2016ஆம் ஆண்டின் அரச வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டதற்கிணங்க, லங்காபுத்திர டெவலப்மென்ற் பாங்க் லிமிடெட் இனை பிரதேசிய சங்வர்த்தன பாங்க் உடன் இணைக்கும் நடவடிக்கைகள் முடிவடைந்ததுடன், 1988ஆம் ஆண்டு 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் (திருத்தியடைக்கப்பட்ட) 76 எவ் 9(9) பிரிவில் வழங்கப்பட்டுள்ள சரத்துக்களின் பிரகாரம் லங்காபுத்திர டெவலப்மென்ற் பாங்க் லிமிடெட் இற்கு வழங்கப்பட்டிருந்த உரிமத்தினை 01 ஏப்பிறல் 2019 இலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில் இரத்துச் செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை அனுமதி வழங்கியிருக்கின்றது.
இதன் பிரகாரம் 01 ஏப்பிறல் 2019 இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் லங்காபுத்திர டெவலப்மென்ற் பாங்க் லிமிடெட் இன் அனைத்துச் சொத்துக்களும் பொறுப்புக்களும் பிரதேசிய சங்வர்த்தன பாங்க் இனால் பெறப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. மேலும், லங்காபுத்திர டெவலப்மென்ற் பாங்க் லிமிடெட் இனால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வங்கித்தொழில் வியாபாரங்களும் பிரதேசிய சங்வர்த்தன பாங்க் இனால் மேற்கொள்ளப்படும்.¬
ஆகவே, உள்நாட்டு வங்கித்தொழில் வியாபாரம் சம்பந்தமாக வங்கித்தொழில் சட்டத்தின் அட்டவணை IV இல் குறிப்பிடப்பட்டுள்ள வங்கித்தொழில் வியாபாரத்தைக் கொண்டு நடாத்துவதற்கு 1988ஆம் ஆண்டு 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 76 சி பிரிவின் (திருத்தியமைக்கப்பட்ட) பிரகாரம் லங்காபுத்திர டெவலப்மென்ற் பாங்க் லிமிடெட் இற்கு வழங்கப்பட்டிருந்த உரிமம் 01 ஏப்பிறல் 2019 இலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் இரத்துச் செய்யப்படுகின்றது.