2015ஆம் ஆண்டிற்கான மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தேசிய கணக்குகள் மதிப்பீடுகளின் மீளஅடிப்படைப்படுத்தப்பட்ட தொடர்களின் பிரிப்பினை அடிப்படையாகக் கொண்டு (2010இன் நிலையான விலைகளில்) இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் கணிக்கப்பட்டிருக்கிறது. மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டில், மொ.உ. உற்பத்தியிலுள்ள ஒவ்வொரு நிரையிலுமுள்ள விடயத்தினதும் பெறுமதியானது (அடிப்படையாண்டு 2010) மாகாண மட்டத்தில் தொடர்பான குறிகாட்டிகளைப் பயன்படுத்தி பிரிக்கப்பட்டது.
2015இல் இலங்கையின் பொருளாதாரம் 4.8 சதவீதம் கொண்ட வருடாந்த உண்மை மொ.உ.உற்பத்தி வளர்ச்சியை அடைந்த வேளையில், பெயரளவு மொ.உ.உற்பத்தி ரூ.11,183 பில்லியனுக்கு 7.0 சதவீதம் கொண்ட வளர்ச்சியைப் பதிவுசெய்தது. மாகாணங்களுக்கிடையேயான பெயரளவு மொ.உ.உற்பத்தியின் பிரிப்பு அட்டவணை 1இல் தரப்பட்டுள்ளது.