அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
வங்கித் தொடர்பூட்டல்
இலங்கை மத்திய வங்கியின் பொதுவான தகவல்கள்
இலங்கை மத்திய வங்கியை நான் எவ்வாறு தொடர்பு கொள்ளமுடியும்?
அனைத்து விசாரணைகளுக்கும் மின்னஞ்சல் செய்தியொன்றினை அனுப்பவும்
அல்லது 011-2477000 என்ற பொதுவான இலக்கத்தினை அழைக்கவும். 011-247-7000
குறிப்பிட்டதொரு விடயம் தொடர்பில் நீங்கள் எவருடனும் பேசவிரும்பினால் மூத்த அலுவலர்களுக்கான தொலைபேசி விபரக்கொத்தினைத் தயவுசெய்து பார்த்து https://www.cbsl.gov.lk/en/about/organisational-structure/principal-officers இலுள்ள விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்.
ஊ.சே. நிதியம் பற்றிய விசாரணைகளுக்கு தயவுசெய்து 011- 2206636/6642/6672/6690/6691/6692/6693 என்ற இலக்கங்களில் ஊ.சே.நிதிய உதவிப்பீடத்தினைத் தொடர்புகொள்ளவும்.
வெளிநாட்டுச் செலாவணி பற்றிய விசாரணைகளுக்கு தயவுசெய்து வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தினை 011-2477021 இல் தொடர்புகொள்ளவும்.
இலங்கை மத்திய வங்கிக்கு நான் எவ்வாறு முறைப்பாடொன்றினைச் செய்யலாம் அல்லது ஆலோசனையினை வழங்கலாம்?
என்ற மின்னஞ்சலுக்கு தயவுசெய்து உங்கள் முறைப்பாட்டினை அத்துடன் அல்லது ஆலோசனையினை அனுப்பி வைக்கலாம்.
சமூக ஊடகங்களில் மத்திய வங்கி செயற்படுகின்றதா?
ஆம். இலங்கை மத்திய வங்கி அலுவல்சார் முகநூல் பக்கம், ருவிட்டர் கணக்கு மற்றும் யூரியூப் அலைவரிசை என்பனவற்றைப் பேணுகிறது.
நான் முகநூல் பக்கமூடாக மத்திய வங்கியைத் தொடர்பு கொள்ளமுடியுமா?
ஆம் இலங்கை மத்திய வங்கியைத் தொடர்புகொள்வதற்கு நீங்கள் மத்திய வங்கியின் அலுவல்சார் முகநூல் பக்கத்தினைப் பயன்படுத்தலாம்.
மத்திய வங்கியின் யூரியூப் அலைவரிசையில் எவ்வகையிலான வீடியோக்கள் காணப்படுகின்றதா?
நீங்கள் கல்வி சார்ந்த நிகழ்ச்சித்திட்டங்கள், வெப்தள விபரங்கள், நாணயக் கொள்கை தொடர்பான பத்திரிகை மாநாடு மற்றும் தொடர்பான நிகழ்ச்சிநிரல்களை இலங்கை மத்திய வங்கியின் யூரியூப் அலைவரிசையில் பார்வையிடலாம்.
https://www.youtube.com/channel/UCa5HpMBQi9mQqPY-el6UvnA
இலங்கை மத்திய வங்கியின் நாணய அரும்பொருட்காட்சிச்சாலை
நாணய அரும்பொருட்காட்சிச்சாலை என்றால் என்ன?
நாணய அரும்பொருட்காட்சிச்சாலை கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்தும் இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றவாறான நாணயத் தாள்கள் மற்றும் குத்திகள் வரை இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற நாணயங்கள் உட்பட, உலகின் நாணயப் பரிணாம வளர்ச்சியிலிருந்து கிடைத்த பரந்த வீச்சிலான காட்சிப்பொருட்களை காட்சிப்படுத்தி வருகிறது. அநுராதபுரம், பொலனறுவை, கோட்டே மற்றும் கண்டி இராசதானிகள் போன்ற பல்வேறு யுகங்களில் பயன்படுத்தப்பட்ட நாணயக் குத்திகள், பிரித்தானிய காலப்பகுதியிலிருந்தான பெருமளவு சேகரிப்புக்களுடன் நாட்டின் காலணித்துவ ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணயத் தாள்கள் மற்றும் குத்திகள் என்பன கவர்ச்சிகரமான விதத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நாணயக் குத்திகளை வார்ப்படம் செய்கின்ற மற்றும் நாணயத் தாள்களை அச்சிடுகின்ற செய்முறைகளும் வங்கித் தாள்களை அச்சிடுபவர்களினதும் நாணயக் குத்திகளை வார்ப்படம் செய்பவர்களினதும் பெருந்தன்மையுடன் கூடிய பங்களிப்புடன் விசேட முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாணயத் தாள்களின் பாதுகாப்புப் பண்புகளைக் கண்டறிவதற்கான சுயகற்றல் சாதனங்களும் நாணயங்கள் தொடர்பான வீடியோக்களும் கூட கிடைக்கத்தக்கதாகவுள்ளன. பொருளாதார வரலாற்று அரும்பொருட்காட்சிச்சாலை, பாடசாலைப் பிள்ளைகள் மற்றும் ஈடுபாடு கொண்ட தரப்பினருக்கான சுற்றுலா வசதியினை இலவசமாக வழங்குகின்றது.
