இலங்கையில் இருக்கும் நிதி நிறுவனங்களை பிரதானமாகக் குறிவைத்து ஆரம்பிக்கப்பட்டிருக்கும் திருட்டு முயற்சி பற்றி இலங்கை மத்திய வங்கிக்கு அறியக்கிடைத்துள்ளது. திருட்டு மின்னஞ்சல் முயற்சியானது இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்திலிருந்து கிடைக்கப்பெறுவது போலும் இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத்தின் அறிவிப்பு (Notice From Central Bank of Sri Lanka EPF) எனும் தலைப்புடனும் கிடைக்கப்பெறுகிறது.
மின்னஞ்சல் உள்ளடக்கமானது தீங்கிழைக்கும் வெப்தளங்களுடன் இணைக்கப்படுவதுடன் தீங்கிழைக்கும் மென்பொருளை தரவிறக்கம் செய்யுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினது ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து அவ்வாறான மின்னஞ்சல்கள் எதுவும் அனுப்பப்படவில்லையென இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும் அறியத்தர விரும்புகிறது. பொது மக்கள் மற்றும் நிறுவனங்கள் நடைபெறுகின்ற திருட்டு முயற்சி பற்றி அவதானமாக இருக்குமாறும் இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத்தின் அறிவிப்பு (Notice From Central Bank of Sri Lanka EPF) எனும் தலைப்பிலான சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களை திறப்பதனையும் அல்லது அதனுள் காணப்படுகின்ற இணைப்புக்களைக்(Attachments) திறப்பதனையும் அல்லது அதில் காணப்படுகின்ற தொடர்புகளை(Links) அழுத்துவதனையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.