10ஆவது ஆசிய பணச் சுழற்சிக் கருத்தரங்கு - 2019, கொழும்பு இலங்கை

இலங்கை மத்திய வங்கி இணைந்து நடாத்திய நாணய ஆராய்ச்சியுடன் இணைந்த 10ஆவது ஆசிய பணச் சுழற்சிக் கருத்தரங்கு - 2019 கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் 2019 செத்தெம்பர் 23 - 26 வரை இடம்பெற்றது. பன்னாட்டு வர்த்தக ரீதியான பணத் தொழிற்பாடுகள் கருத்தரங்கு என முறைசார்ந்து அறியப்படுகின்ற பணச் சுழற்சிக் கருத்தரங்கானது வர்த்தக ரீதியான காசு முகாமைத்துவம், விநியோகம் மற்றும் சுற்றோட்டம் என்பனவற்றின் ஆர்வலர்களுக்கான முதன்மை வாய்ந்த உலக நிகழ்வொன்றாகும். 24 வருட அதன் வரலாற்றைக் கொண்ட இக்கருத்தரங்கினை நடாத்திய முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை விளங்குகின்றது. 

காசுச் சுழற்சியின் வினைத்திறனையும் உகப்பாக்கத்தினையும் அதிகரிப்பதற்காக செலவுச் சிக்கனத் தொழில்நுட்பங்கள், உபாயங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் என்பன தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பரிமாறிக்கொள்வதற்கான தளமொன்றினை வழங்குகின்ற அத்துடன் மாற்றுவழிக் கொடுப்பனவு முறையியல்களின் முறைகளில்; துரிதமாக மாற்றமடைகின்ற அபிவிருத்திகளை எடுத்துக்காட்டுகின்ற, தனித்துவமிக்க நிகழ்வொன்றாக ஆசியப் பிராந்தியத்திலிருந்தும் அதனைத் தாண்டியும் காசுத் தொழில்துறை தலைவர்களையும் நிபுணர்களையும் இது ஒரே கூரையின் கீழ் கொண்டுவருகின்றது. அதற்கமைய, 18 மத்திய வங்கிகளிலிருந்து பேராளர்கள் குழு, நாணயத் தொழிற்பாடுகளில் ஈடுபடுகின்ற வணிக வங்கிகள், காசு முகாமைத்துவக் கம்பனிகள் போன்றவற்றிலிருந்து முக்கிய தீர்;மானம் எடுப்பவர்கள் மற்றும் முகாமையாளர்கள் அத்துடன் தொழில்துறையிலுள்ள வழங்குநர்கள் மற்றும் நிபுணர்கள் உள்ளடங்கலாக 34இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்தும் 180இற்கும் மேற்பட்ட பங்குபற்றுநர்களை இந்நிகழ்வு ஒன்றுகூடச் செய்தது.

செத்தெம்பர் 24 அன்று நாணய ஆராய்ச்சி நிறுவனத்தின் தொழிற்பாடுகள் துணைத் தலைவர் திரு. டான் ஹரிஷன் அவர்களினால் ஆற்றப்பட்ட தொடக்க உரையினைத் தொடர்ந்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களின் வரவேற்புரையுடன் பிரதான கருத்தரங்கு தொடங்கியது.

கொழும்பில் ஏப்பிறல் 21ஆம் திகதி இடம்பெற்ற அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளின் பின்னர் குறிப்பாக சங்கரில்லா ஹோட்டலில் இந்நிகழ்வினை வெற்றிகரமாக தாம்; எவ்வாறு முன்னெடுத்தார் என்பதனை திரு. ஹரிஷன் நினைவுகூர்ந்தார்;. களநிலவரத்தை மதிப்பிடுவதற்கு நிகழ்வு நடந்ததன் பின்னர் ஏறக்குறைய நான்கு வாரங்களிலேயே முடிந்தளவு விரைவாக தான் இலங்கைக்கு விஜயம் செய்தார் என்றும் நிகழ்வினை வரவேற்பதற்கு இலங்கை தயாராக இருக்குமென்ற மிகத் தெளிவான செய்தி அவருக்குக் கிடைத்தது என்றும் திரு. ஹரிஷன் குறிப்பிட்டார். இலங்கையின் சிறந்த மக்களை அவர் புறந்;தள்ளவில்லையென்றும் எது இடம்பெற்றாலும் அவர்களுடன் துணைநிற்போம்; என்றும் அவர் தீர்மானித்திருந்தார். இது சவாலொன்றாக இருந்தது. ஆயினும், அனைத்தும் தயாராக இருக்குமென்றும் இலங்கை ஆயத்தமாக இருந்தது எனவும் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். பல அரசாங்க முகவராண்மைகளின் ஒப்பற்ற ஆதரவுடன் இலங்கை மத்திய வங்கியும் ஏனைய உள்நாட்டு நிறுவனங்களும் வெளிநாடுகளிலிருந்து 120 இற்கும் மேற்பட்ட பேராளர்களை கருத்தரங்கு ஈர்க்கக்கூடியதாக இருந்ததுடன் இது மாபெரும் வெற்றியொன்றாகும். இரண்டு நாள் கருத்தரங்கின் போது துறையிலுள்ள நிபுணர்களுடன் இடைத்தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலம் அறிவினைப் பகிர்ந்து கொள்வதற்கு இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் பங்கேற்ற அனைவருக்கும் திரு. ஹரிஷன் அழைப்புவிடுத்தார். 

