிப் பெறுமதிச் சுட்டெண் மற்றும் ஏற்றுமதி அளவுச் சுட்டெண் என்பவற்றிற்கு மத்தியிலான விகிதம் | |
ஏற்றுமதிப் பெறுகைகளின் மாற்றல் | ||
ஏற்றுமதிப் பெறுமதிச் சுட்டெண் | நடைமுறைக் காலப்பகுதிக்கும் அடியாண்டிற்கும் மத்தியிலான ஏற்றுமதிப் பெறுமதிகளின் விகிதம் |
சொற்பதம் |
சுருக்கச் சொல் |
விபரணம் |
ஐரோப்பிய முதலீட்டு வங்கி | ஐ.மு.வ | |
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் | ஐ.நா.அ.நி |
சொற்பதம் |
சுருக்கச் சொல் |
விபரணம் |
ஒதுக்குப் பேணல் காலம் | ஒதுக்குப் பேணல் காலம் என்பது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் இலங்கை மத்திய வங்கியில் தமது ஒதுக்குகளைப் பேண வேண்டிய காலமாகும். தற்பொழுது ஒதுக்குகளைப் பேணல் காலம் இரண்டு வாரங்களாகும். | |
ஒதுக்குப் பணம் | ||
ஒதுக்குச் சொத்து நிலைமை | ||
ஒப்பந்ததாரர்களுக்கும் வழங்குநர்களுக்குமான திரவத்தன்மை வசதி | கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுக் காலப்பகுதியில் அரச திறைசேரியினால் வழங்கப்பட்ட வெளிநின்ற நிலுவைக் கொடுப்பனவுகளின் ஏற்றுக்கொள்ளல் கடிதத்திற்கெதிராக உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளிலிருந்து கடன்களைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மத்திய வங்கியினால் அரசாங்கத்தின் ஒப்பந்ததாரர்களுக்கும் வழங்குநர்களுக்குமாக அறிமுகப்படுத்தப்பட்ட விசேட கடன் திட்டம். | |
ஒப்புறுதி | ஒப்புறுதி என்பது ஒரு செய்முறையாகும். இதனூடாக தனிப்பட்டவர்கள் அல்லது நிறுவனங்கள் கட்டணங்களுக்காக நிதியியல் இடர்நேர்வுகளை ஏற்றுக்கொள்கின்றன. இவ்விடர்நேர்வு முக்கியமாக கடன், காப்புறுதி அல்லது முதலீடுகளுடன் தொடர்புபட்டதாகக் காணப்படுகிறது. | |
ஒப்புறுதி விகிதம் | முகவர் மற்றும் தரகர்களுக்கான தரகுப் பணம், அரச மற்றும் மாநகரசபை வரிகள், சம்பளங்கள், நன்மைகள் மற்றும் ஏனைய தொழிற்பாட்டுச் செலவுகள் போன்ற ஒப்புறுதிச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட கம்பனியின் தேறிய கட்டுப்பணத் தொகையாகும். இவ்விகிதமானது மொத்த ஒப்புறுதிச் செலவுகளை உழைக்கப்பட்ட தேறிய கட்டுப்பணத்தினால் வகுப்பதன் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. | |
ஒரு தடவைக் கடவுச் சொல் | தனியான நடவடிக்கைகள் அல்லது புகுபதிகை தொடருக்காகப் பயன்படுத்துநரை உறுதிப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற எண்ணியல் அல்லது எண் எழுத்துக்களைக் கொண்ட தன்னியக்கமாக உருவாக்கப்பட்ட முடிச்சாகும் | |
ஒரு நாளுக்குள்ளேயான திரவ வசதி | ||
ஒரு நாளுக்குள்ளேயான திரவத்தன்மை | வழமையாக நிதியியல் நிறுவனங்கள் சரியான நேரத்தில் கொடுப்பனவுகளைச் செய்ய இயலுமைப்படுத்துகின்ற, வியாபார நாளொன்றின் போதும் பெறப்பட்டு அதே நாளன்று தீர்ப்பனவு செய்யப்படுவதற்கான நிதியமொன்றாகும். | |
ஒரு நாளுக்குள்ளேயான திரவத்தன்மை வசதி | அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையின் சுமுகமான தொழிற்பாட்டிற்கு வசதியளிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியினால் பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்ற ஒரு நாளுக்குள்ளேயான வட்டியற்ற நிதியிடல் வசதியொன்றாகும். | |
ஒரே நேரத்தில் படுகடன் இருப்புக்கள் பெருந்தொகையில் அதிகரித்தல் | குறிப்பிட்ட திகதியில் அல்லது குறிப்பிட்ட காலப்பகுதியொன்றிற்குள் படுகடன் முதிர்ச்சிகளின் தொகை மிகையான தொகைக்கு அதிகரித்தல். | |
ஒரு நேர கடவுச்சொல் | ஒ.நே.க | முறைமையொன்றுக்குள் உள்நுழைவதற்கு அல்லது கொடுக்கல்வாங்கலை நிறைவுசெய்வதற்கு முறைமை தொழிற்பாட்டாளரினால் பயனாளருக்கு வழங்கப்படும் ஒற்றைப் பயன்பாட்டு கடவுச்சொல் |
ஒன்றுதிரட்டப்பட்ட தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் | இச்சுற்றறிக்கை, இலங்கை மத்திய வங்கியின் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளுடன் தொடர்பான அனைத்துத் தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களையும் மேலோட்டமாகக் குறிப்பிடுகின்றது. | |
ஒழுங்குமுறைப்படுத்தல் பரிசோதனைக் கட்டமைப்பு | இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் (சிறப்பு விலக்கு, கொடுப்பனவு, அல்லது ஏனைய மட்டுப்படுத்தப்பட்ட, காலவரையறை விதிவிலக்குகளின் கீழ் தொழிற்படும்) தெரிவுசெய்யப்பட்ட நிறுவனங்களால் புத்தாக்கங்களை சிறியளவில் அனுமதிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியினால் நிறுவப்பட்ட கட்டமைப்பு |
சொற்பதம் |
சுருக்கச் சொல் |
விபரணம் |
கடன் திட்டம் | க.தி | |
கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு முறைமை | க.ம.மு | |
கப்பற்படுத்தல் முகவர் | இலங்கை வணிகக் கப்பற்படுத்தல் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் உரிமம் அல்லது அதிகாரவளிப்புக் கடிதத்தினை வைத்திருக்கின்ற வெளிநாட்டுக் கப்பல் நிறுவனத்தின் (வெளிநாட்டு முகவர்) சார்பில் இலங்கையில் கப்பற்படுத்தல் முகவராக தொழிலைக் கொண்டு நடத்துகின்ற அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவர். | |
கப்பலேற்றல் பெறுமதி | FOB | காப்புறுதி மற்றும் சரக்குப் போக்குவரத்து என்பன நீங்கலாக விலையைக் குறிக்கும் பதமொன்றாகும். |
கம்பனிப் படுகடன் சந்தை | ||
கம்பனிப் படுகடன் சாதனங்கள் | க.ப.சா | |
கட்டண அட்டை | அட்டை உடமையாளரினால் பயன்படுத்தப்படும் கொடுகடன் ஏதேனும் வழங்கப்பட்ட கொடுகடனல்லாது> வழங்குநரினால் குறித்துரைக்கப்பட்ட திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ முழுமையாகத் தீர்ப்பனவு செய்யப்பட வேண்டியவிடத்து> வழங்குநரினால் வழங்கப்படும் கடன் தொடரை உள்ளடக்கிய கொடுப்பனவு அட்டை | |
கடன்வழங்கல் வீத உச்சங்கள் | ||
காசோலை பிம்பப்படுத்தல் மற்றும் சுற்றோட்டக் குறைப்பு | லங்கா கிளியர் (பிறைவட்) லிமிடெட்டினால் செயற்படுத்தப்பட்ட வங்கிகளுக்கிடையிலான முறைமையொன்றாகும். இது பௌதீக காசோலைக்குப் பதிலாக காசோலை பிம்பப்படுத்தலை வழங்குவதன் மூலம் காசோலைகளை தீர்ப்பனவு செய்வதை இயலுமைப்படுத்துகின்றது. | |
காலாண்டு ரீதியிலான எறிவு மாதிரி | QPM | காலாண்டு இடைவெளியொன்றின் பகுதியளவிலான கட்டமைப்புசார் பேரண்டப்பொருளாதார மாதிரியானது நடுத்தர கால பேரண்டப்பொருளாதார எறிவுகளை மேற்கொள்ளும் பொருட்டு மத்திய வங்கியினால் பயன்படுத்தப்படுகின்றது |
கிராமிய வங்கித்தொழில் மற்றும் அலுவலர் பயிற்சி கல்லூரி | கி.வ.ம.அ.ப.க | |
கரைகடந்த வங்கித்தொழில் பிரிவுகள் | OBUs | |
கறைபடியாத நாணயக் குற்றிகள் | கண்ணாடி போன்ற பின்னணியுடன் கூடிய கறைபடியாத வடிவமைப்பினைக் கொண்ட சுற்றோட்டப்படுத்தப்படாத ஞாபகார்த்த நாணயக் குற்றிகள். உண்மையில் இந்நாணயக் குற்றிகளின் வடிவமைப்பு விபரங்களைத் தெளிவாக உருவாக்குவதற்காக கையினால் வார்க்கப்படுகின்றன. | |
காணி விலைச் சுட்டெண் | கா.வி. சுட்டெண் | காணி விலைச் சுட்டெண்ணானது அரையாண்டு அடிப்படையில் கொழும்பு மாவட்டத்திலுள்ள 13 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்குகின்ற விதத்தில் அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட ஒரு பேர்ச் வெற்றுக் காணியின் விலையினைப் பயன்படுத்தி இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படுகிறது. 2019இன் இரண்டாம் அரையாண்டிலிருந்து காணி விலைச் சுட்டெண், காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி என மீளப்பெயரிடப்பட்டு அரையாண்டு அடிப்படையில் வெளியிடப்பட்டது. |
காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி | கா.ம. குறிகாட்டி | முன்னர் காணி விலைச் சுட்டெண் என அறியப்பட்ட காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி அரையாண்டு அடிப்படையில் கொழும்பு மாவட்டத்திலுள்ள 13 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்குகின்ற விதத்தில் அரசாங்க விலைமதிப்பீட்டுத் திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட ஒரு பேர்ச் வெற்றுக் காணியின் விலையினைப் பயன்படுத்தி இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படுகிறது. |
காப்புறுதி பூட்கை உடமையாளர்கள் | காப்புறுதி பூட்கையொன்றிற்குச் சொந்தமான அல்லது கட்டுப்படுத்துகின்ற மற்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளைப் புரிவதற்கான சிறப்புரிமைகளைக் கொண்டுள்ள ஆளொருவர் அல்லது நிறுவனமாகும். இத்தரப்பு எப்பொழுதுமன்றி ஆனால் அடிக்கடி காப்புறுதி செய்யப்பட்டிருப்பதுடன் பூட்கையின் நன்மைபெறுநராக அல்லது நன்மைபெறாதவராகவும் இருக்கலாம். | |
காலப்பகுதி | ||
காலம் | படுகடன் பிணையம்/ சொத்துப்பட்டியலின் காசுப்பாய்ச்சலின் நிறையேற்றப்பட்ட சராசரி முதிர்ச்சியாகும். | |
கியூஆர் குறியீட்டு வழங்குநர் | நடைமுறைக் கணக்குகள்இ சேமிப்பு கணக்குகள்இ கடனட்டை கணக்குகள்இ அத்துடன் செல்லிடத்தொலைபேசி அடிப்படையிலான இ-பண முறைமைகளின் தொழிற்பாடுகளிலிருந்து கியூஆர் குறியீடு அடிப்படையிலான கொடுப்பனவுகளை வசதிப்படுத்துகின்ற நிதியியல் நிறுவனங்கள் | |
கியூஆர் குறியீட்டு வணிகத்தைப் பெறுபவா் | வணிகர்களைப் பதிவுசெய்தல், வணிகர் அடையாள இலக்கங்களை வழங்குதல், வணிகர் பதிவுகளைஃகணக்குகளைப் பேணுதல், அத்துடன் வணிகர்களைத் தீர்ப்பனவுசெய்வதற்கும் பொறுப்பாகவுள்ள நிதியியல் நிறுவனம் அல்லது செல்லிடத்தொலைபேசி அடிப்படையிலான இ-பண தொழிற்பாட்டாளர் | |
குடியிருப்பாளர் வருமான மற்றும் செலவின அளவீடு | HIES | |
குறித்துரைக்கப்பட்ட நிதியல்லா வியாபாரங்கள் மற்றும் தொழில் சார்ந்தவர்கள் | 2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தில் வரைவிலக்கணம் செய்யப்பட்டவாறான குறித்துரைக்கப்பட்ட நிதியல்லா வியாபாரங்கள் மற்றும் தொழில்சார்ந்த நிபுணத்துவத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் | |
குறித்துரைக்கப்பட்ட வெளிநாட்டு நாணயம் | ஐ.அ.டொலர், யூரோ, ஸ்டேர்லிங் பவுண், அவுஸ்திரேலிய டொலர், சிங்கப்பூர் டொலர், சுவிடிஸ் குறோனர், சுவிஸ் பிராங்க், கனடியன் டொலர், கொங்கொங் டொலர், யப்பானிய யென், டென்மார்க் குறோனர், நோர்வே குறோனர், சீனறென்மின்பி, நியுசிலாந்து டொலர் மற்றும் தாய்லாந்து பாத் மற்றும் இந்திய ரூபாய் | |
குறுஞ் செய்திச் சேவை | SMS | |
குற்றவியல் விசாரணைப் பிரிவு | CID | |
கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனம் | CWE | |
கூட்டுறுதித் தொடர் மாடிகளின் சந்தை அளவீடு | கூ.தொ. மா.ச. அளவீடு | கூட்டுறுதித் தொடர்மாடிகளின் சந்தை அளவீடானது இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் கூட்டுறுதி தொடர்மாடிகளின் அபிவிருத்தியாளர்களை இலக்காகக் கொண்டு, தகவல்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கை வகுப்புச் செயற்பாடுகளுக்கும் சொத்து விலைச் சுட்டெண்களை தொகுக்கும் செயற்பாடுகளுக்கும் பயன்படுத்துவதற்குத் தேவையான விற்பனை கொடுக்கல்வாங்கல் தரவு உள்ளிட்ட சந்தைத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் குறிக்கோளுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அளவீட்டினூடாகப் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட சுருக்க அறிக்கை காலாண்டு அடிப்படையில் இலங்கை மத்திய வங்கியின் வெப்தளத்தில் பிரசுரிக்கப்படுகிறது. |
கூப்பன் | முறியின் ஆயுள் காலப்பகுதியில் முறி உடமையாளர்களுக்கு வட்டிக் கொடுப்பனவுகள் செய்யப்படுகின்றன. கூப்பன் கொடுப்பனவுகள் வழமையாக அரையாண்டிற்கொரு தடவை செலுத்தப்படுகிறது. வட்டியின் வருடாந்த தொகை முதல் தொகையினை கூப்பன் வீதத்தினால் பெருக்கி பெறப்படும் தொகைக்கு சமமானதாகும். | |
கேள்வி (வி.தோ. அளவீட்டில்) | நடப்பு காலாண்டுப் பகுதியில் கேள்வியின் அளவினையும் கடந்த ஆண்டின் தொடர்பான காலாண்டுடன் ஒப்பிடுகையில் அடுத்த காலாண்டிற்கான எதிர்பார்ப்புக்களையும் எடுத்துக்காட்டுகின்றது. | |
கைத்தொழில் அபிவிருத்திச் சபை | கை.அ.ச | |
கொடுகடனை அணுகும் தன்மை (வியாபாரத் தோற்றப்பாட்டு அளவீட்டில்) | நடப்புக் காலாண்டில் வங்கிக் கொடுகடனை அணுகக்கூடிய தன்மையினை எடுத்துக் காட்டுகிறது. | |
கொடுகடன் அட்டை | கொடுப்பனவு அட்டையானது, அட்டை உடமையாளருக்கு வழங்குநரால் வழங்கப்பட்ட தொடர் கொடுகடனுடன் தொடர்புபட்டதொன்றாகும். இதில், பயன்படுத்தப்பட்ட கொடுகடன் குறித்துரைக்கப்பட்ட திகதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ தீர்ப்பனவு செய்யப்படல் வேண்டும். குறித்துரைக்கப்பட்ட திகதியன்று தீர்ப்பனவு செய்யப்படாத ஏதேனும் தொகையின் மீது வழங்குநர் வட்டியொன்றினை அல்லது வேறு ஏதேனும் கட்டணத்தினை விதிக்கலாம். | |
கொடுகடன் இடர்நேர்வு | ||
கொடுகடன் உத்தரவாதம்/ கொடுகடன் உத்தரவாதங்கள் | இது, கொடுகடன் இடர்நேர்வுகளைத் தணிப்பதற்கும் கொடுகடனை உயர்த்துவதற்குமான கருவிகளில் ஒன்றாகும். இலங்கை அரசாங்கத்தின் முகவர் என்ற முறையில் அல்லது இலங்கை அரசாங்கத்தின் சார்பில் செயற்படுகின்றவர் என்ற முறையில் இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட உத்தரவாதம் கடன்பாட்டாளர்களின் செலுத்தத் தவறுகைகளின் இடர்நேர்வுகளுக்குப் பாதுகாப்பளிக்கிறது. கடன்பாட்டாளர் நிதியியல் நிறுவனங்களிலிருந்து அவர் கடன்பட்ட தொகையினை மீளச் செலுத்துவதற்கு தவறுவாராயின் நிதியியல் நிறுவனங்கள் கடன்பாட்டாளர் செலுத்தத் தவறியமையின் காரணமாக ஏற்பட்ட இழப்புக்களை அறவீட்டுக் கொள்வதற்காக கொடுகடன் உத்தரவாதத் திட்டத்தினை நாடமுடியும். | |
கொடுகடன் நிரம்பல் அளவீடு | கொ.நி. அளவீடு | கொடுகடன் நிரம்பல் அளவீடானது நாட்டிலுள்ள அனைத்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினதும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளினதும் கொடுகடன் நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைய அபிவிருத்திகளையும் முன்னோக்கிய தகவல்களையும் காலாண்டு அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்படுகிறது. |
கொடுப்பனவு அட்டை | ஏதேனும் அட்டை, தட்டு, கூப்பன் புத்தகம், அல்லது ஏனைய சாதனம், குறியீடு அல்லது கணக்கிற்கான அணுகல், சேமிக்கப்பட்ட பெறுமதி அல்லது பணத்தைப் பெறுவதற்கு அல்லது கொடுகடன் போன்றவை பணத்தை செலுத்துவதற்கு பயன்படுத்தப்படலாம் அத்துடன் பற்றட்டை, கட்டண அட்டை, கடனட்டை மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட அட்டை போன்றவை உள்ளடங்குகின்றன. | |
கொடுப்பனவு முறைமை | தொடர்பூட்டல், செயன்முறை, பரிமாற்றம், கொடுப்பனவு கட்டளைகளை கொடுத்துத்தீர்த்தல் அல்லது தீர்ப்பனவுசெய்தல், அல்லது கொடுப்பனவு பணப் பரிமாற்றத்தை வசதிப்படுத்தல், பண எடுப்பனவுகள், அல்லது பணப் பெறுமதிகளை மாற்றல் செய்தல் ஆகியவற்றுக்கான முறைமை அல்லது ஏற்பாடு | |
கொடுப்பனவு சாதனம் | காசோலை, வரைவு, காசுக் கட்டளை, பயணர் காசோலை, கொடுப்பனவு அட்டை அல்லது ஊடுகடத்தலுக்கான ஏனைய சாதனம் அல்லது பேச்சுவார்த்தைக்குட்படுத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும் பணக் கொடுப்பனவு அல்லது நாணயப் பெறுமதி. கடனட்டை பற்றுச்சீட்டு, நாணயக் கடிதம், பொருட்கள் அல்லது பணிகளில் மாத்திரம் வழங்குநரினால் மீட்டெடுக்கப்படக்கூடிய சாதனம் போன்றவற்றை சொற்பதம் உள்ளடக்குவதில்லை. | |
கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களம் | கொ.தீ.தி | |
கொடை மூலம் | கடனின் முகப்புப் பெறுமதிக்கும் கடன்பாட்டாளரினால் செய்யப்பட வேண்டிய கழிவிடப்பட்ட எதிர்காலப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுத் தொகைக்குமிடையிலான வேறுபாடாகக் கணிக்கப்பட்டு கடனின் முகப்புப் பெறுமதியின் சதவீதமாகத் தெரிவிக்கப்படுகிறது. | |
