தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைகக் ளத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2017 யூலையிலும் முன்னைய மாதத்தில் காணப்பட்ட அதே மட்டமான 6.3 சதவீதத்தில் மாறாது விளங்கியது. 2017 யூலையின் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கத்துக்கு உணவு மற்றும் உணவல்லா வகை இரண்டும் முக்கியமாக பங்களித்தன.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 யூனின் 6.1 சதவீதத்திலிருந்து 2017 யூலையின் 6.2 சதவீதத்துக்கு சிறிதளவால் அதிகரித்தது.
மாதாந்த மாற்றத்தினை நோக்கும் போது, 2017 யூலையில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணானது 2017 யூனின் 123.4 சுட்டெண் புள்ளியிலிருந்து 122.4 சுட்டெண் புள்ளிக்கு வீழ்ச்சியடைந்தது. இம்மாதாந்த வீழ்ச்சிக்கு உணவு வகையிலுள்ள பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே முக்கிய காரணமாகும். இம்மாத காலத்தில் உணவு வகையிலுள்ள் தேங்காய்கள், காய்கறிகள், உடன்மீன், பச்சைமிளகாய், வெள்ளைப்பூடு மற்றும் சின்னவெங்காயம் என்பனவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்தன. உணவல்லா வகையில் சுகாதாரத் துணைத்துறை வீழ்ச்சியயொன்றைப் பதிவுசெய்தது. ஆடை மற்றும் காலணி; தளபாடங்கள், வீட்டலகுச் சாதனங்கள், வழமையான வீட்டுப் பேணல்; போக்குவரத்து (பஸ் கட்டணம்) மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணைத் துறைகளில் விலைகள் அதிகரித்தன. 2017 யூலையில் வெறிமங்கள் குடிவகைகள் மற்றும் புகையிலைத் (பாக்கு) துணை வகைகளின் விலைகளும் அதிகரித்தன. இதேவேளை; வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு, ஏனைய எரிபொருள்; தொடர்பூட்டல்; பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம்; கல்வி மற்றும் சிற்றூண்டிச்சாலை மற்றும் சுற்றுலாவிடுதி போன் துணை வகைகளில் விலைகள் மாதகாலப்பகுதியில் மாற்றமடையாமல் காணப்பட்டது.
பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2017 யூனின் 4.1 சதவீதத்திலிருந்து 2017 யூலையில் 4.2 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்து. 2017 யூலையில் ஆண்டுச் சராசரி தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2017 யூனின் 6.1 சதவீதத்திலிருந்து 5.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.