Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2019 யூலை

இறக்குமதிகளில் ஏற்பட்ட வீழ்ச்சியிலும் பார்க்க கூடுதலாக ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்தமையின் காரணமாக 2019 யூலையில் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. பல மாதங்களாகக் காணப்பட்ட உறுதியான வளர்ச்சியின் பின்னர் 2019 யூலையில் ஏற்றுமதி வருவாய்கள் 7.0 சதவீதம் கொண்ட (ஆண்டிற்கு ஆண்டு) வீழ்ச்சியைப் பதிவுசெய்ததுடன் இறக்குமதிச் செலவினம் 2.2 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) வீழ்ச்சியடைந்தது. 

2019 யூலையில் ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு நீர்க்கல எரிபொருளின் குறைந்த விலைகள் காரணமாக பெற்றோலிய உற்பத்திகளிலிருந்தான வருவாய் குறைவடைந்தமையும் முன்னைய ஆண்டின் தொடர்பான மாதத்தில் உயர்ந்த ஏற்றுமதித் தளத்தினைத் தோற்றுவித்த 2018 யூலையில் இடம்பெற்ற கப்பற் கலமொன்றின் ஏற்றுமதியும் காரணங்களாக அமைந்தன. 

2019 யூலையில் வர்த்தகப் பற்றாக்குறை 2019 யூனில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 316 மில்லியன் கொண்ட பற்றாக்குறையுடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 717 மில்லியனுக்கு விரிவடைந்தது.

உரிமம் பெற்ற வங்கிகளின் இலங்கை ரூபா வைப்புக்களுக்கான உயர்ந்தபட்ச வட்டி வீதங்கள் தொடர்பான நாணய விதிச் சட்டக் கட்டளையை மீளப்பெறல்

இலங்கை ரூபாவிற்கான சந்தைக் கொடுகடன் வீதங்கள் தொடர்பான அண்மைய கொள்கைத் தீர்மானங்களை ஊடுகடத்துவதன் வினைத்திறனை மேம்படுத்தும் வகையில் உரிமம் பெற்ற வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட பணிப்புரைகளின் தொடர்ச்சியாக, இலங்கை ரூபா வைப்புக்களின் மீது உயர்ந்தபட்ச வட்டி வீதங்களை விதித்து 26 ஏப்பிறல் 2019இல் வெளியிடப்பட்ட 2019ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாணய விதிச் சட்டக் கட்டளை 24 செத்தெம்பர் 2019இல் அமுலுக்குவரும் வகையில் நாணயச் சபையால் மீளப்பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி – 2018

2018ஆம் ஆண்டிற்காக இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் மதிப்பிடப்பட்ட மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கமைய  மேல் மாகாணம் தொடர்ந்தும் பாரிய பங்கிற்கு வகைகூறியது. முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் அதிகூடிய பங்களிப்பாளர்களாக மத்திய மற்றும் வட மேல் மாகாணங்கள் காணப்பட்டன.

ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் மாகாண ரீதியான மொ.உ.உற்பத்திப் பங்கில் அதிகூடிய அதிகரிப்பு மேல் மாகாணத்தில் பதிவாகியிருந்தது. அதிகரிப்பினைப் பதிவுசெய்த ஒரேயொரு வேறு மாகாணம் வட மத்திய மாகாணம் ஆகும். மத்தியஇ சப்பிரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பங்குகள் 2018இல் குறைவடைந்த அதேவேளை வடமேல்இ தென்இ கிழக்கு மற்றும் வட மாகாணங்களின் பங்குகள் மாற்றமின்றிக் காணப்பட்டன.

பன்னாட்டு நாணய நிதியம் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் ஆறாவது மீளாய்வு தொடர்பில் அலுவலர் - மட்டத்திலான உடன்படிக்கையை அடைந்துள்ளது

இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இதுவரைக்கும் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில் அலுவலர்கள் அறிக்கையினைத் தயாரிப்பதுடன் இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, கலந்துரையாடல்களுக்கும் தீர்மானங்களுக்குமாக பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபைக்குச் சமர்ப்பிக்கப்படும்.

அண்மைக்கால கொள்கைத் தீர்மானங்களை சந்தைக் கடன்வழங்கல் வீதங்களுக்குக் கொண்டு சேர்க்கும் வினைத்திறனை அதிகரித்தல்

சந்தைக் கடன்வழங்கல் வீதங்களில் குறைப்பொன்றினைத் தூண்டுவதற்கு கடந்த பதினொரு மாதங்களாக இலங்கை மத்திய வங்கி பல எண்ணிக்கையான நாணய மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கொள்கை வழிமுறைகளை எடுத்துள்ளது. மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் இரு கட்டங்களில் 100 அடிப்படைப் புள்ளிகளினால் குறைத்தல், நிதியியல் சந்தைக்கு ஏறத்தாழ ரூ.150 பில்லியன் கொண்ட மேலதிகத் திரவத்தன்மையை விடுவித்த உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் ரூபா வைப்பு பொறுப்புக்கள் மீது ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை 2.50 சதவீதப் புள்ளிகளினால் குறைத்தல் மற்றும் பொதுமக்களிடமிருந்து நிதியங்களைத் திரட்டும் செலவினைக் குறைப்பதற்கு உரிமம் பெற்ற நிதியியல் நிறுவனங்களை இயலச்செய்த அந்நிறுவனங்களினால் வழங்கப்படும் ரூபா வைப்பு வட்டி வீதங்கள் மீது உச்சங்களை விதித்தல் போன்றவற்றை இவ்வழிமுறைகள் உள்ளடக்குகின்றன.

2019 ஓகத்தில் பணவீக்கம் அதிகரித்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 யூலையில் 2.2 சதவீதத்திலிருந்து 2019 ஓகத்தில் 3.4 சதவீதமாக அதிகரித்தது. முன்னைய ஆண்டின் தொடர்புடைய மாதத்தில் நிலவிய குறைந்த தளம் மற்றும் உணவு அத்துடன் உணவல்லா வகைகள் இரண்டினதும் பொருட்களின் மாதாந்த விலைகளின் உயர்வும் இவ்வதிகரிப்பிற்குப் பங்களித்தது. அதேவேளை, 2019 ஒகத்தில் ஆண்டிற்கு ஆண்டு உணவு மற்றும் உணவல்லாப் பணவீக்கம் முறையே 0.6 சதவீதத்தினையும் 5.6 சதவீதத்தினையும் பதிவுசெய்தது.  

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது 2019 யூலையில் 1.9 சதவீதத்திலிருந்து 2019 ஓகத்தில் 2.0 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது. 

Pages

சந்தை அறிவிப்புகள்