முதனிலை வணிகர் தொடர்பான ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கை - பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி

இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளைத் தொடரும் நோக்குடன், பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியலகள் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழ் செய்யப்ட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளுக்கமைவாக செயற்பட்டு 2018 பெப்புருவரி 14ஆம் திகதியன்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சியால் மேற்கொள்ளப்படும் முதனிலை வணிகர் வியாபாரம் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தான இடைநிறுத்தலினை 2018 பெப்புருவரி 15ஆம் திகதி மு.ப. 10.00 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் ஆறு மாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது.

இவ்வொழுங்குபடுத்தல் நடவடிக்கையானது அரச பிணையங்களுக்கான முதனிலை ஏலங்களுக்கான பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சியின் அணுகுவழியினைக் கட்டுப்படுத்துகின்றது என்பதனை இலங்கை மத்திய வங்கி வழியுறுத்த விரும்புகின்றது. இது பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சியின் ஏனைய நடவடிக்கைகளில்ஃ பணிகளில் எந்தவித தாக்கத்தினையும் ஏற்படுத்தாது.

 

Published Date: 

Thursday, February 15, 2018