கொழும்பு துறைமுக நகர முதலீடு (முதலீட்டாளர்/முதலீட்டைப் பெறுபவர்) | கொழும்பு துறைமுக நகர முதலீட்டு கணக்குகள் 2022ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க மற்றும் 2022ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க பணிப்புரைகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டன. | |
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் | கொ.நு.வி. சுட்டெண் | கொழும்பு மாவட்டத்திலுள்ள நகர்ப்புற வீட்டுத் துறையினரால் நுகரப்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளின் விலை அசைவுகளை கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் எடுத்துக்காட்டுகிறது. |
கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை | கொ.ப.ப | |
கொள்கை மீளாய்வு மற்றும் கண்காணிப்புத் திணைக்களம் | கொ.மீ.க.தி | |
கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் | கொ.மு. சுட்டெண் | கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் என்பது மாதாந்த அடிப்படையில் தயாரிப்பு, கட்டடவாக்கம் மற்றும் சேவைகள் நடவடிக்கைகளுக்காக தனித்தனியாக நடத்தப்படுகின்ற மாதாந்த அளவீடாக இருப்பதுடன் தரவுகள் உயர்ந்த கால இடைவெளிகளைக் கொண்டனவாக பொருளாதார நடவடிக்கைகளின் சரியான நேரத்திலான குறிகாட்டிகளாகவும் காணப்படுகின்றன. |
கொள்வனவுகளின் இருப்புக்கள் (கொ.மு. சுட்டெண்ணில்) | கொள்வனவு செய்யப்பட்டு உற்பத்திக்குப் பயன்படுத்துவதற்காக களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டுள்ள மூலப்பொருட்கள் | |
கோப்பு மாற்றல் குறிப்புப் பத்திரம் | ஒரு முறைமையிலிருந்து மற்றொன்றிற்கு இணையத்தளம் இணையத்தளத்தினூடாக கோப்புக்களை மாற்றும் போது கணனிகளினால் பின்பற்றப்படுகின்ற விதிகளின் தொகுப்பு | |
கோரல் விகிதம் | ஈட்டப்பட்ட மிகைப்பணம் தொடர்பில் உறப்பட்ட கோரல் செலவுகளின் சதவீதம். | |
கோரல்களின் சீராக்குநர் (இழப்பு சீராக்குநர்) | கம்பனியின் பொறுப்பு காப்புறுதி செய்யப்பட்டிருக்கின்றமையின் அளவினை நிர்ணயிப்பதற்காக காப்புறுதிக் கோரல்களை ஆய்வு செய்தல். | |
கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் | IIP |
சொற்பதம் |
சுருக்கச் சொல் |
விபரணம் |
சட்டபூர்வமான தன்மை | இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அனைத்து நாணயத் தாள்களும் குற்றிகளும் எந்தவொரு தொகைக் கொடுப்பனவிற்கும் இலங்கையில் செல்லுபடியானதாக இருத்தல் வேண்டும். | |
சட்டம் மற்றும் இணங்குவிப்புத் திணைக்களம் | ச.இ.தி | |
சட்ட வீதம் | சட்ட வீதமானது பணத்தொகையொன்றின் மீட்சிக்காக மேற்கொள்ளப்படுகின்ற ஏதேனும் சட்ட நடவடிக்கைக்குப் பிரயோகமாகின்றது | |
சதவீதப் புள்ளிகள் | pps | |
சந்தை இடர்நேர்வு | ||
சந்தை மூலதனமயப்படுத்தல் | சந்தை மூலதனமயப்படுத்தல் என்பது பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் வழங்கப்பட்ட பங்குகளின் மொத்த எண்ணிக்கையினைக் குறிப்பிட்ட நேரத்திலுள்ள அவற்றின் தொடர்பான விலைகளினால் பெருக்குவதாகும். இவ்வெண் தொகையானது அந்நேரத்தில் சந்தையின் பரந்த பெறுமதியினைப் பிரதிபலிக்கிறது. | |
சந்தைத் தொழிற்பாட்டுக் குழு | இக்குழுவிடம் நாணயச் சபையினால் மேற்கொள்ளப்படும் ஒட்டுமொத்த நாணயக் கொள்கை பரிசீலனைகளை நாளாந்த நாணயத் தொழிற்பாடுகளுக்கு மாற்றுகின்ற பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, உள்நாட்டு பணம் மற்றும் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் காணப்படும் அபிவிருத்திகளை நாளாந்தம் மீளாய்வு செய்வதனைத் தொடர்ந்து நாணயத் தொழிற்பாட்டுக் குழு, மதிப்பிடப்பட்ட திரவத்தன்மை நிலைமைகள், தொழிற்பாட்டு இலக்கின் விரும்பத்தக்க மட்டம், சந்தைப் பங்கேற்பாளர்களிடையேயான திரவத்தன்மைப் பங்கீடு, பொருத்தமான சந்தைச் சமிக்ஞைகளைக் கண்டறிவதற்கான தேவை என்பனவற்றைப் பரிசீலனையில் கொண்டு சந்தைத் தொழிற்பாட்டுக் குழு திரவத்தன்மை முகாமைத்துவம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் மீது தீர்மானங்களை மேற்கொள்கிறது. | |
சந்தை வீதம் | சந்தை வீதமானது வர்த்தகக் கொடுக்கல்வாங்கல்களிலிருந்து எழுகின்ற ரூபா. 150,000இனை விஞ்சிய படுகடன் அறவிடலின் போது எவ்வித உடன்பட்ட வட்டி வீதமும் காணப்படாதவிடத்து கடன்வழங்கல் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படுகின்ற சட்ட நடவடிக்கைகளில் மாத்திரம் பிரயோகமாகின்றது | |
சந்தைக் கடன்வழங்கல் வீதம் | ||
சந்தை வைப்பு வட்டி வீதங்கள் | ||
சபை இடர்நேர்வு மேற்பார்வைக் குழு | ||
சமப் பெறுமதி வேறுபாடுகள் | உள்நாட்டு நாணயத்தில் கூறப்பட்ட, தற்போதுள்ள வெளிநாட்டு நாணயப் படுகடன் சொத்துப்பட்டியல் தொடர்பான உள்நாட்டு நாணயத்திற்கெதிராக வெளிநாட்டு நாணயங்களின் பெறுமான உயர்வு/ தேய்வின் தாக்கம். | |
சமூகப் பாதுகாப்புப் பங்களிப்புத் தீர்வை | SSCL | |
சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதம் | குறிப்பிட்டதொரு நாளில், உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கிடையிலான ஓரிரவு அழைப்புப் பணச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்களின் (பிணையுறுதி வழங்கப்படாதவை) வட்டி வீதங்களது நிறையேற்றப்பட்ட சராசரி. இது, ஒவ்வொரு வேலைநாளன்றும் இலங்கை மத்திய வங்கியினால் கணிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. தற்போதுள்ள நாணயக் கொள்கைக் கட்டமைப்பின் கீழ் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதமும் இலங்கை மத்திய வங்கியின் தொழிற்பாட்டு இலக்காகக் காணப்படுகின்றது. | |
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம் | AWNFDR | சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதமானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் வசமுள்ள சகல வெளிநின்ற வட்டி உழைக்கும் ரூபாய்க் கால வைப்புக்களுடனும் தொடர்புடைய வட்டி வீதங்களின் அடிப்படையிலமைந்துள்ளது. |
சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம் | AWNLR | சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதமானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் வழங்கப்படுகின்ற சகல வெளிநின்ற ரூபாய்க் கடன்களினதும் முற்கொடுப்பனவுகளினதும் வட்டி வீதங்களின் அடிப்படையிலமைந்துள்ளது. |
சராசரி நிறையேற்றப்பட்ட மீள்கொள்வனவு வீதம் | குறிப்பிட்டதொரு நாளில், பங்கேற்கின்ற நிறுவனங்களுக்கிடையிலான ஓரிரவு மீள்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கல்களின் (பிணையுறுதி வழங்கப்பட்டவை) வட்டி வீதங்களது நிறையேற்றப்பட்ட சராசரி. இது, ஒவ்வொரு வேலை நாளன்றும் இலங்கை மத்திய வங்கியினால் கணிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. | |
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதம் | AWNFDR | சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதமானது குறிப்பிட்டதொரு மாத காலப்பகுதியில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் திரட்டப்பட்ட சகல புதிய வட்டி உழைக்கும் ரூபாயக் கால வைப்புக்களுடன் தொடர்புடைய வட்டி வீதங்களின் அடிப்படையிலமைந்துள்ளது. |
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம் | AWNLR | சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதமானது குறிப்பிட்டதொரு மாத காலப்பகுதியில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்ட சகல புதிய ரூபாய்க் கடன்களினதும் முற்கொடுப்பனவுகளினதும் வட்டி வீதங்களை வெளிக்காட்டுகின்றது. |
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம் | AWNDR | சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதமானது குறிப்பிட்டதொரு மாத காலப்பகுதியில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் திரட்டப்பட்ட சகல புதிய வட்டி உழைக்கும் ரூபாய் வைப்புக்களுடன் தொடர்புடைய வட்டி வீதங்களின் அடிப்படையிலமைந்துள்ளது. |
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சிக்கான கடன் வீதம் | AWNSR | சராசரி நிறையேற்றப்பட்ட புதிய சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சிக்கான கடன் வீதமானது அரசாங்கத்தினதும் மத்திய வங்கியினதும் மீள்நிதியிடல் திட்டங்கள் நீங்கலாக, உரிமம்பெற்ற வங்கிகளினால் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சிகளுக்கு குறித்ததொரு மாத காலத்தில் வழங்கப்பட்ட சகல புதிய ரூபாய்க் கடன்களினதும் முற்கொடுப்பனவுகளினதும் வட்டி வீதங்களை வெளிக்காட்டுகின்றது. |
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம் | AWDR | சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதமானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் வசமுள்ள சகல வெளிநின்ற வட்டி உழைக்கும் ரூபாய் வைப்புக்களுடன் தொடர்புடைய வட்டி வீதங்களின் அசைவுகளைப் பிரதிபலிக்கின்றது. |
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் | AWPR | சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதமானது குறிப்பிட்டதொரு வார காலப்பகுதியில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் அவற்றினது முதன்மை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட குறுங்கால ரூபாய்க் கடன்கள் மற்றும் முற்கொடுப்பனவுகளுக்குப் பிரயோகிக்கத்தக்க வட்டி வீதங்களின் அடிப்படையிலமைந்துள்ளது. |
சராசரி நிறையேற்றப்பட்ட சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சிக்கான கடன் வீதம் | AWSR | சராசரி நிறையேற்றப்பட்ட சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சிக்கான கடன் வீதமானது அரசாங்கத்தினதும் மத்திய வங்கியினதும் மீள்நிதியிடல் திட்டங்கள் நீங்கலாக, உரிமம்பெற்ற வங்கிகளினால் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட சகல வெளிநின்ற ரூபாய்க் கடன்களினதும் முற்கொடுப்பனவுகளினதும் வட்டி வீதங்களின் அடிப்படையிலமைந்துள்ளது. |
சலுகைக் காலம் | கடனின் மீள்கொடுப்பனவினைத் தொடங்குவதற்கு கடன் உடன்படிக்கையில் வழங்கப்பட்டுள்ள காலப்பகுதி. | |
சாத்தியமான இடர்நேர்வுக்குள்ளாகும் தன்மை | ||
சிறப்பு எடுப்பனவு உரிமைகள் | பன்னாட்டு நாணய நிதியத்தின் கணக்கு அலகொன்றாகும். இதன் பெறுமதி முக்கிய பன்னாட்டு நாணயங்களைக் கொண்ட கூடையினை அடிப்படையாகக் கொண்டதாகும். | |
சிறப்பு வைப்பு கணக்குகள் | சிறப்பு வைப்பு கணக்குகள் 2021ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க பணிப்புரையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சொல்லப்பட்ட பணிப்புரைகள் 2021ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க மற்றும் 2022ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க பணிப்புரைகளினால் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. | |
சிறப்புப் பண்டத் தீர்வை | SCL | |
சிறப்பு வெளிநாட்டு நாணயக் கணக்கு | குறித்துரைக்கப்பட்ட வரவு மற்றும் பற்று வரையறைகளுடன், 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழ் விசேடமாக அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகள் | |
சிறப்பு வெளிநாட்டு நாணயக் கணக்கு - குறுகிய கால கடன்கள் | உற்பத்திக்களின் தயாரிப்பிற்காக மூலப் பொருட்களின் இறக்குமதிக்கு கொடுப்பனவுகளை வசதிப்படுத்துவதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு நாணயக் கணக்கு | |
சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் | SLCs | |
சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் | சி.ந.தொ | |
சிறு தொழில்முயற்சிகள் அபிவிருத்திப் பிரிவு | சி.தொ.அ | |
சிறுஉடமையாளர் தேயிலை மற்றும் இறப்பர் புத்துயிரளித்தல் | சி.தே.இ.பு | |
சிறுஉடமையாளர் வேளாண் வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டம் | சி.வே.வி.ப.நி | |
சுதந்திர வர்த்தக உடன்படிக்கை | FTA | உறுப்புரிமை நாடுகளின் தேசிய எல்லைகளைப் பொருட்படுத்தாமல், வர்த்தகப் பங்காளர்களுக்கு மத்தியில் தடங்கலற்ற செலாவணி மற்றும் பொருட்கள் மற்றும் பணிகள் பாய்ச்சல் என்பவற்றை நிறுவும் ஏற்பாடொன்றாகும் |
சுட்டெண்ணுடன் இணைக்கப்பட்ட முறி | சில அடிப்படைச் சுட்டெண்ணிற்கு, வழமையாக நுகர்வோர் விலைச் சுட்டெண்ணிற்கிணங்க வேறுபடுகின்ற கூப்பனைச் செலுத்துகின்ற முறியாகும். | |
சுயதொழில்வாய்ப்பு ஊக்குவிப்பு முன்னெடுப்பு கடன் திட்டம் | சு.தொ.உ.மு | |
சுற்றோட்டத்திலுள்ள நாணயம் | குறிப்பிட்டதொரு காலப்பகுதியில் பொதுமக்களினால் (உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் ஏனைய நிதியியல் நிறுவனங்கள் உட்பட) வைத்திருக்கப்படும் நாணயத் தாள்களினதும் குற்றிகளினதும் பொருண்மிய ரீதியான தொகை. | |
சுற்றோட்டத்திற்கு விடப்படாத நியம/ சுற்றோட்டப்படுத்தப்படாத ஞாபகார்த்த நாணயக் குற்றிகள் | சுற்றோட்டத்திற்கு விடப்படாத ஞாபகார்த்த நாணயக் குற்றிகள் மற்றும் நாணயவியல் பொருளொன்றாக விற்பனை செய்யப்பட்ட ஞாபகார்த்த நாணயக் குற்றிகளைப் பொறுத்தவரை உண்மையில் அத்தகைய நாணயக் குற்றிகளின் விற்பனை விலை அதன் முகப்பெறுமதியினை விட உயர்வானதாகவிருக்கும். | |
சூழல்சார் சமூகம் மற்றும் ஆளுகை | சூ.ச.ஆ | அனைத்து நிறுவன ரீதியான ஆர்வலர்களுக்கும் பெறுமதியை உருவாக்குவதற்கான தேவைகளையும் வழிகளையும் கருத்திற்கொள்கின்ற நிறுவன ரீதியான மூலோபாயமொன்றினுள் உள்ளடக்கப்படுவதற்கென வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பாகும். |
செயலகத் திணைக்களம் | செ.தி | |
செயற்றிட்ட முகாமைத்துவப் பிரிவு | செ.மு.பி | |
செயற்படாக் கடன்கள் | NPLs | |
செல்லிடக் கொடுப்பனவு செயலி | டெப்லெட் அல்லது செல்லிட தொலைபேசி போன்ற செல்லிட சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கொடுப்பனவுகளை இயலச் செய்கின்ற கணினி நிகழ்ச்சித்திட்டம் அல்லது மென்பொருள் செயலியினூடாக பொருளொன்றுக்கு அல்லது பணிக்கு மேற்கொள்ளப்படும் கொடுப்பனவு | |
செல்லிடத் தொலைபேசி அடிப்படையிலான இ-பண முறைமை | செல்லிட தொலைபேசி அடிப்படையிலான இ-பண முறைமைகள் நிதியங்கள் கிடைக்கப்பெற்றவுடன் நாணய பெறுமதியை வழங்குகின்றன. இது கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் நோக்கத்திற்காக இலத்திரனியல் ரீதியாக சேமிக்கப்படும். | |
செலவு, காப்புறுதி மற்றும் சரக்குப் போக்குவரத்து | CIF | செலவு, காப்புறுதி மற்றும் சரக்குப் போக்குவரத்து என்பவற்றினை விலையில் உள்ளடக்கிய ஒரு சொற்பதமாகும். |
செலாவணி வீத அசைவுகள் | ||
செல்லுபடியற்றதாக்குதல் | முன்கூட்டிய அறிவித்தலொன்றின்படி சட்ட ரீதியான பயன்பாட்டிலிருந்து மத்திய வங்கியினால் நாணயக் குற்றிகள் அல்லது நாணயத் தாள்கள் புறக்கீடு செய்யப்படுதல். | |
சென்மதி நிலுவை | BOP | |
சேதமடைந்த/ சிதைவடைந்த நாணயத் தாள்கள் | தேய்வடைந்தமையின் காரணமாக அதன் ஆரம்ப அளவிலிருந்தும் குறைவடைந்துள்ள நாணயத் தாள், எரிக்கப்பட்ட, சிதைவடைந்த, துண்டுகளாக்கப்பட்ட, கிழிக்கப்பட்ட, பாதுகாப்பு பண்புகள், தாளின் மீதான திகதி, தொடர் இலக்கம் மற்றும் கையொப்பம் என்பன விபத்தினாலோ அல்லது பல்வேறுபட்ட இயற்றை அனர்த்தங்களினாலோ மாற்றமடைந்துள்ள நாணயத் தாள்கள். | |
சேமிப்பி | வேறு ஏதேனும் கருவிகள் அல்லது மென்பொருள் நிகழ்ச்சிநிரலினால் செய்யப்பட்ட கோரிக்கைகளைச் சேமிப்பதற்கென்றே பிரத்தியேகமாகவுள்ள குறிப்பிட்டதொரு கணனி | |
சொத்து துணையளிக்கப்பட்ட பிணைகள் | ||
சொத்துக்கள் மீதான வருவாய் | ||
