மிரிஸ்ஸ மற்றும் வெலிகம சுற்றுலா பிரதேசங்களிலுள்ள நுண்பாக மற்றும் சிறிய அளவு சுற்றுலா விடுதியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகம் கணனி வழி அதேநேர முறையில் சுற்றுலா விடுதியின் உணவு, குடிபானம் மற்றும் படுக்கை அறை ஏற்பாடுகளைப் பதிவுசெய்தல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று ஹோட்டல் ருவன்டி ரூ பின்னவெளியில் 2019 பெப்புருவரி 25ஆம் நாளன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 79 தொழில்முயற்சியாளர்கள் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்டனர்.