2016 பெப்புருவரியில் பணவீக்கம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் (2013 = 100) ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 சனவரியில் -0.7 சதவீதத்திலிருந்து 2016 பெப்புருவரியில் 1.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்தின் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு முக்கிய பங்களிப்பாளராக உணவல்லா வகை காணப்பட்டது. வெறியம்சார் குடிவகைகள் மற்றும் புகையிலை; ஆடை மற்றும் காலணி; தளபாடங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வழமையான வீட்டு பேணல்கள்; நலம்; போக்குவரத்து மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகளின் துணைத் துறைகளில் கணிசமான அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன. இது, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் உணவு வகையில் அவதானிக்கப்பட்ட ஒட்டுமொத்த விலை வீழ்ச்சியினை விஞ்சிக் காணப்பட்டது.   

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2016 சனவரியில் பதிவு செய்யப்பட்ட 2.9 சதவீதத்திலிருந்து 2016 பெப்புருவரியில் 2.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.   

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றங்களைப் பரிசீலனையில் கொள்கையில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2016 சனவரியிலிருந்து 2016 பெப்புருவரிக்கு 1.1 சதவீதத்தினால்  வீழ்ச்சியடைந்தது. இம்மாதாந்த வீழ்ச்சிக்கு முக்கியமாக உணவு மற்றும் வெறியமல்லா குடிபானங்களின் வகையில் காணப்பட்ட பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே முக்கிய காரணமாகும். காய்கறிகள், அரிசி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சம்பழம் என்பனவற்றின் விலைகள் இம்மாத காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்தன. வெறியம்சார் குடிவகைகள் மற்றும் புகையிலை; வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு, மற்றும் ஏனைய எரிபொருட்கள்; தளபாடங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வழமையான வீட்டுப் பேணல்கள்; நலம் மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணைத் துறைகள் 2016 பெப்புருவரியில் அதிகரித்தன. அதேவேளை ஆடை மற்றும் காலணி மற்றும் போக்குவரத்துத் துணைத் துறைகளின் விலைகள் 2016 பெப்புருவரியில் வீழ்ச்சியடைந்தன. தொடர்பூட்டல்; பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம், கல்வி மற்றும் உணவகங்கள் மற்றும் சுற்றுலாவிடுதிகள் துணைத் துறைகள் இம்மாத காலப்பகுதியில் மாற்றமின்றிக் காணப்பட்டன. 

முழுவடிவம்

Published Date: 

Monday, March 21, 2016