வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - ஓகத்து 2017

இலங்கையின் வெளிநாட்டுத் துறை 2017 ஓகத்தில் கலப்பான செயலாற்றமொன்றினைக் காட்டியது. 2017 ஓகத்தில் ஏற்றுமதி வருவாய்கள் அதிகரித்த போதும் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட உயர்ந்த வளர்ச்சி வர்த்தகப் பற்றாக்குறையில் விரிவாக்கமொன்றைத் தோற்றுவித்தது. 2017 ஓகத்தில் சுற்றுலா வருவாய்கள் அதிகரித்தபோதும் விரிவடைந்த வர்த்தகப் பற்றாக்குறையுடன் சேர்ந்து தொழிலாளர் பணவனுப்பல்கள் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக வெளிநாட்டு நாணயக் கணக்கின் செயலாற்றம் தளர்வுற்றுக் காணப்பட்டது. எனினும், சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கிற்கு அரசாங்கத்திற்கான வெளிநாடடு; நாணய காலநிதியிடல் வசதியின் இரண்டாவது தொகுதி பெறப்பட்டமை, கொழும்பு பங்குப் பரிவர்த்தனை மற்றும் அரச பிணையங்கள் சந்தை என்பனவற்றிறகு; 2017இல் ஏற்பட்ட தொடர்ச்சியான வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் என்பனவற்றின் பெறுகைகள் மூலம் ஆதரவளிக்கப்பட்டது.

முழுவடிவம்

Published Date: 

Tuesday, October 17, 2017