சொத்து விலைச் சுட்டெண்கள் | இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரவியல் திணைக்களம் தற்பொழுது கொழும்பு மாவட்டத்தினை உள்ளடக்கிய நான்கு சொத்து விலைச் சுட்டெண்களை தொகுக்கிறது. கூட்டுறுதி புதிய தொடர்மாடிகளுக்கான விலைச் சுட்டெண்ணானது கூட்டுறுதி தொடர்மாடிகளில் சந்தை அளவீட்டினூடாகத் திரட்டப்பட்ட தகவல்களைப் பயன்படுத்திக் காலாண்டு அடிப்படையில் தொகுக்கப்பட்டு வருகிறது. அதேவேளை, கூட்டுறுதித் தொடர்மாடிகள், வீடுகள் மற்றும் காணிகளுக்கான சுட்டெண்கள் சொத்து விளம்பர தகவல்களைப் பயன்படுத்தி மாதாந்த அடிப்படையில் தொகுக்கப்படுகின்றன. இவ்விலைச் சுட்டெண்கள் சிறந்த பன்னாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி ஒரு போலி நேர மாறியுடன் கொடோனிக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு தரவுத்தளச் சங்கிலியைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகின்றன. | |
சொத்துப்பட்டியல் முகாமைத்துவப் பிரிவு | சொ.மு.பி |
சொற்பதம் |
சுருக்கச் சொல் |
விபரணம் |
ஞாபகார்த்த நாணயத் தாள்கள் மற்றும் குற்றிகள் | இலங்கை சமூகத்தினரின் நலனோம்புகைக்காக குறிப்பிடத்தக்களவிற்கு பங்களிப்புக்களைச் செய்த ஆளொருவரை அல்லது சிறப்பு நிகழ்வொன்றினை ஞாபகப்படுத்துவதற்காக வெளியிடப்படுகின்ற நாணயத் தாள் அல்லது குற்றி. |
சொற்பதம் |
சுருக்கச் சொல் |
விபரணம் |
டிஜிட்டல் கையொப்பம் | கையொப்பகாரரொருவரை சரிபார்த்துக் கொள்வதற்கான இலத்திரனியல் செய்தியை உள்ளடக்கியுள்ள கிறிப்போ வரையியல் முறையில் உருவாக்கப்பட்ட தரவுத் தொகுதி |
சொற்பதம் |
சுருக்கச் சொல் |
விபரணம் |
தகவல் தொழில்நுட்பவியல் | ||
தகவல் தொழில்நுட்பவியல் திணைக்களம் | த.தொ.தி | |
தகவல் தொழில்நுட்பம் மற்றும் வெளியிலிருந்து வியாபாரப் பணிகளைப் பெற்றுக் கொள்கின்ற செய்முறை | IT/BPO | |
தங்கச் சொர்க்க வெளிநாட்டு நாணயக் கணக்கு | குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற “தங்கச் சொர்க்க விசா திட்டத்தின்” கீழ் 10 வருட வதிவிட விசாவில் இலங்கையில் தங்குவதற்கு விரும்புகின்ற வெளிநாட்டவர்களின் சிறப்பு வெளிநாட்டு நாணயக் கணக்கு | |
தடங்கலற்ற வியாபாரம் | அனர்த்தங்களின் போது கூட தடங்கல்களேதுமின்றி பயன்படுத்துநருக்கு முறைமைகளின் இன்றியமையாத தொழிற்பாடுகள் கிடைப்பதனை உறுதிப்படுத்துகின்ற விதத்தில் செய்முறைகள் செயலாற்றுகின்றன | |
தந்திரோபாய சொத்து ஒதுக்கீடு | ||
தரவு நூலகம் | தரவு நூலகமானது மத்திய வங்கியின் பல்வேறு உள்ளகத் திணைக்களங்களிலிருந்தும் பல வெளியிலுள்ள நிறுவனங்களிலிருந்தும் திரட்டப்பட்ட உண்மை, நாணய, இறை, வெளிநாட்டு மற்றும் நிதியியல் துறைகள் என பரந்து விரிந்த பல்வேறு துறைகள் மீதுமான நேரத் தொடர் தரவுகளை உள்ளடக்கியிருக்கிறது. | |
தரவுக் களஞ்சியம் | களஞ்சியப்படுத்தப்பட்ட தரவுகளின் மீது செயற்படக்கூடிய விதத்தில் வியாபார உளவறிதல் நடவடிக்கைகளை இயலுமைப்படுத்துகின்ற தரவுக் களஞ்சிய அமைப்பு | |
தலைக்குரிய வறுமைச் சுட்டெண் | ||
தளம்பல் | ||
தன்னியக்க கூற்றுப்பொறி | த.கூ.பொ | காசு எடுப்பனவு அத்துடன்/அல்லது காசு மீதி விசாரணை மற்றும் நிதிய மாற்றல் போன்ற இணையவழி கொடுக்கல்வாங்கல்களுக்காக பொதுவாக கொடுப்பனவு அட்டையொன்றாகப் பயன்படுத்தவும் தனிப்பட்ட அடையாள இலக்கத்தினைச் சரிபார்க்கவும் அட்டை வைத்திருப்பவரினால் தொழிற்படுத்தப்படுகின்ற தன்னியக்க இலத்திரனியல் சாதனமொன்றாகும். |
தனியார் வெளிநாட்டு நாணயக் கணக்கு | தகைமையுடைய தனிப்பட்டவர்களுக்கான வெளிநாட்டு நாணயக் கணக்கு | |
தனியார்-அரச- உற்பத்தியாளர் பங்குடமை | ||
தனியான முதனிலை வணிகர் | வங்கியல்லா முதனிலை வணிகர்கள் | |
தனியார் துறைக் கொடுகடன் | ||
தனியாள் அடையாள இலக்கம் | த.அ. இ | இணையவழி வங்கித்தொழில் அல்லது செல்லிட கொடுப்பனவு செயலிகளை அணுகி, கொடுப்பனவு அட்டைகளைப் பயன்படுத்துகின்ற போது அடையாளத்தை உறுதிசெய்வதற்கு அட்டை உடமையாளர் அல்லது வாடிக்கையாளர் மேற்கொள்காட்டுவதற்கு தேவைப்படுகின்ற இலக்கக் குறியீடு |
தளர்த்தப்பட்ட நாணயக்கொள்கை நிலைப்பாடு | ||
தாக்கம் | ||
திணைக்களசார் இடர்நேர்வு அலுவலர் | ||
திணைக்களத் தலைவர் | தி.த | |
திரவத்தன்மை | ||
திரவத்தன்மை ஆதரவுத் திட்டம் | திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ் தனியான முதனிலை வணிகர்களுக்கும் கிடைக்கத்தக்கதாகவுள்ள நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்கள். | |
திரவத்தன்மை இடர்நேர்வு | ||
திரவத்தன்மைத் தாங்கியிருப்புக்கள் | ||
திரவத்தன்மை தொகுதி | ||
திரவத்தன்மை உள்ளடக்க விகிதம் | LCR | |
திரவப்படுத்தப்பட்ட பெற்றோலிய வாயு | LPG | |
திரும்பிய தீர்மானக் கடிதம் | தி.தீ.க | |
திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் | தி.ச.தொ | திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் என்பது இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலையுடன் இசைந்து செல்லும் விதத்தில் பொருத்தமான மட்டங்களில் சந்தைத் திரவத்தன்மையினைப் பேணுவதற்காக ஏற்றுக்கொள்ளத்தக்க பிணையங்களைப் பயன்படுத்தி இலங்கை மத்திய வங்கியினால் நடத்தப்படும் சந்தையை அடிப்படையாகக் கொண்ட நாணயக் கொள்கைத் தொழிற்பாடுகளாகும். இந்நோக்கத்திற்காக இலங்கை மத்திய வங்கி அரச பிணையங்களையும் இலங்கை மத்திய வங்கியின் சொந்தப் பிணையங்களையும் பயன்படுத்த முடியும். தற்பொழுது நிலவுகின்ற நாணயக் கொள்கை நிலையுடன் ஒத்துச்செல்வதாக இருக்கின்ற விதத்தில் உள்நாட்டு பணச் சந்தையின் திரவத்தன்மையினை முகாமைப்படுத்துவதன் மூலம் துணைநில் வீத வீச்சிற்குள் விரும்பத்தக்க பாதையுடன் சேர்த்து ஓரிரவு வங்கிகளுக்கிடையிலான வட்டி வீதங்களை வழிப்படுத்துவதற்கு திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. |
திறந்த கணக்கு | கொள்வனவாளர் முன்நிர்ணயிக்கப்பட்ட நாட்களினுள் விற்பனையாளருக்குச் செலுத்துவதாக வாக்குறுதியளிக்கின்ற கொடுப்பனவு முறையொன்றாகும் | |
திறந்த வங்கித்தொழில் | வாடிக்கையாளர்களின் செயன்முறை முன்றாம் தரப்பினர் பணி வழங்குநர்களுக்கு பெறுமதி கூட்டப்பட்ட பணிகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு நிதியியல் நிறுவனங்களில் இடம்பெற்ற அவற்றின் நிதியியல் தரவுகளை அடைந்துகொள்வதற்கான ஒப்புதலை வழங்குகின்ற செயன்முறையாகும். | |
திறைசேரி உண்டியல் |
உள்நாட்டு திறைசேரி கட்டளைச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் சார்பில் இலங்கை மத்திய வங்கியினால் 91, 182, மற்றும் 364 நாள் முதிர்ச்சியுடன் வழமையாக கழிவிடல் அடிப்படையில் வழங்கப்படுகின்ற குறுங்கால படுகடன் சாதனமாகும். | |
திறைசேரி முறி | பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் சார்பில் மத்திய வங்கியினால் வழங்கப்படும் நடுத்தரத்திலிருந்து நீண்ட காலம் வரையிலான படுகடன் சாதனமாகும். | |
திறைசேரிக்கான துணைச் செயலாளர் | திறைசேரிக்கான துணைச் செயலாளர் என்பது அரசாங்கத்துடன் தொடர்பான அனைத்துக் கொடுக்கல்வாங்கல்களையும் ஆவணப்படுத்தல்களையும் கையாளுகின்ற பிரதான பதவியாகும். அரச திணைக்களங்களைப் பொறுத்தவரையில், இலங்கை மத்திய வங்கியைக் கோருவதுடன் தொடர்பான அனைத்துக் கொடுக்கல்வாங்கல்களும் திறைசேரிக்கான துணைச் செயலாளரூடாக மேற்கொள்ளப்படல் வேண்டும். | |
தீர்ப்பனவு இடர்நேர்வு | ||
தீர்மானக் கடிதம் | தீ.க | |
தீர்ப்பனவு சுழற்சி | தீர்ப்பனவு செய்வதற்கான கொடுக்கல்வாங்கல் வலையமைப்பிற்கான கொடுப்பனவு முறைமை தொழிற்பாட்டாளரினால் முன்வரையறுக்கப்பட்ட காலப்பகுதி | |
தீர்ப்பனவு முறைமை | வங்கிகள் மற்றும் ஏனைய நிதியியல் நிறுவனங்களுக்கிடையில் கொடுப்பனவை அல்லது பிணையங்களின் மாற்றலை மேற்கொள்வதற்கான கடப்பாடுகளின் பரிமாற்றம் மற்றும் செயன்முறைப்படுத்தலுக்கான பொறிமுறையாகும். | |
தீர்வகம் | கொடுப்பனவு அறிவுறுத்தல்கள் அத்துடன்/அல்லது பாதுகாப்பு கொடுக்கல்வாங்கல்களுக்கான கொடுத்து தீர்த்தல் அல்லது தீர்ப்பனவு பணிகளை வழங்குகின்ற கூட்டுத்தாபனமொன்று, அமைப்பு, பங்குடைமை, முகவராண்மை அல்லது நிறுவனம் அல்லது ஏனைய நிறுவனம் அல்லது நபர் ஆகியனவாகும். | |
தீர்மானங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைக்களம் | தீ.ந.தி | |
தீவிர பொறுப்பு முகாமைத்துவச் சட்டம் | ||
துணை ஆளுநர் | து.ஆ | |
துணை திணைக்களத் தலைவர் | து.தி.த | |
துணைக் கடன் உடன்படிக்கை | து.க.உ | கடன் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கும் ஒவ்வொரு பங்கேற்கும் நிதியியல் நிறுவனத்திற்குமிடையில் மேற்கொள்ளப்படுகின்ற கடன் உடன்படிக்கை |
துணைச் சொத்துப் பட்டியல் | ||
துணைத் தொழில் ஆணையாளர் | து.தொ.ஆ | |
துணைநில் கடன்வழங்கல் வசதி | நாளின் இறுதியில் திரவத்தன்மை தேவைப்பாடுகளில் காணப்படும் ஏதேனும் மேலதிகப் பற்றாக்குறையினை நிரப்புவதற்காக இலங்கை மத்திய வங்கியிலிருந்து பங்கேற்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்ற பிணையுறுதி மயப்படுத்தப்பட்ட வசதியாகும் | |
துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் | பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களுக்கான துணைநில் கடன்வழங்கல் வசதி இவ்வட்டி வீதத்திலேயே வழங்கப்படுகிறது. இது துணைநில் வீத வீச்சின் மேல் எல்லையை உருவாக்குகிறது. | |
துணைநில் வீத வீச்சு | இலங்கை மத்திய வங்கியின் பிரதான கொள்கை வீதங்களினால் அதாவது துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பனவற்றினால் உருவாக்கப்பட்ட வட்டி வீத வீச்சாகும். | |
துணைநில் வைப்பு வசதி | து.வை.வ | நாளின் முடிவிலுள்ள ஏதேனும் மிகையான நிதிகளை இலங்கை மத்திய வங்கியில் வைப்புச் செய்வதற்கு பங்கேற்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றதொரு வசதியாகும். |
துணைநில் வைப்பு வசதி வீதம் | பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களுக்கான துணைநில் வைப்பு வசதி இவ்வட்டி வீதத்திலேயே வழங்கப்படுகிறது. இது துணைநில் வீத வீச்சின் கீழ் எல்லையை உருவாக்குகிறது. | |
துறைமுக முனைக்கோடி தொழிற்பாட்டாளர்கள் | எயார்போட் அன்ட் ஏவியேசன் சேர்விசஸ் (சிறிலங்கா) லிமிடெட், இலங்கை துறைமுக அதிகாரசபை, சவுத் ஏசியா கேட்வே டேர்மினல் (பிறைவேற்) லிமிடெட் மற்றும் கொழும்பு இன்ரநெசனல் கொன்டெய்னர் டேர்மினல் லிமிடெட் என்பன உட்பட. | |
துறைமுகங்கள் மற்றும் வானூர்தி நிலைய அபிவிருத்தித் தீர்வை | PAL | |
தூய நாணயத் தாள் கொள்கை | சுற்றோட்டத்தில் சிறந்த தரமான நாணயத் தாள்களின் கிடைப்பனவினை உறுதிப்படுத்தல். | |
தென் கிழக்காசிய மத்திய வங்கிகள் | தெ.கி.ம.வ | |
தே.நு.வி. சுட்டெண் மையம் | தே.நு.வி. சுட்டெண் மையம் | தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் கூடையிலிருந்து உணவுத் தளம்பல், வலு மற்றும் போக்குவரத்தினை நீக்குகிறது. |
தேசிய கைவினைஞர் சபை | தே.கை.ச | |
தேசிய கொடுப்பனவுச் சபை | தே.கொ.ச | |
தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயம் | தே.நி.வ.உ | இலங்கையிலுள்ள தனிப்பட்டவர்களும் தொழில்முயற்சிகளும் அவர்களது தேவையின் அடிப்படையில் உயர்தரமான, பொருத்தமான, பாதுகாப்பான மற்றும் தாங்கிக் கொள்ளக்கூடிய பணிகளை அணுகுவதற்கும் தகவல்களின் அடிப்படையில் தெரிவுகளை மேற்கொள்வதற்கும் அவர்களது பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் வினைத்திறனுடனும் காத்திரமான விதத்திலும் பயன்படுத்திக் கொள்வதற்கும் அவர்களது வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்திக் கொள்வதற்குமான உபாயமாகும். |
தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் சபை | தே.நி.வ.ச | தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் கீழ் நிறுவப்பட்டதொரு சபையாகும். இது தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்திற்கான ஒட்டுமொத்த தலைமைத்துவம், கொள்கை வழிகாட்டல் மற்றும் உபாய நெறிப்படுத்தல் என்பனவற்றை வழங்குவதுடன் முகாமைத்துவ குழு மற்றும் செயலகத்திலிருந்தான ஆதரவுடன் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் நடைமுறைப்படுத்தலையும் மேற்பார்வை செய்கிறது. |
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் | தே.நு.வி. சுட்டெண் | தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண், தேசிய மட்டத்தில் வீட்டுத் துறையினரால் நுகரப்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளின் விலை அசைவுகளை எடுத்துக் காட்டுகிறது. |
தேசிய ரீதியில் நிர்ணயிக்கப்படும் பங்களிப்புக்கள் | தே.நி.ப | ஒவ்வொரு நாடுகளும் அவற்றின் 2020 இற்கு பின்னரான காலநிலை சாா் நடவடிக்கைகளை எடுத்துக்காட்டி தொடர்பூட்டுமாறு ஒவ்வொரு நாட்டையும் பாாிஸ் உடன்படிக்கை வேண்டுகின்றது. இது தேசிய ரீதியில் வாயு வௌியேற்றத்தைக் குறைத்து காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டினதும் ஈடுபாடுகளை உள்ளடக்குகின்ற அவற்றின் தேசிய ரீதியில் நிா்ணயிக்கப்படும் பங்களிப்புக்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது. |
தேசிய வழிகாட்டல் குழு | தே.வ.கு | |
தேசிய வேளாண் வியாபார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் | தே.வே.அ.நி | |
தேர்ச்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் | தே.அ.நிநுண்பாக சிறிய நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் வியாபார முகாமைத்துவ அறிவினை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சித்திட்டம் | |
தேறிய நிகழ்காலப் பெறுமதி | ||
தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள் | NDA | |
தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் | NFA | |
தொகுதிக்கடன்கள் | ||
தொகைமதிப்புப் புள்ளிவிபரவியல் திணைக்களம் | தொ.பு.தி | |
தொடர்பூட்டல் திணைக்களம் | தொ.தி | |
தொடரேட்டு தொழில்நுட்பம் | தொடரேட்டு தொழில்நுட்பம் என்பது பன்முகப்படுத்தல், வெளிப்படைத்தன்மை, மற்றும் தரவு ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கின்ற பகிர்ந்தளிக்கப்பட்ட, பேரேட்டு முறைமையொன்றாகும் | |
தொடுகையற்ற கொடுப்பனவுகள் | கொடுப்பனவு அட்டைகள் அல்லது ஏனைய சாதனங்களில் இயலச்செய்த வானொலி அதிர்வெண் அடையாளப்படுத்தல் மற்றும் அண்மைய தள தொடர்பூட்டல் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்ற கொடுப்பனவுகளாகும். | |
தொழிலற்ற குடித்தொகையினர் | கடந்த நான்கு வார காலப்பகுதியில் வேலைக்கு கிடைக்கத்தக்கதாக அத்துடன்/ அல்லது தொழிலை எதிர்பார்த்திருக்கின்ற, ஆனால் தொழில்புரியாத மற்றும் தொழிலைப் பெறுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற ஆட்களும் அடுத்த இரண்டு வார காலப்பகுதிக்குள் தொழில் வாய்ப்பு கிடைக்குமிடத்து ஏற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாகவுள்ள ஆட்களும் தொழிலற்றவர்கள் எனக் குறிப்பிடப்படும். | |
தொழிலாளர் உற்பத்தித்திறன் | தொழில்புரிந்த மணித்தியாலமொன்றிற்கான (2010 விலைகளில்) மொத்தப் பெறுமதி கூட்டப்பட்ட நியதிகளில் அளவிடப்படுகிறது. | |
தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் ஊழியர் நட்ட ஈடுகள் உட்பட பண்டங்களின் ஏற்றுமதிகள் மற்றும் காரணியல்லாப் பணிகளின் பெறுகைகள் | ||
தொழில்நிலை (கொ.மு. சுட்டெண்ணில்) | நிறுவனத்திற்காக தொழில்புரியும் ஊழியர்களின் எண்ணிக்கை | |
தொழில்நுட்ப உதவி | தொ.உ | |
தொழில்நுட்பவியல் மாற்றல் நிகழ்ச்சித்திட்டம் | தொ.மா.நி | நுண்பாக சிறிய நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் வியாபார செய்முறை தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்துவற்காக நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சித்திட்டம் |
