2017 யூனில் குறிப்பிடத்தக்களவு மேம்பட்ட வர்த்தக மீதி மற்றும் அரச பிணையங்கள் சந்தைக்கான தொடர்ச்சியான உட்பாய்ச்சல் என்பவற்றின் மூலம் இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது புத்துயிர் பெற்ற அடையாளத்தினைக் காட்டியது. 2017 யூனில் கைத்தொழில் மற்றும் வேளாண்மை ஏற்றுமதிகளின் கணிசமானதொரு வளர்ச்சி மற்றும் நுகர்வு மற்றும் இடைநிலைப்பொருட்களின் இறக்குமதிகளிலானதொரு வீழ்ச்சி ஆகியன வர்த்தக மீதியில் குறிப்பிடத்தக்களவு மேம்பாட்டினைத் தோற்றுவித்தது. நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல்களானது அரச பிணையங்கள் சந்தைக்கான உறுதிமிக்க உட்பாய்ச்சல்களாகக் கருதப்பட்ட வேளையில், இம்மாத காலப்பகுதியில் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் வெளிநாட்டு முதலீடுகளும் சாதகமாக மாறாதிருந்தது. தொழிலாளர் பணவனுப்பல்களின் வீழ்ச்சியின் மூலம், நடைமுறைக் கணக்கிற்கான ஏனைய முக்கிய பெறுவனவுகள் மாறாது மிதமடைந்த வேளையில் சுற்றுலா வருவாய்களும் மிதமானதொரு வளர்ச்சியை பதிவுசெய்தது. நிதியியல் கணக்கின் சாதகமான அபிவிருத்திகளும் ஏற்றுமதி வருவாய்களின் படிப்படியான வளர்ச்சியும் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையினை நிலைப்படுத்தியதுடன் ஆண்டின் ஆரம்பித்ததுடன் ஒப்பிடுகையில் 2017 யூன் மாதமளவில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளில் ஓர் அதிகரிப்பினைத் தோற்றுவித்தது.
Friday, August 25, 2017