நிறைவு செய்யும் அறிக்கையானது, உத்தியோக பூர்வ அலுவலர் (ஷஅல்லது தூதுக்குழு|) விஜயத்தின் இறுதியில் பெரும்பாலான உறுப்பு நாடுகளைப் போன்றே ப.நா. நிதிய அலுவலர்கள் ஆரம்பத்தில் கண்டறிந்த விடயங்களை விபரிக்கிறது. அலுவலர்கள் கண்காணித்த நிகழ்ச்சித்திட்ட கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, அல்லது மற்றைய அலுவலர்களின் பொருளாதார அபிவிருத்திகளது கண்காணிப்பின் ஒரு பகுதியாக, ப.நா. நிதிய மூலவளங்களை (ப.நா.நிதியத்திலிருந்தான கடன்பாடு) பயன்படுத்துவதற்கான கோரிக்கையின் பின்னணியில், உடன்படிக்கையில் ப.நா.நிதிய உறுப்புரையின் உறுப்புரை ஐஏ இன் கீழ், பணிகள் கிரமமான (வழமையாக வருடாந்தம்) ஆலோசனைகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டன. இவ்வறிக்கையினை வெளியிடுவதற்கு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.
இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ப.நா. நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி, அது ப.நா. நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இத்தூதுக்குழு ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில் அலுவலர்கள் அறிக்கையினைத் தயாரிப்பர். இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு கலந்துரையாடல்களுக்கும் தீர்மானங்களுக்குமாக ப.நா.நிதிய நிறைவேற்றுச் சபைக்கு சமர்ப்பிக்கப்படும்.
மனுவெல்லா ஜோறேட்டி தலைமையிலான ப.நா.நிதிய அலுவலர் குழுவொன்று, 2018 உறுப்புரை ஐஏ ஆலோசனை மற்றும் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் இலங்கை அதிகாரிகளின் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காவது மீளாய்வின் மீதான தொழில்நுட்ப வேலைகளை விரைவுபடுத்தல் என்பன தொடர்பான கலந்துரையாடல்களுக்காக பெப்புருவரி 27 – மாச்சு 9 வரையான காலப்பகுதியில் கொழும்பிற்கு விஜயம் செய்தது.
ப.நா. நிதிய தூதுக்குழு 2018 உறுப்புரை ஐஏ ஆலோசனை தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் உறுதியான கலந்துரையாடல்களை நடத்தியதுடன் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி – ஆதரவு நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காவது மீளாய்வின் மீது அலுவலர் மட்ட உடன்படிக்கையொன்றினை நோக்கியும் முன்னேறியது. நிகழ்ச்சித்திட்டக் கலந்துரையாடலானது ப.நா.நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்த கால கூட்டத்தில் தொடர்ந்தும் இடம்பெறும்.
பொருளாதார மீட்சியைத் தொடரும் விதத்தில் ஏற்பாடுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன
2017இல் காணப்பட்ட வானிலையுடன் தொடர்பான தொடர்ச்சியான அதிர்வுகளைத் தொடர்ந்து, பொருளாதாரம் படிப்படியாக வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. வேளாண்மை மற்றும் கைத்தொழிலில் ஏற்பட்ட மீட்சி, பணிகளின் வளர்ச்சியில் காணப்பட்ட உத்வேகம் என்பனவற்றின் உதவியுடன் 2018இல் உண்மை மொ.உ.உற்பத்தி வளர்ச்சி 4.4 சதவீதத்திற்கு வளர்ச்சியடையுமென எறிவு செய்யப்பட்டுள்ளதுடன் நடுத்தர காலத்தில் இது 5 சதவீதத்தினை அடையும். உணவு விலைகள் உறுதியடைந்துள்ளமையினால் 2018இல் பணவீக்கம் ஏறத்தாழ 5 சதவீதம் கொண்ட பழைய நிலைக்குத் திரும்புமென எறிவு செய்யப்பட்டுள்ளது.