தொழில்புரியும் குடித்தொகையினர் | தொடர்பான காலப்பகுதியில், குறைந்தபட்சம் ஒரு மணித்தியாலமாவது கொடுப்பனவினை பெறும் ஊழியராக, தொழில்தருநராக, சொந்தமாக தொழில்புரிகின்ற அல்லது குடும்பத்திற்கு உதவிபுரியும் வேலையாட்களாகவுள்ளவர்கள் தொழில்புரியும் ஆட்கள் எனக் கருதப்படுவர். இது, தொடர்பான காலப்பகுதியில் தொழில்புரியாத ஆனால் தொழிலொன்றினைக் கொண்டுள்ள ஆட்களையும் உள்ளடக்குகிறது. | |
தொழில்முயற்சி முழுவதுமான இடர்நேர்வு முகாமைத்துவம் | ||
தொழிற்படு மூலதனத் தொகுதி | ||
தொழிற்படு மூலதனம் | ||
தொழிற்படு மூலதனக் கடன் | ||
தொழிற்படுகின்ற குழுமங்கள் | தொ.கு | தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் முக்கிய கவனத்திற்குரிய துறைகளை (டிஜிட்டல் நிதி மற்;றும் கொடுப்பனவுகள், நுண்பாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் நிதி, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நிதியியல் அறிவு மற்றும் இயலாற்றலைக் கட்டியெழுப்புதல்) உள்ளடக்கிய விதத்திலும் மூன்று முக்கிய இயலுமைகளை (தரவு உட்கட்டமைப்பு, கொள்கைக் கருவிகள் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் சூழலை இயலுமைப்படுத்தல்) உள்ளடக்குகின்ற விதத்திலும் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் கீழ் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் முக்கிய துறைகளுக்கான ஆலோசனை மன்றங்களாகத் தொழிற்படுகின்றன. |
தொழிற்படை | தற்பொழுது பொருளாதார ரீதியாகச் செயற்படுகின்ற குடித்தொகை, அதாவது தொடர்பான ஒரு வார காலப்பகுதியில் தொழில்புரிந்த அல்லது தொழிலின்றியிருந்த ஆட்களின் (15 வயதும் அதற்குமேற்பட்டோரும்) எண்ணிக்கை | |
தொழிற்படைப் பங்கேற்பு வீதம் | LFPR | |
தொழிற்படுத்தப்பட்ட கிலோ மீற்றர்கள் | ||
தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் | தொ.அ | மீள்நிதியிடல், வட்டி உதவுதொகை மற்றும் கொடுகடன் உத்தரவாதம் உள்ளிட்ட கொடுகடன் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தினால் காலத்திற்குக் காலம் விடுக்கப்படும் தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் |
தொழிற்பாட்டு நட்டம் | ||
தொழிற்பாட்டு இடர்நேர்வு | ||
தொழிற்பாட்டு இடர்நேர்வு முகாமைத்துவ வழிகாட்டல்கள் | ||
தொழிற்பாட்டுச் செலவு விகிதம் | ஆண்டின் தொடக்கத்தில் வெளிநின்ற படுகடன் இருப்பின் விகிதமொன்றாகச் செலுத்தப்பட்ட வட்டி. |
சொற்பதம் |
சுருக்கச் சொல் |
விபரணம் |
நடுத்தர அலுவலகம் | ||
நடுத்தர கால இறைக் கட்டமைப்பு | ||
நடுத்தர காலப் படுகடன் முகாமைத்துவ உபாயம் | ||
நடுத்தர மற்றும் நீண்ட காலப் படுகடன் தீர்ப்பனவுகள் | ||
நடுவரங்க அலுவலகம் | ந.அ | |
நடு ஒற்றை இலக்க மட்டங்கள் | ||
நடைமுறைக் கொடுக்கல்வாங்கல் | இலங்கைக்கான அல்லது இலங்கையிலிருந்தான வெளிநாட்டுச் செலாவணி மாற்றல்களை அவசியப்படுத்துகின்ற அத்துடன் பன்னாட்டு நாணய நிதியத்தின் உறுப்புரையின் xxx உறுப்புரையின் பந்தி (ஈ) இல் குறித்துரைக்கப்பட்ட ஏதேனும் பன்னாட்டுக் கொடுக்கல்வாங்கல். | |
நம்பிக்கை இடைவெளி | CI | |
நாட்டிற்கான இடர்நேர்வு | தற்செயலாக தேசிய அரசாங்கத்தின் திறைசேரி அல்லது மத்திய வங்கி அவர்களது நாட்டிற்கான கடனைச் செலுத்த, அல்லது வெளிநாட்டுச் செலாவணி விதிகள் அல்லது கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தத் தவறுவது அதன் வெளிநாட்டுச் செலாவணி ஒப்பந்தங்களின் பெறுமதியினைக் குறிப்பிடத்தக்களவிற்குக் குறைத்துவிடும் அல்லது செல்லாததாக்கிவிடும். | |
நாட்டிற்கான கொடுகடன் தரமிடல் |
"நாட்டிற்கான கொடுகடன் தரமிடல் என்பது நாடொன்றின் அல்லது இறைமையுடைய நிறுவனமொன்றின் கொடுகடன் நம்பகத்தன்மையின் சுயாதீனமான மதிப்பீடொன்றாகும். நாட்டிற்கான தரமிடலானது, ஏதேனும் அரசியல் இடர்நேர்வுகள் உட்பட, குறிப்பிட்ட நாட்டின் படுகடனில் முதலீடு செய்வதில் இணைந்து காணப்படும் இடர்நேர்வுகளின் மட்டம் பற்றிய உள்ளக விடயங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது. நாட்டின் கோரிக்கையின் அடிப்படையில், கொடுகடன் தரமிடல் முகவர் அதன் தரமிடல் நடவடிக்கைக்காக அதன் பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழ்நிலைகளை மதிப்பீடு செய்வார். பன்னாட்டு முறிச் சந்தைகளில் நிதியிடலை அணுக விரும்பும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு நாட்டிற்கான சிறந்த தரமிடலைப் பெற்றுக்கொள்வது வழமையாக இன்றியமையாததொன்றாகும்." நாட்டிற்கான தரமிடல் என்பது நாடொன்றின் அல்லது இறைமையுடைய நிறுவனமொன்றின் கொடுகடன் நம்பகத்தன்மையினை மதிப்பிடுமொன்றாகும். நாட்டின் கோரிக்கையின் பேரில் கொடுகடன் தரமிடல் முகவரினால் தற்போதைய கொடுகடன் தரமிடல் பிரதிநிதித்துவத்தினைத் தீர்மானிப்பதற்காக நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் சூழல் மதிப்பீடு செய்யப்படும். |
|
நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் | ISBs | |
நாட்டிற்கான முறி | இறைமையுடைய அரசாங்கத்தினால் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்டு வெளியிடப்படுகின்ற ஒரு படுகடன் பிணையமாகும். வெளிநாட்டு நாணயம் பெரும்பாலும் வன் நாணயமாக இருத்தல் வேண்டும். | |
நாட்டிற்கான கடனைச் செலுத்தத் தவறுதல் | ||
நாணய விதிச் சட்டம் | ||
நாணயக் குற்றிகள் | சுற்றோட்டத்திற்கு விடப்பட்ட நாணயக் குற்றிகளின் இன வகைகளின் சேகரிப்பு. | |
நாணயச் சபை | நா.ச | |
நாணயத் தாள் செய்முறைப்படுத்தல் முறைமை | ||
நாணயத் தாள் தொடர்கள் | குறிப்பிட்டதொரு தொனிப்பொருளின் கீழ் வெளியிடப்பட்ட நாணயத் தாள் இன வகைகளின் சேகரிப்பு. | |
நாணயத் தாள்களை மீளத்தயாரித்தல் | கட்புலனாகக்கூடிய தோற்றத்தினைப் பிரதி பண்ணுதல்,நகல்படுத்துதல், போலியாகத் தயாரித்த அல்லது ஏதேனுமொரு பகுதியை (நாணயத் தாள்களின் 25 சதவீதத்திற்கும் கூடுதலான) அல்லது கட்புலனாகும் தோற்றம் முழுவதையும் வடிவமைத்தல், விளக்கப்படங்கள், வர்ணம் தீட்டுதல், புகைப்படங்கள், படங்கள், இலத்திரனியல் தோற்றங்கள், அச்சு அல்லது இணையத்தளம், தொலைக்காட்சி மற்றும் படச்சுருள் உட்பட இலத்திரனியல் ஊடகம் என்பன ஊடாக நாணயத் தாளின் உள்ளடக்கத்தினை அல்லது தோற்றத்தினை மாற்றுதல். | |
நாணயத் திணைக்களம் | நா.தி | |
நாணயம் | 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்திற்கிணங்கவே நாட்டில் அனைத்து நாணயத் தாள்களும் குற்றிகளும் வெளியிடப்படுகின்றன அல்லது சுற்றோட்டத்திற்கு விடப்படுகின்றன. | |
நாணயவியல் | நாணயம் தொடர்பான ஆய்வு அல்லது நாணயங்களைச் சேகரித்தல். | |
நாணயக் கடிதம் | LCs | குறிப்பிட்ட காலப்பகுதியினுள் ஏற்றுமதியாளரினால் குறித்த ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் போது வரைவோலைக்கு மதிப்பளிப்பதற்கு அல்லது வேறுவகையில் செலுத்துவதற்குள்ள கடப்பாட்டினைக் குறித்துக்காட்டி இறக்குமதியாளரின் வங்கியினால் விடுக்கப்படுகின்ற ஆவணமொன்றாகும் |
நாணயக் கூடை | ||
நாணயக் கூட்டுக்கள் | ||
நாணயக் கொள்கை ஆலோசனைக் குழு | MPCC | |
நாணயக் கொள்கை வழிமுறைகள் | ||
நாணயமச்சிடல் | நாணயமச்சிடலானது மத்திய வங்கியினால் பொருளாதாரத்திற்குப் புதிய நாணயங்களை நிரம்பல் செய்கின்ற செய்முறையாகும் | |
நிகழக்கூடிய தன்மை | ||
நிகழ்வு அறிக்கையிடல் முறைமை | ||
நிதி அமைச்சு | ||
நிதி முகாமைத்துவத் திணைக்களங்கள் | ||
நிதித் திணைக்களம் | நி.தி | |
நிதிய மாற்றல் | நி.மா | |
நிதியல்லா இடர்நேர்வு முகாமைத்துவக் குழு | ||
நிதியியல் இடர்நேர்வு | ||
நிதியியல் இடையேற்பாடு | நி.இ | மிகையான நிதியினையும் பற்றாக்குறையான நிதியினையும் கொண்டிருக்கின்ற தரப்பினர்களிடையே நிதிகளை வழிப்படுத்துகின்ற செய்முறையாகும். |
நிதியியல் உளவறிதல் பிரிவு | நி.உ.பி | இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு, 2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளில், 2006 மாச்சில் நிதி அமைச்சின் கீழ் நிறுவப்பட்டது. நிதியியல் உளவறிதல் பிரிவின் தொழிற்பாடுகள், நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் கீழ் மேதகு சனாதிபதியினால் ஆக்கப்பட்ட கட்டளையின் நியதிகளில், பன்னாட்டு விதந்துரைப்புக்கள் மற்றும் நியமங்களுடன் இசைந்து செல்லும் விதத்தில் இலங்கையில் பணம் தூயதாக்கல், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் அவற்றுடன் தொடர்பான குற்றங்களை ஒழிப்பதற்காக, இலங்கை மத்திய வங்கியின் நிருவாகக் கட்டமைப்பிற்குள் சுயாதீனமான நிறுவனமொன்றின் தொழிற்பாடுகளாக இடம்பெற்று வருகின்றன. |
நிதியியல் தகவல் வலையமைப்பு | நிதியியல் தகவல் வலையமைப்பு (பின்டெக்) என்பது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், முதனிலை வணிகர்கள் மற்றும் குத்தகைக்குவிடும் கம்பனிகளிடமிருந்து ஒழுங்குமுறைப்படுத்தல் அறிக்கையிடல் தரவுகளை நாளாந்த, வாராந்த, மாதாந்த, காலாண்டு மற்றும் வருடாந்த அடிப்படையில் திரட்டுவதற்கு வசதியளிக்கின்றதொரு முறைமையாகும். | |
நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு |
"நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு என்பது உலகளாவிய ரீதியில் பணம் தூயதாக்கலையும் பயங்கரவாதிகளுக்கு நிதியளித்தலையும் உன்னிப்பாகக் கவனித்துவரும் ஒரு அமைப்பாகும். அரசாங்கங்களுக்கிடையிலான இவ்வமைப்பானது இச்சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளையும் சமூகத்திற்கு அவை ஏற்படுத்தக்கூடிய தீங்குகளையும் தடுக்கும் நோக்குடனமைந்த பன்னாட்டு நியமங்களை ஏற்படுத்தியிருக்கிறது. கொள்கைகளை வகுக்கின்றதொரு சபை என்ற முறையில், நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு, இத்துறையில் தேசிய சட்டவாக்கங்களையும் ஒழுங்குமுறைப்படுத்தல் சீர்திருத்தங்களையும் கொண்டு வருவதற்குத் தேவையான அரசியல் நல்லெண்ணத்தினை உருவாக்குவது தொடர்பில் பணியாற்றுகிறது. நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவானது, நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு விதந்துரைப்புக்கள் அல்லது நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு நியமங்களை அபிவிருத்தி செய்திருப்பதுடன், இது, பணம் தூயதாக்கல் பயங்கரவாதிக்கு நிதியளித்தல், பாரிய சேதங்களை விளைவிக்கும் ஆயுதங்களுக்கு நிதியிடல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் ஊழல்கள் என்பன தொடர்பில் ஒருங்கிணைக்கப்பட்ட உலகளாவிய பதிலிறுப்பினை உறுதிப்படுத்துகிறது. நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு, நாடுகள் நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவின் நியமங்களை முழுமையாகவும் காத்திரமாகவும் நடைமுறைப்படுத்துவதனை உறுதிப்படுத்துவதற்காக கண்காணிப்பினை மேற்கொள்வதுடன் இணங்கி நடக்காத நாடுகள் அவற்றிற்கு வகைகூற வேண்டுமென்பதனையும் வலியுறுத்தி வருகிறது." |
|
நிதியியல் நிறுவனங்கள் | 2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் வரைவிலக்கணம் செய்யப்பட்டவாறான நிதி வியாபாரங்களில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள். | |
நிதியியல் பரஸ்பர இடைத் தொடர்புத்தன்மை | நிதியியல் பரஸ்பர இடைத்தொடர்புத் தன்மை என்பது கொடுகடன் வெளிப்படுத்துகைகள், வர்த்தகப்படுத்தல் இணைப்புக்கள், ஏனைய உறவுகள் மற்றும் நிதியியல் நிறுவனங்களிடையேயான தங்கியிருக்கும் தன்மை என்பனவற்றிலிருந்து உருவான நிதியியல் இணைப்புக்களின் வலையமைப்பாகும். நிதியியல் பரஸ்பர இடைத் தொடர்புத்தன்மை என்பது முறையியல் ரீதியான இடர்நேர்வின் முக்கியமான பரிமாணமாகும். பரஸ்பர நிதியியல் இடைத்தொடர்பு என்பது இரு விடயங்களைக் கொண்டதாகும். ஒன்று நேரடி பரஸ்பர நிதியியல் இடைத்தொடர்பு மற்றையது மறைமுக பரஸ்பர நிதியியல் இடைத்தொடர்பு. | |
நிதியியல் வசதிக்குட்படுத்தல் அளவீடு | நி.வ.அ | |
நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம் | நி.வா.தொ.தி | |
நிதியியல்சாரா இடர்நேர்வுகள் | ||
நிதியியல் நுகர்வோர் பாதுகாப்பு | ||
நிதியியல் சேவை வழங்குநர் | ||
நிதியைப் பெறுபவர் | கொடுப்பனவு வழியாக அட்டை உடமையாளர்களின் கொடுப்பனவு அட்டைகளை ஏற்றுக்கொள்வதற்கு மூன்றாம் தரப்பினருடனான ஏற்பாடுகளை மேற்கொண்டு அட்டை உடமையாளரினால் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் அல்லது பணிகளின் பெறுமதியுடன் மூன்றாம் தரப்பினருக்கு மீளச்செலுத்துகின்ற, அத்துடன்/அல்லது அட்டை உடமையாளரினால் பெற்றுக்கொள்ளப்படும் காசு முற்பணங்களுக்கு அத்தகைய மூன்றாம் தரப்பினர்களுக்கு மீளச்செலுத்துகின்ற எவரேனும் ஆள் | |
நிபுணர் குழு கலந்துரையாடல்கள் | நி.கு.க | பொருளாதார துறையில் ஆர்வத்தைக் கொண்ட குறித்த விடயமொன்றின் வேறுபட்ட அம்சங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பேச்சாளர்களினாலும் குழு உறுப்பினர்களினாலும் பங்களிப்புசெய்யப்படும் சரியான நேரத்தில் வழங்கப்படுகின்ற தலைப்பை மையப்படுத்திய கலந்துரையாடலாகும். |
நியதி ஒதுக்கு விகிதம் | SRR | நியதி ஒதுக்கு விகிதமானது வர்த்தக வங்கிகள் தமது வைப்புப் பொறுப்புக்களின் விகிதாசாரத்தினைக் காசு வைப்பொன்றாக மத்திய வங்கியில் பேணுவதற்குத் தேவைப்படுத்துகின்ற அளவொன்றாகும் |
நியதி ஒதுக்குத் தேவைப்பாடு | நியதி ஒதுக்குத் தேவைப்பாடு என்பது தேவைப்பாடுகளிலிருந்து கழிக்கப்படக்கூடிய வைப்புப் பொறுப்புக்களின் இரண்டு சதவீதத்திற்குக் கூடுதலான ஆனால் மூன்று சதவீதத்தினை விஞ்சாத நிலவறை காசு மீதிகளுக்கான படியொன்றிற்குட்பட்டு, மத்திய வங்கியுடன் வர்த்தக வங்கிகள் வைப்புக்களாகப் பேண வேண்டுமென தேவைப்படுத்தப்படுகின்ற ரூபா வைப்புப் பொறுப்புக்களின் ஒரு விகிதமாகும். | |
நியதித் திரவத்தன்மைச் சொத்துக்கள் விகிதம் | SLAR | |
நியம ஞாபகார்த்த நாணயக் குற்றிகளைச் சுற்றோட்டப்படுத்தல் | கொடுக்கல்வாங்கல்களுக்காக சுற்றோட்டத்திற்கு விடப்படுகின்ற ஞாபகார்த்த நாணயக் குற்றிகள். இதன் நாணயப் பெறுமதி சுற்றோட்டத்திலுள்ள நாணயத்தின் முகப்பெறுமதிக்குச் சமனானதாகவிருக்கும். | |
நிரம்பலர் விநியோக நேரம் (கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில்) | கொள்வனவு கட்டளை விடுக்கப்பட்டதற்கும் நிரம்பலர்களினால் பொருட்கள் விநியோகிக்கப்பட்டதற்குமிடையிலான காலதாமதம் | |
நிலைபேறான வங்கித்தொழில் வலையமைப்பு | நி.வ.வ | நிலைபேறான வங்கித்தொழில் வலையமைப்பு என்பது தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகள், நிதியியல் சந்தை ஆழப்படுத்தல், மற்றும் உறுதிப்பாட்டிற்கான நிலைபேறான நிதியை அதிகரிப்பதற்கான ஈடுபாட்டைக் கொண்ட வளர்ந்துவரும் சந்தைகளிலிருந்தான நிதியியல் துறை ஒழுங்குபடுத்துநர்கள், மத்திய வங்கிகள், கைத்தொழில் அமைப்புக்கள், மற்றும் சூழல்சார் ஒழுங்குபடுத்துநர்களின் தன்னார்வ சமூகமாகும். பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனம், உலக வங்கி குழுமத்தின் தனியார் துறைப் பிரிவானது நிலைபேறான வங்கித்தொழில் வலையமைப்பின் செயலாகமாக செயலாற்றுகின்றதுடன் மூலோபாய மற்றும் தொழில்நுட்ப மதியுரைஞராகவும் அதேபோன்று நிலைபேறான வங்கித்தொழில் வலையமைப்பு மற்றும் அதன் உறுப்பினர்களுக்கான உலகளாவிய ஒருங்கிணைப்பாளராகவும் செயற்படுகின்றது. |
நிலையான வருமான விலைக்குறிப்பீடு | ||
நிலையான வருமானப் பிணைகள் | ||
நிலையான வைப்பு | நி.வை | |
நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு வீதம் | ||
நிறையேற்றப்பட்ட சராசரிச் செலவு | நி.ச.செ | |
நீக்கப்பட்ட செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டம் | ||
நீண்ட காலக் காப்புறுதி | ஆயுள் காப்புறுதியினைக் குறிக்கிறது. | |
நீண்ட காலம் | 7 நாட்களுக்கும் கூடுதலான காலம் | |
