பிரதேச அலுவலகம் - நுவரெலியா

இலங்கை மத்திய வங்கி பிராந்திய அலுவலகம் நுவரெலியா 17/08/2021 அன்று சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளருக்கான ‘இலத்திரணியல் சந்தைப்படுத்தல் ஆலோசனைகள்’ என்ற வலையரங்கத்தை (webinar) நடாத்தியது.

இந்த வலையரங்கின் நோக்கம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோருக்கு இலத்திரணியல் சந்தைப்படுத்தல் பற்றிய அறிவை வழங்கி அதன் மூலம் பாரம்பரிய முறைகளை விட மேம்பட்ட முறைகளின் மூலம் வாடிக்கையாளர்களை வெற்றிகரமாக கவர்தல், ஈர்த்துக் கொள்ளல் மற்றும் தொடர்புகளை வாடிக்கையாளராக மாற்றிக்கொள்ளல் பற்றிய அறிவை வழங்குதல் ஆகும்.

இவ் வலையரங்கமானது முகநூல் (Facebook) மற்றும் ஜூம் (Zoom) இயங்குதளம் மூலமாக வெற்றிகரமாக நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியின் வளவாளராக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. ஏச். எம். அமிந்த லக்மால் அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த வலையரங்கின்(Webinar) பதிவுசெய்யப்பட்ட இணைப்பு: https://fb.watch/7_wAt80ZpT/

இலங்கை மத்திய வங்கி பிராந்திய அலுவலகம் நுவரெலியா 17/08/2021 அன்று ‘சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளருக்கான கொவிட்-19 (Covid-19) பேரிடரின் போதும் அதற்கு அப்பாலுமான செயலாற்றக்கூடிய ஆலோசனைகள்’ குறித்த வலையரங்கத்தை (webinar) நடாத்தியது.

இந்த வலையரங்கின் நோக்கம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர், கொவிட்-19 பேரிடரின் போது எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக உரையாடும் தளத்தினை வழங்குவதும் மற்றும் புதிய உத்திகளை பயன்படுத்தி இச் சவால்களை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்குவதுமாகும்.

இவ் வலையரங்கமானது முகநூல் (Facebook) மற்றும் ஜூம் (Zoom) இயங்குதளம் மூலமாக வெற்றிகரமாக நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியின் வளவாளராக சனச அபிவிருத்தி வங்கி (SDB) மத்திய மாகாணத்தின் தலைமை முகாமையாளர் திரு. பி.டபில்யு.எஸ்.பிரேமரத்ன அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த வலையரங்கின்(Webinar) பதிவுசெய்யப்பட்ட இணைப்பு: https://www.youtube.com/watch?v=DChNVjafmqA&t=238s

இலங்கை மத்திய வங்கி பிரதேச அலுவலகம் நுவரெலியா 2021 ஒக்டோபர் 7 அன்று "நிதியியல் வாடிக்கையாளா்கள் பாதுகாப்புக் கட்டமைப்பு" என்ற வலையரங்கத்தை உரிமம் பெற்ற வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் ஊழியர்களை இலக்காகக் கொண்டு நடாத்தியது. இந்த வலையரங்கத்தின் நோக்கமானது நிதியியல் வாடிக்கையாளா்களின் பாதுகாப்புக் கட்டமைப்பு மற்றும் அதை நிறைவேற்றுவதற்கு நிதியியல் நிறுவனங்களின் பொறுப்புகள் பற்றிய புரிதலை வழங்குவதாகும். இவ் வலையரங்கமானது ஜூம் (Zoom) இயங்குதளம் மூலமாக வெற்றிகரமாக நடைபெற்றது. மேலும் இவ் நிகழ்ச்சியின் வளவாளர்களாக இலங்கை மத்திய வங்கியினுடைய வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் மேற்பார்வைத் திணைக்களத்தின் சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர் திருமதி. எஸ் டி ஜெயநெட்டி மற்றும் உதவிப் பணிப்பாளர் திருமதி. எஸ் பி என் டி சேனாதீரா அவர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை மத்திய வங்கி பிரதேச அலுவலகம் நுவரெலியா 2021 ஒக்டோபர் 01 அன்று "நிதியியல் வாடிக்கையாளா்கள் மற்றும் நுகர்வோர் புகார் முகாமைத்துவம்" என்ற வலையரங்கத்தை நடாத்தியது. இந்த வலையரங்கத்தின் நோக்கமானது நிதியியல் வாடிக்கையாளா்களின் பாதுகாப்புக் கட்டமைப்பு மற்றும் நிதியியல் வாடிக்கையாளா்களின் கடமைகளை புரிந்துகொள்வதாகும். இவ் வலையரங்கமானது ஜூம் (Zoom) இயங்குதளம் மூலமாக வெற்றிகரமாக நடைபெற்றது. மேலும் இவ் நிகழ்ச்சியின் வளவாளராக இலங்கை மத்திய வங்கியினுடைய நிதியியல் வாடிக்கையாளா் தொடா்புகள் திணைக்களத்தின் சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர் திரு. யங்கா ரணவீர அவர்கள் கலந்து கொண்டார்.

Pages