Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணவனுப்பல்களின் தொகைக்கமைய வெளிநாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள எதிர்கால நன்மைகள்

வெளிநாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர்களால் அனுப்பப்படுகின்ற பணவனுப்பல்கள், கடந்த 5 வருடங்களாக ஐ.அ.டொலர் 7 பில்லியனுக்கும் அதிகமாக வருடாந்த சராசரி பெறுமதியுடன் நாட்டினுள் வருகின்ற முக்கிய வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சலொன்றாக இருந்து வருகின்றது. இவ்வுறுதியான, படுகடன் அல்லாத உட்பாய்ச்சலைக் கருத்திற்கொண்டு, அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் பணியாளருக்கும் அதேபோன்று அரசாங்கத்திற்கும் நன்மைபயக்கின்ற விதத்தில் பணவனுப்பல்கள் அவற்றின் முழுமையான உள்ளார்ந்தங்களையும் அடைந்துகொள்வதை உறுதிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கின்ற செயன்முறைகளை முன்னெடுக்கின்றன.

ஏற்றுமதிப் பெறுகைகளை மாற்றுவதற்கான புதிய விதிமுறைகள் நாட்டிற்குப் பல்வேறு நன்மைகளை ஈட்டித்தருவதுடன் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் உள்முக பணவனுப்பல்களில் எவ்வித தாக்கங்களினையும் ஏற்படுத்தாது

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றிலிருந்து உறுதியான சவால்களை எதிர்கொண்டுள்ள இலங்கை, பேரண்டப் பொருளாதார மற்றும்  நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை நோக்கிய முனைப்புடனானதொரு பாதையில் தடம் பதித்துள்ளது. உலகளாவிய நோய்த்தொற்று நாட்டிற்கான வெளிநாட்டுச் செலாவணி வருமானத்தில் கணிசமானதொரு இழப்பினை விளைவித்த போதும் இறை, நாணய மற்றும் பொது சுகாதார விடயங்களில் அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் வழங்கப்பட்ட முன்னெப்பொழுதுமில்லாத ஆதரவு பொருளாதாரத்தின் வலுவான மீளெழுச்சிக்கும் அதேபோன்று சில வெளிநாட்டுச் செலாவணியீட்டும் துறைகளில் கணிசமானதொரு மீட்சிக்கும் துணைபுரிந்துள்ளது. சுற்றுலாத் துறையும் எதிர்வரும் காலப்பகுதியில் குறிப்பிடத்தக்கதொரு மீட்சியைக் காண்பிக்குமென எதிர்பார்க்கப்படுவதுடன் முறைசார் வழிகளினூடாக தொழிலாளர் பணவனுப்பல் உட்பாய்ச்சல்களை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டுச் சந்தையில் காணப்பட்ட அண்மைய பதட்ட நிலைகளும் பொருளாதாரத்தினைப் பல்வேறு வகையிலான அதிர்வுகளுக்கு உட்படுத்தும் அதன் வெளிநாட்டுக் கடன்பாடுகளை அதிகரிப்பதற்குப் பதிலாக இலங்கை காலப்போக்கில் பொருளாதாரத்தினை வலுப்படுத்தும் வெளிநாட்டுச் செலாவணி வருவாய்களின் மீது அதனுடைய தங்கியிருக்கும் தன்மையினை அதிகரிப்பதற்கான தேவையினை எடுத்துக்காட்டியுள்ளது. 

கொவிட்-19 மூலம் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கும் தனிப்பட்டவர்களுக்குமான கடனை காலம்தாழ்த்திச் செலுத்தும் வசதி ரூ.4,000 பில்லியனை விஞ்சியுள்ளது: சௌபாக்யா கடன்களின் தொகை ரூ.179 பில்லியனைக் கடந்துள்ளது

இலங்கை மத்திய வங்கியினால் மேற்பார்வை செய்யப்படுகின்ற நிதியியல் நிறுவனங்களூடாக கொவிட்-19 மூலம் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு உதவுவதற்கு இலங்கை மத்திய வங்கி பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்காக மீள்கொடுப்பனவுக் காலங்களை நீடித்தல், சலுகை வட்டி வீதங்கள், தொழிற்படு மூலதனக் கடன்கள், படுகடனை காலம்தாழ்த்திச் செலுத்தும் வசதிகள், கொடுகடன் வசதிகளை மீளக்கட்டமைத்தல்/ மீள அட்டவணைப்படுத்தல் போன்றவற்றை இத்திட்டங்கள் உள்ளடக்குகின்றன. 