நீண்டகால கொடுகடன் தரப்படுத்தல் | ||
நுகர்வோர் விலைப் பணவீக்கம் | ||
நுண்பாக நிதி | நு.நி | |
நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் | நு.சி.ந.தொ | |
நூலகம் மற்றும் தகவல் நிலையம் | நூ.த.நி | |
நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் | நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பொன்றின் கீழ் நடாத்தப்படுகின்ற நாணயக்கொள்கையானது பணவீக்கத்தினைப் பணவீக்க இலக்கினை அண்மித்து நிலைநிறுத்தும் வேளையில் உண்மைப் பொருளாதாரத்திற்கான இடையூறுகளையும் குறைக்கின்றது | |
நேரடி நிதியியல் பரஸ்பர இடைத்தொடர்புத் தன்மை | நேரடி நிதியியல் பரஸ்பர இடைத்தொடர்புத் தன்மையானது, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள், ஏனைய கடப்பாடுகள் மற்றும் தொடர்புமுறைகள் ஊடாக நிதியியல் நிறுவனங்களிடையேயான நேரடி இணைப்புக்களிலிருந்து உருவாகிறது. | |
நேரடி முதலீட்டு நிறுவனங்கள் | DIEs | |
நேர்மாற்று மீள்கொள்வனவு | நே.மீ.கொ | எதிர்காலத் திகதியொன்றில் உயர்ந்த விலைகளில் அரச பிணையங்களை மீண்டும் விற்பது என்ற உடன்படிக்கையுடன் பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களிலிருந்து இலங்கை மத்திய வங்கியினால் அவற்றை விற்பனை செய்வதுடன் தொடர்பான திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ், இலங்கை மத்திய வங்கியிலிருந்து பங்கேற்கும் நிறுவனங்களினால் செய்யப்படும் தற்காலிக கடன்பாட்டின் வடிவமாகும். |
சொற்பதம் |
சுருக்கச் சொல் |
விபரணம் |
பகிர்ந்தளிக்கப்பட்ட வெளிநின்ற வெளிநாட்டுப் படுகடன் | ||
பச்சை வீட்டு வாயுக்கள் | பவீவா | |
பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்கள் | ப.நி.நி | இயற்கையான பச்சைவீட்டு தாக்கத்திற்கு பங்களிப்பு செய்கின்ற வாயுக்களாகும். கியோட்டோ நெறிமுறையானது மனித நடவடிக்கைகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆறு பச்சை வீட்டு வாயுக்களின் கூடையொன்றை உள்ளடக்குகின்றது. இது உலக வெப்பமயமாதலினதும் காலநிலை மாற்றத்தினதும் இடர்நேர்வை அதிகரிக்கச்செய்யும். |
பங்கேற்கும் நிறுவனங்கள் | இலங்கை மத்திய வங்கி தொழிற்பாடுகளை நடத்துகின்ற உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், தனியான முதனிலை வணிகர்கள் (உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் நீங்கலாக முதனிலை வணிகர்களாக நியமிக்கப்பட்டுள்ள கம்பனிகள்) அதேபோன்று ஊழியர் சேமலாப நிதியம் போன்ற நிதியியல் நிறுவனங்கள். | |
பங்குரிமை மூலதனம் மீதான வருவாய் | ||
பங்கிலாபக் கொடுப்பனவுகள் | ||
படிவம் ‘83’ | 150 இற்கும் கூடுதலான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியும் கூட, பங்களிப்புக்களை இலத்திரனியல் ரீதியாக அனுப்பாது C 03 படிவத்தினை அனுப்பியுள்ள தொடர்பான தொழில்தருநரினால் மேற்கொள்ளப்பட்ட ஊ.சே.நிதியப் பங்களிப்புக் கொடுப்பனவுகள் மற்றும் தனிப்பட்ட கணக்குகளின் தொகுப்பினை ஒரு கணக்காண்டிற்கு பெற்றுக் கொள்வதற்கான படிவம். | |
படிவம் ‘C 01’ | இது, மாதாந்த ஊ.சே.நிதிய பங்களிப்புக்களுடன் சேர்த்து, ஊழியர் சேமலாப நிதியப் பங்களிப்புக்களை இலத்திரனியல் ரீதியாக சமர்ப்பிப்பதற்கு இன்னமும் பதிவுசெய்திராத 50 இற்கும் கூடுதலான ஊழியர்களைக் கொண்டுள்ள தொழில்தருநர்களினால் அனுப்பி வைக்கப்பட வேண்டிய படிவமாகும். | |
படிவம் ‘C 03’ | உறுப்பினர் கணக்குகளுக்குச் செய்யப்பட வேண்டிய பங்களிப்புத் தொடர்பான விபரங்களை அனுப்புவதற்காக, படிவம் C 01 ஊடாக மாதாந்த அடிப்படையில் ஊ.சே.நிதியப் பங்களிப்புக்களைச் செலுத்தியிருக்கின்ற தொழில்தருநர்களினால் அனுப்பி வைக்கப்பட வேண்டிய படிவம் | |
படிவம் ‘C’ | இது, 50 இற்குக் குறைவான ஊழியர்களைக் கொண்டுள்ள தொழில்தருநர்களினால் மாதாந்த அடிப்படையில் ஊழியர் சேமலாப நிதியத்தின் கணக்கிற்கு பங்களிப்புக்களுடன் சேர்த்து அனுப்பி வைக்கப்பட வேண்டிய, உறுப்பினர்களின் கணக்குகளுக்குச் செய்யப்பட வேண்டிய பங்களிப்பு விபரங்களை உள்ளடக்கியுள்ள ஒரு படிவமாகும். | |
படிவம் ‘CL 01’ | நிலுவையிலுள்ள ஊ.சே.நிதியப் பங்களிப்புக்களைச் செலுத்துகின்ற போது அல்லது சட்ட நடவடிக்கையின் பின்னர் தவணை அடிப்படையில் பங்களிப்புக்களைச் செலுத்தும் போது விகிதாசார முறையின் கீழ் வரவு வைக்கப்பட வேண்டிய முதல் தவணைப் பணத்தினையும் படிவம் ‘C’ இனையும் சேர்த்து தொழில் திணைக்களத்தினூடாக அனுப்பி வைக்கப்பட வேண்டிய படிவம் | |
படிவம் ‘CL 02’ | இது, தொடர்பான விடயத்திற்காக படிவம் CL 02 இனைச் சமர்ப்பிக்கின்ற போது விகிதாசார முறையின் கீழ், ஊ.சே.நிதிய திணைக்களத்திற்கு ஊ.சே.நிதிய பங்களிப்புக்களின் தொடர்பான ஏனைய தவணைப் பணத்தினை அனுப்பி வைக்கும் போது அனுப்பப்பட வேண்டிய பங்களிப்புக்களின் விபரங்களை உள்ளடக்குகின்ற படிவமாகும். | |
படிவம் ‘CL 03’ | இது, ஊ.சே.நிதியத் திணைக்களத்தின் தொழில் ஆணையாளர் கணக்கிலுள்ள ஊ.சே.நிதியப் பங்களிப்புக்களின் அநேக தவணைப் பணங்களை தனிப்பட்ட உறுப்பினர் கணக்குகளில் விகிதாசார முறையில் வரவு வைப்பதற்காக படிவம் ‘C’ உடன் தொழில் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட வேண்டிய படிவாகும். | |
படிவம் ‘CR’ | தொழில் தருநர்களினால் ஊ.சே.நிதிய திணைக்களத்திற்கு செலுத்தப்பட்ட மாதாந்த ஊ.சே.நிதிய பங்களிப்புக்கள் பெறப்பட்டமையினை உறுதிப்படுத்தி வழங்கப்படுகின்ற படிவமாகும் | |
படிவம் ‘D’ | வியாபார நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு ஊழியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதன் பின்னர், ஊழியர் சேம நிதியத்தில் (ஊ.சே.நிதியம்) தமது தொழிலை பதிவுசெய்வதற்காக நிரப்பப்பட்டு தொழில் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஒரு விண்ணப்பப் படிவமாகும். | |
படிவம் ‘EM1’ | இது, இலத்திரனியல் ஊடகம் மூலம் ஊ.சே.நிதியப் பங்களிப்புக்களைச் சமர்ப்பிப்பதற்கு பதிவுசெய்வதற்காக தொழில்தருநரொருவரினால் சமர்ப்பிக்கப்பட வேண்டியதொரு படிவமாகும். | |
படிவம் ‘K’ | ஊ.சே.நிதிய மீளளிப்பினைக் கோருவதற்காகச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய விண்ணப்பப் படிவமாகும். | |
படிவம் ‘N’ | தொழில் ஆணையாளரின் ஒப்புதலுடன் தனிப்பட்ட நிதியத்தினை ஊ.சே.நிதியத் திணைக்களத்திற்கு மாற்றல் செய்யும் போது அனுப்பி வைக்கப்பட வேண்டிய ஊ.சே.நிதிய கணக்குகளின் கீழ் கணக்கு வைக்கப்பட வேண்டிய கணக்குகளின் கணக்காய்வு செய்யப்பட்ட விபரங்களைக் குறிப்பிடுகின்ற ஒரு படிவமாகும். | |
படிவம் ‘Q’ | ஊ.சே.நிதியத்திற்குத் தவறுதலாகச் செலுத்தப்பட்ட அல்லது மிகையாகச் செலுத்தப்பட்ட ஊ.சே.நிதியப் பங்களிப்புக்களை அவை செலுத்தப்பட்ட ஓராண்டிற்குள் மீளப்பெற்றுக் கொள்வதற்காக, தொழில் ஆணையாளரின் ஒப்புதலுடன் ஊ.சே.நிதியத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டிய படிவம். | |
படிவம் ‘RR 02’ | ஊ.சே.நிதியத்திற்கு ஏற்கனவே பங்களிப்புக்களைச் செலுத்தியுள்ள ஊழியரொருவரின் தேசிய அடையாள அட்டையிலுள்ள பெயருக்கும் இலங்கை மத்திய வங்கியிலுள்ள பெயருக்குமிடையிலான வேறுபாட்டினைத் திருத்திக் கொள்வதற்காகவும் தேசிய அடையாள அட்டையிலுள்ளவாறான தகவல்களின்படி ஊ.சே.நிதியத் திணைக்களத்துடன் உறுப்பினர் விபரங்களை மீளப்பதிவு செய்து கொள்வதற்காகவும் தொழில்தருநரினால் நிரப்பப்பட வேண்டியதொரு படிவமாகும். | |
படிவம் ‘RR 06’ | தொழில்தருநரின் கீழ் ஊ.சே.நிதியப் பங்களிப்புக்களைச் செலுத்தி வருகின்ற ஊழியர்களை ஊழியர்களின் தேசிய அடையாள அட்டையிலுள்ள தகவல்களின்படி பதிவுசெய்வதற்காக விபரங்களைக் குறிப்பிடுகின்ற தொழில்தருநரினால் நிரப்பப்பட்டு அனுப்பப்பட வேண்டிய படிவம். | |
படிவம் ‘WR1’ | இணையவழி/ குறுஞ்செய்திச் சேவை நிலுவை விசாரணை வசதியைப் பதிவுசெய்வதற்காக நிரப்பப்பட்டு மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்ற விண்ணப்பப்படிவம். உறுப்பினர் ஊ.சே.நிதிய இணையவழி நிலுவை விசாரணை வசதியைப் பெற்றுக்கொள்ளும் போது அவர் தனது நடைமுறை நிலுவைப் பங்களிப்பு தொடர்பான வரலாறு, மீளளிப்பு விண்ணப்பப் படிவத்தின் தற்போதைய நிலை, வீடமைப்புக் கடன் விண்ணப்பத்தின் நிலை போன்றவற்றைப் பார்த்துக் கொள்ள முடியும். | |
படிவம் ‘WR2’ | இது, இணையவழி நிலுவை விசாரணை வசதிக்காக ஏற்கனவே பதிவுசெய்து கொண்டுள்ளவர் ஊ.சே.நிதிய இணையவழி நிலுவை விசாரணை வசதிக்காக புதிய ஊ.சே.நிதியக் கணக்குகளைச் சேர்ப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் ஊ.சே.நிதியத் திணைக்களத்திற்கு நிரப்பிச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய விண்ணப்பப் படிவமாகும். | |
படிவம் 1 | வெளிநாட்டுச் செலாவணி விற்பனைகள் | |
படிவம் 2 | வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகள் | |
படுகடன் உறுதிப்பாட்டுத் தன்மை | கடன்பட்ட நாடு, படுகடன் நிவாரணங்கள் அல்லது மீள் அட்டவணைப்படுத்தல்களை நாடாமல் அதன் தற்போதய மற்றும் எதிர்கால படுகடன் தீர்ப்பனவு கட்டுப்பாடுகளை பூர்த்தி செய்தல் மற்றும் நிலுவைகள் ஒன்று சேர்வதை தடுத்தல் என்பவற்றுடன், ஏற்றுக்கொள்ளக்கூடிய மட்டத்தில் பொருளாதார வளர்ச்சியினை அனுமதிக்கின்ற கடனின் அளவு. | |
படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் தன்மை | படுகடன் நாடொன்று அதன் தற்போதைய மற்றும் எதிர்கால படுகடன் பணிக்கொடுப்பனவுக் கடப்பாடுகளைப் பூரணப்படுத்தும் போது மேலதிக படுகடன் நிவாரணங்களையோ அல்லது ஒப்பந்த நியதிகளை மாற்றவோ கோராமல், நிலுவைகளின் திரட்சியைத் தவிர்க்கும் வேளையில் ஏற்கத்தக்க பொருளாதார வளர்ச்சி மட்டங்களை அனுமதிக்கின்ற இயலளவாகும். | |
படுகடன் பணிக் கடப்பாடுகள் | ||
படுகடன் சட்ட இசைவுத்தாமதம் | ||
பணச் சந்தை | ||
பணச் சேவைகள் | பாதுகாத்தல், பணப் பரிமாற்றல், காசோலையை பணமாக்குதல் அல்லது நாணயப் பரிமாற்றம் அத்துடன் ஏனைய ஒத்த சேவைகள் உள்ளடங்கலாக பணம் தொடர்பான ஏதேனும் சேவைகள் | |
பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் | பணம் தூயதாக்கலுக்கெதிரானவை என்பது, சட்டத்திற்கு முரணாகப் பெறப்பட்ட நிதிகளைச் சட்ட ரீதியாக மாற்றுகின்ற குற்ற நடவடிக்கைகளைத் தடைசெய்வதனை நோக்கமாகக் கொண்ட சட்டங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் நடைமுறைகள் பற்றி குறிப்பிடுகிறது. பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் என்பது அரச சட்டங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் நடைமுறைகளைக் கொண்டதொரு தொகுப்பாகக் காணப்படுவதுடன் அவை பயங்கரவாதிகள் என அரசாங்கம் குறித்துரைத்தவர்கள் நிதியிடல்களையும் நிதியியல் பணிகளையும் பெற்றுக்கொள்வதனைக் கட்டுப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. | |
பணம் தூயதாக்கல் தொடர்பான ஆசிய பசுபிக் குழுமம் | பணம் தூயதாக்கல் தொடர்பான ஆசிய பசுபிக் குழுமம் அரசாங்கங்களுக்கிடையிலான ஒரு அமைப்பாகும். இது 41 உறுப்பினர் நியாயாதிக்கங்களை உள்ளடக்கியிருப்பதுடன், இது பணம் தூயதாக்கல், பயங்கரவாதிக்கு நிதியளித்தல் மற்றும் பாரிய அழிவினை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களுடன் தொடர்புபட்ட ஆயுதப்பெருக்கத்திற்கு நிதியளித்தல் என்பனவற்றிற்கெதிரான பன்னாட்டு நியமங்களை அதன் உறுப்பினர்கள் காத்திரமான விதத்தில் நடைமுறைப்படுத்துவதனை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. | |
பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிக்கு நிதியளித்தல் | பணம் தூயதாக்கல் என்பது ஒரு செயன்முறையாகும். இது, சட்டத்திற்கு முரணான நிதியின் தோற்றுவாயினை மூடிமறைக்கின்ற குற்றவியல் தொடர்பான நடவடிக்கைகள் பற்றிய செயற்பாடுகளை மேற்கொள்கிறது. பயங்கரவாதிக்கு நிதியளித்தல் என்பது பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் அமைப்புக்களுக்கு நிதியளித்தலாகும். | |
பணவனுப்பல்கள் | தந்தி மாற்றல்கள், ஏனைய வங்கிகளுக்கிடையிலான மாற்றல்கள் வங்கி வரைவுகள், ஏனைய கொடுப்பனவுச் சாதனங்கள், ஏனைய பன்னாட்டு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொடுப்பனவுப் பொறிமுறைகள் அல்லது அமைப்புக்கள் ஊடாக பெறப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் நாணயத் தாள்கள் நீங்கலாக, வெளிநாட்டிலிருந்து வெளிநாட்டு நாணயங்களில் செலாவணிக் கம்பனிகள்/இல்லங்களிலிருந்து பெறப்பட்ட நிதிகள் என்பன உட்பட. | |
பணவீக்கம் | தொடர்பான ஆண்டுப்பகுதியில் பொருளாதாரமொன்றிலுள்ள பொருட்கள் மற்றும் பணிகளின் பொதுவான விலைமட்டங்களில் காணப்படும் நிலையான உயர்வு. பணவீக்கத்தின் இரண்டு அளவுமுறைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கம் மற்றையது அசையும் சராசரி பணவீக்கம். | |
பணவீக்க அழுத்தங்களினால் உந்தப்பட்ட கேள்வி | ||
பணவீக்க வீழ்ச்சிப் பாதை | ||
பணவீக்கத் தோற்றப்பாடு | ||
பண வைப்பு இயந்திரம் | ப.வை.இ | வாடிக்கையாளர்களைப் பணத்தை வைப்புச் செய்து பணத்தைப் பயன்படுத்தி கொடுப்பனவு கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்வதற்கு அவர்களை அனுமதிக்கின்ற சுய பணி சாதனமாகும்/முனையமாகும். |
பண மீள்சுழற்சி இயந்திரம் | ப.மீ.இ | தன்னியக்க கூற்றுப் பொறியைப் போலவே, வாடிக்கையாளர்களர்களைப் பணத்தை வைப்புச்செய்து எடுப்பனவு செய்வதற்கு அனுமதிக்கின்ற சாதனமொன்றாகும்/முனையமாகும். |
பண்ட ஏற்றுமதிகள் உதவுத்தொகைத் திட்டம் | CESS | |
பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் | ||
பத்திரங்களற்ற பிணையங்கள் | திறைசேரி உண்டியல்களும் திறைசேரி முறிகளும் ஏட்டுப் பதிவு வடிவில் வழங்கப்படுகின்றன அல்லது பத்திரங்களற்ற பிணையங்களாக வழங்கப்படுகின்றன. | |
பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமை | இலங்கை மத்திய வங்கியிலுள்ள மத்திய வைப்பகத்தில் இலத்திரனியல் வடிவத்தில் அனைத்துப் பிணையங்களையும் வைத்திருக்கின்ற ஒரு முறைமையாகும். | |
பயன்பாட்டுக் கிரயங்கள் | ||
பயன்படுத்துவதற்கு பொருத்தமற்ற நாணயத் தாள்கள் | சுற்றோட்டத்தில் இருக்கும் போதே கிழிந்த அல்லது மோசமாக அழுக்கடைந்த, எழுதியதன் மூலமாக இலக்கங்கள் மாற்றப்பட்ட, சிறிய சேதங்களைக் கொண்ட உண்மையான நாணயத் தாள்கள் அல்லது வேண்டுமென்றே சிதைக்கப்பட்ட அல்லது மாற்றம் செய்யப்பட்ட அல்லது உருமாற்றம் செய்யப்பட்ட நாணயத் தாள்கள். | |
பயன்படுத்துவதற்குப் பொருத்தமான நாணயத் தாள்கள் | சுற்றோட்டத்தில் தொடர்ந்தும் இருக்கக்கூடிய சிறந்த தரத்தினைக் கொண்ட நாணயத் தாள்கள். | |
பயிற்சியாளர்களின் பயிற்சி | ப.ப | |
பரவக்கூடிய இடர்நேர்வு | நிதியியல் இடர்ப்பாடுகள் என்பது ஒன்று அல்லது பல நிதியியல் நிறுவனங்களிலிருந்து பெரும் எண்ணிக்கையான மற்றைய நிதியியல் நிறுவனங்களுக்கு அல்லது முழு நிதியியல் முறைமைக்கும் பரவிச் செல்லக்கூடிய ஒரு தன்மையாகும். நிதியியல் ரீதியாக ஒன்றுடனொன்று இடைத் தொடர்பினைக் கொண்டிருப்பது பரவலுக்கான தூண்டுதலாகத் தொழிற்படுகிறது. | |
பல்பரிமாண வறுமைச் சுட்டெண் | ||
பல்புடை தேறிய தீர்ப்பனவு கொடுத்துத் தீர்த்தல் மீதிகள் | பல்புடை தேறிய தீர்ப்பனவு, கொடுத்துத் தீர்த்தல் மீதிகள் என்பது லங்காகிளியர் பிறைவேற் லிமிடெட்டினது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் காசோலைத் தீர்ப்பனவு, இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு தீர்ப்பனவு முறைமை, பொதுவான தன்னியக்கக் கூற்றுப் பொறி ஆளித் தீர்ப்பனவு, பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆளித் தீர்ப்பனவு மற்றும் பொதுவான விற்பனை மைய தீர்ப்பனவு முறைமைகளினூடாக உருவாக்கப்பட்ட தேறிய மீதிகளாகும். | |
