திறைசேரி முறிகளின் ஏலங்கள் தொடர்பாக நாணயச் சபையின் அறிக்கை

இது, 2016 மாச்சு பிற்பகுதியில் இடம்பெற்ற திறைசேரி முறிகளின் ஏலங்கள் தொடர்பான அண்மைய கட்டுரைகள் மற்றும் கலந்துரையாடல்கள் தொடர்பானதாகும். இக்கட்டுரைகள் மற்றும் கலந்துரையாடல்களில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் போதுமானளவிற்கு வெளிப்படையான தன்மைகளைக் கொண்டிருக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகளை ஏலமிடுவது தொடர்பில் 2015 பெப்புருவரியிலிருந்து முழுமையாகச் சந்தையினை அடிப்படையாகக் கொண்ட பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து பின்பற்றப்பட்டு வருகின்ற நடைமுறைகளைப் போன்ற நடைமுறைகளே இப்பொழுதும் பின்பற்றப்பட்டிருக்கிறது என்ற உண்மையின்பால் பொதுமக்களின் கவனத்தினை ஈர்க்க விரும்புகின்றோம்.  

அரசாங்கத்திற்குப் பெருமளவு மூலவளங்கள் தேவைப்படுவது குறித்து நாணயச் சபை அவதானித்திருக்கிறது. மேலும், நாணயக் கொள்கை நடவடிக்கைகளின் பின்னணியில், ஆண்டின் தொடக்கத்தில் நியதி ஒதுக்குத் தேவைப்பாடுகள் மேல் நோக்கிச் சீராக்கப்பட்டமை மற்றும் அதனைத் தொடர்ந்து கொள்கை வட்டி வீதங்களின் மேல் நோக்கிய சீராக்கம் என்பன திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகளுக்கான விளைவு வீதங்களில் அதிகரிப்பொன்றினைத் தோற்றுவித்திருந்தன.  

ஏற்கனவேயுள்ளதும் தற்பொழுது உருவாகி வருவதுமான அரசாங்கத்தின் நிதியியல் தேவைகளைக் கருத்திற் கொண்டு நாணயச் சபை;  

  1. தொடர்பான முகாமைத்துவக் குழு: 
    • சந்தை அபிவிருத்திகள் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காகவும் தெளிவாக நிர்ணயிக்கப்பட்ட ஏலக் கலண்டர்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் அனைத்து முதனிலை வணிகர்களுடனும் விலைக்குறிப்பீட்டிற்கு முன்னரான கூட்டங்களை நடத்த வேண்டுமெனவும்,
    • விளம்பரம் செய்யப்பட்ட மற்றும் பகிரங்க ஏலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொகைகள் தொடர்பில் பன்னாட்டு ரீதியான சிறந்த நடைமுறைகளைப் பரீட்சிப்பது பற்றியும் மத்திய வங்கி அத்தகைய நடைமுறைகளை எவ்வாறு பின்பற்ற வேண்டுமென்பது பற்றியும் சபைக்கு முன்மொழிய வேண்டுமெனவும் விதந்துரைக்கிறது. 
  • ஊழியர் சேம நிதியம் முதலாந்தர ஏலங்களில் தீவிரமாகப் பங்கேற்கிறது.
  •  

    Published Date: 

    Thursday, June 2, 2016