2016 சனவரி மாதகாலப்பகுதியில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை மிதமான செயலாற்றமொன்றினைக் காட்டியது. 2016 சனவரியில் வர்த்தகப் பற்றாக்குறை சுருக்கமடைந்த வேளையில் சுற்றுலா வருவாய்களின் வடிவிலமைந்த வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்கள் ஒப்பீட்டு ரீதியில் உயர்ந்த வளர்ச்சியினைப் பதிவுசெய்ததுடன் தொழிலாளர் பணவலுப்பல்களிருந்தான உட்பாய்ச்சல்களும் மேம்பட்டன. 2016 சனவரி காலப்பகுதியில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் எரிபொருள், ஊர்திகள் மற்றும் அரிசி இறக்குமதிகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக இறக்குமதிச் செலவினங்களில் ஏற்பட்ட வீழ்ச்சி உயர்வாக இருந்தமையின் விளைவாக வர்த்தகப்பற்றாக்குறை சுருக்கமடைந்தது. எனினும், அரச பிணையங்கள் சந்தையும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையும் இக்காலப்பகுதியில் தேறிய வெளிப்பாய்ச்சலை பதிவுசெய்தன.
Friday, May 6, 2016