இலங்கை மத்திய வங்கியின் 9ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாடு 2016 திசெம்பர் 2ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியின் ஜோன் எக்ஸ்ரர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இம்மாநாடானது, சமகால தொனிப்பொருட்களின் மீதான ஆராய்ச்சிகளைத் தூண்டுவதனை நோக்கமாகக் கொண்டிருந்த வேளையில் மத்திய வங்கித்தொழில் மற்றும் பேரணட் பொருளாதார முகாமைத்துவம் என்பன தொடர்பான விடயஙக் ள் மீது மத்திய வங்கியின் ஆராய்ச்சியாளர்கள் நாணய அதிகாரிகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய ஆராய்ச்சி நிறுவனங்கள் அவற்றின் அண்மைக்கால கோட்பாட்டு ரீதியான அம்சங்களையும் அனுபரீதியான ஆய்வுகளையும் சமர்ப்பிப்பதற்கு ஒரு அரங்கினை உருவாக்கும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது. 2008இல் இது ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இப்பன்னாட்டு ஆராய்ச்சி மாநாடானது உலகமெங்குமிருந்து புலமையாளர்களை வெகுவாக கவர்ந்திருப்பதுடன் இதில் ஏராளமான மத்திய வங்கியாளர்கள், கல்விமான்கள் மற்றும் கொள்கைவகுப்போர் முக்கிய உரைகளையும் ஆற்றியிருக்கின்றனர்.
இவ்வாண்டின் மாநாடானது 'சவால் நிறைந்த பூகோளத்திலும் உள்ளாட்டுச் சூழலிலும் நீடித்து நிலைத்திருக்கும் அபிவிருத்தி மற்றும் பேரண்டப் பொருளாதாரக் கொள்கைகள்" என்ற பரந்த தொனிப்பொருளொன்றின் கீழ் நடத்தப்பட்டது. இம்மாநாடானது புகழ் பூத்த கல்விமான்கள் அரச நிறுவனங்கள் கொள்கை வகுக்கும் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகிய எல்லோரையும் ஒருங்கே இணைத்திருக்கிறது
இந்திய குடியரசின் திட்டமிடல் குழுவின் முன்னாள் துணைத்தலைவரும் கடந்த ஒரு சில தசாப்தங்களாக இந்திய பொருளாதாரச் சீர்திருத்தச்செயன்முறையின் முக்கிய நபருமான முனைவர் மொன்டெக் சிங் அகுளுவாலியா மாநாட்டின் பிரதான உரையினை ஆற்றினார். அவரது பிரதான உரையில் முனைவர் அகுளுவாலியா நம்பகமான கொள்கை நடவடிக்கைகளினூடாக சந்தைகளை நடத்திச் செல்வதற்கான இயலாற்றலை மத்திய வங்கிகள் கொண்டிருப்பது மிகமுக்கியமானது என்பதனை எடுத்துக் காட்டினார். இதில் தரம் தொடர்பான ஆராய்ச்சிகள் மிக இன்றியமையாத வகிபாகமொன்றினை ஆற்றுகின்றன. மேலும், அவர் பொருத்தமான நாணயச் சாதனங்கள் மற்றும் இறைக்கருவிகள் என்பனவற்றின் ஊடாக பொருளாதாரத்தின் கூட்டுக் கேள்வியைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய வங்கியும் இறை அதிகாரிகளும் இணைந்து முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியதன் முக்கியத்துவத்தினை சுட்டிக்காட்டினார். எனவே, அவர் உறுதியான அரசியல் நிலைமையொன்றின் உதவியுடன் மத்திய வங்கி மற்றும் இறை அதிகாரிகளின் கூட்டு நன்மதிப்புடன் பொருளாதாரமொன்றின் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினைப் பேணுவதில் முக்கிய வகிபாகமொன்றினை ஆற்றியமையினை சுட்டிக்காட்டியிருக்கின்றார். அதேவேளை பேரண்டப் பொருளாதார மாதிரியினைப் பற்றிப் பேசிய முனைவர் அகுளுவாலியா, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலுள்ள நிறுவனரீதியான தடைகளின் பொருத்தமான மாதிரிப்படுத்தலும் சரியான மாதிரிகளை தெரிவுசெய்வதும் பேரண்டப் பொருளாதாரக் கொள்கை வகுப்பிற்கான மாதிரியினை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார மாதிரியினை வழங்குவதற்கு இன்றியமையாதது எனவும் குறிப்பிட்டார்.
