இலங்கையிற்கான ஐ.அ.டொ. 1.5 பில்லியன் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கு பன்னாட்டு நாணய நிதியம் ஒப்புதலளிக்கிறது

இலங்கையின் சென்மதி நிலுவையின் நிலைமைக்கு ஆதரவளிப்பதற்கும் அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த செயற்றிட்டத்திற்கு ஆதரவாகவும் சிறப்பு எடுப்பனவு உரிமைகள் 1.1 பில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.5 பில்லியன்) பெறுமதியான விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கு 2016 யூன் 03 அன்று பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை ஒப்புதலளித்தது. இத்தொகையானது பன்னாட்டு நாணய நிதியத்தினுடனான நாட்டின் தற்போதைய பொறுப்புப் பங்கின் 185 சதவீதத்திற்கு சமமானது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான சிறப்பு எடுப்பனவு உரிமைகள் 119.9 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 168.1 மில்லியன்) பெறுமதியான முதலாவது தொகுதி இலங்கைக்கு உடனடியாக கிடைக்கதக்கதாக செய்யப்படும். எஞ்சிய தொகையானது மூன்று ஆண்டுகளைக்கொண்ட காலப்பகுதியில் ஆறு தொகுதிகளாக வழங்கப்படுவதுடன், கடைசி தொகுதியானது 2019 ஏப்பிறலில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் மீது இயைபுள்ள வட்டி வீதமானது, தற்போது நிலவும் ஆண்டிற்கு 0.05 சதவீத சிறப்பு எடுப்பனவு உரிமை வட்டி வீதத்திற்கு சமமான அடிப்படை கட்டண வீதத்துடன் 100 அடிப்படை புள்ளிகளாகும். ஆகையால், விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் வட்டி வீதமானது தற்போது நிலவும் சந்தை வீதங்களை விட கணிசமானளவால் குறைவானதாகும். நாட்டின் பொருளாதார செயலாற்றம் மீது கிரமமான மீளாய்வுகளை 2016 நவெம்பர் முதல் பன்னாட்டு நாணய நிதியம் நடத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.   

பன்னாட்டு நாணய நிதியத்திலிருந்து ஓர் விரிவாக்கப்பட்ட நிதி வசதியை நாடுவதற்கான இலங்கை அதிகாரிகளின் தீர்மானமானது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அபிவிருத்திகள் இரண்டிலிருந்தும் தோற்றுவித்தது. வெளிநாட்டுத் துறையில், குறிப்பாக சீனப் பொருளாதாரத்தின் மெதுவடைதல், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியவின் அகல்வு தொடர்பான அச்சம் மற்றும் மத்திய கிழக்கில் தகாத புவிசார் அரசியில் அபிவிருத்திகள் ஆகியவையினால், புதுப்பிக்கப்பட்ட உலகளாவிய பொருளாதார உறுதியின்மை நிலவுகிறது. அதேவேளையில், அமெரிக்காவில் நாணயக் கொள்கையின் வழமையாக்குதல் என்பது, இலங்கை உள்ளடங்கலான தோற்றம்பெற்று வரும் சந்தை மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரங்களிலிருந்து நிதிகளின் வெளிப்பாய்ச்சல்களை தூண்டியது. பன்னாட்டு பண்ட விலைகளின் தாழ்ந்த மட்டத்திற்கு மத்தியிலும், இலங்கையின் மரபார்ந்த ஏற்றுமதிச் சந்தைகளில் கேள்வியின் வளர்ச்சியின் மெதுவடைதல் மற்றும் மூலதன வெளிப்பாய்ச்சல்கள் என்பன வெளிநாட்டுத் துறை மீது கணிசமான அழுத்தத்தை செலுத்தி சென்மதி நிலுவையில் ஓர் திரண்ட பற்றாக்குறையை உருவாக்கியது. சென்மதி நிலுவை மற்றும் உள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணி சந்தை மீதான அழுத்தத்தை தளர்த்ததுவதற்கு உதவும் வகையில், திருத்த வழிமுறைகளை அரசாங்கம் மற்றும் மத்திய வங்கி கடைபிடித்தது. குறிப்பாக, செலாவணி வீத நிர்ணயிப்பதில் அதிகரித்த நெகிழ்ச்சித்தன்மை அனுமதிக்கப்பட்டது, தெரிந்தெடுக்கப்பட்ட கேள்வி முகாமைத்துவ கருவிகளாக புதிய பேரண்ட முன்மதியுடைய ஒழுங்குவிதிகள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், 2015 இறுதி தொடாக்கம் நாணயக் கொள்கை இறுக்கப்பட்டது. இருப்பினும், இறை மற்றும் வெளிநாட்டுத்துறைகளில் கட்டமைப்புச்சார்ந்த பிரச்சனைகள் நிலைத்துக்காணப்பட்டதுடன், பன்னாட்டு நாணய நிதியத்தின் ஆதரவென்பது கட்டமைப்புச்சார்ந்த பிரச்சனைகளை சமாளிப்பதற்கான அரசின் முயற்சிகளை வலுபடுத்தும் என்ற கருத்தை அரசு கொண்டிருந்தது.  

