இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது நிதியியல் கணக்கிற்கான அதிகரித்த ஏற்றுமதிகள் மற்றும் உட்பாய்ச்சல்களினால் தொடர்ந்தும் மேம்பாடடைந்தது. எனினும், ஏற்றுமதி வருவாய் அதிகரித்தமைக்கு மத்தியிலும் உயர்ந்தளவான இறக்குமதிச் செலவினங்கள் காரணமாக, 2017 யூலையில் வர்த்தகப் பற்றாக்குறையானது 2016இன் இதையொத்த மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் விரிவடைந்துள்ளது. யூலையில் தொழிலாளர் பணவனுப்பல்கள் அதிகரித்த வேளையிலும் சுற்றுலா வருவாய்கள் சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது, கடந்த நான்கு மாதங்களில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சிப் போக்கினை மாற்றியுள்ளது. அரச பிணையங்கள் சந்தை, அரசாங்கத்திற்கான நீண்ட காலக் கடன்கள், பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் 3ஆம் கட்டப் பெறுவனவுகள் போன்றவற்றின் தேறிய உட்பாய்ச்சல்கள் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனைக்கான தொடர்ச்சியான சொத்துப்பட்டியல் முதலீட்டு உட்பாய்ச்சல்கள் ஆகியவற்றின் மூலம் நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல்கள் தொடர்ந்தும் வலுவடைந்தது.
Thursday, September 28, 2017