நொமுறா ஹோல்டிங்ஸ் இன்ங் மூலம் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பிலான பிழையான அறிக்கை தொடர்பில் தெளிவுபடுத்தல்

இலங்கை உள்ளிட்ட ஏழு வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் செலாவணி வீத நெருக்கடி இடர்நேர்வில் காணப்படுகின்றன என்பதனை காண்பிக்கின்ற நொமுறா கோல்டிங்ஸ் இன்ங் மூலமான பகுப்பாய்வொன்றினை பல பன்னாட்டு ஊடகத் தளங்கள் அண்மையில் எடுத்துக்காட்டியுள்ளன. 

இலங்கையின் குறுகியகால வெளிநாட்டுப் படுகடன் ஐ.அ.டொலர் 160 பில்லியன் வரை உயர்வானது எனக் குறிப்பிடுகின்ற அறிக்கையினை சொல்லப்பட்ட ஊடகத் தளங்கள் மேலும் எடுத்துக்காட்டியுள்ளன. இலங்கையின் குறுகியகால வெளிநாட்டுப் படுகடன் எவ்விதத்திலேனும் இத்தொகைக்கு அண்மித்துக் காணப்படாமையினால், இலங்கை மத்திய வங்கியானது தமது கணிப்புகளில்  உள்ள பிழைகளைச் சரிசெய்யுமாறு நொமுறா இனைக் கோரியது.1

புளூம்பேர்க்கின்படி, இதற்கு பதிலிறுத்தி நொமுறா ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கூற்றொன்றில் 'இலங்கை குறுகியகால படுகடன் தொகை ஐ.அ.டொலர் 7.5 பில்லியனாகத் திருத்துமாறு அவர்களது 'டெமொக்கிலிஸ்’ அறிக்கையினைத் திருத்தியது". எனினும், இலங்கைக்கான 'டெமொக்கிலிஸ் புள்ளி' இனை நொமுறா மாற்றமின்றிப் பேணுகின்றது.

நொமுறாவினால் வெளியிடப்படும் 'டெமொக்கிலிஸ் புள்ளி' என்பது எட்டுக் குறிகாட்டிகளையும் தெரிவுசெய்யப்பட்ட குறிகாட்டிகளுக்கான பெறுமானங்களையும் அடிப்படையாகக் கொண்டு சுட்டெண் ஒன்றினை உருவாக்குவதற்கான ஆரம்பநிலையில் காணப்படும் முயற்சியொன்றாகும். இப்புள்ளி, அதன் பின்னர் ஒரு நாட்டில் தொடர்ந்துவரும் நெருக்கடி நிகழக்கூடிய தன்மையினை காண்பிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. நொமுறாவின்படி, 100 இற்கு மேற்பட்ட புள்ளியொன்று அடுத்துவரும் 12 மாதங்களில் ஒரு நாடு செலாவணிவீத நெருக்கடியொன்றிற்குப் பாதிக்கப்படக்கூடிய தன்மையில் இருப்பதனை தெரிவிக்கின்ற அதேவேளை 150இற்கு மேற்பட்ட புள்ளிகள் எந்த வேளையிலும், நெருக்கடியொன்று திடீரெனத் தோன்றக்கூடியது என்பதனை சமிக்ஞை செய்கின்றது. இலங்கையின் புள்ளியினை நொமுறா 175ஆகக் கணிப்பிட்டுள்ள அதேவேளை, தற்போது மோசமான பொருளாதார மற்றும் நிதியியல் நெருக்கடிகளை எதிர்கொள்கின்ற நாடுகளுக்கு குறைந்த பெறுமானத்தை குறித்தொதுக்குகின்றது. ஆஜன்டினா, துருக்கி, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளை விட இலங்கையின் புள்ளி கணிசமானளவு மோசமாகவிருக்கின்ற பெறுபேறுகளை விளைவிக்கின்ற ஏதேனும் முறையியல், சந்தை நிதர்சனங்களையும் இயலாற்றலையும் பற்றிக்கொள்வதற்கு போதுமானளவு நுட்ப வேறுபாடு கொண்டதாகத் தோன்றவில்லை. 