பளபளப்பான சுற்றோட்டத்திற்கு விடப்படாத நாணயக் குற்றிகள் | இக்குற்றிகள் சுற்றோட்டத்திற்கு விடப்படுகின்ற நாணயக் குற்றிகள் போன்ற அதே முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றனவெனினும் இவை பளபளப்பான முறையில் அதிகளவிற்கு மெருகூட்டப்படுகின்றன. | |
பற்று அட்டை | கொடுப்பனவு அட்டையானது அட்டை உடமையாளரின் கணக்கிற்கு நேரடியாக பற்றுவைப்பதன் மூலம், பொருட்கள் மற்றும் பணிகளை கொள்வனவு செய்வதற்கு காசை எடுப்பனவு செய்வதற்கு அத்துடன்ஃஅல்லது கொடுப்பனவுகளை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்தப்படலாம். | |
பன்னாட்டு அபிவிருத்தி முகவர் | ||
பன்னாட்டு ஒதுக்கு முதலீட்டு மேற்பார்வைக் குழு | ||
பன்னாட்டு நாணய நிதியம் | ||
பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனம் | ப.நி.கூ | |
பன்னாட்டு பிணையங்கள் அடையாள இலக்கம் | அரச பிணையங்களின் காலம் மற்றும் முதிர்ச்சித் திகதி என்பனவற்றின்படி பிணைய வகைகளை வேறுபடுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள அடையாள இலக்கமொன்றாகும். | |
பன்னாட்டுத் தொழிற்பாடுகள் திணைக்களம் | ப.தொ.தி | |
பன்னாட்டுப் பிணையங்கள் அடையாளப்படுத்தல் இலக்கம் | ||
பாதுகாப்பு அரண் | இணையத்தளம் உள்ளிட்ட வெளிப்புற வலையமைப்புக்களிலிருந்து வருகின்ற அங்கீகாரமற்ற தொடர்பூட்டல்களை தடைசெய்கின்ற வலையமைப்புக்களிடையேயான பாதுகாப்புத் தடையொன்று | |
பாதுகாப்புப் பணிகள் திணைக்களம் | பா.ப.தி | |
பாதுகாப்புப் பண்புகள் | உண்மை நாணயத் தாள்களுக்கும் போலியான நாணயத் தாள்களுக்குமிடையிலான வேறுபாட்டினை கண்டறிவதனை இயலச்செய்யும் விதத்தில் நாணயத் தாள்களில் இணைக்கப்பட்டுள்ள பண்புகள். | |
பாவனைக்குதவாத நாணயத் தாள்கள் | சுற்றோட்டத்திலிருக்கையில் அழுக்கடைந்த அல்லது தேய்வடைந்த அல்லது மோசமாக அழுக்கடைந்த நாணயத் தாள்கள். ஆனால் சிதைக்கப்படாதவை எனினும் மீண்டும் பயன்படுத்துவதற்கு நல்ல நிலையில் இல்லாதவை. | |
பிடித்துவைத்தல் விகிதம் | காப்புறுதிக் கம்பனிகளினால் பாதுகாக்கப்பட்ட வியாபாரங்களின் சதவீதம். அவை மீள்காப்புறுதிக்காக மாற்றல் செய்யப்படுவதில்லை. | |
பிடித்து வைத்தல் வரி | WHT | |
பிட்ச் றேட்டிங் | ||
பின்டெக் | வங்கித்தொழில் மற்றும் வங்கித்தொழில் பணிகளுக்கு ஆதரவளிப்பதை அல்லது இயலச்செய்வதை இலக்காகக்கொண்ட தொழில்நுட்பமும் புத்தாக்கமும் | |
பிணைய உறுதி | ||
பிணையங்கள் முதலீட்டுக் கணக்கு | ||
பிரதேச அபிவிருத்தித் திணைக்களம் | பி.அ.தி | |
பிரதேச அலுவலகம் - அநுராதபுரம் | பி.அ. – அநு | |
பிரதேச அலுவலகம் - கிளிநொச்சி | பி.அ. – கிளி | |
பிரதேச அலுவலகம் - திருகோணமலை | பி.அ. – திரு | |
பிரதேச அலுவலகம் - நுவரெலியா | பி.அ. – நுவ | |
பிரதேச அலுவலகம் - மாத்தளை | பி.அ. – மாத்தளை | |
பிரதேச அலுவலகம் - மாத்தறை | பி.அ. – மாத்தறை | |
பிரயோக முறைமை 400 | பிரயோக முறைமை 400(ஏஎஸ்/400) என்பது IBM இனால் உருவாக்கப்பட்ட சேமிப்பித் தொழிற்பாட்டுத் தளமொன்றாகும். | |
பின்நெட் | நிதியியல் தகவல் வலையமைப்பு (பின்நெட்) வங்கிகள், நிதிக் கம்பனிகள் குத்தகைக்குவிடும் கம்பனிகள் மற்றும் முதனிலை வணிகர்களினால் சமர்ப்பிக்கப்படுகின்ற நிதியியல் தகவலுக்கான பொதுவான இடைமுகமாகும். | |
பின்னரங்க அலுவலகம் | பி.அ | |
புதிய அனைத்தையுமுள்ளடக்கிய கிராமிய கொடுகடன் திட்டம் | பு.அ.கி.கொ. தி | |
புதிய கட்டளைகள் (கொ.மு. சுட்டெண்ணில்) | புதிய விற்பனைக் கட்டளைகளின் அளவு | |
புரிந்துணர்வு ஒப்பந்தம் | பு.ஒ | |
புலம்பெயர் படி | புலம்பெயர்பவர்களுக்குச் சொந்தமான/ கையேற்கப்பட்ட/ மரபுவழியாகக் கிடைத்த அல்லது அத்தகைய புலம்பெயர்ந்தவரினால் நன்கொடையாகப் பெறப்பட்ட இலங்கையிலுள்ள ஏதேனும் சொத்துக்களிலிருந்து தேறல் செய்யப்பட்ட கோரல் பெறுகைகள் தொடர்பில் 18 வயதிற்கும் அதற்கு மேற்பட்டவர்களாகவுமுள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அனுமதிப்பங்கு. | |
புலம்பெயர்ந்தவர்களின் பணமனுப்பத்தக்க வருமானக் கணக்கு | புலம்பெயர்ந்தவர் எந்நாட்டில் நிரந்தரமாக வதிகின்றாரோ அந்நாட்டில் அத்தகைய புலம்பெயர்ந்தவரினால் நடைமுறை வருமானம் உலகளாவிய ரீதியில் பெறப்படுகின்றமையினை அடையாளம் காண்பதற்கான ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடு காணப்படுமிடத்து மாத்திரம் புலம்பெயர்ந்த ஒருவரினால் இலங்கையில் பெறப்பட்ட நடப்பு வருமானத்தினை வெளிநாட்டிற்கு அனுப்பும் நோக்கத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட கணக்கொன்றாகும். | |
புலம்பெயர்ந்தோர் | மற்றொரு நாட்டில் நிரந்தர வதிவிட அந்தஸ்தினை அல்லது பிரசாவுரிமையினைப் பெற்றுள்ள தனிப்பட்ட இலங்கையர், தாய் அல்லது தந்தை இலங்கையில் பிறந்தவர்களாகவுள்ள இலங்கையின் இரட்டைப் பிரசாவுரிமையினைப் பெற்றவர், தாய் அல்லது தந்தை இலங்கையில் பிறந்து இலங்கை பிரசையாக இல்லாத ஆனால் அவரின் பிறப்பு இலங்கையில் பதிவுசெய்யப்பட்டதொன்றாக இருக்கின்ற ஆட்களும் அவர்களின் பிள்ளைகளும் உள்ளிட்டவர்கள். | |
புள்ளிவிபரவியல் திணைக்களம் | ||
புள்ளிவிபரத் தளத் தாக்கம் | ||
பூஜ்ய கூப்பன் முறி | முறியின் ஆயுள் காலப்பகுதியில் வட்டி எதுவும் செலுத்தாத முறியாகும். பதிலாக, முதலீட்டாளர்கள் பூஜ்ய கூப்பன் முறிகளின் முகப்புப் பெறுமதியின் மீது மிக ஆழமான கழிவிடலொன்றுடன் வாங்குகின்றனர். முறியின் முகப்புப் பெறுமதி முதிர்ச்சியில் செலுத்தப்படுகிறது. | |
பெயரளவுத் தாக்கமுள்ள செலாவணி வீதம் | NEER | |
பெறுதல் எதிர் கொடுப்பனவு | பெ.எ.கொ | |
பெறுமதிக்கான கடன் விகிதம் | கடன் தொகைக்கும் கடனுக்கான பிணைச் சொத்தின் சந்தைப் பெறுமதிக்குமிடையிலான தொடர்பினை மதிப்பிடுகிறது. | |
பெறுமதிச் சங்கிலி தொழிற்பாட்டாளர் | பெ.ச.தொ | பெறுமதிச் சங்கிலியில் பங்கேற்பவர்கள் |
பெற்றோர் புலம்பெயர் திட்டம் | நிரந்தர வதிவிட அந்தஸ்தினைப் பெற்றுள்ள அல்லது அந்நாட்டில் பிரசாவுரிமையினைப் பெற்றுள்ள ஆளொருவரின் இலங்கைப் பெற்றோர்கள் அத்தகைய வெளிநாட்டில் நிரந்தர வதிவிட அந்தஸ்தினைப் பெற்றுக்கொள்வதனை இயலுமைப்படுத்துகின்ற விதத்தில் வெளிநாடொன்றிiனால் தொழிற்படுத்தப்படும் திட்டம். | |
பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு | ||
பெறுமானத்தேய்வு மற்றும் கடன் தீர்ப்பனவு | ||
பெறுமதிசேர் வரி | VAT | |
பெறுமதிக்கேற்ற தீர்வை வீதம் | இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களின் பெறுமதியின் சதவீதமொன்றாக அறவிடப்படுகின்ற தீர்வை. | |
பேரண்ட நிதியியல் பின்னூட்டல் இணைப்புக்கள் | பேரண்டப் பொருளாதாரத்திலுள்ள மோசமான நிலைமை நிதியியல் முறைமையிலுள்ள கூறினைப் பாதிக்கின்ற போது அது பேரண்டப் பொருளாதாரத்தில் மீண்டுமொரு பாதிப்பினை ஏற்படுத்தி ஒருவிதமான முடிச்சினைத் தொடர்ச்சியாக உருவாக்குகிறது. | |
பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களம் | பே.மு.க.தி | |
பேரண்ட முன்மதியுடைய கொள்கை | நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பேணுவதனையும் முறையியல் சார்ந்த இடர்நேர்வினைத் தவிர்ப்பதனையும் இலக்காகக் கொண்ட கொள்கையாகும். | |
பேரண்ட முன்மதி வழிமுறைகள் | ||
பொது விற்பனை முகவர் | இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் உரிமம் அல்லது அதிகாரவளிப்பு கடிதத்தினை வைத்திருக்கின்ற வெளிநாட்டு விமான நிறுவனத்தின் (வெளிநாட்டு முகவர்) சார்பில் இலங்கையில் பொது விற்பனை முகவராக தொழிலைக் கொண்டு நடத்துகின்ற அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவர். | |
பொதுப் படுகடன் திணைக்களம் | பொ.ப.தி | |
பொதுமக்களுக்கான ஆரம்ப வழங்கல் | பொதுமக்களுக்கான ஆரம்ப வழங்கல் என்பது பொதுமக்களுக்கான பங்கு வழங்கலாகும். இதில் கம்பனிகளின் பங்குகள் நிறுவன ரீதியான முதலீட்டாளர்களுக்கும் சில்லறை முதலீட்டாளர்களுக்கும் முதற்றடவையாக விற்பனை செய்யப்படுகின்றன. | |
பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆளி | இணையத்தள வங்கித்தொழில், செல்லிட வங்கித்தொழில்இ கியோஸ்க், கருமபீடம் மற்றும் தன்னியக்க கூற்றுப்பொறி போன்ற கொடுப்பனவு வழிகளினூடாக முறைமையுடன் இணைக்கப்பட்ட நிதியியல் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கிடையிலான உள்நாட்டு வங்கிகளுக்கிடையிலான உண்மை நேர நிதிய மாற்றல்களை வசதிப்படுத்துகின்ற இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆளியொன்றாகும். | |
பொதுவான காப்புறுதி | ஆயுள் காப்புறுதி வரம்பிற்குள் வராத காப்புறுதி ஒப்பந்தங்கள் பொதுக் காப்புறுதி என அழைக்கப்படுகின்றன. பொதுக் காப்புறுதியானது தீ அபாயம், கடல் அபாயம், மோட்டார், விபத்து மற்றும் ஆயுள் காப்புறுதி தவிர்ந்த ஏனைய பல்வகைப் காப்புறுதிகள் எனப் பல்வேறுபட்ட வகைகளைக் கொண்டுள்ளது. | |
பொதுவான விற்பனை மைய ஆளி | லங்கா கிளியர் லிமிடெட்டினால் தொழிற்படுத்தப்படும் இலத்திரனியல் முறைமையொன்றாகும். இது வழங்குனரும் பெறுநரும் ஒருவராகவிராத அட்டைகளின் விற்பனை மைய ஆளி கொடுக்கல்வாங்கல்களை மாற்றி அகற்றுவதற்கு வசதிப்படுத்துவம் வகையில் அதன் உறுப்பினர்களுக்கு விற்பனை மைய கொடுக்கல்வாங்கல்களை இணைக்கின்றது. | |
பொதுவான தன்னியக்க கூற்றுப்பொறி ஆளி | இலத்திரனியல் நிதிய மாற்றல் முறைமையானது வாடிக்கையாளர்கள் தமது கணக்குகளிலிருந்து காசை எடுப்பனவு செய்வதற்கு முறைமையுடன் தொடர்புடைய நிதியியல் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு வசதியை வழங்குகின்ற> கணக்கு மீதிகளையும் முறைமையுடன் தொடர்புடைய ஏனைய நிதியியல் நிறுவனங்களின் தன்னியக்க கூற்றுபொறியினூடாக ஏனைய தன்னியக்க கூற்றுப்பொறி பணிகளை விசாரணை செய்கின்ற இலத்திரனியல் நிதிய மாற்றல் முறைமையாகும். | |
பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் | பொ.ஆ.தி | |
பொருளாதார வரலாற்று அரும்பொருட்காட்சிச்சாலை | ||
போலியான/ மோசடியான நாணயத் தாள்கள் | இலங்கை மத்திய வங்கி தவிர்ந்த எவரேனும் ஆளினால் அல்லது நிறுவனத்தினால் பெறுநரை ஏமாற்றும் முயற்சியொன்றாக நாணயங்களை வேண்டுமென்றே தயாரித்து சுற்றோட்டத்திற்கு விடப்படுகின்ற நாணயத் தாள்கள். |
சொற்பதம் |
சுருக்கச் சொல் |
விபரணம் |
மட்டுப்படுத்தப்பட்ட வணிகர் | இது சார்பாக, இலங்கை மத்திய வங்கியினால் விதிக்கப்படக்கூடிய அத்தகைய நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு, உரிமப்பத்திரத்தில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்காக இலங்கைக்குள் வெளிநாட்டுச் செலாவணியினைக் கையாள்வதற்கான எவரேனும் ஆள், அதிகாரமளிக்கப்பட்ட வணிகரொவர் அல்லாத ஆட்களின் வகுப்பு அல்லது வகுப்புக்கள் | |
மத்திய இணைத்தரப்பு |
மத்திய இணைத்தரப்பொன்று, ஒன்று அல்லது அதற்கும் கூடுதலான நிதியியல் சந்தைகளில் வர்த்தகப்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களுக்காக இணைத்தரப்பினர்களிடையே தானாகவே தலையீடு செய்துகொண்டு, வாங்குநர் ஒவ்வொரு விற்பனையாளராகவும் விற்பனையாளர் வாங்குநராகவும் மாறுகின்றனர். இதன் மூலம் திறந்த ஒப்பந்தங்களின் செயலாற்றம் உறுதிப்படுத்தப்படுகின்றது. மத்திய இணைத்தரப்பொன்று பழைய ஒப்பந்தங்களுக்குப் பதிலாக புதிய ஒப்பந்தம், திறந்த முன்வைத்தல் முறைமை, அல்லது, விடயங்களின் தன்மையினைத் தெளிவாக அறிந்து கொள்வதன் மூலம் சட்ட ரீதியாகப் பிணிக்கும் ஏற்பாடுக;டாக சந்தைப் பங்கேற்பாளர்களுடன் வர்த்தகம் செய்வதற்கான இணைத்தரப்பொன்றாக மாறுகிறது. மத்திய இணைத்தரப்பினர்கள் வர்த்தகங்களின் பல்புடை வலையமைப்புக்களினூடாகப் பங்கேற்பாளர்களுக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான இடர்நேர்வுகளைக் குறைக்கக் கூடியவர்களாக இருப்பதுடன் அனைத்துப் பங்கேற்பாளர்கள் மீதும் கூடுதலானளவிற்கு காத்திரமான இடர்நேர்வுக் கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடியவர்களாகவும் இருப்பதனால் அதன் மூலம் அவர்களினால் அவர்கள் தொழிற்படும் சந்தைகளிலுள்ள முறையியல் சார்ந்த இடர்நேர்வுகளைக் குறைக்கக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர். | |
மத்திய இணைத்தரப்பு தீர்ப்பனவு முறைமை | ||
மத்திய ஒருங்கிணைக்கப்பட்ட சந்தைக் கண்காணிப்பு | பங்கேற்கின்ற நிதியியல் நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட அறிக்கையிடுகின்ற தளமொன்றாகும். இது அண்மிய அதேநேர அடிப்படையில் அனைத்துப் பணச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்களையும் பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களின் திரவத்தன்மை நிலைமையின் விபரங்களையும் பதிவுசெய்யப் பயன்படுத்தப்படுகின்றது | |
மத்திய பிணையங்கள் வைப்பகம் | ||
மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் | ம.டி.நா | இலத்திரனியல் பதிவொன்றிலிருந்து அல்லது டிஜிட்டல் அடையாளமொன்றிலிருந்து டிஜிட்டலில் மத்திய வங்கியின் மூலம் வழங்கப்பட்ட சட்டப்பூர்வமான நாணயமாகும். |
மத்திய வைப்பக முறைமை | ||
மத்திய வைப்பகம் | கணனி மயப்படுத்தப்பட்ட மத்திய முறைமையொன்றாகும். இது பத்திரங்களற்ற பிணையங்களின் ஆரம்ப வழங்கல்களையும் இரண்டாந்தரச் சந்தையில் இடம்பெறும் அவற்றின் வர்த்தகத்தினையும் பதிவுசெய்கிறது. | |
மத்திய வங்கியுடனான வர்த்தக வங்கிகளின் வைப்புக்கள் | ||
மரபுசாரா மீள்புதுப்பிக்கத்தக்க வலு மூலங்கள் | NCRE | சூரிய சக்தி, உயிரியல் வாயு, டென்றோ உயிரியல் வாயு, காற்று வலு போன்ற மரபுசாரா மீள்புதுப்பிக்கத்தக்க வலு மூலங்கள் |
மறைமுக நிதியியல் பரஸ்பர இடைத்தொடர்புகள் | இது, நிதியியல் நிறுவனமொன்றின் இடர்ப்பாடு, நேரடித் தொடர்புகள் இல்லாத நிலையிலும் கூட, மற்றொரு நிதியியல் நிறுவனத்தினை பாதிக்கக்கூடிய விதத்தில் இதன் மூலமாக வழிப்படுத்தப்படுவதனைக் குறிக்கிறது. பொதுவான சொத்துக்கள், நிழல் வங்கித்தொழில், தீயின் காரணமான விற்பனை, எல்லை அழைப்பு மற்றும் உச்ச வரம்பு என்பனவற்றிற்கான வெளிப்படுத்துகைகளும் தகவல்களின் பரவல்களும் மறைமுகமான நிதியியல் பரஸ்பர இடைத்தொடர்புகளுக்கு சில உதாரணங்களாகும். | |
மனித வளத் திணைக்களம் | ம.வ.தி | |
மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி | மா.மொ.உ. உற்பத்தி | மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட பெயரளவு மொ.உ.உற்பத்தியைப் பிரிப்பதன் மூலம் மேலிருந்து கீழ் வரையான அணுகுமுறையினைப் பயன்படுத்தி கணிக்கப்பட்டது. மாகாணங்களுக்கான, மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு மதிப்பீட்டில், மொ.உ.உற்பத்தியிலுள்ள ஒவ்வொரு விடயத்தினதும் பெறுமதி, மாகாண மட்டத்தில் தொடர்பான குறிகாட்டிகளைப் பயன்படுத்தி பிரிக்கப்பட்டிருக்கின்றன. |
மாதத்திற்கு மாத அடிப்படையில் பணவீக்கம் | முன்னைய மாதத்தினை நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை விட நடப்பு மாத நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் சதவீத மாற்றம் | |
மாவட்ட அலுவலக குறியீடு | மா.அ.கு | |
மிதக்கின்ற வட்டி வீத முறி | முறியொன்று இலண்டன் வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதம் + வீச்சு போன்ற பணச் சந்தை தொடர்பான வீதத்திற்குச் சமமான வேறுபட்ட கூப்பனைக் கொண்டிருக்கிறது. வீச்சு என்பது நிலையானதொரு பெறுமதியாகும். | |
மீளநிர்ணயிப்பதற்கான சராசரிக் காலம் | ||
மீள்கட்டுமானம் மற்றும் அபிவிருத்திக்கான பன்னாட்டு வங்கி | ||
மீள்கொடுப்பனவுக் காலம் | படுகடன் கடப்பாடுகள் மீளச் செலுத்தப்பட வேண்டிய காலப்பகுதி. | |
மீள்கொள்வனவு | ||
