இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, கம்பனியின் வைப்பாளர்களினதும் ஏனைய ஆர்வலர்களினதும் நலன்களைப் பாதுகாக்கும் நோக்குடன் 2019 பெப்புருவரி 15ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தற்காலிக வழிமுறைகளாக, பல எண்ணிக்கையான ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை எடுத்தது. த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கு வசதியளிப்பதற்கான ஒழுங்குமுறைப்படுத்தும் வழிமுறைகள் புதிய வைப்புக்களை ஏற்றுக்கொள்தல், வைப்புக்களின் மீளப்பெறுகைகள், கடன்கள் மற்றும் முற்பணங்களின் பகிர்ந்தளிப்பு என்பனவற்றை இடைநிறுத்துவது உள்ளிட்ட வழிமுறைகளை உள்ளடக்கியிருக்கின்றன.
த பினான்ஸ் கம்பனி பிஎல்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட வியாபார மீள்கட்டமைப்பு முன்மொழிவுகளை பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது மேற்குறிப்பிட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை 2019 மே 15ஆம் திகதியிலிருந்து மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. வைப்புக்கள் மீதான வட்டி தொடர்ந்தும் செலுத்தப்படும்.
மேலதிகத் தகவல்களுக்காக வைப்பாளர்கள், 0112477573, 0112477229 அல்லது 0112477504 என்ற தொலைபேசி இலக்கங்க;டாக அல்லது snbfi_query@cbsl.lk என்ற மின்னஞ்சலினூடாக மத்திய வங்கியின் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்தினைத் தொடர்பு கொள்ளலாம்.