விரிந்த பணத்தின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி, ஓரளவு மெதுவான போக்கினை எடுத்துக் காட்டி 2016 பெப்புருவரியின் 19.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 மாச்சில் 18.9 சதவீததத்pனைப் பதிவு செய்தது. உள்நாட்டுக் கொடுகடனில் ஏற்பட்ட விரிவாக்கம் விரிந்த பணத்தின் வளர்ச்சிக்கு முக்கிய தூண்டுகோலாக விளங்கியதுடன், இதில் வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் முன்னைய மாதத்தின் 26.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 மாச்சில் 27.7 சதவீதம் கொண்ட ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்தது. கொடுகடனின் துறைவாரியான பகிர்ந்தளிப்பினைப் பொறுத்தவரையில், கைத்தொழில் மற்றும் வணிகத் துறைகள் கொடுகடன் பகிர்ந்தளிப்பில் உயர்நத் மட்டங்களை கவர்ந்து கொண்ட வேளையில் தனிப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்களும் கணிசமான அதிகரிப்பினைப் பதிவு செய்தன. அதேவேளை, அண்மைய நாணய இறுக்கமாக்கல் வழிமுறைகளுக்கிடையிலும் உள்நாட்டுப் பணச் சந்தையில் காணப்பட்ட குறைந்த மட்ட மிகையான ரூபா திரவத்தன்மையின் காரணமாக குறுங்காலப் பணச் சந்தை வீதங்களிலும் ஏனைய சந்தை வட்டி வீதங்களிலும் மேல் நோக்கிய அசைவொன்று அவதானிக்கப்பட்டது. அதிகரித்த குறுங்கால வட்டி வீதங்கள் பரந்தளவு சந்தை வட்டி வீதங்களுக்கு படிப்படியாக மாறற் மடைந்து வருகின்றமையினைப் பிரதிபலிக்கின்ற விதத்தில், நாணய மற்றும் கொடுகடன் கூட்டுக்களின் விரிவாகக்ம் ஆண்டின் இரண்டாம் காற்பகுதியிலிருந்து மிதமடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் (2006/07=100) ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், முன்னைய மாதத்தில் 2.0 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 ஏப்பிறலில் 3.1 சதவீதமாகக் காணப்பட்டது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட ஆண்டுச் சராசரி முதன்மைப் பணவீக்கம் 1.1 சதவீதத்திலிருந்து 2016 மாச்சில் 1.3 சதவீதத்திற்கு உயர்வடைந்தது. எனினும், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட மையப் பணவீக்கம், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், 2016 ஏப்பிறல் 4.5 சதவீதத்தில் மாறற் மின்றி காணப்பட்டது. அதேவேளை, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை
(2013=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் முன்னைய மாதத்தின் 1.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 மாச்சில் 2.2 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளையில்; ஆண்டுச் சராசரி அடிப்படையில் இது 2.4 சதவீதமாகக் காணப்பட்டது. பெறுமதிசேர் வரி வீதத்தில் அண்மையில் செய்யப்பட்ட அதிகரிப்பு மற்றும் பெறுமதிசேர் வரியின் மீதும் தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரியின் மீதும் பிரயோகிக்கத்தக்கதாகவிருந்த குறிப்பிட்ட விலக்கல்கள் நீக்கப்பட்டமை என்பன பணவீக்கத்தின் மீது ஒரே தடவையிலான தாக்கமொன்றினை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்பொழுது நிலவும் மோசமான வானிலை நிலைமைகளின் காரணமாக வழங்கல் பக்கத்தில் ஏற்பட்ட தடங்கல்கள் கிட்டிய எதிர்காலத்தில் பணவீக்கத்தின் மீது மேல்நோக்கிய அழுத்தத்தினை ஏற்படுத்தக்கூடும். இந்தக் காலநிலைத் தடைகள் காணப்பட்ட போதும் பொருத்தமான கேள்வி முகாமைத்துவக் கொள்கைகளின் ஆதரவுடன் பணவீக்கம் நடு ஒற்றை இலக்க மட்டத்தில் பேணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
வெளிநாட்டுப் பக்கத்தில், 2016இன் முதல் மூன்று மாதங்களில் ஒன்றுசேர்ந்த அடிப்படையில், வர்த்தகப் பற்றாக்குறை 2.2 சதவீதம் கொண்ட சுருக்கத்தினைப் பதிவு செய்தது. அதேவேளை, ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் 20 சதவீதமாக அதிகரித்திருக்குமென மதிப்பிடப்பட்ட வேளையில், தொழிலாளர் பணவனுப்பல்கள் முதற் காலாண்டுப் பகுதியில் 8.1 சதவீதம் கொண்ட அதிகரிப்பினைப் பதிவு செய்தது. 2016 பெப்புருவரி இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் முன்னைய மாதத்தில் ஐ.அ.டொலர் 6.2 பில்லியனிலிருந்து ஐ.அ.டொலர் 6.1 பில்லியனுக்கு சிறிதளவினால் வீழ்ச்சியடைந்திருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கின்ற வேளையில் இலங்கை ரூபா 2016இல் இதுவரை சிறிதளவான தேய்வொன்றினைப் பதிவு செய்தது. அதேவேளை, அரச பிணையங்கள் சந்தைக்கு ஏற்பட்ட தேறிய வெளிநாட்டு உட்பாய்ச்சல்களினால் பிரதிபலிக்கப்பட்டவாறு, 2016 ஏப்பிறலிலிருந்து அரச பிணையங்கள் சந்தையில் முதலிடுவது தொடர்பில் புதிய ஆர்வம் காணப்படுவது அவதானிக்கப்பட்டிருந்தது. முன்னோக்கிப் பார்க்கையில் பன்னாட்டு நாணய நிதியங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி மற்றும் ஏனைய பல்புடை மற்றும் இருபுடை கொடுகடன் வசதிகள் என்பன திட்டமிடப்பட்ட அமைப்பியல் சீhத் pருத்தங்களுடன் சேர்ந்து வெளிநாட்டு அதிர்வுகளுக்கு நாடு தாக்குப்பிடிக்கும் தன்மையினை அதிகரித்து, பொருளாதாரத்தில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையினை மேலும் மேம்படுத்தியது.
மேலே காணப்பட்ட அபிவிருத்திகளைப் பரிசீலணையில் கொண்டு, நாணயச் சபை 2016 மே 20ஆம் நாளன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், மதத்pய வங்கியின் தற்போதைய நாணயக் கொள்கை பொருத்தமானதொன்று என்ற கருத்தினைக் கொண்டிருநத் து. இதற்கமைய நாணயச் சபை மத்திய வங்கியின் துணைநில் வைப்புப் வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 6.50 சதவீததத்pலும், 8.00 சதவீதத்திலும் மாற்றமின்றி பேணுவதென்று தீர்மானித்தது.
நாணயக் கொள்கைத் தீர்மானம்: | கொள்கை வீதங்கள் மாற்றப்படவில்லை |
துணைநில் வைப்பு வசதி வீதம் | 6.50% |
துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் | 8.00% |
நியதி ஒதுக்கு விகிதம் | 7.50% |