2016ஆம் ஆண்டிற்கான மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி, தொகைமதிப்புப் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் மூலம் தொகுக்கப்பட்ட பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியினை பிரிப்பதன் மூலம் இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் கணிக்கப்பட்டிருக்கிறது. மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டில், மொ.உ. உற்பத்தியிலுள்ள ஒவn; வாரு தொகுதி விடயத்தினதும் பெறுமதியானது மாகாண மட்டத்தில் தொடர்பான குறிகாடடி;களைப் பயன்படுத்தி பிரிக்கப்பட்டுள்ளது.
2016இற்கான பெயரளவு நியதிகளில் தேசிய உள்நாட்டு உற்பத்தியானது 8.11 சதவீத வளர்ச்சியொன்றினையும் ரூ.558,363 (ஐ.அ.டொலர் 3,835) தலைக்குரிய வருமானத்தினையும் பதிவுசெய்து ரூ.11,839 பில்லியனாக இருந்துது. 2016இல் மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒட்டுமொத்த செயலாற்றமானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியினதும் பொருளாதாரச் செயற்பாடுகளின் அபிவிருத்திகளினதும் பொதுவான போக்கினை பின்பற்றுகின்றது. வேளாண்மை பிரதான பொருளாதாரச் செயற்பாடாகக் காணப்படுகின்ற மாகாணங்களில் வேளாண்மைச் செயற்பாடுகளின் தணிந்த செயலாற்றலானது மெதுவான வளர்ச்சிக்குப் பங்களித்தது. மொ.உ.உற்பத்தியின் 39.7 சதவீதத்தினை தன்னகத்தே கொண்டு ஒட்டுமொத்த பொருளாதார முன்னேற்றத்திற்கு மேல் மாகாணம் தொடர்ச்சியாக உந்துசக்தி அளித்தபோதிலும் பிராந்தியப் பொருளாதாரத் தளங்களின் விரிவாக்கத்துடன் ஏனைய மாகாணங்களிலிருந்தான பங்களிப்புக்களும் படிப்படியாக அதிகரிக்கின்றன.