இலங்கையிலுள்ள நிதியியல் நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஊட்டுவிப்பதற்காகவிசேடமாகத் தொகுக்கப்பட்ட “இலங்கையில் நிதியியல் பணிகளுக்கானதோர் வழிகாட்டி” என்ற புதியவெளியீடொன்றினை மத்திய வங்கி வெளியிட்டிருக்கிறது. இலங்கையில் அடிப்படை நிதியியல் பணிகள்தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவினை ஊட்டும் பொருட்டு, 1995 நவெம்பர் – 2004 யூன் வரை ஆளுநராகஇருந்த திரு. ஏ.எஸ். ஜயவர்த்தன அவர்கள் இந்நூலின் ஆசிரியரும் துணை ஆளுநருமான திரு. பி. சமரசிறிஅவர்களை இத்தகையதொரு நூலினைத் தொகுத்து வெளியிடுமாறு முன்மொழிந்து வழிகாட்டியமைக்கேற்ப,ஜயவர்த்தனை அவர்களை கௌரவித்து நன்றி தெரிவிக்கும் விதத்தில் நூலாசிரியரினால் 2002இல்முதற்றடவையாக இந்நூல் வெளியிடப்பட்டது. இவ்வெளியீடானது நிதியியல் நிறுவனங்களின் அடிப்படைத்தகவல்கள், அவற்றின் பணிகள், மத்திய வங்கியினால் உரிமம் வழங்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களின்பட்டியல்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் மேற்பார்வையின் தன்மை, நிதியியல் நிறுவனங்க;டான பொதுமக்களின்கொடுக்கல்வாங்கல்களினது பாதுகாப்பு என்பன போன்ற விடயங்களை உள்ளடக்கிய இவ்வெளியீடானது வாசகர்– சிநேகபூர்வ மொழி நடையில் வழங்கப்பட்டுள்ள வேளையில், அதன் மூலவடிவமும் அப்படியேபேணப்பட்டிருக்கிறது. வெளியீட்டின் சிங்கள மற்றும் தமிழ் பதிப்புக்கள் இனிவரும் காலங்களில் வெளியிடப்படும்.ரூ.50 விலையினைக் கொண்ட இவ்வெளியீட்டினை மத்திய வங்கியின் விற்பனைப்பீடங்களிலும் இலங்கைவங்கியாளர் நிறுவகத்திலும் கொள்வனவு செய்துகொள்ள முடியும்.
Thursday, May 18, 2017