நிதியியல் உளவறிதல் பிரிவினால் 2025 ஒத்தோபர் தொடக்கம் 2026 மாச்சு வரையான அறிக்கையிடல் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட நிர்வாக ரீதியான தண்டப்பணங்கள்

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு, நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் பிரகாரம், நிறுவனங்களின் தொடர்புடைய இணங்கியொழுகாமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றினைப் பரிசீலனையிற்கொண்டு தண்டப்பணங்கள் விதித்துரைக்கப்படலாம். 

அதற்கமைய, பணம் தூயதாக்குதலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துநர் என்ற ரீதியில் நிதியியல் உளவறிதல் பிரிவானது நிறுவனங்களின் இணங்குவிப்பினை நடைமுறைப்படுத்துவதற்கு 2025 ஒத்தோபர் தொடக்கம் 2026 மாச்சு வரையான காலப்பகுதியில் கீழே குறித்துக்காட்டப்பட்டவாறு மொத்தமாக பதினான்கு மில்லியன் அறுநூறு ஆயிரம் ரூபா (ரூ.14,600,000) கொண்ட தொகையினைத் தண்டப்பணமாகச் சேகரித்தது. தண்டப்பணங்களாகச் சேகரிக்கப்பட்ட பணமானது திரட்டு நிதியத்திற்கு வரவுவைக்கப்பட்டது.

அறிக்கையிடல் நிறுவனம்

தண்டப்பணங்கள் மற்றும் இணங்கியொழுகாமைகளின் விபரங்கள்

நிதியியல் நிறுவனங்கள்

எல்பீ பினான்ஸ் பிஎல்சி

விதிக்கப்பட்ட திகதி          : 2025.10.03

தொகை           : ரூ. 1,000,000.00 (ஒரு மில்லியன் ரூபா)

கொடுப்பனவுத் திகதி          : 2025.10.24

தண்டப்பணம் விதிக்கப்பட்டமைக்கான காரணங்கள்: அத்தகைய கொடுக்கல்வாங்கலின் தொகை ரூபா ஒரு மில்லியன் (ரூ.1,000,000) அல்லது ஏதேனும் வெளிநாட்டு நாணயத்தில் அதற்குச் சமமான தொகையினை விஞ்சுகின்றவிடத்து, பரீட்சிப்புக் காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரியிலிருந்து ஒன்பது (09) கொடுக்கல்வாங்கல்களைக் குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதியினுள்  நிதியியல் உளவறிதல் பிரிவிற்கு அறிக்கையிடுவதற்குக் கம்பனி தவறியிருந்தமையினால் நிர்வாக ரீதியான தண்டப்பணம் விதிக்கப்பட்டது. இது தளத்திற்கு வெளியிலான பின்தொடர்தல்சார் பரீட்சிப்பொன்றில் கண்டறியப்பட்டது.

கார்கில்ஸ் பாங்க் பிஎல்சி

விதிக்கப்பட்ட திகதி          : 2025.10.10

தொகை           : ரூ. 2,000,000.00 (இரண்டு மில்லியன் ரூபா)

கொடுப்பனவுத் திகதி          : 2025.10.16

தண்டப்பணம் விதிக்கப்பட்டமைக்கான காரணங்கள்: வங்கி பின்வருவனவற்றைக் கடைப்பிடிப்பதற்குத் தவறியமைக்காக நிர்வாக ரீதியான தண்டப்பணம் விதிக்கப்பட்டது:

i.அத்தகைய கொடுக்கல்வாங்கலின் தொகை ரூபா ஒரு மில்லியன் (ரூ.1,000,000) அல்லது ஏதேனும் வெளிநாட்டு நாணயத்தில் அதற்குச் சமமான தொகையினை விஞ்சுகின்றவிடத்து, பரீட்சிப்புக் காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரியிலிருந்து பதினெட்டு (18) இலத்திரனியல் நிதிய மாற்றல் கொடுக்கல்வாங்கல்களைக் குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதியினுள்  நிதியியல் உளவறிதல் பிரிவிற்கு அறிக்கையிடுதல் மற்றும்

ii.2025.02.20ஆம் திகதியிடப்பட்ட 2424/51ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானம் 1373இற்கிணங்க 2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் ஒழுங்குவிதிகளின் கீழ் பட்டியலிடப்பட்ட பெயர்குறிக்கப்பட்ட ஆட்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் முழுமையான பட்டியல்களினைப் பேணுதல்.

