தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2016 யூலையின் 50.6 இலிருந்து ஓகத்தில் 53.5 இற்கு அதிகரித்தது. இது 2.9 சுட்டெண் புள்ளிகள் கொண்டதொரு அதிகரிப்பாகும். ஓகத்தில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு புதிய கடட்ளைகள், தொழில்நிலை மற்றும் உற்பத்திச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட மேம்பாடுகளே தூண்டுதலாக அமைந்தன. தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் மாற்றமடையாது காணப்பட்ட கொள்வனவுகளின் இருப்பு தவிர, அனைத்துத் துணைச் சுட்டெண்களும் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்தன. குறிப்பாக, புதிய கடட்ளைகள், தொழில்நிலை மற்றும் நிரம்பலர் வழங்கல் நேர சுட்டெண்கள் யூலையில் அவதானிக்கப்பட்ட சுருக்கத்திலிருந்தும் மீட்சியடைந்தன. ஒட்டுமொத்த தரவுப் புள்ளிகள் விரிவாக்கமொன்றினைக் கொண்டிருந்தவிடத்து மற்றைய அனைத்துச் சுட்டெண்களும் சமநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலே காணப்பட்டன. நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புக்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு முன்னேற்றமொன்றினை எடுத்துக்காட்டின.
பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2016 யூலையின் 57.8 இலிருந்து ஓகத்தில் 61.2 இற்கு அதிகரித்தது. கடந்த ஆண்டின் பெறுமதியிலும் பார்க்க கொள்வனவாளர் முகாமைத:துவச் சுட்டெண்ணில் ஏற்பட்ட அதிகரிப்பானது, பணிகள் துறையின் பொருளாதார நடவடிக்கைகள் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2016 ஓகத்தில் உயர்ந்த வீதத்தில் உயர்வடைந்தமையினை எடுத்துக்காட்டியது. பணிகள் கொள்வனவு முகாதை;துவச் சுட்டெண்ணில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு புதிய வியாபாரங்கள், வியாபார நடவடிக்கை, தொழில்நிலை மற்றும் நடவடிக்கை துணைச் சுட்டெண்களுக்கான எதிர்பார்ப்புக்கள் என்பனவற்றில் ஏற்பட்ட அதிகரிப்புக்கள் பக்கபலமாக விளங்கின. நிலுவையிலுள்ள பணிகள் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ஓகத்தில் வீழ்ச்சியடைந்தன. நிலுவையிலுள்ள பணிகளில் வீழ்ச்சி காணப்பட்டமைக்கிடையிலும் புதிய வியாபாரங்கள் மற்றும் வியாபார நடவடிக்கைகளில் ஏற்பட்ட உயர்வு பணிகள் துறைக்குள் ஏற்பட்டு வரும் வினைத்திறன் மட்டங்களின் அதிகரிப்பினையும் நடவடிக்கைகளுக்கான உயர்த்தப்பட்ட எதிர்பார்ப்பிற்கான இயலாற்றலின் சுயாதீனமான தன்மையினையும் எடுத்துக்காட்டின. கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் தொகுப்புச் செயன்முறையில் பரிசீலனைக்கு எடுக்கப்படாத விலைகள் கட்டண சுட்டெண் 2016 மேயில் காணப்பட்ட அதன் உச்சிமட்டங்களிலிருந்து தொடர்ந்து இரண்டு தடவைகள் வீழ்ச்சியடைந்ததன் பின்னர் 2016 ஓகத்தில் அதிகரித்தது.