'இலங்கையில் வியாபாரத்தினை மேற்கொள்வதற்கான படிப்படியானதொரு வழிகாட்டல்" நூலின் ஆறாவது பதிப்பு இலங்கை மத்திய வங்கியினால் தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கிறது. இவ்வெளியீடானது, இலங்கையில் வியாபாரத் தொழில்முயற்சிகளைத் தொடங்குதல், தொழிற்படுத்தல் மற்றும் மூடிவிடுதல் தொடர்பில் பயன்மிக்க ஒழுங்குமுறைப்படுத்தல் தகவல்களைக் கொண்டிருக்கின்றது. தொடர்பான நிறுவனங்களினால் முன்மொழியப்பட்டவாறு, 2016இன் முதற்காலாண்டு வரை மேற்கொள்ளப்பட்ட அவசியமான திருத்தங்கள் இவ்வெளியீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இது, வியாபார சமுகத்தினருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் ஒரே இடத்தில் அனைத்துத் தகவல்களையும் கொண்ட பயன்மிக்க ஆவணக் கருவூலமாக விளங்குவதுடன் தேடல் செலவுகள், நேரம் மற்றும் அத்தகைய தகவலக் ளைப் பெற்றுக்கொள்வதிலுள்ள வசதியீனங்கள் என்பனவற்றைக் குறைப்பதன் மூலம் உதவிபுரிகிறது.
இவ்வெளியீடானது 'வியாபாரங்களைத் தொடங்குதல்", 'வியாபாரத்தின் போது" மற்றும் 'ஏனைய நடவடிக்கைகள்" ஆகிய மூன்று முக்கிய துறைகளின் கீழ் தொகுதிப்படுத்தப்பட்ட தகவல்களையும் 29 முக்கிய வியாபார நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களையும் தருகின்றது. ஒவ்வொரு தகவலின் கீழும் தொடர்பான நிறுவனங்கள், ஆவணத் தேவைப்பாடுகள், ஒழுங்குமுறைப்படுத்தல் இசைவுச் சான்றிதழ்கள், இணைந்த செலவுகள் மற்றும் தொடர்பான நிறுவனங்களிலுள்ள மூத்த அலுவலர்களை தொடர்பு கொள்வதற்கான விபரங்கள் மற்றும் தேவையானவிடத்து மேலதிகத் தெளிவுபடுத்தல்களைப் பெற்றுக்கொள்வதற்கு பயன்படுத்துபவர்களுக்கு உதவும் விதத்தில் வெப்தளமுகவரிகள் என்பனவற்றைக் கொண்ட அனைத்தையுமுள்ளடக்கிய தகவல்கள் தரப்பட்டுள்ளன.
இலங்கை மத்திய வங்கி, இலங்கையின் சமூக பொருளாதார தரவுகள் 2016 என்ற அதன் அண்மைய தரவு ஏட்டினைத் தற்பொழுது வெளியிட்டிருக்கின்றது. இத்தொடரில் இது 39 ஆவது தொகுதியாகும். இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய இத்தொகுதி நாட்டின் தோற்றப்பாடு; முக்கிய பொருளாதாரக் குறிகாட்டிகள்; நாட்டின் ஒப்பீடுகள்; இலங்கையின் சமூக பொருளாதார நிலைமைகள், மனித வளங்கள், தேசிய கணக்குகள், வேளாண்மை, கைத்தொழில், பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு, விலைகளும் கூலிகளும், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் சுற்றுலா, வெளிநாட்டு நிதி, அரச நிதி மற்றும் பணம் வங்கித்தொழில் மற்றும் நிதி தொடர்பான தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இத் தரவு ஏடானது தற்போது ஈடுபாடுமிக்க விடயங்களான பரந்தளவில் சமூக பொருளாதார தரவில் அநேகமானவற்றை சுருக்கமான முறையில் தருகின்றமையின் காரணமாக, இது கொள்கை வகுப்போர், ஆராய்ச்சியாளர்கள், கல்விமான்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவிருக்கும்.
'இலங்கையில் வியாபாரத்தினை மேற்கொள்வதற்கான படிப்படியானதொரு வழிகாட்டல்" வெளியீட்டின் பிரதியொன்றின் விலை ரூ.500 ஆகும். 'இலங்கையின் சமூக – பொருளாதாரத் தரவுகள் - 2016" வெளியீட்டின் ஆங்கிலப் பிரதியொன்று ரூ.100 ஆகவும், சிங்களம;/ தமிழ் பிரதியொன்று ரூ.40 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வெளியீடுகள் சென்றல் பொயின்ற் கட்டடத்தில் (சதாம் வீதி, கொழும்பு 01) அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியின் விற்பனை மற்றும் விநியோகப்பீடங்களிலும் வங்கித்தொழில் கற்கைகள் நிலையத்திலும் (58, சிறி ஜயவர்த்தனபுர மாவத்தை, இராஜகிரிய) மாத்தறை, மாத்தளை, நுவரெலியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் அநுராதபுரத்திலுள்ள மத்திய வங்கியின் மாகாண அலுவலகங்களிலும் முன்னணிப் புத்தகக் கடைகளிலும் கிடைக்கும். இவற்றிற்குப் புறம்பாக இவ்வெளியீடுகள் 2016 செத்தெம்பர் 16 இலிருந்து 25ஆம் திகதி வரை கொழும்பு பன்னாட்டு புத்தகக் கண்காட்சியிலுள்ள இலங்கை மத்திய வங்கியின் நூல் விற்பனைப்பீடத்திலும் கிடைக்கத்தக்கதாகவுள்ளது. பதிவிறக்கம் செய்து கொள்வதற்காக இலத்திரனியல் பதிப்புக்கள் இலங்கை மத்திய வங்கியின் வெப்தளமான www.cbsl.gov.lk இல் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.