தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் செத்தெம்பர் மாதத்தில் 59.0 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 ஒகத்து மாதத்துடன் ஒப்பிடும்போது 4.6 சுட்டெண் புள்ளிகளாலான ஒரு அதிகரிப்பாகும். இது தயாரிப்பு நடவடிக்கைகளானது ஒகத்து 2017 உடன் ஓப்பிடும் போது செத்தெம்பர் 2017 இல் உயர்வான வீதத்தில் தொடர்ச்சியான அதிகரிப்பை குறித்துக்காட்டுகின்றது. இவ் அதிகரிப்பானது, முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட குறைவிலிருந்து மீட்சியடைந்து புதிய தொழிலாளர்களின் ஆட்சேர்ப்பினால் தொழில்நிலை துணைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட அதிகரிப்பினால் பிரதானமாக உந்தப்பட்டது. உற்பத்தி மற்றும் புதிய கடட்ளைகள் துணைச்சுட்டெண்களும் செத்தெம்பரில் உயர்வான வீதத்தில் விரிவடைந்து காணப்பட்டன. கொள்வனவு இருப்புகளின் துணைச் சுட்டெண் முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட மேலதிக இருப்புகளின் நிலைமை காரணமாக மெதுவான வேகத்தில் அதிகரித்து காணப்பட்டது. நிரமப்லர் வழங்கல் நேரம்முன்னைய மாதத்துடன் ஒப்பிடும் போது மெதுவான வீதத்தில் நீட்சியடைந்து காணப்பட்டது. ஒட்டுமொத்தமாக, கொ.மு.சுட்டெண்ணின் அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலான பெறுமானங்களை செத்தெம்பா் மாதத்தில் பதிவு செய்து ஒரு ஒட்டுமொத்த விரிவாக்கத்தினை காட்டியது. இதற்குமேலாக, நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கான மேம்பாடொன்றினை குறித்துக்காட்டியது.
பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2017 ஒகத்து 60.1 சுட்டெண் புள்ளியிலிருந்து செத்தெம்பர் மாதத்தில் 57.0 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்தது. இது பணிகள் துறையானது ஒகத்து 2017உடன் ஓப்பிடும் போது செத்தெம்பர் 2017இல் மெதுவான வீதத்தில் தொடர்ச்சியான அதிகரிப்பை குறித்துக்காட்டுகின்றது. தொழில்நிலை மற்றும் நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புகள் துணைச்சுட்டெண்கள் 2017 ஒகத்துடன் ஒப்பிடும் போது செத்தெம்பரில் சிறிதளவில் அதிகரித்திருந்தது. வியாபார நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்து இருந்த போதிலும் நடுநிலைக்கு மேலாகவே காணப்பட்டது. நிலுவையிலுள்ள பணிகள் ஒகத்து 2017 உடன் ஒப்பிடும் போது செத்தெம்பரில் குறைவடைந்திருந்த வேளையில் புதிய நடவடிக்கைகளும் குறைவடைந்தே காணப்பட்டது. தங்குமிடம், உணவு மற்றும் குடிபான துறையில் காலநிலை சார்ந்த அபிவிருத்திகளின காரணமாக வியாபார நடவடிக்கைகளில் ஒரு குறைவினை பதிவு செய்தது. இணைய தரவு பாவனை மீதான வரிகள் நீக்கமடைதலினால் தொலைத்தொடர்பூட்டல் துறை வியாபார நடவடிக்கைகளில் ஒரு மேம்பாட்டினை எதிர்பார்க்கின்றது. விதிக்கப்பட்ட விலைகள் ஒகத்து 2017 உடன் ஒப்பிடும் போது செத்தெம்பரில் மெதுவான வேகத்தில் அதிகரித்து காணப்பட்டது. தொழிலாளர் செலவிற்கான எதிர்பார்ப்புகள் துணைச்சுட்டெண் ஆண்டு இறுதி பருவகால மிகை ஊதியங்கள் மற்றும் பண்டிகைக்கால முற்பணங்கள் போன்ற அனுகூலங்கள் காரணமாக செத்தெம்பர் 2017 இல் சிறிதளவில் அதிகரித்திருந்தது.