பரிசோதிப்புக் கருவியினுள் பெயர்குறிக்கப்பட்ட பட்டியல்களினை இற்றைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதங்களின் காரணமாக மேற்குறிப்பிடப்பட்ட இடைவெளி ஏற்பட்ட போதிலும், வங்கியின் மூலம் பேணப்படும் பெயர்குறிக்கப்பட்ட தனிப்பட்டவர்கள் அல்லது நிறுவனங்களுடனான வியாபாரத் தொடர்புகளின் எடுத்துக்காட்டல்கள் தளத்திலான பரீட்சிப்புக் காலப்பகுதியில் வெளிப்படுத்தப்படவில்லை.

 

மேற்குறிப்பிடப்பட்ட தவறுகைகள் இடர்நேர்வின் அடிப்படையிலமைந்த தளத்திலான பரீட்சிப்புக் காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டன.

எல்ஓஎல்சி செகுரிடீஸ் லிமிடெட்

விதிக்கப்பட்ட திகதி          : 2025.11.26

தொகை           : ரூ. 1,000,000.00 (ஒரு மில்லியன் ரூபா)

கொடுப்பனவுத் திகதி            : 2025.12.17

தண்டப்பணம் விதிக்கப்பட்டமைக்கான காரணங்கள்: அத்தகைய கொடுக்கல்வாங்கலின் தொகை ரூபா ஒரு மில்லியன் (ரூ.1,000,000) அல்லது ஏதேனும் வெளிநாட்டு நாணயத்தில் அதற்குச் சமமான தொகையினை விஞ்சுகின்றவிடத்து, பரீட்சிப்புக் காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரியில் பன்னிரண்டு (12) இலத்திரனியல் நிதிய மாற்றல் கொடுக்கல்வாங்கல்களைக் குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதியினுள்  நிதியியல் உளவறிதல் பிரிவிற்கு அறிக்கையிடுவதற்குக் கம்பனி தவறியிருந்தமையினால் நிர்வாக ரீதியான தண்டப்பணம் விதிக்கப்பட்டது. இது இடர்நேர்வின் அடிப்படையிலமைந்த தளத்திலான பரீட்சிப்புக் காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டது.

ஜனசக்தி பினான்ஸ் பிஎல்சி

விதிக்கப்பட்ட திகதி          : 2025.12.03

தொகை           : ரூ. 1,000,000.00 (ஒரு மில்லியன் ரூபா)

கொடுப்பனவுத் திகதி          : 2025.12.10

தண்டப்பணம் விதிக்கப்பட்டமைக்கான காரணங்கள்: பரீட்சிப்புத் திகதியிலுள்ளவாறு கம்பனியுடன் ஏதேனும் புதிய வியாபாரத் தொடர்புகளினை ஏற்படுத்துவதற்கு முன்னர் 1968ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்துடன் இசைந்து செல்லும் விதத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஏதேனும் பெயர்குறிக்கப்பட்ட பட்டியல் மீது வாடிக்கையாளராக வரக்கூடிய எவரேனும் காணப்படுகின்றாரா என்பதனை வினைத்திறன்மிக்க விதத்தில் உறுதிப்படுத்துவதற்குக் கம்பனி தவறியிருந்தமையினால் நிர்வாக ரீதியான தண்டப்பணம் விதிக்கப்பட்டது. பெயர்குறிக்கப்பட்ட ஆட்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியல்களிற்கு எதிராகத் தமது வாடிக்கையாளர்களை உறுதிப்படுத்துவதற்கான பொறிமுறையொன்றினைக் கம்பனி கொண்டுள்ள போதிலும், புதிய வியாபாரத் தொடர்புகளினை ஏற்படுத்துகின்ற நேரத்தில் தமது வாடிக்கையாளர்களாக வரக்கூடிய சிலரை உறுதிப்படுத்துவதில் தாமதங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.

