கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2026 செத்தெம்பரில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் ஆகிய இரண்டிலும் விரிவடைதல்களினை எடுத்துகாட்டுகின்றன.
தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு) 2026 செத்தெம்பரில் 53.0 சுட்டெண் பெறுமதியொன்றினைப் பதிவுசெய்து. முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி காணப்படுகின்றது. தயாரிப்பு நடவடிக்கைகள் மாதகாலப்பகுதியில் அதையொத்த வேகத்தில் தொடர்ந்தும் விரிவடையுமென இது எடுத்துக்காட்டுகின்றது.
புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி என்பவற்றின் விரிவாக்கத்திற்கு உணவு மற்றும் குடிபானங்கள், புடவைகள் மற்றும் அணியும் ஆடைத் தயாரிப்பு துறைகள் ஆகிய இரண்டிலும் சாதகமான அபிவிருத்திகள் பாரியளவில் காரணமாக அமைந்தன. அதேவேளை, தொழில்நிலை, செத்தெம்பரில் மெதுவான வேகத்திலேனும் தொடர்ந்தும் விரிவடைந்தது. எனினும், கொள்வனவுகளின் இருப்பு நடுநிலையான எல்லையை நோக்கி மிதமடைந்து, மாதகாலப்பகுதியில் இருப்பு மட்டங்களில் பரந்தளவில் மாற்றமின்றி இருந்ததை எடுத்துக்காட்டுகின்றது. மேலும், மாதகாலப்பகுதியில் நிரம்பலர் விநியோக நேரம் நீட்சியடைந்து காணப்பட்டது.
ஆண்டின் இறுதிப் பருவகாலக் கேள்வியின் சாதகமான எண்ணப்பாங்கினால் பாரியளவில் தூண்டப்பட்டு, அடுத்த மூன்று மாதங்களாக தயாரிப்பு நடவடிக்கைகளுக்கான தோற்றப்பாடானது சாதகமாகத் தொடர்ந்தும் காணப்படுகின்றது.
பணிகளுக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – பணிகள்), 2026 செத்தெம்பரில் 60.5 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் பணிகள் நடவடிக்கைகளில் மெதுவான வீதமொன்றில் விரிவாக்கமொன்றினை எடுத்துக்காட்டியது.
வியாபார நடவடிக்கை 2026 செத்தெம்பரில் அதிகரித்து, கல்வி மற்றும் தொழில்சார் பணிகளிலிருந்தான குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களுடன் நிதியியல் பணிகளினால் முன்னிலைப்படுத்தப்பட்டு, பல்வேறு துணைத் துறைகளிடையே முன்னேற்றங்களைப் பிரதிபலித்தது.
காப்புறுதி, கல்வி, தொழில்சார் மற்றும் ஏனைய தனிப்பட்ட பணிகள் துணைத் துறைகள் போன்றவற்றிலிருந்தான சாதகமானப் பங்களிப்புக்களுடன் நிதியியல் பணிகளின் விரிவாக்கத்தினால் முதன்மையாக தூண்டப்பட்டு, புதிய வியாபாரங்கள் 2026 செத்தெம்பரில் அதிகரித்தன. அதேவேளை, நிலுவையிலுள்ள பணிகள் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் மெதுவான வேகத்திலேனும் வீழ்ச்சியடைந்தன.
பல்வேறு துறைகளிடையே நிறுவனங்கள் தொழிற்பாட்டு தேவைகளை நிறைவேற்றுவதற்கும் வியாபார விரிவாக்கத்திற்கு ஆதரவளிப்பதற்கும் ஆட்சேர்ப்பினை அதிகரித்தமையினால் தொழில்நிலை 2026 செத்தெம்பரில் அதிகரித்தது.
சாதகமான பேரண்டப்பொருளாதார நிலைமைகள் மற்றும் அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் மற்றும் வரவிருக்கும் பண்டிகை பருவகாலம் என்பவற்றினால் ஆதரவளிக்கப்பட்டு, அடுத்த மூன்று மாதங்களில் வியாபார நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் தொடர்ந்தும் மேம்பட்டன. இருப்பினும், பரந்தளவிலான உலகளாவிய பொருளாதார நிச்சயமற்றதன்மைகள் தோற்றப்பாட்டிற்கு இடர்நேர்வுகளினைத் தொடர்ந்தும் தோற்றுவித்தன.