Reforms have progressed under the program but vulnerabilities remain
வானிலை தொடர்பான அதிர்வுகளும் நடைமுறைப்படுத்தலில் சில தாமதங்களும் காணப்பட்ட போதும், நிகழ்ச்சித்திட்டச் செயலாற்றம் பெருமளவிற்குச் சரியான பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறது. புதிய உண்ணாட்டரசிறைச் சட்டமும் பணவீக்க இலக்கிடலை நோக்கிய இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டலும் சீர்திருத்தங்களில் திருப்புமுனையொன்றினை பிரதிபலித்ததுடன் அவற்றின் வெற்றிகரமான நடைமுறைப்படுத்தலானது முன்னோக்கிய பாய்ச்சலில் மிக இன்றியமையாததாகவும் காணப்படுகின்றது. 2017இல் பூர்வாங்க தரவுகள் காட்டுகின்ற ஆரம்ப மிகைகளுடன் இறைத்திரட்சி முன்னேற்றங்கண்டு வருகின்றது. அண்மைய அழுத்தங்களுக்கு மத்தியிலும் இலங்கை மத்திய வங்கி கொடுகடன் வளர்ச்சியைக் காத்திரமான முறையில் கட்டுப்படுத்தக்கூடியதாகவும் பணவீக்கத்தினை உறுதியான மட்டத்தில் பேணக் கூடியதாகவும் இருந்த வேளையில் ஒதுக்குகளை அதிகரிக்கும் அதன் வேகமும் தொடர்ந்தது.
இருப்பினும் கூட, இன்னமும் கணிசமானளவில் காணப்படும் பொதுப்படுகடன் மற்றும் தாழ்ந்த வெளிநாட்டு தாங்கிருப்பு என்பனவற்றின் மோசமான அதிர்வுகளினால் பொருளாதாரம் தொடர்ந்தும் பாதிக்கப்படக் கூடியதன்மை காணப்படுகிறது. முன்னோக்கிப் பார்க்கையில், கடினமான முயற்சி மூலம் வெற்றி கொள்ளப்பட வேண்டிய நன்மைகளையும் அனைத்தையுமுள்ளடக்கிய ஆதரவினையும் வலுவான வளர்ச்சியையும் பெறுவதற்கு சீர்திருத்த உத்வேகத்தினைத் தொடர்வதும் கொள்கைக் கட்டமைப்பினையும் நிறுவனங்களையும் மேலும் வலுப்படுத்துவதும் அவசியமாகும்.
உறுதிப்பாட்டினையும் அனைத்தையுமுள்ளடக்கிய வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்கு நிறுவனங்களை வலுப்படுத்தல்
இத்தகைய பின்னணிகளுக்கெதிராக, அதிகாரிகள் ஆர்வம் மிக்க அமைப்பியல், பேரண்டப் பொருளாதாரம் மற்றும் சமூக சீர்திருத்தங்களினூடாக இலங்கையின் விரைவானதும் அனைத்தையுமுள்ளடக்கியதுமான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் விதத்தில் அவர்களது தொலைநோக்கு 2025 உபாயத்துடன் விரைந்து முன்னேறுதல் வேண்டும். முக்கியமான முன்னுரிமைகள் (i) மிகுந்த உத்வேகம் மிக்க இறை விதிகள் மற்றும் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் ஆளுகையூடாக இறைத்திரட்சியை முன்னேற்றுதல் (ii) நாணய, நிதியியல் மற்றும் செலாவணி வீதக் கொள்கைக் கட்டமைப்பினை நவீனமயப்படுத்தல் (iii) வளர்ச்சியை அதிகரிக்கின்ற அமைப்பியல் சீர்திருத்தங்களை விரைவுபடுத்தல் என்பனவற்றை உள்ளடக்கியுள்ளன.
