Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

மத்திய வங்கி “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2019இன் முக்கிய பண்புகளும் 2020 இற்கான வாய்ப்புக்களும்” என்பதனை வெளியிடுகின்றது

இலங்கை மத்திய வங்கி, “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2019இன் முக்கிய பண்புகளும் 2020 இற்கான வாய்ப்புக்களும்” என்பதனை இன்றைய தினம் கணனிவழி அதேநேர முறைமையில் வெளியிட்டுள்ளது. இந்தப் பிரசுரம் மத்திய வங்கியின் இணையத்தளத்தில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தரவிறக்கப்படலாம் . 

மேற்குறிப்பிட்ட வெளியீட்டில் பிரதிபலிக்கப்பட்டவாறு 2019இல் இலங்கைப் பொருளாதாரத்தின் செயலாற்றம் தொடர்பான சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

இலங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சி முக்கியமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் கசிவுத் தாக்கத்தினை உள்ளடக்கிய உள்நாட்டுப் பக்கத்திலிருந்து எழுந்த சவால்களுக்கு மத்தியில் ஆண்டின் முதலரைப் பகுதியில் மெதுவடைந்திருந்தது. இதன்படி, உண்மை நியதிகளில் பொருளாதாரம் 2018இன் தொடர்பான காலப்பகுதியின் 3.9 சதவீதத்துடன் ஒப்பிடுமிடத்து 2019இன் முதலரைப் பகுதியில் 2.6 சதவீதமான மெதுவான வேகத்தில் வளர்ச்சியடைந்திருந்தது. மந்தமான பொருளாதார வளர்ச்சியுடன் இசைந்து செல்லும் வகையில் தொழிலின்மை வீதமும் 2019இன் முதலரைப்பகுதியில் அதிகரித்திருந்தது.

பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட ஒழுங்குகளின் ஆறாவது மீளாய்வினைப் பூர்த்தி செய்துள்ளது

•இலங்கை ஆறாவது மீளாய்வினை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்து ஆதரவு நிதியத்தின் அடுத்த பகிர்ந்தளிப்பினை இயலச் செய்துள்ளது. 

•தாக்குப்பிடிக்கும் தன்மையை வலுப்படுத்துவதற்கும் உறுதியானதும் அனைத்தையுமுள்ளடக்கியதுமான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் நிலைத்து நிற்கும்கொள்கை ஒழுங்காற்று தொடர்ந்தும் இன்றியமையாததாகவிருக்கின்றது. 

•அரசிறையின் சேகரிப்பு அரச படுகடனை ஒரு கீழ்நோக்கிய பாதையில் வைத்திருக்கும் வேளையில், சமூக மற்றும் முதலீட்டு செலவினத்தினை பாதுகாப்பதற்கும் மையமாகவிருக்கும். 

த பினான்ஸ் கம்பனி பிஎல்சி மீது இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகள்

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ், உரிமமளிக்கப்பட்ட நிதிக் கம்பனியொன்றான த பினான்ஸ் கம்பனி பிஎல்சி 2018இல் செலிங்கோ குழுமத்தினுள் காணப்பட்ட பல எண்ணிக்கையான நிதியியல் நிறுவனங்களின் தோல்வியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போதிருந்து கம்பனியின் நிதியியல் நிலைமை படிப்படியாக சீர்குலைந்து கடுமையான திரவத்தன்மை நெருக்கடிகளுக்கு வழிவகுத்தது. வாய்ப்புக்களைக் கொண்ட முதலீட்டாளர்களை இனங்காண்பதற்கும் கம்பனியினை மீளமைப்பதற்கும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அத்தகைய முயற்சிகள் திருப்திகரமான மட்டத்தில் இன்னமும் வெற்றியளிக்கவில்லை. 

2019 செத்தெம்பரில் பணவீக்கம் அதிகரித்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 ஓகத்தின் 3.4 சதவீதத்திலிருந்து 2019 செத்தெம்பரில் 5.0 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள விடயங்களின் மாதாந்த விலை அதிகரிப்புக்கள் ஆண்டிற்கு ஆண்டு உணவு மற்றும் உணவல்லா பணவீக்கத்தில் பிரதிபலிக்கப்பட்டவாறு இவ்வதிகரிப்பிற்குப் பங்களித்து 2019 செத்தெம்பரில் முறையே 4.9 சதவீதம் மற்றும் 5.1 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. மேலும், முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியில் காணப்பட்ட தாழ்ந்த தளமும் இவ்வதிகரிப்பிற்குப் பங்களித்தது.

முழுவடிவம்

நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு சாம்பல் நிறப்பட்டியலிலிருந்து இலங்கையை நீக்கியிருக்கிறது

பணம் தூயதாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மீதான உலகளாவிய கொள்கை வகுப்பாளரான நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு, அதன் இணங்குவிப்பு ஆவணத்திலிருந்தும் அதாவது “சாம்பல் நிறப்பட்டியல்” என பொதுவாக அடையாளம் காணப்படும் ஆவணத்திலிருந்து இலங்கையை நீக்கியிருக்கிறது. இத்தீர்மானமானது 2019 ஒத்தோபர் 13 - 18 காலப்பகுதியில் பாரிஸில் நடைபெற்ற நிதியியல் நடவடிக்கை செயலணிக் குழுவின் முழுநிறைவான சமவாயத்தில் மேற்கொள்ளப்பட்டது. 

இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு இலங்கைக்கான இன்ரபோல் தேசிய மத்திய பணியகத்துடன் ஒப்பந்தமொன்றினைச் செய்திருக்கிறது

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு, இன்ரபோல் தகவல் முறைமையினை நேரடியாக அணுகும் வசதியினைப் பெற்றுக்கொள்வதற்காக, 2019 ஒத்தோபர் 11ஆம் நாளன்று இலங்கைக்கான இன்ரபோல் தேசிய மத்திய பணியகத்துடன் (தேசிய மத்திய பணியகம், கொழும்பு) ஒப்பந்தமொன்றினை இலங்கை மத்திய வங்கியில் செய்து கொண்டது.

Pages

சந்தை அறிவிப்புகள்