முறைமையிலும் நடைமுறையிலும் மேற்குறிப்பிடப்பட்ட இடைவெளி அவதானிக்கப்பட்ட போதிலும், கம்பனியின் மூலம் பேணப்படும் பெயர்குறிக்கப்பட்ட தனிப்பட்டவர்கள் அல்லது நிறுவனங்களுடனான வியாபாரத் தொடர்புகளின் எடுத்துக்காட்டல்கள் தளத்திலான பரீட்சிப்புக் காலப்பகுதியில் வெளிப்படுத்தப்படவில்லை.

மேற்குறிப்பிடப்பட்ட தவறுகை இடர்நேர்வின் அடிப்படையிலமைந்த தளத்திலான பரீட்சிப்புக் காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டது.

சிற்றிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் பினான்ஸ் பிஎல்சி

விதிக்கப்பட்ட திகதி: 2025.12.30

தொகை : ரூ. 3,000,000.00 (மூன்று மில்லியன் ரூபா)

கொடுப்பனவுத் திகதி: 2026.01.19

தண்டப்பணம் விதிக்கப்பட்டமைக்கான காரணங்கள்: கம்பனி பின்வருவனவற்றைக் கடைப்பிடிப்பதற்குத் தவறியமைக்காக நிர்வாக ரீதியான தண்டப்பணம் விதிக்கப்பட்டது:

i.கம்பனியுடன் ஏதேனும் புதிய வியாபாரத் தொடர்புகளினை ஏற்படுத்துவதற்கு முன்னர் 1968ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட ஒழுங்குவிதிகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட பட்டியலில் வாடிக்கையாளர்களாக வரக்கூடிய எவரேனும் காணப்படுகின்றனரா என்பதனை வினைத்திறன்மிக்க விதத்தில் உறுதிப்படுத்தல்.

ii.பட்டியல்கள் இற்றைப்படுத்தப்படுகின்ற போது மற்றும் தொடர்ச்சியானதொரு முறையில், பெயர்குறிக்கப்பட்ட ஆட்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியல்களின் கீழ் பெயர்குறிக்கப்பட்ட எவரேனும் தனிநபர்கள் அல்லது ஏதேனும் நிறுவனங்களுடன் எவ்வித வியாபாரத் தொடர்புகளும் பேணப்படவில்லை என்பதனை நிச்சயப்படுத்துவதற்குத் தற்போதுள்ள வாடிக்கையாளர் தரவுத்தளத்தினை வினைத்திறன்மிக்க விதத்தில் பரிசோதித்தல்.

     முறைமைகள் மற்றும் நடைமுறைகளில் உள்ள மேற்கூறப்பட்ட இடைவெளிகள் காரணமாக, 2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் ஒழுங்குவிதிகளின் (ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானம் 1373) கீழ் பெயர்குறிக்கப்பட்ட மூன்று (3) தனிநபர்களுடன் கம்பனி வியாபாரத் தொடர்புகளினைத் தாபித்துப் பேணியமை குறித்த எடுத்துக்காட்டல்கள் தளத்திலான பரீட்சிப்பின் போது வெளிப்படுத்தப்பட்டன. ஆதலால், கம்பனியானது பின்வரும் விடயங்களில் மேலும் தவறியிருந்தது:

iii.பெயர்குறிக்கப்பட்ட ஆட்களின் வசமுள்ள அனைத்து நிதியங்களை, ஏனைய நிதியியல் சொத்துக்களை மற்றும் பொருளாதார வளங்களை முடக்குதல் மற்றும் 

iv.அத்தகைய வாடிக்கையாளர் பெயர்குறிக்கப்பட்டதோர் ஆளெனக் கண்டறியப்பட்ட நேரத்திலிருந்து 24 மணித்தியாலங்களினுள் உடனடியாக, தமது புத்தகங்களில் அத்தகைய வாடிக்கையாளரின்; வசமுள்ள நிதியங்கள், ஏனைய நிதியியல் சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்களின் முழுமையான விபரங்களை நிதியியல் உளவறிதல் பிரிவிற்கு அறிவித்தல் மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு அத்தகைய தொடர்பூட்டலின் பிரதியொன்றினை அனுப்புதல்.

