Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் வசதிப்படுத்தல் திணைக்களத்தினைத் தாபித்தல்

உள்நாட்டு பெறுமதிசேர்த்தலின் ஏறத்தாழ 100 சதவீதத்தினைக் கொண்டு தொழிலாளர் பணவனுப்பல்கள், இலங்கையின் வெளிநாட்டு நாணய வருவாய்களின் முக்கிய தூணொன்றாகவிருந்து நாட்டின் வெளிநாட்டுத் துறையின் தாக்குபிடிக்கும் தன்மைக்கு கணிசமான ஆதரவு வழங்குகின்றன. தொழிலாளர் பணவனுப்பல்கள் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேல் வருடாந்த வர்த்தகப் பற்றாக்குறைக்கெதிராக ஏறத்தாழ 80 சதவீதத்துக்கு காப்பீடு வழங்கியதுடன் பணவனுப்பல்களின் உட்பாய்ச்சல்களை வலுப்படுத்துவது முறைசார்ந்த வங்கித்தொழில் முறைமைக்கு சீரான வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களை வழங்குதல் அத்துடன் வருமான மற்றும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல் உள்ளடங்கலாக பல்வேறு சமூகப்-பொருளாதார நன்மைகளைக் கொண்டுவரும்.

2021இன் மூன்றாம் காலாண்டின் போது நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குதலை அமுல்படுத்துவதற்கு நிதியியல் உளவறிதல் பிரிவு மூலம் நிர்வாகத் தண்டப்பணங்களை விதித்தல்

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தாக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக்கொண்டு, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்காமைக்காக நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிதியியல் நிறுவனத்தின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் கடுமையை கருத்திற்கொண்டு தண்டப்பணம் விதித்துரைக்கப்படலாம்.

 அதற்கமைய, பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாத நிதியிடலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துனராக, நிதியியல் உளவறிதல் பிரிவு நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவிப்பை அமுல்படுத்துவற்கு, கீழே குறிக்கப்பட்டவாறு 2021 யூலை 01 தொடக்கம் 2021 செத்தெம்பர் 30 வரையான காலப்பகுதிக்கு மொத்தமாக ரூ. 2.0 மில்லியன் தொகையினை தண்டப்பணமாக சேகரித்தது. சேகரிக்கப்பட்ட தண்டப்பணம் திரட்டுநிதியத்திற்கு வரவு வைக்கப்பட்டது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2021 ஒத்தோபரில் 7.6 சதவீதத்திற்கு அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 செத்தெம்பரில் 5.7 சதவீதத்திலிருந்து 2021 ஒத்தோபரில் 7.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2021 செத்தெம்பரில் 10.0 சதவீதத்திலிருந்து 2021 ஒத்தோபரில் 12.8 அதிகரித்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 செத்தெம்பரில் 3.8 சதவீதத்திலிருந்து 2021 ஒத்தோபரில் 5.4 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஏற்றுமதி பெறுகைகளை மாற்றுதல் தொடர்பில் மத்திய வங்கி புதிய விதிகளை வழங்கியுள்ளது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஏற்கனவே காணப்படுகின்ற விதிகளை நீக்கி ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு அனுப்புதல் அத்துடன் அத்தகைய ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கை ரூபாவாக மாற்றுதல் தொடர்பில் 2021 ஒத்தோபர் 28ஆம் திகதியிடப்பட்ட 2251/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்டவாறு புதிய விதிகளை வழங்கியுள்ளது. புதிய விதிகள் இலங்கையில் பொருட்கள் மற்றும் பணிகள் ஏற்றுமதி செய்கின்ற இருசாராருக்கும் ஏற்புடையதாகும். 

முறிவடைந்த உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளுக்கு புத்துயிரளிப்பதற்கான ஆலோசனைக் குழுவினைத் தாபித்தல்

முறிவடைந்த நிதிக் கம்பனிகளுக்கான சாத்தியமான புத்துயிரளித்தல் தெரிவுகளைப் பரீட்சிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை ஆலோசனைக் குழுவொன்றினைத் தாபித்துள்ளது. 

இக்குழு வியாபாரத் துறையிலிருந்து நான்கு (04) புகழ்பெற்ற நிபுணர்களை உள்ளடக்குவதுடன் சிபிசி பினான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், கொமா்ஷல் பேங் ஒப் சிலோன் பிஎல்சியின் முன்னாள் தலைவரும், இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் துணை ஆளுநருமான திரு. தர்ம தீரசிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்களாக பிரைஸ்வோட்டஹவுஸ்கூப்பர்ஸின் முகாமைத்துவப் பங்காளர்  திரு. சுஜீவ முதலிகே; மூரேஸ் ஸ்டீபன் கன்ஸ்சல்டிங் (பிறைவெட்) லிமிடெட் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. திசான் சுபசிங்க் மற்றும் அமரசேகர அன்ட் கம்பனி பட்டயக் கணக்காளர்களின் சிரேஷ்ட பங்காளர்  (கணக்காய்வு மற்றும் உத்தரவாதம்) திரு. தியாகராஜா தர்மராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பேரேட்டுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலமைந்த பகிரப்பட்ட உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் சாத்தியப்பாட்டு எண்ணக்கருவை உருவாக்கிப் பரீட்சிக்கும் செயன்முறையினை இலங்கை மத்திய வங்கி வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது

பேரேட்டுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலமைந்த பகிரப்பட்ட உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் சாத்தியப்பாட்டு எண்ணக்கரு அறிக்கை 2021 ஒத்தோபர் 25 அன்று தேசிய கொடுப்பனவு சபையின் தலைவர், இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் திருமதி இவட் பெர்னாந்து மூலம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் முகாமைத்துவம் மற்றும் அலுவலர்கள் பிரசன்னமாகியிருந்ததுடன் சாத்தியப்பாட்டு எண்ணக்கருப் பரிசோதனையில் ஈடுபட்ட வங்கிகளின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளும் மூன்று சாத்தியப்பாட்டு எண்ணக்கரு விருத்தியாளர் குழுக்களும் மெய்நிகராகப் பங்கேற்றனர். 

Pages