2017இல் சுற்றுலா வருவாய்களில் ஏற்பட்ட மிதமான தன்மை மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்களில் காணப்பட்ட மிதமான வளர்ச்சி என்பனவற்றின் விளைவாக விரிவடைந்த வர்த்தகப் பற்றாக்குறையின் காரணமாக இலங்கையின் வெளிநாட்டுத் துறை தொடர்ந்தும் குறைவடைந்த நிலையில் காணப்பட்டது. ஏற்றுமதிகளில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு மத்தியில் எரிபொருள் மற்றும் அரிசி என்பனவற்றின் உயர்ந்த இறக்குமதிகளின் முக்கிய காரணமாக பெப்புருவரியில் வர்த்தகப் பற்றாக்குறையில் கணிசமான விரிவொன்று அவதானிக்கப்பட்டது. ஓடுபாதையை செப்பனிடும் வேலைகளுக்காக பண்டாரநாயக்கா பன்னாட்டு வானூர்தி நிலையம் பகல் வேளையில் மூடப்பட்டிருந்தமையின் பகுதியளவு காரணமாக சுற்றுலா வருகைகளில் ஏற்பட்ட சிறிதளவு வீழ்ச்சி சுற்றுலாவிலிருந்தான வருகைகள் சிறிதளவில் வீழ்ச்சியடைய காரணமாயிற்று. பெப்புருவரியில் தொழிலாளர் பணவனுப்பல்களின் வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்ட மட்டத்திற்கும் கீழேயே காணப்பட்டது. மேலும், இம்மாத காலப்பகுதியில் அரச பிணையங்கள் சந்தையிலிருந்தான குறிப்பிடத்தக்க வெளிப்பாய்ச்சல்களின் காரணமாக நிதியியல் கணக்குகள் மோசமாகப் பாதிக்கப்பட்டன. எனினும், இம்மாத காலப்பகுதிpல் முதலாந்தர மற்றும் இரண்டாந்தரச் சந்தைகள் இரண்டிற்குமான உட்பாய்ச்சல்களின் காரணமாக கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் சில வெளிநாட்டு முதலீடுகள் அவதானிக்கப்பட்டன.