மேற்குறிப்பிடப்பட்ட தவறுகைகள் உடனடித் தளத்திலான பரீட்சிப்புக் காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டன.

இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்

விதிக்கப்பட்ட திகதி: 2026.01.05

தொகை : ரூ. 1,000,000.00 (ஒரு மில்லியன் ரூபா)

கொடுப்பனவுத் திகதி: 2026.01.21

தண்டப்பணம் விதிக்கப்பட்டமைக்கான காரணங்கள்: வங்கி பின்வருவனவற்றைக் கடைப்பிடிப்பதற்குத் தவறியமைக்காக நிர்வாக ரீதியான தண்டப்பணம் விதிக்கப்பட்டது:

i.அத்தகைய கொடுக்கல்வாங்கலின் தொகை ரூபா ஒரு மில்லியன் (ரூ.1,000,000) அல்லது ஏதேனும் வெளிநாட்டு நாணயத்தில் அதற்குச் சமமான தொகையினை விஞ்சுகின்றவிடத்து, பரீட்சிப்புக் காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரியில் பதின்மூன்று (13) கொடுக்கல்வாங்கல்களைக் குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதியினுள்  நிதியியல் உளவறிதல் பிரிவிற்கு அறிக்கையிடுவதற்கு,

ii.வங்கியொன்றிலிருந்து இன்னுமொரு வங்கிக்கு இலத்திரனியல் வழிமுறையின் ஊடாக பணவனுப்பல் செயன்முறைகளினை மேற்கொள்கின்ற போது 1968ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்திற்கமைய மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் விடுக்கப்பட்ட பெயர்குறிக்கப்பட்ட பட்டியல்களிற்கு எதிராக அனைத்து வாடிக்கையாளர்களையும் உறுதிப்படுத்தல்,

iii.பரீட்சிப்புத் திகதியின் போது வெளியிடப்பட்ட 2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் ஒழுங்குவிதிகள் (ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானம் 1373) மற்றும் 2012ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் ஒழுங்குவிதிகள் (ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானம் 1267) ஆகியவற்றின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளவாறு பெயர்குறிக்கப்பட்ட ஆட்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் இற்றைப்படுத்தப்பட்ட முழுமையான பட்டியலினைப் பேணுதல், மற்றும்

iv.பெயர்குறிக்கப்பட்ட தனிநபர்கள்/நிறுவனங்களின் பட்டியலினை இற்றைப்படுத்துமாறு நிதியியல் உளவறிதல் பிரிவிலிருந்து அறிவித்தல் கிடைக்கப்பெற்றவுடன் உடனடியாகப் பரிசோதிப்பு முறைமையினை இற்றைப்படுத்தல்.

முறைமையிலும் நடைமுறையிலும் மேற்குறிப்பிடப்பட்ட இடைவெளிகள் அவதானிக்கப்பட்ட போதிலும், வங்கியின் மூலம் பேணப்படும் பெயர்குறிக்கப்பட்ட தனிப்பட்டவர்கள் அல்லது நிறுவனங்களுடனான வியாபாரத் தொடர்புகளின் எடுத்துக்காட்டல்கள் தளத்திலான பரீட்சிப்புக் காலப்பகுதியில் வெளிப்படுத்தப்படவில்லை.

மேற்குறிப்பிடப்பட்ட தவறுகைகள் இடர்நேர்வின் அடிப்படையிலமைந்த தளத்திலான பரீட்சிப்புக் காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டன.

சனச லைப் இன்ஷூரன்ஸ் கம்பனி பிஎல்சி

விதிக்கப்பட்ட திகதி: 2026.01.05

தொகை : ரூ. 2,000,000.00 (இரண்டு மில்லியன் ரூபா)

