2017 செத்தெம்பரில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2017 செத்தெம்பரில் 8.6 சதவீதத்திற்கு 2017 ஓகத்தின் 7.9 சதவீதத்திலிருந ;து அதிகரித்தது. 2017 செத்தெம்பரின் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கத்துக்கு உணவு மற்றும் உணவல்லா வகை இரண்டும் முக்கியமாக பங்களித்தன.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றம் 2017 ஓகத்தின் 6.5 சதவீதத்திலிருந்து 2017 செத்தெம்பரின் 6.8 சதவீதத்துக்கு அதிகரித்தது.  

மாதாந்த மாற்றத்தினை நோக்கும் போது, 2017 செத்தெம்பரில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணானது 2017 ஓகத்தின் 122.3 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 123.3 சுட்டெண் புள்ளிகளுக்கு அதிகரித்தது. இம்மாதாந்த அதிகரிப்புக்கு உணவு வகையிலுள்ள பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். இம்மாத காலத்தில் உணவு வகையிலுள்ள தேங்காய், சின்ன வெங்காயம், அரிசி, தேசிக்காய், சில பழங்கள், பெரிய வெங்காயம் மற்றும் சீனி என்பனவற்றின் விலைகள் அதிகரித்தன. இதேவேளை, காய்கறிகள், உடன்மீன், வெள்ளைப்பூடு மற்றும் மைசூர் பருப்பு என்பனவற்றின் விலைகள் இம்மாத காலத்தில் சிறிதளவிலான வீழ்ச்சியைப் பதிவுசெய்தன. ஆடை மற்றும் காலணி; வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு மற்றும் எரிபொருள் (திரவப் பெற்றோலிய வாயு) தளபாடங்கள், வீட்டலகுச் சாதனங்கள், வழமையான வீட்டுப்பேணல்; கல்வி; பாடசாலைக் கட்டணங்கள் (பன்னாடு): மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணைத் துறைகளில் விலைகள் அதிகரித்தன. 2017 செத்தெம்பரில் தொடர்பூட்டல் (இணையக் கட்டணம்) துணைத் துறையில் விலைகள் சிறிதளவு வீழ்ச்சியடைந்தன. வெறியக் குடிவகைகள் மற்றும் புகையிலைத் (வெற்றிலை) துணை வகையின் விலைகளும் 2017 செத்தெம்பரில் அதிகரித்தன. இதேவேளை, நலன்; போக்குவரத்து; பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம்; மற்றும் சிற்றூண்டிச்சாலை மற்றும் சுற்றுலாவிடுதி போன்ற துணை வகைகளின் விலைகள் மாத காலப்பகுதியில் மாற்றமடையாமல் காணப்பட்டது.  

பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2017 ஓகத்தின் 4.8 சதவீதத்திலிருந்து 2017 செத்தெம்பரின் 4.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2017 செத்தெம்பரில் ஆண்டுச் சராசரி தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2017 ஓகத்தின் 5.8 சதவீதத்திலிருந்து 5.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

முழுவடிவம்

Published Date: 

Monday, October 23, 2017