வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - மாச்சு 2017

கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கிற்கு மாறாக 2017 மாச்சில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 9.8 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) அதிகரித்தன. எனினும், 2017 மாச்சில் வர்த்தகப் பற்றாக்குறையானது 2016இன் தொடர்பான மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட அதிகரிப்பு, இறக்குமதி செலவினத்தில் ஏற்பட்ட உயர்ந்த அதிகரிப்பினால் எதிரீடு செய்யப்பட்டதன் காரணமாக விரிவடைந்தது. பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்திநிலையம் அதன் ஓடுபாதையின் தரைச் செப்பனிடல் வேலைகளுக்காக மூடப்பட்டிருந்தமையின் காரணமாக, சுற்றுலா வருவாய்கள் முன்னைய மாதத்தினைப் போன்றே 2017 மாச்சிலும் வீழ்ச்சியடைந்தன. அதேவேளை தொழிலாளர் பணவலுப்பல்களும் 2017 மாச்சில் வீழ்ச்சியைப் பதிவுசெய்தன. நிதியியல் கணக்கில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனைக்கான வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் தொடர்ந்தும் தேறிய வெளிப்பாய்ச்சலைப் பதிவுசெய்தவேளையில் இம்மாத காலப்பகுதியில் ஏற்பட்ட சிறிதளவு தேறிய உட்பாய்ச்சலின் காரணமாக அரச பிணையங்கள் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தேறிய வெளிப்பாய்ச்சலில் மாற்றமொன்று அவதானிக்கப்பட்டது. சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கு தொடர்ந்து வந்த மாதங்களில் மேலும் மேம்பட்டமைக்கு மேற்குறிப்பிட்ட உட்பாய்ச்சல்கள் தொடர்ந்தமையும் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் பெறுகைகள் கிடைக்கப்பெற்றமையும் அரசிற்கான கூட்டுகடன்கள் கிடைக்கப்பெற்றமையும் காரணங்களாக அமைந்தன. இது வெளிநாட்டுத் துறை உறுதியடைவதற்கு உதவியது.

FULL TEXT

Published Date: 

Tuesday, June 6, 2017