கொடுப்பனவுத் திகதி: 2026.01.26

தண்டப்பணம் விதிக்கப்பட்டமைக்கான காரணங்கள்: கம்பனி பின்வருவனவற்றைக் கடைப்பிடிப்பதற்குத் தவறியமைக்காக நிர்வாக ரீதியான தண்டப்பணம் விதிக்கப்பட்டது:

i.அத்தகைய கொடுக்கல்வாங்கலின் தொகை ரூபா ஒரு மில்லியன் (ரூ.1,000,000) அல்லது ஏதேனும் வெளிநாட்டு நாணயத்தில் அதற்குச் சமமான தொகையினை விஞ்சுகின்றவிடத்து, பரீட்சிப்புக் காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரியில் ஒன்பது (09) காசுக் கொடுக்கல்வாங்கல்களைக் குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதியினுள்  நிதியியல் உளவறிதல் பிரிவிற்கு அறிக்கையிடுவதற்கு,

ii.2012ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் ஒழுங்குவிதிகள் (ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானம் 1373), 2012ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் ஒழுங்குவிதிகள் (ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானம் 1267) மற்றும் 2017ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் (கொரிய சனநாயக மக்கள் குடியரசுடன் தொடர்புடைய தடைகள்) ஒழுங்குவிதிகள் (ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானம் 1718) ஆகியவற்றின் கீழ் வெளியிடப்பட்ட பெயர்குறிக்கப்பட்ட ஆட்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் முழுமையான பட்டியல்களினைப் பேணுதல்,

iii.2424/51ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் மூலம் 2025 பெப்புருவரி 25 அன்று வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானம் 1373இன் கீழ் பெயர்குறிக்கப்பட்ட ஆட்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலினை இற்றைப்படுத்துவதற்கு நிதியியல் உளவறிதல் பிரிவிலிருந்து அறிவித்தல் கிடைக்கப்பெற்றவுடன் உடனடியாக பரிசோதிப்பு முறைமையினை இற்றைப்படுத்;தல்,

iv.குழுக் காப்புறுதிக் கொள்கைகளினை வழங்குகின்ற போது, 2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் ஒழுங்குவிதிகள், 2012ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் ஒழுங்குவிதிகள் மற்றும் 2017ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் (கொரிய சனநாயக மக்கள் குடியரசுடன் தொடர்புடைய தடைகள்) ஒழுங்குவிதிகள் ஆகியவற்றின் கீழ் வெளியிடப்பட்ட பெயர்குறிக்கப்பட்ட ஆட்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியல்களிற்கு எதிராக எவரேனும் வாடிக்கையாளர், வாடிக்கையாளராக வரக்கூடியவர் அல்லது பயன்பெறுநரினை உறுதிப்படுத்தல்,

v.கம்பனியின் வாடிக்கையாளர்களிடையே அடையாளம் காணப்பட்ட அரசியல் ரீதியில் முகங்கொடுக்கின்ற ஆளொருவருடன் மாத்திரம் வியாபாரத் தொடர்பினைத் தாபிப்பதற்கு முன்னர் தேவையான மூத்த முகாமைத்துவ ஒப்புதலினைப் பெற்றுக்கொள்ளல்.

முறைமையிலும் நடைமுறையிலும் மேற்குறிப்பிடப்பட்ட இடைவெளிகள் அவதானிக்கப்பட்ட போதிலும், கம்பனியின் மூலம் பேணப்படும் பெயர்குறிக்கப்பட்ட தனிப்பட்டவர்கள் அல்லது நிறுவனங்களுடனான வியாபாரத் தொடர்புகளின் எடுத்துக்காட்டல்கள் தளத்திலான பரீட்சிப்புக் காலப்பகுதியில் வெளிப்படுத்தப்படவில்லை.

மேற்குறிப்பிடப்பட்ட தவறுகைகள் இடர்நேர்வின் அடிப்படையிலமைந்த தளத்திலான பரீட்சிப்புக் காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டன.

பெயர்குறிக்கப்பட்ட நிதியல்லாத வியாபாரங்கள் மற்றும் தொழில்கள்

கொழும்பு ஜுவல்ரி ஸ்ரோர்ஸ் (பிறைவேட்) லிமிடெட்

விதிக்கப்பட்ட திகதி: 2025.10.11

தொகை : ரூ. 500,000.00 (ஐந்நூறு ஆயிரம் ரூபா)

கொடுப்பனவுத் திகதி: 2025.11.07

தண்டப்பணம் விதிக்கப்பட்டமைக்கான காரணங்கள்: பரீட்சிப்புத் திகதியிலுள்ளவாறு கம்பனிக்கான பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிக்கு நிதியளித்தல் சார்ந்த இடர்நேர்வு மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கு கம்பனி தவறியிருந்தமையினால் நிர்வாக ரீதியான தண்டப்பணம் விதிக்கப்பட்டது. இது இடர்நேர்வின் அடிப்படையிலமைந்த தளத்திலான பரீட்சிப்புக் காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டது.

