Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வெளிநாட்டு நாணயத்தை உடைமையில் வைத்திருப்பதன் மீது வழங்கப்பட்ட கட்டளையை நீடித்தல்

இலங்கையுள்ள அல்லது வதிகின்ற ஆட்களுக்காக கட்டளையில் குறித்துரைக்கப்பட்டவாறு உடைமையிலுள்ள வெளிநாட்டு நாணயத்தை அதிகாரமளிக்கப்பட்ட வணிகரொருவரிடம் (உரிமம்பெற்ற வர்த்தக வங்கி அல்லது தேசிய சேமிப்பு வங்கி) வைப்புச் செய்வதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தை 2022.07.26 அன்று வரை மேலும் 14 வேலை நாட்களால் நீடித்து 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணித் திட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சர் கட்டளையொன்றினை வழங்கியுள்ளார்.

மேலதிகத் தகவல்களுக்கு 2287/16ஆம் இலக்க, 2022 யூலை 05ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானப் பத்திரிகை (அதிவிசேடம்) அறிவித்தலில் வெளியிடப்பட்ட வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான கட்டளையை  நீங்கள் பார்க்கலாம். இதனை www.dfe.lk என்ற இணையத்தளம் வாயிலாக தரவிறக்கம் செய்யலாம்/அணுகலாம்.

இலங்கை மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கை நிலையினை மேலும் இறுக்கமாக்கியுள்ளது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2022 யூலை 06ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 14.50 சதவீதத்திற்கும் 15.50 சதவீதத்திற்கும் 100 அடிப்படை புள்ளிகளால் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. அண்மையில் எதிர்பார்த்ததை விட உயர்வாக முதன்மைப் பணவீக்கம் உயர்வடைந்தமை அத்துடன் எதிர்வரவுள்ள காலப்பகுதியில் அதிகரித்த விடாப்பிடியான உயர்வான பணவீக்கம் என்பவற்றை கவனத்திற் கொண்டு, நாணயக் கொள்கையினை மேலும் இறுக்கமடையச் செய்தலானது ஏதேனும் பாதகமான பணவீக்க எதிர்பார்க்கைகள் அதிகரிப்பதனைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமானதாகவிருக்குமென சபை அபிப்பிராயப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தை மேற்கொள்கையில், சபையானது அண்மைக்காலத்தில் அனைத்து பொருளாதார துறைகளுக்கிடையிலும் ஏதேனும் விலை அழுத்தங்கள் உயர்வடைதலின் பரந்தளவான பாதகமான விளைவுகளுக்கு எதிராக, ஏனையவைகளுக்கு மத்தியில் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவிலான தொழில்கள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்தப் பொருளாதார நடவடிக்கைகள் அத்துடன் நிதியியல் துறை செயலாற்றம் என்பவற்றின் மீது இறுக்கமான நாணய நிலைமைகளின் தாக்கத்தின் மீது கவனம் செலுத்தியிருந்தது. அனைத்து காரணிகளையும் பரிசீலனையிற் கொள்கையில், இக்கொள்கை சீராக்கமானது நடுத்தரகாலத்தில் பணவீக்க எதிர்பார்க்கைகளை முதன்மைப் பணவீக்கத்தின் இலக்கிடப்பட்ட அளவிற்கு அண்மித்து நிலைநிறுத்துவதற்கு உதவுவதற்கு வழிகாட்டுகின்ற அதேவேளை பொருளாதாரத்தில் ஏதேனும் ஏதுவாகின்ற கேள்வி அழுத்தங்கள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துமென சபை அபிப்பிராயப்பட்டுள்ளது.

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளுக்கமையச் செயற்பட்டு, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2022 யூலை 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்

தற்போதுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்

2022 யூலை 04ம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், மேலும் 06 ஆண்டு கால தவணைக்கு முனைவர் பி நந்தலால் வீரசிங்க அவர்களை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மீள நியமித்திருக்கிறார் என்பதனை இலங்கை மத்திய வங்கி தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது.

பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்கள் இலங்கைக்கான விஜயத்தினை நிறைவுசெய்துள்ளனர்

மெஸர்ஸ். பீடர் புருர் மற்றும் மசாகிரோ நொசாகி ஆகியோரால் வழிநடாத்தப்பட்ட பன்னாட்டு நாணய நிதியத்தின் குழுவானது
இலங்கைக்கான பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவி மற்றும் அதிகாரிகளின் விரிவான பொருளாதார சீராக்க நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றை கலந்துரையாடுவதற்காக 2022 யூன் 20 தொடக்கம் 30 வரையான காலப்பகுதியில் கொழும்பிற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தது. பன்னாட்டு நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பிரதிப் பணிப்பாளர் திருமதி ஆன்-மரி கல்ட்-ஊல்ப் கொள்கைக் கலந்துரையாடல்களில் பங்குபற்றியிருந்தார்.

விஜயத்தின் நிறைவில், மெஸர்ஸ். புருர் மற்றும் நொசாகி ஆகியோர் பின்வரும் அறிக்கையினை வெளியிட்டிருந்தனர்:

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2022 யூனில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 54.6 சதவீதத்தினைப் பதிவுசெய்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 மேயின் 39.1 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 54.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இவ்வதிகரிப்பானது உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த அதிகரிப்புக்களினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 மேயின் 57.4 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 80.1 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 மேயின் 30.6 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 42.4 சதவீதத்திற்கு அதிகரித்தது.

Pages