நாணய அரும்பொருட்காட்சிச்சாலை எங்கே அமைந்துள்ளது?
சனாதிபதி மாவத்தையும் சதாம் வீதியும் இணைகின்ற மூலையிலுள்ள சென்றல் பொயின்ட் கட்டடத்தில் அமைந்துள்ளது.
தற்போது இங்கு வெளியீடுகளின் விற்பனைப்பீடம் தரைமாடியிலும் நாணய அரும்பொருட்காட்சிச்சாலை 3ஆவது தளத்திலும் அமைந்துள்ளது.
நாணய அரும்பொருட்காட்சிச்சாலை திறக்கப்படும் நேரம் என்ன?
அரச மற்றும் வங்கித்தொழில் விடுமுறை நாட்கள் தவிர, வாரநாட்களில் மு.ப. 9.00 முதல் பி.ப. 4.15 மணி வரை.
ஞாபகார்த்த நாணயக் குத்திகளை எங்கேயிருந்து நாம் கொள்வனவு செய்யமுடியும்?
ஞாபகார்த்த நாணயக் குத்திகளை மத்திய வங்கியின் சென்றல் பொயின்ட் கட்டடத்திலுள்ள விற்பனைப் பீடங்களிலிருந்து கொள்வனவு செய்யமுடியும் (தொலைபேசி 0112444503)
இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகள்
இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளை எவ்வாறு நாம் கொள்வனவு செய்யமுடியும்?
இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளைப் பின்வரும் இடங்களிலிருந்து கொள்வனவு செய்யமுடியும்:
- சென்றல் பொயின்ட் கட்டடத்திலுள்ள வெளியீட்டு விற்பனைப் பீடத்திலுள்ள விற்பனைப் பீடம் (தொலைபேசி 0112444502)
- இராஜகிரியவிலுள்ள வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வுநிலையத்திலுள்ள விற்பனைப் பீடம் (தொலைபேசி 0112477829)
- நாட்டின் முன்னணிப் புத்தக விற்பனைச்சாலைகள்
- பிரதேச அலுவலகங்கள்:
- மாத்தளை (தொலைபேசி 066 2223367)
- அநுராதபுரம் (தொலைபேசி 025 2222055)
- மாத்தறை (தொலைபேசி 041 2222774)
- திருகோணமலை (தொலைபேசி 026 2226966)
- கிளிநொச்சி (தொலைபேசி 021 2285914)
- நுவரெலியா (தொலைபேசி 052 3059004)
இலங்கை மத்திய வங்கி காலாந்தர வெளியீடுகளை வெளியிடுகின்றதா?
இலங்கை மத்திய வங்கி பொருளாதாரம், நாணய மற்றும் வங்கித்தொழில் தொடர்பான விடயங்கள் மீது காலாண்டு அடிப்படையில் சட்டஹன (சிங்களம்)/ வைப்பகம் (தமிழ்)/ நியூஸ்சேர்வே (ஆங்கிலம்) ஆகிய 3 காலாந்தரத் தரவுகளை வெளியிடுகிறது.
இவற்றினை ஒவ்வொரு காலாண்டு இறுதியிலும் இலங்கை மத்திய வங்கியின் வெப்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.
- சட்டஹன
- நியூஸ்சேர்வே
- வைப்பகம்
நியூஸ்சேர்வேயின் வன்பிரதியொன்றினை ரூ.60 இனையும் சட்டஹன மற்றும் வைப்பகங்களை வழங்கலொன்றிற்கு ரூ.20 இனையும் காசாகவோ அட்டை மூலமோ செலுத்துவதன் மூலம் இலங்கை மத்திய வங்கியின் விற்பனைப் பீடத்திலிருந்து பெற்றுக் கொள்ளமுடியும்.
காலாந்தர வெளியீடுகளுக்காக நான் ஆண்டுச் சந்தாவினைச் செலுத்த முடியுமா?
இலங்கை மத்திய வங்கியின் சார்பில் காசுக்கட்டளை அல்லது காசோலையொன்றின் மூலம் காலாந்தர வெளியீடொன்றிற்கு ரூ.420 கொண்ட கொடுப்பனவினைச் செலுத்துவதன் மூலம் ஓராண்டு காலப்பகுதிக்கு உங்கள் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ இக்காலாந்தர வெளியீடுகளை விநியோகிக்கப்படும்.
மேலே குறிப்பிடப்பட்டவாறு, விரும்பத்தக்க காலப்பகுதிக்குரிய தொகையினைச் செலுத்துவதன் மூலம் சந்தாக்களைப் புதுப்பித்துக் கொள்ளமுடியும்.