மாநாட்டின் தொடக்க உரையினை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர். இந்திரஜித் குமாரசுவாமி ஆற்றினார். நீடித்து நிலைத்திருக்கும் அபிருத்தி மீதான அவரது உரையில், ஆளுநர் சமூக அபிவிருத்திக்கு செல்வத்தையும் கொள்கைப் பகுப்பாய்வுகளையும் உருவாக்குவது பக்கபலமாக விளங்கவேண்டுமெனவும் இதில் வளர்ச்சியின் தரம் முக்கியமானதொரு காரணியாகும் எனவும் குறிப்பிட்டார். மேலும், கல்வி, பயிற்சி மற்றும் தேர்ச்சி அபிவிருத்தி மூலம் மக்களுக்கு வலுவூட்டுதல், சமூக பாதுகாப்பு வலையமைப்பினை வழங்குதல், நீடித்துநிலைத்திருக்கக்கூடிய சூழல், பால்சமநிலை மற்றும் பிரதேச ஏற்றத்தாழ்வற்ற நிலை என்பனவற்றின் மூலம் முக்கியமாக அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பது நீடித்திருக்கும் வலுவான அபிவிருத்திக்கு இன்றியமையாததாகும். மேலும், ஆளுநர் சவால் நிறைந்த உலகளாவிய பொருளாதார தோற்றப்பாடொன்றின் பின்னணியில் இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு முன்மதியுடைய பேரண்டப் பொருளாதார முகாமைத்துவம் உயர்மதிப்பொன்றுடன் இணைந்திருப்பதன் அவசியம் பற்றி வலிறுத்தினார். இதன்கீழ், பேரண்ட பொருளாதாரக் கொள்கைவகுப்பிற்காக அபிவிருத்திவரும் தெளிவானதும் உறுதியானதுமான கட்டமைப்பு தவிர்க்க முடியாததாகக் காணப்படுகின்றது. அத்தகைய கடட் மைப்பு ஊகிக்கும்தன்மையினையும் கொள்கை வகுப்போரினது நடவடிக்கைகளின் நிச்சயத் தன்மையினையும் அதிகரிக்கின்ற வேளையில் வெளிப்புற வானிலை அதிர்வுகளுக்கு ஈடுகொடுக்கும் வசதியையும் உருவாக்குகிறது.
ஐக்கிய அமெரிக்காவின் சென்தோமஸ் பல்கலைக்கழகத்தின் நிதித்துறைப் பேராசிரியர் லலித் சமரகூன் அழைப்பின் பேரில் 'இலங்கை நிதியியல் சந்தைகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்ட அறிக்கை" மீது உரையொன்றினை ஆற்றினார். பேராசிரியர் சமரகூன் மூலதனச் சந்தை அபிவிருத்தி திட்டமிடலில் உள்ளடக்கப்பட வேண்டிய முக்கிய கூறுகள் பற்றிக்குறிப்பிட்டதுடன் பொருளாதார அபிவிருத்திக்கொள்கை மற்றும் பொறிமுறை, நிதியியல் துறை அபிவிருத்திக் கொள்கை மற்றும் மூலதனச்சந்தை அபிவிருத்திக்கான தேசிய கடட்மைப்பில் தவிர்க்க முடியாததாக இருக்கும் உயர்மட்ட கடப்பாடு பற்றியும் குறிப்பிட்டார்.
மாநாட்டின் தொழிநுட்பக்கூட்டத் தொடர்களில் பிரான்சு, சேர்மனி, இந்தியா போன்ற நாடுகளை பிரசன்னப்படுத்தி பல்வேறு நிறுவனங்களையும் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களினதும் அதேபோன்று இலங்கை மத்திய வங்கியின் ஆராய்ச்சியாளர்களினதும் நாணயக்கொள்கை, பேரண்டப் பொருளாதார விடயங்கள் மற்றும் நிதியியல் துறை விடயஙக் ள் மீது சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளில் 8 கட்டுரைகள் மிகக்கவனமான ஆய்வுகளினூடாக தெரிவுசெய்யப்பட்டன. ஆராய்ச்சியின் மிகச்சிறந்த நோக்கத்தினை அங்கீகரிக்கும் விதத்தில் மிகச்சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கான முனைவர் டி.எஸ். விஜேசிங்க ஞாபகார்த்த விருது இலங்கை மத்திய வங்கியினைச் சேர்ந்த முனைவர் (திருமதி) சுஜீத்தா ஜெகஜீவனினால் சமர்ப்பிக்கப்பட்ட 'மதிப்பிடப்பட்ட மாறும் சீரற்ற பொதுச்சமநிலை மாதிரியினூடாக இலங்கையின் வியாபார சுழற்சிவட்டத்தினை விளங்கிக் கொள்ளுதல்" என்ற தலைப்பிலான ஆராய்ச்சிக் கட்டுரைக்கு வழங்கப்பட்டது.
இலங்கை மத்திய வங்கி அதன் அடுத்த பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டினை 2017இன் பிற்பகுதியில் நடத்த எண்ணியுள்ளது.