சேஸ் (பிறைவேட்) லிமிடெட்

விதிக்கப்பட்ட திகதி: 2025.11.19

தொகை : ரூ. 100,000.00 (நூறு ஆயிரம் ரூபா)

கொடுப்பனவுத் திகதி: 2025.12.16

தண்டப்பணம் விதிக்கப்பட்டமைக்கான காரணங்கள்: பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிக்கு நிதியளித்தல் மற்றும் பேரழிவுமிக்க ஆயுதப் பெருக்கம் மற்றும் அதற்கு நிதியளித்தல் தொடர்பான இலக்கிடப்பட்ட நிதியியல் தடைகள் குறித்த ஏதேனும் பெயர்குறிக்கப்பட்ட பட்டியலுடன் தொடர்புடைய 1968ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்துடன் இசைந்து செல்லும் விதத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானங்களின் கீழ் விடுக்கப்பட்ட ஏதேனும் பெயர்குறிக்கப்பட்ட பட்டியலிற்கு எதிராக வாடிக்கையாளர்கள் அல்லது பயன்பெறுநர்களைக் கம்பனி உறுதிப்படுத்தத் தவறியமைக்காக நிர்வாக ரீதியான தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

முறைமையிலும் நடைமுறையிலும் மேற்குறிப்பிடப்பட்ட இடைவெளி அவதானிக்கப்பட்ட போதிலும், கம்பனியின் மூலம் பேணப்படும் பெயர்குறிக்கப்பட்ட தனிப்பட்டவர்கள் அல்லது நிறுவனங்களுடனான வியாபாரத் தொடர்புகளின் எடுத்துக்காட்டல்கள் தளத்திலான பரீட்சிப்புக் காலப்பகுதியில் வெளிப்படுத்தப்படவில்லை.

மேற்குறிப்பிடப்பட்ட தவறுகை இடர்நேர்வின் அடிப்படையிலமைந்த தளத்திலான பரீட்சிப்புக் காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டது.

சுவர்ணமஹால் ஜுவலர்ஸ் லிமிடெட்

விதிக்கப்பட்ட திகதி: 2026.02.17

தொகை : ரூ. 2,000,000.00 (இரண்டு மில்லியன் ரூபா)

கொடுப்பனவுத் திகதி: 2026.03.10

தண்டப்பணம் விதிக்கப்பட்டமைக்கான காரணங்கள்: கம்பனி பின்வருவனவற்றைக் கடைப்பிடிப்பதற்குத் தவறியமைக்காக நிர்வாக ரீதியான தண்டப்பணம் விதிக்கப்பட்டது:

i.தேவையான வாடிக்கையாளர் உரிய விழிப்புக்கவனம் சார்ந்த வழிமுறைகளினை மேற்கொள்ளும் நோக்கத்திற்காக வாடிக்கையாளர்கள் மற்றும் பயன்பெறு உரிமையாளர்கள் குறித்த தகவல்களினைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் வாடிக்கையாளர்கள் மற்றும் பயன்பெறு உரிமையாளர்களின் அடையாளத்தினை உறுதிப்படுத்தல்,

ii.வாடிக்கையாளர்கள் மற்றும் பயன்பெறு உரிமையாளர்களின் அடையாளம் சார்ந்த ஆவணங்களின் பதிவுகளினைப் பேணுதல் மற்றும் வைத்திருத்தல்,

iii.பரீட்சிப்புத் திகதியிலுள்ளவாறு, கம்பனிக்கான பணம் தூயதாக்கல்ஃபயங்கரவாதிக்கு நிதியளித்தல் சார்ந்த இடர்நேர்வு மதிப்பீட்டினை மேற்கொள்ளல்,