பாதிக்கப்பட்ட பல்வேறு துறைகளுக்கு அதாவது சுற்றுலா, ஆடை, பெருந்தோட்டம், தகவல் தொழில்நுட்பம், ஏற்பாட்டுச் சேவை வழங்குநர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், பாடசாலை வான்களைத் தொழிற்படுத்துவோர், பாரஊர்திகள், பொருட்களை கொண்டுசெல்கின்ற சிறிய ரக வாகனங்கள் மற்றும் பேருந்துக்கள் போன்ற சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கும் தனியார் துறை ஊழியர்களுக்கும் இச்சலுகைகள் அதிகளவில் உதவின. 

ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிரான பேராணை விண்ணப்பம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது

மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக திரு.கீர்த்தி தென்னகோன் என்பவரினால் (தென் மாகாண முன்னாள் ஆளுநர்) தாக்கல்செய்யப்பட்ட பேராணை விண்ணப்பம் (CA Writ 417/2021)இ மனுதாரரினால் முதல் நோக்கிலிடு வழக்கொன்றாக தாக்கல்செய்யப்படாத காரணத்தின் அடிப்படையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று நிராகரிக்கப்பட்டது. 

ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக திரு. ஆரியவன்ச திசாநாயக்க என்பவரினால் (முன்னாள் சனாதிபதி வேட்பாளர்) தாக்கல்செய்யப்பட்ட மற்றுமொரு பேராணை விண்ணப்பமும் கடந்த வாரம் மனுதாரரினால் மீளப்பெறப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் வசதிப்படுத்தல் திணைக்களத்தினைத் தாபித்தல்

உள்நாட்டு பெறுமதிசேர்த்தலின் ஏறத்தாழ 100 சதவீதத்தினைக் கொண்டு தொழிலாளர் பணவனுப்பல்கள், இலங்கையின் வெளிநாட்டு நாணய வருவாய்களின் முக்கிய தூணொன்றாகவிருந்து நாட்டின் வெளிநாட்டுத் துறையின் தாக்குபிடிக்கும் தன்மைக்கு கணிசமான ஆதரவு வழங்குகின்றன. தொழிலாளர் பணவனுப்பல்கள் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேல் வருடாந்த வர்த்தகப் பற்றாக்குறைக்கெதிராக ஏறத்தாழ 80 சதவீதத்துக்கு காப்பீடு வழங்கியதுடன் பணவனுப்பல்களின் உட்பாய்ச்சல்களை வலுப்படுத்துவது முறைசார்ந்த வங்கித்தொழில் முறைமைக்கு சீரான வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களை வழங்குதல் அத்துடன் வருமான மற்றும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல் உள்ளடங்கலாக பல்வேறு சமூகப்-பொருளாதார நன்மைகளைக் கொண்டுவரும்.

2021இன் மூன்றாம் காலாண்டின் போது நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குதலை அமுல்படுத்துவதற்கு நிதியியல் உளவறிதல் பிரிவு மூலம் நிர்வாகத் தண்டப்பணங்களை விதித்தல்

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தாக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக்கொண்டு, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்காமைக்காக நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிதியியல் நிறுவனத்தின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் கடுமையை கருத்திற்கொண்டு தண்டப்பணம் விதித்துரைக்கப்படலாம்.

 அதற்கமைய, பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாத நிதியிடலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துனராக, நிதியியல் உளவறிதல் பிரிவு நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவிப்பை அமுல்படுத்துவற்கு, கீழே குறிக்கப்பட்டவாறு 2021 யூலை 01 தொடக்கம் 2021 செத்தெம்பர் 30 வரையான காலப்பகுதிக்கு மொத்தமாக ரூ. 2.0 மில்லியன் தொகையினை தண்டப்பணமாக சேகரித்தது. சேகரிக்கப்பட்ட தண்டப்பணம் திரட்டுநிதியத்திற்கு வரவு வைக்கப்பட்டது.

Pages

சந்தை அறிவிப்புகள்