இலங்கை மத்திய வங்கி அதன் 76 ஆவது ஆண்டுநிறைவுச் சொற்பொழிவு புகழ்பெற்ற தொழில்சார் நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நிதியியல் துறை பிரதிநிதிகள் போன்றோரின் பங்கேற்புடன் 2026 ஒத்தோபர் 23 அன்று மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
“செயற்கை நுண்ணறிவைக் கொண்ட யுகத்தில் நம்பிக்கையை உருவாக்குதல்: புத்திசாதுரியமிக்க மத்திய வங்கி” என்ற கருப்பொருளின் கீழ் பன்னாட்டு நாணய நிதியத்தின் தகவல் தொழில்நுட்ப திணைக்களத்தின் முதன்மைத் தகவல் அலுவலரும் பணிப்பாளருமான திருமதி. ஷிாின் ஹமீட் இச்சொற்பொழிவை நிகழ்த்தினார்.
மத்திய வங்கித் தொழிலில் செயற்கை நுண்ணறிவின் நிலைமாற்று சாத்தியப்பாட்டினை இச்சொற்பொழிவு ஆராய்ந்து, கவனமிக்க முகாமைத்துவத்தை வேண்டுகின்ற இடர்நேர்வுகளுடன் ஒன்றிணைத்து மத்திய வங்கிகளின் பொறுப்பாணைகளின் நிறைவேற்றத்தை மேம்படுத்துவதற்கு அது வழங்குகின்ற வாய்ப்புக்களை எடுத்துக்காட்டியது. செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படும் தீர்வுகளை மத்திய வங்கிகள் அதிகரித்தளவில் அவற்றின் தொழிற்பாடுகளுக்குள்ளும் தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறைகளுக்குள்ளும் ஒருங்கிணைப்பதனால் பொதுமக்கள் நம்பிக்கையினைக் கட்டியெழுப்பி நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தினை இது அடிக்கோடிட்டுக் காட்டியது.
செயற்கை நுண்ணறிவை பொறுப்புமிக்கவிதத்தில் பின்பற்றுதலானது விளக்கத்தக்க, பாதுகாப்பான, நெறிமுறைசார்ந்த அத்துடன் ஆற்றல்வாய்ந்த ஆளுகைக் கட்டமைப்புக்களினால் துணையளிக்கப்பட்ட முறைமைகளை வேண்டிநிற்கின்றது என்பதனை திருமதி. ஹமீட் வலியுறுத்தினார். செயற்கை நுண்ணறிவானது நிறுவனசார் பொறுப்புக்கூறலை அதிகரிகின்றது, தீர்மானம் மேற்கொள்ளுதலை வலுப்படுத்துகின்றது, தொழிற்பாடு சார்ந்த செயல்திறனை மேம்படுத்துகின்றது என்பதனை உறுதிசெய்வதற்கு செயல்திறன்மிக்க மானிட மேற்பார்வையின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துக்காட்டினார்.
மத்திய வங்கித் தொழிற்பாடுகளின் நிறுவனசார் நம்பகத்தன்மை, பொதுமக்கள் நம்பிக்கை மற்றும் செயல்திறன்வாய்ந்த தன்மை என்பவற்றுக்கான அதன் உள்ளார்ந்தங்கள் மீது குறிப்பான வலியுறுத்தலுடன் மத்திய வங்கித் தொழிலில் பரிணாமவளர்ச்சியடைகின்ற செயற்கை நுண்ணறிவின் வகிபாகம் மீதான கலந்துரையாடலுக்கும் அறிவினைப் பகிர்ந்துகொள்வதற்கும் பொறுமதிமிக்க தளமொன்றினை இந்நிகழ்வு அமைத்துக்கொடுத்தது.
அதன் 76 ஆவது ஆண்டுநிறைவுச் சொற்பொழிவு ஊடாக இலங்கை மத்திய வங்கி நிறுவனசார் தாக்குப்பிடிக்கும்தன்மையை வலுப்படுத்தி, பொதுமக்கள் நம்பிக்கையைப் பேணிக்காத்து, மத்திய வங்கித்தொழிலின் எதிர்காலத்திற்காக தயாராகும் நோக்குடன் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் பொறுப்புமிக்க பின்பற்றுதல்கள் மீது தகவலறிந்த கலந்துரையாடல்களைப் பேணிவளர்ப்பதற்கான அதன் கடமைப்பொறுப்பினை மீள உறுதிசெய்துள்ளது.








