தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் நவம்பர் மாதத்தில் 58.8 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 ஒத்தோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது 4.0 புள்ளிகளாலான ஒரு அதிகரிப்பாகும். இது தயாரிப்பு நடவடிக்கைகளானது 2017 ஒத்தோபர் உடன் ஒப்பிடும் போது 2017 நவம்பரில்; ஒரு உயர்வான வேகத்திலான அதிகரிப்பினை குறித்துக்காட்டுகின்றது. இது பண்டிகைக்கால கேள்விகளுடன் இணங்கிச்செல்லும் விதத்தில், முக்கியமாக உணவு, குடிபானங்கள் மற்றும் புகையிலை தொடர்பான தயாரிப்பு நடவடிக்கைகளின் அதிகரிப்பினால் புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி சுட்டெண்களினால் உந்தப்பட்டது. மேலும், தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பு துணைச்சுட்டெண்கள் ஒத்தோபர் 2017 உடன் ஒப்பிடும் போது மாதகாலப்பகுதியில் ஒரு உயர்வான வேகத்தில் அதிகரித்திருந்தது. இதே வேளையில் நிரம்பலர் வழங்கல் நேர துணைச்சுட்டெண் முன்னைய மாதத்துடன் ஒப்பிடும் போது ஒரு குறைவான வீதத்தில் நீட்சியடைந்தது. ஒட்டுமொத்தமாக, கொ.மு.சுட்டெண்ணின் அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலான பெறுமானங்களை முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் நவம்பர் மாதத்தில் பதிவு செய்து ஒரு ஒட்டுமொத்த விரிவக்கத்தினை காட்டியது. மேலும், முன்னைய மாதத்துடன் ஒப்பிடுமிடத்து அடுத்த மூன்று மாதங்களுக்கான நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பு சில மெதுவடைதலுடன் உயர்ந்தளவில் மாறாது காணப்பட்டது.
பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2017 ஒத்தோபரின் 55.3 சுட்டெண் புள்ளியிலிருந்து நவம்பர் மாதத்தில் 57.4 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்தது. 2017 நவம்பரில் பணிகள் துறையானது குறைவான வீதத்தில் அதிகரித்திருந்தமையினை இது குறித்துக்காட்டுகின்றது. இவ் அதிகரிப்பானது வியாபார நடவடிக்கைகள், புதிய வியாபாரங்கள் மற்றும் தொழில்நிலை துணைச்சுட்டெண்களினால் ஆதரவளிக்கப்பட்டது. 2017 ஒத்தோபர் உடன் ஒப்பிடும் போது நவம்பரில், அடுத்த மூன்று மாதங்களுக்கான நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புகள் குறைவடைந்திருந்த வேளையில் நிலுவையிலுள்ள பணிகளும் வீழ்ச்சியடைந்தது. வியாபார நடவடிக்கைகளிலான விரிவாக்கம் பிரதானமாக நிதியியல் பணிகள் மற்றும் தொலைத்தொடர்ப்பூட்டல் துறைகளில் பிரதானமாக அவதானிக்கப்பட்டதுடன் இதற்கு பணிகள் விநியோக வழிமுறைகளின் விஸ்தரிப்பு மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான அபிவிருத்திகள் காரணமாக அமைந்தன. தொழில்நிலையானது; பண்டிகைகாலத்திற்காக நிறுவனங்கள் அதிகரித்த தொழிலாளர்களின் மட்டங்கள் மற்றும் முன்னையதான திறந்த நிலைகளுக்கான ஆட்சேர்ப்புகளின் காரணமாக ஒரு நான்கு மாத தொடர்ச்சியான அதிகரிப்பை அடைந்தது. விதிக்கப்பட்ட விலைகளானது 2017 ஒத்தோபர் உடன் ஒப்பிடும் போது நவம்பரில் குறைவடைந்திருந்த வேளையில் தொழிலாளர் செலவிற்கான எதிர்பார்ப்புகள் துணைச்சுட்டெண் பருவகால மிகை ஊதியங்கள், பண்டிகைக்கால முற்பணங்கள் மற்றும் 2017 இற்கான பயன்படுத்தப்படாத விடுமுறைகளின் பணமாக்குதல் போன்ற அனுகூலங்கள் காரணமாக நவம்பர் 2017 இல் அதிகரித்திருந்தது.