மீள்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கல்கள் | எதிர்காலத் திகதியொன்றில் உயர்ந்த விலைகளில் அரச பிணையங்களை மீண்டும் வாங்குவது என்ற உடன்படிக்கையுடன் இலங்கை மத்திய வங்கியினால் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு அவற்றை விற்பனை செய்வதுடன் தொடர்பான திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ், பங்கேற்கும் நிறுவனங்களினால் இலங்கை மத்திய வங்கியுடன் வைத்திருக்கப்படும் தற்காலிக வைப்பின் வடிவமாகும். | |
மீண்டெழும் செலவினம் | ||
முகப்புப் பெறுமதி | முதிர்ச்சியில் அரச பிணையங்களின் பெறுமதி | |
முகாமைத்துவ உதவியாளர் வகுப்பு | மு.உ.வ | |
முகாமைத்துவக் குழு | மு.கு | தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள குழுவாகும். இது தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் நாளாந்த நடைமுறைப்படுத்தலை மேற்பார்வை செய்யும் என்பதுடன் திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பான மற்றும் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் வழிகாட்டல்களையும் முன்னேற்றங்களையும் உறுதிப்படுத்தும். |
முக்கிய வீதக் காலப்பகுதி | ||
முதலாந்தரச் சந்தை | வாங்குநர்களுக்கு பிணையங்கள் முதலில் வழங்கப்படுகின்ற சந்தை | |
முதலீடு (வி.தோ. அளவீட்டில்) | கடந்த ஆண்டின் தொடர்பான காலாண்டுடன் ஒப்பிடப்படுகின்றவாறு, நடப்பு காலாண்டுப்பகுதியின் முதலீட்டு மட்டத்தினையும் அடுத்த காலாண்டிற்கான எதிர்பார்ப்புக்களையும் எடுத்துக்காட்டுகின்றது. | |
முதலீட்டு முகாமைத்துவம் மற்றும் கணக்கீட்டு முறைமை | மு.மு.க.மு | |
முதலீட்டு மேற்பார்வைக் குழுக்கள் | ||
முதலீட்டு வழிகாட்டல்கள் | மு.வ | |
முதலீட்டுக் கொள்கை அறிக்கை | மு.கொ.அ | |
முதலீட்டுக் கொள்கைக் கூற்று | ||
முதலீட்டுத் தொகுதி | ||
முதன்மை இணங்குவிப்பு அலுவலர் | மு.இ.அ | |
முதனிலை வணிகர் | மு.வ | அரச பிணையங்களின் வணிகத்திற்காக மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்டதொரு இடையேற்பாட்டாளர். |
முதன்மை இடர்நேர்வு அலுவலர் | ||
முதன்மைப் பணவீக்கம் | முதன்மைப் பணவீக்கமானது நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்படும் மாற்றங்களின் வீதத்தினைக் குறிப்பதுடன் பொருளாதாரமொன்றிலுள்ள மொத்தப் பணவீக்கத்தினையும் அளவிடுகின்றது. | |
முற்கொடுப்பனவு | பொருட்கள் அல்லது பணிகள் விநியோகிக்கப்படுவதற்கு முன்னர் வழங்குநர்களுக்குச் செலுத்துதல் அல்லது பகுதியளவில் செலுத்துதல் | |
முதிர்ச்சி | முதல் தொகையினைச் செலுத்துவதன் மூலம் வழங்கலை மீட்டுக் கொள்வதற்கு வழங்குநர் வாக்குறுதியளிக்கின்ற திகதியைக் குறிக்கிறது. மீட்டுக்கொள்ளும் திகதி வரையிலான நாட்களின் அல்லது ஆண்டுகளின் எண்ணிக்கை முதிர்ச்சி என அழைக்கப்படுகின்றது. | |
முதிர்ச்சிக்கான சராசரிக் காலம் | படுகடன் சொத்துப்பட்டியலிலுள்ள அனைத்து படுகடன் பிணையங்கள்/ கடன்களின் முதிர்ச்சிக்கான சராசரி காலம். | |
முதிர்ச்சிக்குள்ள நிறையேற்றப்பட்ட சராசரிக் காலம் | ||
முறி கடன்பாட்டுத் திட்டம் | இது, திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ் மீள்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்வதற்கு மத்திய வங்கி வசமுள்ள திறைசேரி உண்டியல்களும் திறைசேரி முறிகளும் போதாமல் இருக்கின்ற நேரத்தில் மூன்றாந்தரப்பினரிடமிருந்து கடன்பட்ட பிணையங்களைப் பயன்படுத்தி உள்நாட்டு பணச் சந்தையிலுள்ள மிகையான திரவத்தன்மையினை ஈர்த்துக் கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கியினால் பயன்படுத்தப்படுகின்ற விசேட திட்டமொன்றாகும். தற்பொழுது, முறிகள் கடன்பாட்டுத் திட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கி ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து பிணையங்களைக் கடன்பட மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. | |
முறைமைகள் பிரயோகங்கள் மற்றும் சாதனங்கள் | மு.பி.சா | |
முறையியல் சார்ந்த இடர்நேர்வு (பேரண்ட நிதியியல்) | நிதியியல் முறைமைகளின் அனைத்து அல்லது ஒரு பகுதியின் பெறுமதியிழப்புக் காரணமாக நிதியியல் பணிகளின் ஏற்பாடுகளுக்கு ஏற்படும் தடங்கல்கள் இடர்நேர்வாக இருப்பதுடன், இதனால், உண்மையான பொருளாதாரத்திற்கு கடுமையான எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்த முடியும் (ப.நா.நி). | |
முறையியல் சார்ந்த இடர்நேர்வு (மாதிரிப்படுத்தல்) | முறையியல் சார்ந்த இடர்நேர்வு என்பது நிதியியல் துறையின் விநோதமான சம்பவங்கள் அல்லது நிலைமைகளின் காரணமாக நிதியியல் முறைமை அல்லது நிதியியல் சந்தைகள் முழுவதும் முறிவடைந்து போவதனால் ஏற்படும் இடர்நேர்வாகும். தனிப்பட்ட நிறுவனமொன்றுடன் அல்லது பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து காணப்படும் இடர்நேர்வுகளை முழு முறைமைக்கும் தீங்கில்லாமல் கட்டுப்படுத்தக்கூடியதாக இருப்பின் அது முறையியல் சார்ந்த இடர்நேர்வினை ஏற்படுத்தாது. | |
முறைப்பாட்டு தொடர்பு இலக்கம் | ||
முறைப்பாட்டு சமர்ப்பித்தல் படிவம் | ||
முன்னரங்க அலுவலகம் | மு.அ | |
முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கைகள் | ||
முன்னுரிமைகளின் பொதுவாக்கப்பட்ட முறைமைத் திட்டம்(GSP +) | GSP+ | முன்னுரிமைகளின் பொதுவாக்கப்பட்ட முறைமையிலிருந்து ஏற்கனவே பயன்பெறுகின்ற அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளுக்கு மேலதிக வர்த்தக ஊக்குவிப்புக்களை வழங்குகின்ற முன்னுரிமைகளின் பொதுவாக்கப்பட்ட முறைமைத் திட்டத்தின் விசேடமானதொரு கூறாகும் |
முதலீட்டுச் சபை | BOI | |
மூடிஸ் இன்வெஸ்டேர்ஸ் பணிகள் | ||
மூத்த வெளிநாட்டவர் சிறப்புக் கணக்கு | குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற “இலங்கை – எனது கனவு இல்லம் நிகழ்ச்சித்திட்டத்தின்” கீழ், வதிவிட விசாவில் இலங்கையில் நீண்ட காலம் தங்கியிருக்க விரும்புகின்ற 55 வயதிற்கு மேற்பட்ட மூத்த வெளிநாட்டவர்களுக்கான சிறப்புக் கணக்குகள். | |
மூத்த வெளிநாட்டவர் நிலையான வைப்புக் கணக்கு (வெளிநாட்டு நாணயம்) | இத்தகைய சிறப்புக் கணக்குகள் 2021ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க பணிப்புரைகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இச்சிறப்பு வகையின் கீழ் இரு வகையான கணக்குகள் கிடைக்கத்தக்கதாகவுள்ளன. | |
மூத்த வெளிநாட்டவர் ரூபாக் கணக்கு | ||
மூலதனக் கொடுக்கல்வாங்கல் | 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கருத்திற்குட்பட்ட விதத்தில் நடைமுறைக் கொடுக்கல்வாங்கல்களாக இல்லாத கொடுக்கல்வாங்கலொன்றாகும். | |
மூலதனக் கொடுக்கல்வாங்கல்கள் ரூபாக் கணக்கு | இக்கணக்கு, புலம்பெயர்ந்தோர், இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியே வதிகின்ற இலங்கையரல்லாதோர் மற்றும் புலம்பெயர்வதற்கு/இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு எண்ணியுள்ள வதியும் ஆட்களுக்கு அவர்களது புலம்பெயர் படிகளையும் ஏனைய தகைமையுடைய பெறுகைகளையும் இலங்கைக்கு வெளியே அவர்கள் அனுப்புவதற்கு வசதியளிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. | |
மூலதனப் போதுமை விகிதம் | ||
மெய்நிகர் தனிப்பட்ட வலையமைப்பு | மற்றொரு வலையமைப்பு அல்லது இணையத்தளமூடாக தூர இருந்தே சேமிப்பியை அணுகுவதற்கான இணைப்பினை மேற்கொள்வதன் மூலம் வலையமைப்பினை அணுகுவதற்கான பாதுகாப்பான வழி | |
மெய்நிகர் நாணயம் | டிஜிட்டல் பெறுமதியினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற டிஜிட்டல் முறையில் வர்த்தகப்படுத்தக்கூடியதும் பரிவர்த்தனை ஊடகமாக தொழிற்படக்கூடியதுமாகும்; அத்துடன்/ அல்லது கணக்கின் அலகொன்றாகும்; அத்துடன்/ அல்லது பெறுமதிச் சேமிப்பியாகும். ஆனாலும் இது எந்தவொரு நியாயாதிக்கத்திலும் சட்ட ரீதியான அந்தஸ்தினைக் கொண்டிருக்காததுடன் எந்தவொரு நியாயாதிக்கத்தினாலும் வெளியிடப்படவோ அல்லது உத்தரவாதப்படுத்தப்படவோ இல்லை. | |
மேலதிக திணைக்களத் தலைவர் | மே.தி.த | |
மேலதிகப் பற்று | கணக்கிலுள்ளதிலும் பார்க்கக் கூடுதலான பணத்தினை எடுப்பனவு செய்வதன் காரணமாக உரிமம்பெற்ற வங்கிகளின் நடைமுறைக் கணக்கில் ஏற்படும் பற்றாக்குறை. | |
மைய கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் | மைய கொ.நு.வி. சுட்டெண் | இது, உணவுத் தளம்பல், வலு மற்றும் போக்குவரத்தினை கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் கூடையிலிருந்து நீக்குகிறது. |
மையப் பணவீக்கம் | முதன்மைப் பணவீக்கத்திலிருந்து உணவுத் தளம்பல், வலு மற்றும் போக்குவரத்தினை நீக்குவதன் மூலம் அளவிடப்படுகிறது. | |
மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் | ||
மொத்த உள்நாட்டு உற்பத்தி | மொ.உ.உ | மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது குறிப்பிட்டதொரு காலப்பகுதியில் நாடொன்றிலுள்ள பொருட்கள் மற்றும் பணிகளின் உற்பத்தியூடாக உருவாக்கப்பட்ட பெறுமதிகூட்டல்களின் சந்தைப் பெறுமதிகளை மதிப்பிடுகின்றதொரு நியம அளவு முறையாகும். |
மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணங்கள் | மீள்காப்புறுதி அல்லது ஆரம்பத் தரகு கழிவுகளுக்கு முன்னதாக எதிர்பார்க்கப்பட்ட ஒப்பந்தங்களிலிருந்து காப்புறுதியாளரொருவரினால் பெறப்பட்ட மொத்த வருமானம். | |
மொத்த தேசிய உற்பத்தி | மொ.தே.உ | |
மொத்தப் படுகடன் பணிகள் | ||
மோசடி நடைமுறை | பாதிக்கப்படக்கூடிய பயன்படுத்துநர்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு மோசடியாளர்களினால் மேற்கொள்ளப்படும் தந்திரம். சட்ட ரீதியான வெப்தளமொன்றிலிருந்து அனுப்பப்படுவது போன்று தோற்றமளிக்கும் புனையப்பட்ட மின்னஞ்சலை மோசடியாளர்கள் அனுப்பி சில குறிப்பிட்ட தீய நோக்குடன் கூடிய இணைப்புக்களை அழுத்துமாறு கேட்டுக் கொள்வதன் மூலம் தனிப்பட்ட தரவுகளை திருடிக் கொள்வர் |
சொற்பதம் |
சுருக்கச் சொல் |
விபரணம் |
யூரோ கட்டணம், மாஸ்டர் கார்ட், மற்றும் விசா | கொடுப்பனவு சிப்ஸ்கள் மற்றும் ஏனைய கொடுப்பனவு தொழில்நுட்பங்களுக்காக விளக்கக்குறிப்புக்களை வழங்குகின்ற யூரோபே> மாஸ்டர்கார்ட், விசா கார்ட், |
சொற்பதம் |
சுருக்கச் சொல் |
விபரணம் |
ரூபாக் கடன்கள் | பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் சார்பில் இலங்கை மத்திய வங்கியினால் நேரடி அல்லது தனிப்பட்ட வைப்பு வழங்கல்களின் அடிப்படையில் இரண்டாண்டுகளுக்கும் கூடுதலான முதிர்ச்சியுடன் வழங்கப்பட்ட நடுத்தரத்திலிருந்து நீண்ட காலத்திற்குரிய கடன் சாதனமாகும். இச்சாதனத்தின் வட்டி வீதங்கள் நிருவாக ரீதியாக தீர்மானிக்கப்படுகின்றன. | |
ரூபாய்த் திரவத்தன்மை | ||
ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட பிணையங்கள் |
சொற்பதம் |
சுருக்கச் சொல் |
விபரணம் |
லங்காகிளியர் (பிறைவேற்) லிமிடெட் |
இலங்கை மத்திய வங்கியினாலும் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினாலும் கூட்டாக உடமையாகவுள்ள தேசிய கொடுப்பனவு உட்கட்டமைப்பு வழங்குநராகவும் அத்துடன் இது கொடுப்பனவு கொடுத்துத்தீர்த்தலை வழங்குகின்றதுடன் இலங்கையில் சில்லறை கொடுப்பனவு முறைமைகளையும் தொழிற்படுத்துகின்றது |
|
லங்காகியூஆர் |
இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கையில் உள்நாட்டு நாணய கொடுப்பனவுகளுக்கான தேசிய விரைவு பதிலிறுப்பு குறியீட்டு நியமமாகும். |
சொற்பதம் |
சுருக்கச் சொல் |
விபரணம் |
வங்கி அடையாள குறியீடு | வங்கி அடையாளக் குறியீடு 8 இலிருந்து 11 வரையிலான எழுத்துக்களைக் கொண்டதாக இருப்பதுடன் சுவிப்ற் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்ளும் போது குறிப்பிட்ட வங்கியை அடையாளம் காண்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் வங்கிக்கான அஞ்சல் குறியீடாகக் காணப்படுவதுடன் பணம் சரியான இடத்திற்குப் போவதனை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கிறது. | |
வங்கி மேற்பார்வைத் திணைக்களம் | வ.மே.தி | |
வங்கிக் கொடுகடனுக்கான கேள்வி (வி.தோ. அளவீட்டில்) | நடப்புக் காலாண்டுப் பகுதியில் வங்கிக் கொடுகடனை பெறுவதற்கான கேள்வியையும் கடந்த ஆண்டின் தொடர்பான காலாண்டுப் பகுதியுடன் ஒப்பிடுகையில் அடுத்த காலாண்டிற்கான எதிர்பார்ப்புக்களையும் எடுத்துக்காட்டுகிறது. | |
வங்கித்தொழில் ஆற்றல் வாய்ந்த சுட்டெண் | வங்கித்தொழில் துறையின் ஆற்றல் வாய்ந்த தன்மையினை மதிப்பிடுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு குறிகாட்டியாகும். இது நிதியியல் உறுதிப்பாட்டு தொடர்பில் நிதியியல் முறைமையின் முக்கிய கூறாகக் காணப்படுகிறது. | |
வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வுநிலையம் | வ.க.ஆ.நி | |
வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம் | வ.அ.நி.நி.மே.தி | |
வங்கி வீதம் | வங்கி வீதமானது நிருவாக ரீதியில் நிர்ணயிக்கப்பட்ட வீதமொன்றாகக் காணப்படுவதுடன் இது அவசர காலப்பகுதிகளில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு அசாதாரண கடன்களை அல்லது முற்கொடுப்பனவுகளை வழங்கும் பொருட்டு மத்திய வங்கியினால் பயன்படுத்தப்படக்கூடும் | |
வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை | ||
வங்கித்தொழில் துறையின் வரிக்குப் பின்னரான இலாபம் | ||
வசதிகள் முகாமைத்துவத் திணைக்களம் | வ.மு.தி | |
வட்டி உதவுதொகை | வ.உ | நிதியினை அணுகுவதனை விரிவுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற கருவிகளில் இது ஒன்றாகும். நிதியியல் நிறுவனங்கள் உயர் கொடுகடன் இடர்நேர்வுகளுடன் தொடர்புபட்ட பொருளாதாரத் துறைகளுக்கு அவற்றின் சொந்த நிதியினைப் பயன்படுத்திக் கடன் வழங்குவதனை ஊக்குவிக்கும் பொருட்டு, வட்டி உதவுதொகைத் திட்டங்களின் கீழ் நிதியியல் நிறுவனங்களுக்கு வட்டி உதவுதொகையினை வழங்குவதற்காக, இலங்கை அரசாங்கம் அல்லது இலங்கை மத்திய வங்கி அல்லது கொடை முகவர் நிதிகளை வழங்குகின்றன. |
வட்டிப் பணிகள் | ||
வட்டிவீத இடர்நேர்வு | ||
வட்டி வீதங்களின் வீச்சு | ||
வணிக அலகு | வ.அ | |
வணிகர் நேரடிப் பங்கேற்பாளர் | ||
வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறை | ||
வதியும் முதலீட்டாளர் | இலங்கைக்கு வெளியே அனுமதிக்கப்பட்ட மூலதனக் கொடுக்கல்வாங்கல்களைச் செய்வதற்கு, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தினது ஏற்பாடுகளின் கீழ் விடுக்கப்பட்ட ஒழுங்குவிதிகளில் குறித்துரைக்கப்பட்டவாறான தகைமையுடைய வதியும் ஆட்கள். | |
வதியும் விருந்தினர் திட்டம் | குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற “வதியும் விருந்தினர் திட்டத்தின்” கீழ் இலங்கைக்கு வருகை தருகின்ற முதலீட்டாளர் மற்றும் தொழில்சார் நிபுணர்களாக வரக்கூடிய வாய்ப்பினைக் கொண்டவர்களுக்கான சிறப்புக் கணக்குகள். | |
வதியும் விருந்தினர் வெளிநாட்டு நாணயக் கணக்கு |
வதியும் விருந்தினர் திட்ட சிறப்புக் கணக்குகள்- இச்சிறப்பு கணக்குகள் 2021ஆம் ஆண்டின் 08ஆம் இலக்க பணிப்புரைகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இச்சிறப்பு வகையின் கீழ் மூன்று வகையான கணக்குகள் கிடைக்கத்தக்கதாகவுள்ளன. |
|
வதியும் விருந்தினர் ரூபாக் கணக்கு – முதலீட்டாளர் | ||
வதியும் விருந்தினர் ரூபாக் கணக்கு - தொழில்சார் நிபுணர்கள் | ||
வதிவற்றோர் ரூபாக் கணக்கு |
"இலங்கை ரூபாக் கணக்கானது i. உள்நாட்டுக் கொடுக்கல்வாங்கல்களுக்கும் புலம்பெயர் படிகளைக் கோருவதற்குத் தகைமையுடைய, ரூபாவில் உருவாக்கப்பட்ட புலம்பெயர்ந்தவர்களது வருமானத்திலிருந்து இலங்கையில் அனுமதிக்கப்பட்ட முதலீடுகளுக்கு வசதியளிப்பதற்காக புலம்பெயர்ந்தவர்களுக்காகவும் ii. நடைமுறைக் கொடுக்கல்வாங்கல்களிலிருந்தும் நிரூபிக்க முடியாத விதத்தில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட உள்முகப் பணவனுப்பல்களின் மூலம் இலங்கையில் செய்யப்பட்ட முதலீடுகளின் பெறுகைகளை தாய்நாட்டிற்கு அனுப்புவதற்காக இலங்கைக்கு வெளியேயுள்ள நிறுவனங்கள் மற்றும் கம்பனிகளுக்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டது" |