இலங்கை மத்திய வங்கியின் விழிப்புணர்வு
இலங்கை மத்திய வங்கி பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களில் ஈடுபடுகின்றதா?
ஆம். இலங்கை மத்திய வங்கி பல்வேறு அமைச்சுக்களினாலும் ஒழுங்குசெய்யப்பட்ட கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சிகளில் இடம்பெறும் பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களில் பங்கேற்கிறது.
மேலும், இலங்கை மத்திய வங்கி அதன் பிராந்திய அலுவலகங்களிலொன்றில், ஒன்றுவிட்டு ஒரு ஆண்டில் முழு நாள் நிகழ்ச்சிகளை நடத்துகின்றது. அடுத்த முழு நாள் நிகழ்ச்சிக்கான திகதி மற்றும் இடம் பற்றிய தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.
உண்மையில் இலங்கை மத்திய வங்கியின் பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தில் மிகவும் கவரத்தக்க விடயமாக நடமாடும் நாணய அரும்பொருட்காட்சிச்சாலையும் உ.சே.நிதிய விசாரணைகளை முக்கியப்படுத்துகின்ற நடமாடும் ஊ.சே.நிதிய உதவிப்பீடச் சேவைகளும் காணப்படுகின்றன. இலங்கை மத்திய வங்கியும் இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தினால் நடத்தப்படும் அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் தொடர்பான காட்சிப்படுத்தல்களை ஒழுங்கு செய்வதுடன் இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளும் மேற்குறிப்பிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
தொடர்பூட்டல் திணைக்களமும் மத்திய வங்கியின் தொழிற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் மாணவர்களுக்கு அறிவூட்டுவதற்காக ஆவண வீடியோக்களைத் தயாரிப்பதுடன் பல்வேறுபட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளையும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தி வருகிறது.
இலங்கை மத்திய வங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை மக்களின் ஒரு குறிப்பிட்ட குழுவினருக்காகவா நடத்துகின்றது?
ஆம். இலங்கை மத்திய வங்கி விரிவுரைகள்/ செயலமர்வுகள்/ ஆய்வரங்குகள் போன்ற வடிவிலான கல்விசார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமாக நடத்துகின்றது.
இலங்கை மத்திய வங்கியின் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில பிரபல்யமான தலைப்புக்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:
- இலங்கை மத்திய வங்கியின் குறிக்கோள்கள் மற்றும் தொழிற்பாடுகள்
- பணம், வங்கித்தொழில் மற்றும் மத்திய வங்கித்தொழில்
- அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் தோற்றப்பாடு
- வங்கிகளை மேற்பார்வை செய்வதில் மத்திய வங்கிகளின் வகிபாகம்
- வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களை மேற்பார்வை செய்வதில் மத்திய வங்கிகளின் வகிபாகம்
- இலங்கையில் செலாவணி வீத முகாமைத்துவம்
- இலங்கை நாணயக் கொள்கை
- பன்னாட்டு வர்த்தகம் மற்றும் சென்மதி நிலுவை
- இலங்கையில் நாணயத் தாள்களையும் குத்திகளையும் வெளியிடுதல்
- இலங்கையில் திறைசேரி உண்டியல்களையும் முறிகளையும் வழங்குதல்
- இலங்கை மத்திய வங்கியினதும் இலங்கையின் ஏனைய நிதியியல் நிறுவனங்களினதும் சட்ட மற்றும் இணங்குவிப்புத் தொழிற்பாடுகள்
- தேசிய வருமானக் கணக்கீடு
- பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல்
- இலங்கையில் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்
உங்கள் பாடசாலை/ பல்கலைக்கழகம்/ கல்வி நிறுவனத்தில் இத்தலைப்புக்களில் எவற்றையேனும் பற்றிய விளக்கவுரையினை கேட்க நீங்கள் விரும்பினால் அல்லது இலங்கை மத்திய வங்கிக்கு விஜயம் செய்வதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ள விரும்பினால் அத்துடன் எமது வளவாளர்களில் ஒருவரின் பேச்சைக் கேட்கவிரும்பினால் இற்கான பிரதியுடன், மின்னஞ்சலூடாகப் பணிப்பாளர்/ தொடர்பூட்டல் திணைக்களத்திற்கு எழுத்து மூலமான கோரிக்கையினை அனுப்பி வைத்தல் வேண்டும்.
வேறு ஏதேனுமொரு தலைப்பினை உள்ளடக்க நீங்கள் விரும்பினால் அல்லது இலங்கை மத்திய வங்கியின் விழிப்புணர்வு பற்றி வேறு ஏதேனும் விசாரணைகள் தேவையாயின் தயவுசெய்து மின்னஞ்சல் செய்தியொன்றினை ஊடாக “இலங்கை மத்திய வங்கி விழிப்பணர்வு”இற்கு பிரதியொன்றுடன் அனுப்பி வைத்தல் வேண்டும் என்பதுடன் வளவாளர்களின் கிடைப்பனவினைப் பொறுத்து இதனை நாம் பரிசீலனையில் கொள்ளுவோம்.