2016 ஏப்பிறலில் பணவீக்கம்

தொகைமதிப்பு புள்ளிவிபரத்திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றத்தின் மூலம் அளவிடப்பட்டவாறான, பணவீக்கம் (2013=100) ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 மார்ச்சின் 2.2 சதவீதத்திலிருந்து 2016 ஏப்பிறலில் 4.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் வெறியமல்லா குடிவகைகள்; வெறியம்சார் குடிவகைகள் மற்றும் புகையிலை; ஆடைகள் மற்றும் காலணிகள் தளபாடங்கள்; வீட்டுஉபயோகச் சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டு உபயோகப் பொருட்கள்;  நலன்; போக்குவரத்து; பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம்; கல்வி; உணவகங்கள் மற்றும் சுற்றுலாவிடுதிகள் மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணைத்துறைகள் என்பன ஏப்பிறலின் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்குப் பங்களித்தன.   

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2016 மார்ச்சில் பதிவுசெய்யப்பட்ட 2.4 சதவீதத்திலிருந்து 2016 ஏப்பிறலில் 2.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.  

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாதாந்த மாற்றத்தினைக் கருத்திற்கொள்ளும்பொழுது, தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் 2016 மார்ச்சில் 110.0 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 2016 ஏப்பிறலில் 111.6 புள்ளிகளுக்கு 1.5 சதவீதத்தினால் அதிகரித்தது. இம்மாதாந்த அதிகரிப்பிற்கு உணவு மற்றும் வெறியமல்லா குடிபான வகைகளிலுள்ள விடயங்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாக அமைந்தது. உடன்மீன், உப்பு, அரிசி, சில பழவகைகள், உருளைக்கிழங்கு, சீனி, கோழி இறைச்சி, முட்டை, பாண் என்பனவற்றின் விலைகள் இம்மாத காலப்பகுதியில் அதிகரித்தன. 2016 ஏப்பிறல் மாத காலப்பகுதியில் வெறிய குடிவகைகள் மற்றும் புகையிலை; அணியும்ஆடைகள் மற்றும் காலணிகள்; வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு மற்றும் எரிபொருட்கள் தளபாடங்கள், வீட்டுஉபயோகச்சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டுஉபயோகச் சாதனங்களின் பேணல்; போக்குவரதது;; உணவகங்கள் மற்றும் சுற்றுலாவிடுதிகள் மற்றும் பல்வகைப்பொருட்கள் மற்றும் பணிகள் துணை வகைகளின் விலைகள் அதிகரித்தன. அதேவேளை, நலன்; தொடர்பூட்டல்; பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம் மற்றும் கல்வி துணை வகைகளின் விலைகள் இம்மாத காலப்பகுதியில் மாற்றமின்றிக் காணப்பட்டன. ஏப்பிறலில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றங்கள் 2016 மேயிலிருந்து நடைமுறைக்கு வந்த பெறுமதிசேர் வரி மற்றும் தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரி என்பனவற்றில் அண்மையில் செய்யப்பட்ட மாற்றங்களின் நேரடித் தாக்கத்தினை உள்ளடக்கவில்லை.

முழுவடிவம்

Published Date: 

Thursday, May 26, 2016