இலங்கை ரூபாவின் மீது நாணய அழுத்தத்தினை தேவைப்படுத்துகின்ற அடிப்படை அம்சங்கள் எதுவும் காணப்படவில்லை. தற்பொழுது மொத்த வெளிநாட்டு ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 9.1 பில்லியனாக ஆரோக்கியமான மட்டத்தில் காணப்பட்டதுடன் உண்மைத்தாக்கமுள்ள செலாவணி வீத சுட்டெண்கள் நாணயம் போட்டித்தன்மையுடையதாக விளங்குவதனை எடுத்துக்காட்டின.
எனவே, நாணயம் மீதான அழுத்தம் தேவையற்றதொன்றாகும்.
பின்வரும் உட்பாய்ச்சல்கள் இனிவரும் கிழமைகளில் ஒதுக்கின் தற்போதைய பலமான மட்டங்களை உத்வேகப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.
- யூன் ஆரம்பத்தில் ப.நா. நிதிய விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் அடுத்த தொகுதியின்படி ஐ.அ.டொலர் 250 மில்லியன்;
- 2018 யூன் 2ஆம் வாரத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நீண்ட காலக் குத்தகையின் மீதான இறுதிக் கொடுப்பனவான ஐ.அ.டொலர் 585 மில்லியன்; மற்றும்
- 2018 யூன் நடுப்பகுதியில் கூட்டுக் காலக் கடன் தொகையாக ஐ.அ.டொலர் 1 பில்லியன்.
எனவே, மொத்த வெளிநாட்டு ஒதுக்குகள் 2018 யூன் நடுப்பகுதியளவில் ஐ.அ.டொலர் 11 பில்லியனை அண்மிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த செலாவணி வீத முகாமைத்துவத்தினை மேற்கொள்வதற்கு உறுதிபூண்டுள்ள அதேவேளையில் இலங்கை மத்திய வங்கி முன்னொருபோதுமில்லாத பாரிய வெளிநாட்டு ஒதுக்குகளின் ஒரு பகுதியினைக் குறிப்பாக, அடிப்படை அம்சங்கள் எதனாலுமே நியாயப்படுத்த முடியாத நாணயத்தின் தேவையற்ற தேவையினைத் தடுப்பதற்காக ரூபாவினை உயர்த்துவதற்கான விருப்பத்தேர்தினை மத்திய வங்கி கொண்டுள்ளது.