விரிவாக்கப்பட்ட நிதி வசதியிற்கான இலங்கை அதிகாரிகளின் வேண்டுகோளிற்கு மறுமொழியாக, 2016 மாச்சு/ ஏப்பிறலில் பன்னாட்டு நாணய நிதிய அலுவலகர்களைக் கொண்ட குழு ஒன்று இலங்கைக்கு வருகைதந்து, இலங்கை அதிகாரிகளுடன் பல சுற்றுக்களைக்கொண்ட கலந்துரையாடல்களை நடத்தியது. பன்னாட்டு நாணய நிதியத்திற்கான இலங்கையின் தூதுவர் குழு பன்னாட்டு நாணய நிதியத்தின் முதுநிலை பணியாளர்களுடனான கலந்துரையாடல்களை 2016 ஏப்பிறலில் அதன் ஆண்டுக் குழுமங்களின்போது தொடர்ந்தது. தொழில்நுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தைகளின் வெற்றிகரமான பூர்த்தி, பரிந்துரைக்கப்பட்ட முன்னரான செயல்களை அரசாங்கம் பூர்த்தி செய்தல் மற்றும் 2016 மேயில் இலங்கை அதிகாரிகளினால் செயல்நோக்கக் கடிதத்தின் கையொப்பமிடல், ஆகியவற்றிற்கு பின்னர் 2016 யூன் 03 அன்று விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கு பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை ஒப்புதலளித்தது. 

பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான ஒப்புதலளித்தல் என்பது நடுத்தரக் காலத்தில் அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த செயற்றிட்டத்திற்கான அதன் ஆதரவை சமிக்ஞை காட்டுகிறது. வரிக் கொள்கை மற்றும் ஆளுகையிற்கு அடிப்படையான மற்றும் விரிவான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், இதனால் பொதுப் படுகடனின் சுமை மற்றும் சென்மதி நிலுவை மீதான அழுத்தத்தை இலகுபடுத்தும் வேளையில் அரசாங்கத்தின் முக்கிய சமூக மற்றும் அபிவிருத்திச் செலவின நிகழச்சித்திட்டங்களுக்கான இறை வெளியிடத்தை அளிக்கும். இதற்கேற்ப, 2020ற்குள் திரண்ட வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3.5 சதவீதத்திற்கு உறுதியான குறைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. செலவை பிரதிபலிக்கும் விலையிடல் இயக்கமுறைகள் மற்றும் தெளிமையான ஆளுகை என்பவையின் அடிப்படையில், அரசிற்குச் சொந்நதமான தொழில்முயற்சிகளை வணிக ரீதியாக நிலைத்திருக்கக்கூடிய  அலகுககளாக மாற்றப்படுவது மீதும் சீர்திருத்த செயல்திட்டமானது கவனஞ் செலுத்துகிறது. வெளிநாட்டு ஒதுக்குகளின் மெதுவான கட்டியெழுப்புதல் மற்றும் நடு ஒற்றை இலக்க மட்டத்தில் பணவீக்கத்தை பேணல் என்பவையும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியால் ஆதரவளிக்கப்பட்ட பொருளாதார நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனைய முக்கிய கட்டமைப்புச் சார்ந்த சீர்திருத்தங்கள் என்பது பாதுகாப்பு குறைப்பு மற்றும் புதிய வர்த்தக உடன்படிக்கைகளின் பின்பற்றல் என்பவற்றின் மூலமான வர்த்தக இயல்புச் செயலை உள்ளடக்கும். இதேவேளையில், நெகிழ்ச்சித்தன்மையுடைய செலாவணி வீத கொள்கையின் தொடர்ச்சியினால் துணையளிக்கப்பட்ட நெகிழ்ச்சித்தன்மையுடைய பணவீக்க இலக்கிடலை நாணயக் கொள்கை வரம்புறுகுவாக அறிமுகப்படுத்துவதை நோக்கி நகர மத்திய வங்கி எதிர்பார்க்கப்படுகிறது.   

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஒப்புதலளித்தல் என்பது அரசாங்கத்தின் சீர்திருத்த செயற்றிட்டத்தின் வெற்றிகரமான நடைமுறைபடுத்தலுக்கு, வேறு பல்புடை மற்றம் இருபுடை மூலங்களிலிருந்தான மேலதிகமான நிதிகள் கவரப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டின் மேம்பாடு, சந்தை நம்பிக்கையின் வலுபடுத்தல், போட்டித்தன்மை மற்றும் வெளிநோக்கிய திசைப்போக்கை செழுமைபடுத்தல், சவால்மிக்க உலகளாவிய சூழலில் வெளிநாட்டு எதிர்விசைப்பின் வலுபடுத்தல், ஆகியவையை விரிவாக்கப்பட்ட நிதி வசதியால் ஆதரவளிக்கப்பட்ட பொருளாதார நிகழ்ச்சித்திட்டத்தின் பலன்கள் விளைவிக்கும். ஆகவே, இது இலங்கையில் உயர்ந்த மற்றும் உள்ளடங்கலான வளர்ச்சியை வசதி செய்வதற்கு உதவும் வேளையில் இலங்கையின் பொருளாதார உள்ளாற்றலின் முழுமையான பயன்படுத்தலை இயலச்செய்யும். 

மேலதிக தகவல்கள் பன்னாட்டு நாணய நிதியத்தின் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்: https://www.imf.org/external/country/LKA/index.htm?pn=2

 

Published Date: 

Saturday, June 4, 2016