இலங்கைக்கான நொமுறாவின் 'டெமொக்கிலிஸ் அறிக்கையினை' உன்னிப்பாக அவதானிக்கின்ற போது 2013/14இல் சில மாதங்களுக்கானவை தவிர 2012 முதல் அது தொடர்ச்சியாக 100 மேற்பட்டதாக இருந்து வந்தது. சில சந்தர்ப்பங்களில் புள்ளியானது '200' உச்ச எல்லையினைக்கூடா தாண்டியிருந்தது. எனவே, இலங்கை தொடர்பில் ஆரம்பநிலையில் காணப்படும் இக்குறிகாட்டியானது நெருக்கடிக்கான குறிகாட்டியொன்றாகஃ எதிர்வுகூறுபவரொன்றாக கருத்திற்கொள்ளப்பட முடியாது என்பது ஐயமற்றதாகும். இதன் காரணமாக புள்ளியானது ஆஜன்டினா, துருக்கி போன்ற நாடுகளைவிட பாரியளவு நெருக்கடி இடர்நேர்விலுள்ள நாடொன்றாக இலங்கையினை பட்டியலிடுகின்ற எல்லைப் பெறுமானத்திலிருந்து குறித்த நாடொன்றின் தொலைவினையோ அன்றில் நாட்டிற்கான சூழல்நிலையினையோ கருத்திற்கொள்ளவில்லை. உதாரணமாக நொமுறா பகுப்பாய்வில் ஏற்றுமதிகள் விகிதத்திற்கான குறுகியகால வெளிநாட்டுப் படுகடனானது பொருட்களை மாத்திரம் உள்ளடக்குகின்றது. சுற்றுலாத் துறை உள்ளடங்கலாக பணிகள் மற்றும் பணவனுப்பல்கள் உள்ளடக்கப்படவில்லை. அனைத்து நடைமுறை கணக்குப் பாய்ச்சல்கள் மீதும் கவனம் செலுத்தாமையினால் 'புள்ளி', நாட்டின் பாதிக்கப்படக்கூடிய தன்மையினை மிகைப்படுத்திக் கூறுகின்றது. மேலும், வெளிநாட்டு ஒதுக்குகள் விகிதத்திற்கான அகன்ற பணம் அதன் அதிகரிப்பிற்கான காரணத்தை முறையாக விளக்கவில்லை. அகன்ற பணத்தில் அண்மைய அதிகரிப்பானது வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களின் அதிகரிப்பொன்றின் காரணமாகவிருந்தது. உண்மையில் இது நாட்டின் வெளிநாட்டு பாதிக்கப்படக்கூடிய தன்மையினை குறைத்துள்ளது. இலங்கைக்கான உண்மையான குறுகியகால வட்டி வீதக் குறிகாட்டியும் ஓரளவு நொமுறாவின் எல்லைக்கு மேல் காணப்படுகின்றது. இது வட்டி வீதங்களில் அதிகரிப்பொன்றினைவிடவும் பணவீக்கத்தில் குறைப்பொன்றின் மூலமே தோற்றுவிக்கப்பட்டுள்ளது. நொமுறா மூலம் பயன்படுத்தப்பட்ட இரும எண் முறையியல் எவ்வாறு தவறாக வழிநடாத்தப்படக்கூடியது என்பதனை இவ்வுதாரணங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இலங்கைக்கான குறுகியகால வெளிநாட்டுப் படுகடன் தொகை தொடர்பில் நொமுறாவின் பிழையானது சொல்லப்பட்ட அறிக்கை வெளியிடுவதற்கு முன்னர் நன்கு மீளாய்வு செய்யப்படவில்லை என்பதனை அதுவாகவே காண்பிக்கின்றது. உண்மையில், ஏறத்தாழ ஐ.அ.டொலர் 90 பில்லியன் கொண்ட மொ.உ.உற்பத்தியுடனும் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 8.6 பில்லியன் கொண்ட மொத்த அலுவல்சார் ஒதுக்குகளுடன் கூடிய பொருளாதாரமொன்றில் ஐ.அ.டொலர் 7.5 பில்லியன் மற்றும் ஐ.அ.டொலர் 160 பில்லியன் கொண்ட குறுகியகால படுகடனுக்கிடையில் வேறுபாட்டினை ஏற்படுத்த முடியாத சுட்டெண்ணொன்றின் எதிர்வுகூறல் சக்தியினை அடிப்படையாகக் கொண்ட ஏதேனும் பகுப்பாய்வின் கடுமையானதன்மை கேள்விக்குறியானதாகும்.

எனவே, இலங்கையின் பேரண்டப் பொருளாதார நிலைமைகள் மற்றும் வாய்ப்புக்கள் தொடர்பில் தமது சொந்த அறிவிக்கப்பட்ட அபிப்பிராயத்தினை ஏற்படுத்திக்கொள்ளுமாறு முதலீட்டாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஆலோசனை வழங்கப்படுகின்றது. 

 

---

1. அடிப்படை முதிர்வினைப் பயன்படுத்துகின்ற பொதுவான வரைவிலக்கணத்தினை அடிப்படையாகக் கொண்ட இலங்கையின் குறுகியகால வெளிநாட்டுப் படுகடன் மற்றும் பொறுப்புகள் தற்போது ஏறத்தாழ ஐ.அ.டொலர் 7.7 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ள அதேவேளை, அடுத்துவருகின்ற ஒரு வருட காலப்பகுதியிலும், ரூபாய் மாற்றப்பட்ட நீண்டகால அரசாங்க முறிகளைக் கொண்ட மொத்த வெளிநாட்டு உடமைக்கும் நிலுவையாகவுள்ள நீண்டகாலப் படுகடனை உள்ளடக்குகின்ற பரந்தளவான வரைவிலக்கணத்தின் கீழ் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 14.3 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

Published Date: 

Monday, September 17, 2018