i. வலுவான இறைவிதிகள் மற்றும் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் ஆளுகை என்பனவூடாக இறைத்திரட்சியை முன்னேற்றுதல்
அரசிறையை அடிப்படையாகக் கொண்ட இறைத்திரட்சியில் காணப்பட்ட முன்னேற்றம் அரச முதலீடுகள் மற்றும் சமூக செலவிடலுக்கான வாய்ப்புக்களைப் பேணுவதற்கும் அதேவேளையில் பொதுப்படுகடனைக் குறைப்பதற்கும் உதவியிருக்கின்றன. மேலும், அரசிறைத் திரட்சியானது, 2018இன் ஆரம்ப மிகை இலக்கினைப் பூர்த்தி செய்வதற்கும் திரண்ட பற்றாக்குறையினை 2020 அளவில் மொ.உ.உற்பத்தியின் 3.5 சதவீதத்திற்குக் குறைப்பதற்கும் அவசியமானதாகும். புதிய உண்ணாட்டரசிறைச் சட்டம் இலகுவான, மிகச் சமமான வரி முறைமையினை நோக்கிய நகர்வில் முக்கியமான சாதனையினைப் பிரதிபலிப்பதுடன் இதன் சுமூகமான நடைமுறைப்படுத்தல் மிகை இன்றியமையாததாக விளங்கும். அரச முதலீடுகளிலிருந்தும் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பினதும் வினைத்திறனை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பும் காணப்படுகின்றது.
2020இற்கு அப்பால், நன்கு வடிவமைக்கப்பட்ட இறை விதியானது, இம்முன்னேற்றத்தினைக் கட்டியெழுப்புவதற்கும் படுகடனை கீழ் நோக்கிய பாதையில் உறுதியாக வைத்திருப்பதற்கும் உதவ முடியும். மிகச் சிறந்த பன்னாட்டு நடைமுறைகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் இணங்குவிப்பு, படுகடன் முகாமைத்துவத்தில் முன்னேற்றம், பெருமளவான இறை வெளிப்படைத்தன்மை என்பனவற்றை உள்ளடக்குகின்ற விதத்தில் இறை முகாமைத்துவப் பொறுப்பாண்மைச் சட்டம் திருத்தப்படுதல் வேண்டும்.
வலுவிற்கான விலையிடல் சீர்திருத்தங்கள், அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளிலிருந்து ஏற்படும் இறை இடர்நேர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை வாய்ந்தவையாகும். இலக்கிடப்பட்ட சமூக மாற்றல் நிகழ்ச்சித்திட்டத்தினால் இச்சீர்திருத்தங்களின் பகிர்ந்தளிப்புத் தாக்கங்களைத் தணிக்க முடியும். அரசிற்குச் சொந்தமான முக்கியமான தொழில்முயற்சிகளின் கணக்காய்வு செய்யப்பட்ட நிதியியல் கூற்றுக்களை உரிய நேரத்தில் வெளியிடுதல் மற்றும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட கம்பனி எண்ணக் கூற்றுக்களின் அறிக்கையின் கீழ் செயலாற்றத்தினைக் கிரமமாக மீளாய்வு செய்தல் என்பனவும் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் ஆளுகையினையும் வெளிப்படைத்தன்மையினையும் வலுப்படுத்தும்.
ii. நாணய, நிதியியல் மற்றும் செலாவணி வீதக் கொள்கைக் கட்டமைப்பினை நவீனமயப்படுத்தல்
இலங்கை மத்திய வங்கி விலை அதிர்வுகள் மற்றும் சந்தைத் தளம்பல் என்பனவற்றின் பின்னணியில் நாணயக் கொள்கையினை முன்மதியுடைய விதத்தில் முகாமைப்படுத்தி வருகின்றது. இலங்கை மத்திய வங்கி அதன் முதன்மைக் குறிக்கோளான விலை உறுதிப்பாட்டின் மீது தொடர்ந்தும் கவனம் செலுத்தி வர வேண்டும் என்பதுடன் கேள்விப்பக்க பணவீக்க அழுத்தங்களை அல்லது விரைவடைகின்ற கொடுகடன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு ஆயத்தமான நிலையில் இருத்தலும் வேண்டும். சாதகமான வெளிநாட்டுச் சூழல் ஒதுக்கு தாங்கிருப்புக்களைப் பாதுகாப்பதற்கான வாய்ப்பு வசதியை வழங்குவதுடன் உலகளாவிய மூலதனப்பாய்ச்சல்கள், செலாவணி வீத நெகிழ்ச்சித்தன்மை என்பனவற்றில் தளம்பல் ஏற்படும் சந்தர்ப்பத்தில் அவற்றினைப் பாதுகாத்துக் கொள்வது முதல் நடவடிக்கையாக இருத்தல் வேண்டும். நாணய விதிச் சட்டத்திற்குச் செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட மாற்றங்கள், வழிகாட்டலின் ஒரு பகுதியாக நெகிழ்ச்சித்தன்மை கொண்ட பணவீக்க இலக்கிடல் என்பன இலங்கை மத்திய வங்கியின் பொறுப்பாணை, ஆளுகை மற்றும் சுயநிர்ணயம் என்பனவற்றைப் பலப்படுத்துவதற்கான முக்கிய மைல்கற்களாகக் காணப்படுகின்றன.
