விரிவடைந்த வர்த்தகப் பற்றாக்குறை, சுற்றுலா வருவாய்களில் காணப்பட்ட தொடர்ச்சியான உயர்ந்த வளர்ச்சி மற்றும் மிதமான தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பனவற்றின் காரணமாக 2015 திசெம்பர் மாதத்தில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை கலந்த செயலாற்றமொன்றினைக் காட்டியது. ஒன்றுசேர்ந்த அடிப்படையில் 2015ஆம் ஆண்டுப் பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறை சிறிதளவால் விரிவடைந்த வேளையில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தன. அதேவேளை, 2015இல் தொழிலாளர் பணவனுப்பல்கள் சிறிதளவு வீழ்ச்சியைப் பதிவு செய்தன. 2015ஆம் ஆண்டுப் பகுதியில் சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சலின் முக்கிய மூலமாக நாட்டிற்கான இரண்டு பன்னாட்டு முறிகளின் வழங்கலும் இந்திய றிசேர்வ ;வங்கியின் பரஸ்பர பரிமாற்றல் ஒழுங்குகளும் காணப்பட்டன.
Friday, March 4, 2016