கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை (கொநுவிசு, 2021ஸ்ரீ100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2026 செத்தெம்பரின் 8.0 சதவீதத்திலிருந்து 2026 ஒத்தோபரில் 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்காண்டு) 2026 செத்தெம்பரின் 8.7 சதவீதத்திலிருந்து 2026 ஒத்தோபரில் 8.8 சதவீதமாக அதிகரித்ததுடன் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்காண்டு) அதே காலப்பகுதியின் 7.7 சதவீதத்திலிருந்து 8.0 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மாதத்திற்கு மாதம் அடிப்படையில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 2026 ஒத்தோபரில் 0.35 சதவீதத்தினால் அதிகரித்தது. இவ்வதிகரிப்பானது பெருமளவில் உணவகம் மற்றும் விடுதிகள் வகையின் விலைகளில் அதிகரிப்புக்கள் காரணமாக 0.33 சதவீதப் புள்ளி பங்களித்த உணவல்லா வகை மற்றும் 0.02 சதவீதப் புள்ளிகளால் சிறிதளவு பங்களித்த உணவு வகை மூலம் பிரதானமாக தூண்டப்பட்டிருந்தது.
அதேவேளை, மையப் பணவீக்கமானது (ஆண்டிற்காண்டு) 2026 செத்தெம்பரின் 5.4 சதவீதத்திலிருந்து 2026 ஒத்தோபரில் 5.6 சதவீதமாக சிறிதளவு உயர்வடைந்தது.
2026 செத்தெம்பரில் நாணயக் கொள்கைச் சுற்றில் ஆக்கப்பட்ட பணவீக்க எறிவுகளுக்கமைய முதன்மைப் பணவீக்கமானது 2027 முதல் காலாண்டின் பின்னர் 5 சதவீத இலக்கை நோக்கி தளர்வடைவதற்கு முன்னர் அக்காலாண்டு முழுவதும் உயர்வான ஒற்றை இலக்கத்தில் காணப்படுமென எறிவுசெய்யப்பட்டுள்ளது. பொருத்தமான கொள்கை வழிமுறைகளினால் துணையளிக்கப்பட்டு பணவீக்கம் நடுத்தரகாலத்தில் இலக்கை அண்மித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய கிழக்கின் பதற்றங்களின் தாக்கம் மற்றும் அவற்றின் கசிவுத்தாக்கங்கள் என்பன படிப்படியாக மறைந்துபோகும் என்ற எதிர்பார்க்கையின் மீது இவ்வெறிவுகள் நிபந்தனைக்குட்பட்டவையாகும்.