நிதியியல் துறையில் முறையியல் சார்ந்த இடர்நேர்வுகள் அதிகரிப்பதற்கெதிராக அதிகாரிகள் விழிப்புடன் இருத்தல் வேண்டும். தேவைப்படுமாயின், குறிப்பிட்ட சில துறைகளில் மிகையான கொடுகடன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்குப் பேரண்ட முன்மதியுடைய கருவிகளைப் பயன்படுத்தவும் பரிசீலிக்கலாம். வங்கித்தொழில் துறை பாசல் ஐஐஐ தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் பாதையில் பயணிப்பதுடன் மோசமான அதிர்வுகளுக்கெதிரான நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும் விதத்தல் தடங்கலற்ற திட்டங்களையும் தயாரித்தல் வேண்டும். வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களும் வங்கிகளுக்கு ஒத்தவாறான அதேமட்ட மேற்பார்வைக்குட்பட்டனவாக இருத்தல் வேண்டுமென்பதுடன் பிரச்சனைக்குரிய நிறுவனங்கள் சரியான முறையில் கலைத்துவிடப்படல் வேண்டும்.
iii. அனைத்தையுமுள்ளடக்கிய வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அமைப்பியல் சீர்திருத்தங்களை விரைவுபடுத்தல்
அதிகாரிகளின் தொலைநோக்கு 2025இன் கீழான சீர்திருத்தங்கள், விரைவானதும் அனைத்தையுமுள்ளடக்கியதுமான வளர்ச்சியை ஊக்குவிக்க முக்கியமானதாகும். இலங்கையின் பாதுகாக்கப்பட்ட வர்த்தகமானது, தீர்வை, துணைத் தீர்வை மற்றும் தீர்வையல்லா தடைகள் அதேபோன்று நெருங்கிய பிராந்திய ஒருங்கிணைப்பு என்பனவற்றினூடாக படிப்படியாகத் தாராளமயமாக்கப்படுதல் வேண்டும். புதிய உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் உத்வேகம் மிக்க நடைமுறைப்படுத்தல் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான ஒரே கூரையின் கீழான வசதிகள் என்பன முதலீட்டுச் சூழலை மேம்படுத்தும். இறை மற்றும் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சி முகாமைத்துவத்தில் பெருமளவான வெளிப்படைத்தன்மை மற்றும் வலுவான பணம் தூயதாக்கலுக்கெதிரானÆ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் அமைப்பு என்பன உட்பட ஊழலை ஒழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
இலங்கையில் காணப்படும் கணிசமான பால் வேறுபாட்டு இடைவெளியினைக் கட்டுப்படுத்துவதும் பெண் தொழிற்படை பங்கேற்பு வீதத்தினை அதிகரிப்பதும் நெகிழ்ச்சித்தன்மை கொண்ட வேலை ஒழுங்குகள், பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் பிள்ளைகள் நலக்காப்பு வசதி என்பனவற்றினூடாகத் தேவைப்படும் தொழிலாளர் சந்தைச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் பால் வேறுபாடுகள் சீர்செய்யப்படல் வேண்டும். நன்கு வடிவமைக்கப்பட்ட இலங்கை அனர்த்த இடர்நேர்வு நிதியிடல் கட்டமைப்பு வானிலை மாற்றத்துடன் இணைந்து செலவினைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கைக்கு உதவும்.
தூதுக்குழுவானது பிரதம மந்திரி விக்கிரமசிங்க, நிதி ராஜாங்க அமைச்சர் விக்கிரமரத்ன, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் த சில்வா, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் குமாரசுவாமி மற்றும் அரச அலுவலர்கள், வியாபார சமூகத்தினர், சிவில் சங்கங்கள் மற்றும் பன்னாட்டுப் பங்காளர்கள் ஆகியோரைச் சந்தித்தது.