|
வர்த்தக அளவிலான பாற்பண்ணை அபிவிருத்திக் கடன் திட்டம் | வ.அ.பா.அ.க.தி | |
வர்த்தகப் பத்திரங்கள் | கூட்டுத்தாபனங்களினால் வழங்கப்படும் குறுங்காலப் படுகடன் சாதனங்களின் மிகப் பொதுவான ஒரு வகையாகும். உண்மையில் இது குறுங்கால பொறுப்புக்களை நிதியிடுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. | |
வர்த்தக நிலுவை | குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதியொன்றிற்கான நாட்டின் மொத்த ஏற்றுமதிகளுக்கும் இறக்குமதிகளுக்கும் இடையிலான வேறுபாடு | |
வர்த்தக மாற்று விகிதம் | ஏற்றுமதி விலைச் சுட்டெண் மற்றும் இறக்குமதி விலைச் சுட்டெண் என்பவற்றிற்கிடையிலான விகிதம் | |
வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை | ||
வரித் தளர்வு | ||
வரிக்கு முன்னரான | BT | |
வழங்கல் எதிர் கொடுப்பனவு | வ.எ.கொ | |
வழங்கல் எதிர் கொடுப்பனவு III | சமகாலத்தில் இடம்பெறுகின்ற பிணையங்கள் மற்றும் நிதிய மாற்றல்களின் தீர்ப்பனவாகும். இம்முறைமைகள் பிணையங்கள் மற்றும் நிதிகளின் மாற்றல் அறிவுறுத்தல்களை தேறிய அடிப்படையில் தீர்ப்பனவு செய்யும் அதேவேளை, இரண்டினதும் மாற்றல்கள் செயலாக்கச் சுழற்சியின் இறுதியில் இடம்பெறுகின்றன. தீர்ப்பனவுகள் ஒரு நாளைக்கு ஒரு தடவை அல்லது நாளொன்றிற்கு பல தடவைகள் இடம்பெறுகின்றன. | |
வழங்குநர்கள் | ||
வறுமை ஒழிப்பு நுண்பாக நிதிச் செயற்றிட்டம் | வ.ஒ.நு.நி.செ | |
வறுமை ஒழிப்பு நுண்பாக நிதிச் செயற்றிட்டம் - சுழலும் நிதியம் | வ.ஒ.நு.நி.செ – சு.நி | |
வாடிக்கையாளர் உரிய விழிப்புக் கவனம் |
"வாடிக்கையாளர் உரிய விழிப்புக் கவனம் பின்வருவனவற்றைச் செய்முறைப்படுத்துகிறது: (அ) வாடிக்கையாளர்களை அடையாளம் காணுதல் மற்றும் நம்பகமான, சுயாதீனமான மூல ஆவணங்கள், தரவு அல்லது தகவல்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளரின் அடையாளத்தினைச் சரிபார்த்துக் கொள்ளல். (ஆ) பயன்பெறும் சொந்தக்காரரை அடையாளம் காணுதல் மற்றும் பயன்பெறும் சொந்தக்காரரின் அடையாளத்தினைச் சரிபார்ப்பதற்காக நியாயமான வழிமுறைகளை மேற்கொள்ளுதல் (இ) பொருத்தமானதொரு விதமாக புரிந்துகொள்ளுதல், நோக்கம் மீதான தகவல்களைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் வியாபாரத் தொடர்புகளின் கருதப்பட்ட தன்மை. (ஈ) வியாபாரத் தொடர்புகள் மீது தற்பொழுது தொடர்ந்தியங்கும் அடிப்படையில் உரிய விழிப்புக் கவனத்தினை மேற்கொள்ளுதல் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கொடுக்கல்வாங்கல்கள் வாடிக்கையாளர் நிறுவன ரீதியான அறிவுடனும் தேவையானவிடத்து நிதியத்தின் மூலங்கள் உட்பட அவற்றின் வியாபாரம் மற்றும் இடர்நேர்வுத் தோற்றப்பாட்டுடனும் இணங்கிச் செல்வதனை உறுதிப்படுத்தும் விதத்தில் தொடர்புகள் இடம்பெற்ற காலத்தின் போது அதனூடாக மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல்வாங்கல்களை மிக நுணுக்கமாக ஆராய்தல்." |
|
வாடிக்கையாளர் கணக்கை அடிப்படையாகக் கொண்ட செல்லிடத்தொலைபேசி கொடுப்பனவு முறைமை |
உரிமம்பெற்ற வர்த்தக வங்கியொன்று, உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கியொன்று அல்லது நிதிக் கம்பனியொன்றினால் தொழிற்படுத்தப்படும் செல்லிடத்தொலைபேசி அடிப்படையிலான கொடுப்பனவு முறைமையாகும். இது அத்தகைய நிதியியல் நிறுவனங்களுடன் பேணப்படும் வாடிக்கையாளர் கணக்குகளுக்கு பெறுவழிகளை வழங்குகின்றது. |
|
விசாரணை நியதிகள் | வி.நி | |
வியாபார நிலைமை (வியாபார தோற்றப்பாட்டு அளவீட்டில்) | நடப்புக் காலாண்டுப் பகுதியில் பொதுவான வியாபார நிலைமையினையும் அடுத்த காலாண்டிற்கான எதிர்பார்ப்புக்களையும் எடுத்துக்காட்டுகிறது. | |
வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கு | இலங்கைக்கு வெளியே வதிவோரிடமிருந்து வெளிநாட்டுச் செலாவணியினை ஈட்டுகின்ற இலங்கையில் வதியும் ஆட்களுக்கான வெளிநாட்டு நாணயக் கணக்கு. | |
வியாபாரத் தோற்றப்பாட்டு அளவீடு | வி.தோ.அ | வியாபாரத் தோற்றப்பாட்டு அளவீடென்பது காலாண்டு ரீதியான அளவீடாகும். இது வியாபார நடவடிக்கைகளின் முக்கிய துறைகளின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில், பொருளாதாரத்தின் அனைத்து மூன்று முக்கிய துறைகளையும் உள்ளடக்குகின்ற கூட்டாண்மைத் துறையின் மனோபாவங்களை எடுத்துக்காட்டுகின்றது. இது, பொருளாதாரத்தில் தற்போது இடம்பெற்றுவரும் நிலைமையினைக் கண்காணிப்பதற்கு உதவுகிறது. |
வியாபாரத்திற்குச் சாதகமான வரி முறைமை | ||
வியாபாரம் செய்வதற்கு உகந்த சூழல் | ||
விரிந்த பணம் (M2b) | குறுகிய பண நிரம்பல், வர்த்தக வங்கிகளில் பொதுமக்களால் வைத்திருக்கப்பட்ட கால மற்றும் சேமிப்பு வைப்புக்கள் என்பவற்றையும் வர்த்தக வங்கிகளின் வெளிநாட்டு நாணய வைப்புக்களின் ஒரு பகுதியினையும் உள்ளடக்கியுள்ளது. | |
விரிவாக்கப்பட்ட நிதிய வசதி | EFF | |
விரைவு பதிலிறுப்புக் குறியீடு | வி.ப.கு | |
விரைவு பதிலிறுப்பு குறியீடு | இயந்திரம் வாசிக்கத்தக்க குறியீடான ஐஎஸ்ஓ 18004- இணக்கமான குறியாக்கம் மற்றும் தரவுகள் காட்சிப்படுத்தல் என்பன பொதுவாக யுஆர்எல்களை அல்லது திறன்பேசியிலுள்ள புகைப்படக்கருவியின் மூலம் வாசிப்பதற்கான ஏனைய தகவல்களை சேமிப்பதற்கு பயன்படுத்தப்பட்டன. | |
விலை வருவாய் விகிதம் | கம்பனியின்/ பொதுவான சந்தைப் பங்கொன்றிற்கான வருவாய்களுக்கான கம்பனியின்/ பொதுவான சந்தைப் பங்கொன்றின் விகிதமாகும். இவ்விகிதமானது கம்பனிகளின்/ பொதுவான சந்தையினை மதிப்பிடுவதற்கும் அவை மிகையாக மதிப்பிடப்பட்டுள்ளனவா அல்லது குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளனவா என்பதனைக் கண்டறிவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. | |
விளைவு | கூப்பன் அல்லது கழிவினை விலையின் சதவீதமாக தெரிவித்தலாகும். | |
விளைவு வளையி | பிணையங்களின் மீதான விளைவிற்கும் வேறுபட்ட முதிர்ச்சிகளுக்குமிடையிலான தொடர்பு முறைகளை வரைபடமொன்றாக எடுத்துக்காட்டுவது. | |
விற்பனைகள் (வி.தோ. அளவீட்டில்) | கடந்த ஆண்டின் தொடர்பான காலப்பகுதியுடன் ஒப்பிடப்படுகின்றவாறு நடப்பு காலாண்டில் விற்பனை அளவுகளையும் அடுத்த காலாண்டிற்கான எதிர்பார்ப்புக்களையும் எடுத்துக் காட்டுகின்றது. | |
விற்பனை மைய முனைக்கோடி | வி. மை. மு | வணிகர்களின் விற்பனை நிலையங்களில் கடனட்டை, பற்றட்டை மற்றும் சேமிக்கப்பட்ட பெறுமதி அட்டைகள் ஆகியவற்றின் மூலம் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு விற்பனை மைய முனைக்கோடிகள் வாடிக்கையாளர்களை அனுமதிக்கின்றன. |
விற்றல்-வாங்கல் வெளிநாட்டுச் செலாவணிப் பரஸ்பர பரிமாற்றல் | ||
வீடமைப்புக் கடன் | வீ.க | |
வீச்சு வரைபடம் | வரைபடமொன்று எதிர்வுகூறல்களுக்கான நம்பிக்கை இடைவெளிகளுடன் இணைந்து உண்மைத் தரவுகளையும் கருத்திற்கொள்ளப்பட்ட மாறியொன்றின் எதிர்வுகூறல்களையும் பிரதிபலித்து, அதன் மீதான நிச்சயமற்றதன்மையினையும் எடுத்துக்காட்டுகின்றது | |
வெளிநாட்டு கப்பற்படுத்தல் நிறுவனம் | 1972ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க கப்பற்படுத்தல் முகவர்களுக்கு உரிமம் வழங்கல் சட்டத்தின் (திருத்தப்பட்டவாறான) கருத்திற்குட்பட்ட விதத்தில் இலங்கைக்கு வெளியே வதிகின்ற ஏதேனும் கப்பற்படுத்தல் நிறுவனம். | |
வெளிநாட்டு நாணய நியதி நிதியிடல் வசதி | ||
வெளிநாட்டு நாணயம் | இலங்கை நாணயம் தவிர்ந்த வேறு ஏதேனும் நாணயம். | |
வெளிநாட்டு நேரடி முதலீடு | ||
வெளிநாட்டு வர்த்தகக் கடன்பாட்டுக் கணக்கு | 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் இலங்கைக்கு வெளியே வதியும் ஆட்களினால் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்பாடுகளின் பெறுகைகளை வரவு வைப்பதற்காக வதியும் கடன்பாட்டாளர்களினால் (உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் இலங்கை அரசாங்கம் மற்றும் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் தவிர்ந்தவை) பேணப்படும் கணக்கு. | |
வெளிநாட்டு விமான நிறுவனங்கள் | 2010ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க சிவில் விமான போக்குவரத்துச் சட்டத்தின் (திருத்தப்பட்டவாறான) கருத்திற்குட்பட்டு, இலங்கைக்கு வெளியே வதிகின்ற ஏதேனும் “வெளிநாட்டு விமானப் போக்குவரத்துத் தொழிற்பாட்டாளர்”. | |
வெளிநாட்டுச் செலாவணி வணிகம் | வெளிநாட்டுச் செலாவணியினை ஏற்றுக்கொள்ளல், வாங்குதல் விற்றல், கடன்படுதல், கடன் வழங்கல் மற்றும் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான நோக்கங்களுக்காக ஏதேனும் வேறு வெளிநாட்டு நாணயத்தினை பரிமாற்றிக் கொள்ளுதல். | |
வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களம் | வெ.செ.தி | |
வெளிநாட்டு உள்முகப் பணவனுப்பல்கள் | ||
வெளிநின்ற உள்நாட்டுப் படுகடன் | ||
வெளிநின்ற வெளிநாட்டுப் படுகடன் | ||
வெளிநாட்டு நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை | ||
வெளிநாட்டு நாணய பரஸ்பர பரிமாற்றல்கள் | ||
வெளிநின்ற வெளிநாட்டுப் படுகடன் | ||
வெளிப்படுத்தல் | வெளிநாட்டுச் செலாவணி ஐ.அ.டொலர் 15,000 இனை அல்லது அதற்குச் சமமான வேறு ஏதேனும் வெளிநாட்டு நாணயங்களை விஞ்சுகின்றவிடத்து சுங்கத் திணைக்களத்திற்கு வெளிப்படுத்தல் வேண்டும் அல்லது அத்தகைய வெளிநாட்டுச் செலாவணி ஐ.அ.டொலர் 15,000 அல்லது அதற்குச் சமமான வேறு ஏதேனும் வெளிநாட்டு நாணயத்திற்குக் குறைவாக அல்லது சமமாக இருக்குமிடத்து பொருத்தமானவாறு அதிகாரமளிக்கப்பட்ட வணிகருக்கும் வெளிப்படுத்தல் வேண்டும். | |
வெளிமுக முதலீட்டுக் கணக்கு | வதியும் ஆட்களினால் இலங்கைக்கு வெளியே மேற்கொள்ளப்படும் அனுமதிக்கப்பட்ட மூலதனக் கொடுக்கல்வாங்கல் தொடர்பிலான வெளிமுகப் பணவனுப்பல்களை வழிப்படுத்துவதற்காகவும் அத்தகைய முதலீடுகளின் ஏதேனும் வருமானங்களை இலங்கையில் பெற்றுக்கொள்ளும் விதத்திலும் அறிமுகப்படுத்தப்பட்ட கணக்கு. | |
வெளியீட்டு விலைகள் (வி.தோ. அளவீட்டில்) | கடந்த ஆண்டின் தொடர்பான காலாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்புக் காலாண்டுப் பகுதியின் விற்பனை விலைகளையும் அடுத்த காலாண்டிற்கான எதிர்பார்ப்புக்களையும் எடுத்துக்காட்டுகிறது. | |
வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியட் மசகெண்ணெய் விலைகள் | WTI | |
வேண்டுமென்றே சிதைக்கப்பட்ட/ மாற்றப்பட்ட/ திரிபடைந்த நாணயத் தாள்கள் | தாளின் மீதான திகதி, தொடர் இலக்கம். கையொப்பம், பெறுமதி அல்லது பாதுகாப்பு அம்சம் ஏதேனும் குறிப்பிடத்தக்க வழியில் மாற்றம் செய்யப்பட்டு வரைதல், சொற்கள், இலக்கங்கள், அடையாளங்கள் அல்லது குறியீடுகள் உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்கள். | |
வேளாண்மை அபிவிருத்திக்கான பன்னாட்டு நிதியம் | வே.அ.ப.நி | |
வேளாண்மைப் பெறுமதிச் சங்கிலி | வேறுபட்ட பிரிவுகள் மற்றும் வேளாண்மைத் துறையில் அவற்றிற்கிடையிலான இணைப்புக்கள். | |
வைப்புப் பொறுப்புக்கள் |
சொற்பதம் |
சுருக்கச் சொல் |
விபரணம் |
ஸ்டான்டட் அன்ட் புவர் |
சொற்பதம் |
சுருக்கச் சொல் |
விபரணம் |
1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டம் | ||
2005ஆம் ஆண்டின் 25ஆம் இலக்கப் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒடுக்குதல் மீதான சமவாயச் சட்டம் | இச்சட்டமானது பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒடுக்குதல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புக்களைத் தடைசெய்தல் மற்றும் பயங்கரவாத நிதியிடலுடன் தொடர்பான சொத்துக்களை முடக்குதல் பறிமுதல் செய்தல் மற்றும் இழப்பித்தல் என்பனவற்றிற்கான ஏற்பாடுகளையும் கொண்டிருக்கிறது. | |
2006ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க பணம் தூயதாக்கல் தடைச் சட்டம் | இலங்கையில் பணம் தூயதாக்கலைத் தடை செய்கின்றதொரு சட்டமாகும். பணம் தூயதாக்கலை ஒழிப்பதற்கும் தடைசெய்வதற்கும் தேவையான வழிமுறைகளை வழங்குகிறது; அத்துடன் அவற்றுடன் தொடர்பான விடயங்களை அல்லது சம்பவங்களைத் தடைசெய்வதற்கான ஏற்பாடுகளையும் வழங்குகிறது. | |
2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டம் | சட்டமானது பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் தொடர்பான குற்றங்களைத் தடுத்தல், கண்டறிதல், புலனாய்வு செய்தல் மற்றும் வழக்குத் தொடர்தல் என்பனவற்றிற்கு வசதியளிப்பதற்காக, சந்தேகத்திற்குரிய நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பான தரவுகளைச் சேகரித்தல், பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் தொடர்பில் உரிய விழிப்புக் கவன வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்ட நிறுவனங்களைக் கேட்டுக்கொள்ளல்; இச்சட்டம் எந்நிறுவனங்களுக்கு ஏற்புடைத்தானதோ அந்நிறுவனங்கள் அனைத்தினதும் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்குப் பொறுப்பாகவுள்ள அதிகாரிகளை அடையாளம் காணுதல்; மற்றும் அவற்றுடன் தொடர்பான அல்லது சம்பவங்களுடன் தொடர்பான விடயங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. | |
2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டம் | ||
2021ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க மற்றும் 4ஆம் இலக்க ஒழுங்குவிதிகளின் கீழ் உடனடி குடும்ப உறுப்பினர்கள் | தொடர்பான ஆளின் பெற்றோர், வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகள் | |
2021ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க ஒழுங்குவிதிகளின் கீழ் உடனடி குடும்ப உறுப்பினர்கள் | தொடர்பான ஆளின் பெற்றோர், தாத்தா,பாட்டி, வாழ்கைத் துணை மற்றும் பிள்ளைகள் | |
2021ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க ஒழுங்குவிதிகளின் கீழ் உடனடி குடும்ப உறுப்பினர்கள் | தொடர்பான ஆளின் பெற்றோர், தாத்தா,பாட்டி, பெற்றோரில் ஒருவருக்குப் பிறந்த பிள்ளை, வாழ்க்கைத் துணை | |
2021ஆம் ஆண்டின் ஒழுங்குவிதி 3இன் கீழ் தற்காலிக வதிவிட விசா | குறித்துரைக்கப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்குட்பட்டு எதிர்காலத் திகதியொன்றில் அந்நாட்டின் நிரந்தர வதிவிட அந்தஸ்தினை அல்லது பிரசாவுரிமையினைப் பெறுவதற்கு தனிப்பட்டவர்களை உரித்துடையதாக்கும் விசா வகையின் கீழ் வருகின்ற இலங்கைப் பிரசைகளினால் பெறப்பட்டதொரு விசா. | |
AMD 01 | படிவம் RR 06 ஊடாக ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ள உறுப்பினரொருவரின் பெயருக்கும் தேசிய அடையாள அட்டையிலுள்ளவாறான பெயருக்குமிடையிலுள்ள வேறுபாடுகளைத் திருத்துவதற்காக ஊ.சே.நிதியத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள கடிதம். | |
AMD 02 | படிவம் RR 06 ஊடாக ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ள உறுப்பினரொருவரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கும் தேசிய அடையாள அட்டையின் படியான இலக்கத்திற்குமிடையில் ஏதேனும் வேறுபாடுகள் காணப்படுமிடத்து அனுப்பப்பட வேண்டிய கடிதம். | |
ASL Balancing | ஊ.சே.நிதியத்தின் வருடாந்த கணக்குகளை சமநிலைப்படுத்தல் மற்றும் உறுப்பினர் கணக்குகளுக்கு வருடாந்த வட்டியை வரவு வைத்தல். | |
CON TOT Checking | வருடாந்த கணக்கினை சமநிலைப்படுத்துவதற்கு முன்னதாக உறுப்பினர் கணக்குகளுக்கு வரவு வைக்கப்படாத நிலுவைகளையும் தொழில்தருநர் கணக்கில் எஞ்சியுள்ளவற்றையும் பரிசோதித்தல். | |
IEL | வருடாந்த கணக்குகளை சமநிலைப்படுத்திய பின்னர் ஒவ்வொரு உறுப்பினர் கணக்குகளிலும் ஆண்டு இறுதியிலுள்ள நிலுவைகளை உள்ளடக்குகின்ற பேரேடு. |