iv.பரீட்சிப்புத் திகதியிலுள்ளவாறு, பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிக்கு நிதியளித்தல் மற்றும் பேரழிவுமிக்க ஆயுதப் பெருக்கம் மற்றும் அதற்கு நிதியளித்தல் தொடர்பான இலக்கிடப்பட்ட நிதியியல் தடைகள் தொடர்பில் 1968ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்துடன் இசைந்து செல்லும் விதத்தில் தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது குழுக்களின் ஏதேனும் பெயர்குறிக்கப்பட்ட பட்டியலிற்கு எதிராக வியாபாரத் தொடர்புகளினைத் தாபிக்கின்ற நேரத்தில் வாடிக்கையாளர்களினை உறுதிப்படுத்தல்.

முறைமையிலும் நடைமுறையிலும் மேற்குறிப்பிடப்பட்ட இடைவெளிகள் அவதானிக்கப்பட்ட போதிலும், கம்பனியின் மூலம் பேணப்படும் பெயர்குறிக்கப்பட்ட தனிப்பட்டவர்கள் அல்லது நிறுவனங்களுடனான வியாபாரத் தொடர்புகளின் எடுத்துக்காட்டல்கள் தளத்திலான பரீட்சிப்புக் காலப்பகுதியில் வெளிப்படுத்தப்படவில்லை.

மேற்குறிப்பிடப்பட்ட தவறுகைகள் இடர்நேர்வின் அடிப்படையிலமைந்த தளத்திலான பரீட்சிப்புக் காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டன.

ஹாபர் விலேஜ் (பிறைவேட்) லிமிடெட்

விதிக்கப்பட்ட திகதி: 2026.03.18

தொகை : ரூ. 1,000,000.00 (ஒரு மில்லியன் ரூபா)

கொடுப்பனவுத் திகதி: 2026.04.09

தண்டப்பணம் விதிக்கப்பட்டமைக்கான காரணங்கள்: கம்பனி பின்வருவனவற்றைக் கடைப்பிடிப்பதற்குத் தவறியமைக்காக நிர்வாக ரீதியான தண்டப்பணம் விதிக்கப்பட்டது:

i.பரீட்சிப்புத் திகதியிலுள்ளவாறு, பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிக்கு நிதியளித்தல் மற்றும் பேரழிவுமிக்க ஆயுதப் பெருக்கம் மற்றும் அதற்கு நிதியளித்தல் தொடர்பான இலக்கிடப்பட்ட நிதியியல் தடைகள் தொடர்பில் 1968ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்துடன் இசைந்து செல்லும் விதத்தில் பெயர்குறிக்கப்பட்ட ஆட்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் ஏதேனும் பெயர்குறிக்கப்பட்ட பட்டியலிற்கு எதிராக வியாபாரத் தொடர்புகளினைத் தாபிக்கின்ற நேரத்தில் அல்லது வியாபாரத் தொடர்புகளினைத் தொடரும் போது வாடிக்கையாளர்களினை உறுதிப்படுத்தல்,

ii.பரீட்சிப்புத் திகதியிலுள்ளவாறு, பெயர்குறிக்கப்பட்ட பட்டியல்கள் காலத்திற்குக் காலம் இற்றைப்படுத்தப்படுகின்ற போது வியாபாரத் தொடர்புகளினைத் தாபித்துள்ள வாடிக்கையாளர்களினை உறுதிப்படுத்துவதற்கான பொறிமுறையொன்றினை நடைமுறைப்படுத்தல்.

முறைமையிலும் நடைமுறையிலும் மேற்குறிப்பிடப்பட்ட இடைவெளிகள் அவதானிக்கப்பட்ட போதிலும், கம்பனியின் மூலம் பேணப்படும் பெயர்குறிக்கப்பட்ட தனிப்பட்டவர்கள் அல்லது நிறுவனங்களுடனான வியாபாரத் தொடர்புகளின் எடுத்துக்காட்டல்கள் தளத்திலான பரீட்சிப்புக் காலப்பகுதியில் வெளிப்படுத்தப்படவில்லை.

மேற்குறிப்பிடப்பட்ட தவறுகைகள் தளத்திலான பின்தொடர்தல்சார் பரீட்சிப்புக் காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டன.

PDF

 

Published Date: 

Monday, July 20, 2026