பங்கேற்பாளர்களை வரவேற்ற மத்திய வங்கியின் ஆளுநர், இந்நிகழ்வில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பேராளர்களின் பங்கேற்பானது இலங்கை சுற்றுலாப் பயணத்திற்கு பாதுகாப்பான இடம் என்பதை உலகத்திற்கு உத்தரவாதமளிக்கும் ஒன்றாக விளங்குவதுடன் நாட்டின் சுற்றுலாக் கைத்தொழிலுக்கும் புத்தூக்கமளிக்கும் சாதகமான சமிக்ஞையொன்றினை இது வழங்கும் எனக் குறிப்பிட்டார். பொருளாதாரத்தின் சாதகமான தோற்றப்பாட்டினை குறித்துக்காட்டி, இலங்கையின் நடைமுறை பேரண்டக் கட்டமைப்பினை ஆளுநர் எடுத்துக்காட்டினார். கருத்தரங்கின் விடயம் பற்றி பேசுகையில், மத்திய வங்கியினால் வழங்கப்படும் பௌதீக ரீதியான நாணயமானது ஏனைய பல நாடுகளில் போன்று இலங்கையிலும் மிகப் பரந்தளவில் கொடுப்பனவு வடிவமாக பயன்படுத்தப்படுகின்றது என்றும் மாற்றுவழிக் கொடுப்பனவு முறைகளைப் பயன்படுத்துவதானது வேறுபட்ட உற்பத்திகள்  கிடைக்கப்பெறும் தன்மை, துணையளிக்கப்படும் சட்ட ரீதியான கட்டமைப்பு, கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தும் முறை, இணையத்தளம் மற்றும் தொலைத்தொடர்புக் கட்டமைப்பு போன்ற பல்வேறு காரணிகள் மீது தங்கியிருக்கின்றது என்றும் குறிப்பிட்டார். இலங்கையின் இலத்திரனியல் சில்லறைக் கொடுப்பனவு உட்கட்டமைப்பின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய திருப்புமுனைகளையும் செல்லிடத் தொலைபேசிக் கொடுப்பனவுகள் உள்ளடங்கலாக காசற்ற கொடுப்பனவுகளை ஊக்குவிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட முக்கிய முயற்சிகள் பற்றியும் அவர் சுருக்கமாகக் குறிப்பிட்டார். மேலும், உட்கட்டமைப்பு செயலிழப்புகள் மற்றும் இணையத் தாக்குதல்;கள் என்பன டிஜிட்டல் கொடுப்பனவு முறைகள் பற்றிய நம்பகத் தன்மை மற்றும் பாதுகாப்பு மீதான மக்களின் நம்பிக்கையினை நேரடியாக பாதிக்கின்றமையினால் டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்காக பௌதீக ரீதியான உட்கட்டமைப்பின் தாக்குப்பிடிக்கும்தன்மையினையும் இணையத்தள பாதுகாப்பினதும் முக்கியத்துவத்தினையும் அவர் வலியுறுத்தினார். 

மத்திய வங்கிகளின் அலுவலர்கள், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு காசு நிபுணர்கள், கொடுப்பனவுகள் மற்றும் தொடர்புபட்ட தொழில்துறை நிபுணர்கள் மற்றும் நாணயத் தொழில்நுட்ப நிபுணர்கள் போன்றோர் மூலமான எடுத்துரைப்புகள், குழுக் கலந்துரையாடல்கள், அறிவுப் பகிர்வு அமர்வுகள் ஆகியவற்றைக் கொண்டமைந்த இரண்டு நாள் நிகழ்வானது, காசுப் பயன்பாட்டுப் போக்குகள், பணச் சுழற்சி மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவுகள், டிஜிட்டல் நாணயங்களின் தோற்றம், காசுத் தொழிற்பாடுகளின் செலவினைக் குறைத்தல், டிஜிட்டல் மயமாக்கமும் இணையத்தள தாக்குப்பிடிக்கும்தன்மையும், தான்னியக்கக் கூற்றுப்பொறி இயந்திரங்களின் மீள் சுழற்சி, காசு முகாமைத்துவக் கம்பனிகளை ஒழுங்குமுறைப்படுத்தல், காசு நிலையங்களை தன்னியக்கப்படுத்தல்  போன்றவற்றை உள்ளடக்கியிருந்தது. 

வினைத்திறன்மிக்க பணச் சுழற்சிக்கு தொழில்துறைக் கூட்டுமுயற்;சி இன்றியமையாததாகவிருந்தது என்பது இரண்டு நாட்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்ட முக்கிய பெறுபேறாகும் என்பதுடன்  ஒழுங்குவிதிகள், வெளியிலிருந்து பணியினைப் பெற்றுக்கொள்ளல், மீள்சுழற்சி செய்தல் மற்றும் தொழில்துறை தர நியமங்கள் மற்றும் உலகில் மிகவும் பிரபல்யம்வாய்ந்த கொடுப்பனவு சாதனமாக பணத்தின் தொடர்ச்சியான ஆதிக்கம் என்பன முக்கிய கவனம் செலுத்தப்பட்ட விடயப்பரப்புகளாக அமைந்திருந்தன.

மேலும், இலங்கை மத்திய வங்கியினாலும் ஆசிய காசு முகாமைத்துவ அமைப்பினாலும் நடாத்தப்பட்ட கருத்தரங்கிற்கு முந்திய இரண்டு செயலமர்வுகளும் செத்தெம்பர் 23 அன்று நடைபெற்றன. 

ஆசிய பணச் சுழற்சிக் கருத்தரங்கு - 2020 நிகழ்வு பிலிப்பைன்ஸ் மத்திய வங்கியினால் பிலிப்பைன்ஸில் நடாத்தப்படும் என்ற திரு. டான் ஹரிஷன் அவர்களின் அறிவித்தலுடன் கருத்தரங்கு நிறைவடைந்தது. 

Published Date: 

Friday, October 4, 2019