2016 செத்தெம்பரில் பணவீக்கம்

தொகைமதிப்பு புள்ளிவிபரத்திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 ஓகத்தில் 4.5 சதவீதத்திலிருந்து 2016 செத்தெம்பரில் 4.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2016 செத்தெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்குப் பங்களித்துள்ளன. 

ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றின் மீது அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2016 ஓகத்தில் 3.6 சதவீதத்திலிருந்து 2016 செத்தெம்பரில் 3.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. 

மாதாந்த மாற்றத்தினைக் கருத்திற் கொள்கையில், தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் 2016 ஓகத்தில் 113.3 சுட்டெண் புள்ளியிலிருந்து 2016 செத்தெம்பரில் 113.5 சுட்டெண் புள்ளிக்கு அதிகரித்தது. இம்மாதாந்த அதிகரிப்பிற்கு வெறியம்சார் குடிவகைகள் மற்றும் புகையிலை வகையிலுள்ள விடயங்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். உணவு வகையில், இம்மாத காலப்பகுதியில் பழவர்க்கங்கள், பெரிய வெங்காயம், அரிசி மற்றும் தேங்காய் என்பனவற்றின் விலைகள் அதிகரித்தன. 2016 செத்தெம்பர் காலப்பகுதியில் புடவைகள் மற்றும் காலணிகள்; தளபாடங்கள், வீட்டு உபயோகச் சாதனங்கள், மற்றும் வழமையான வீட்டு அலகுகளின் பேணல்; கல்வி; உணவகங்கள் மற்றும் சுற்றுலாவிடுதிகள் மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணைத் துறை என்பனவற்றின் விலைகளும் அதிகரித்தன. அதேவேளை, வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள்; நலன்; போக்குவரத்து தொடர்பூட்டல் மற்றும் பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார துணைத் துறைகளின் விலைகள் இம்மாத காலப்பகுதியில் மாற்றமின்றிக் காணப்பட்டன. 

பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2016 செத்தெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 ஓகத்தில் 6.0  சதவீதத்திலிருந்து 2016 செத்தெம்பரில் 5.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. ஆண்டுச்சராசரி தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2016 ஓகத்தில் 5.6 சதவீதத்திலிருந்து 2016 செத்தெம்பரில் 5.7 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது.

முழுவடிவம்

Published Date: 

Friday, October 21, 2016