விரிவடைகின்ற வர்த்தகப் பற்றாக்குறை, சுற்றுலா வருவாய்களில் ஏற்பட்டு வரும் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்களில் காணப்பட்ட அதிகரிப்பு என்பனவற்றின் காரணமாக இலங்கையின் வெளிநாட்டுத் துறை 2016 மேயில் கலப்பான செயலாற்றமொன்றினைக் காட்டியது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், இறக்குமதிச் செலவினத்தில் சிறிதளவு அதிகரிப்புக் காணப்பட்ட போதும் தேயிலை, இறப்பர் உற்பத்திகள், புடவைகள் மற்றும் ஆடைகளின் ஏற்றுமதிச் செயலாற்றத்தில் காணப்பட்ட குறைவின் முக்கிய காரணமாக ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவாக வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. எனினும், 2016 மே இறுதியிலுள்ளவாறு ஒன்றுசேர்ந்த அடிப்படையில் வர்த்தகப் பற்றாக்குறையின் விரிவானது சுற்றுலாவின் பேரிலான தொடர்ச்சியான உட்பாய்ச்சல்கள், அதிகரித்த தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் இக்காலப்பகுதியில் நிதியியல் கணக்கிற்கான மிதமான உட்பாய்ச்சல் என்பனவற்றின் காரணமாக ஓரளவிற்கு எதிரீடு செய்யப்பட்டது.
Tuesday, August 9, 2016