தேசிய கொடுப்பனவுத் தளம் தொடர்பான இலங்கை மத்திய வங்கியின் பார்வைகள்

'டோடல் பே மற்றும் ஐசிரிஏ" தொடர்பில் சுற்றோட்டத்தில் விடப்பட்ட செய்திக் கடடு;ரைகளுக்கு பதிலிறுத்தும் விதத்தில், தேசிய கொடுப்பனவுத் தளம் மறுசீரமைப்பது தொடர்பிலான தற்போதைய நிலைமைகளின் முழுமையான விளக்கத்தினை வழங்கும் நோக்குடன் நிகழ்வுகளின் உண்மைத் தன்மையினை வழங்குவதற்கும் பொதுமக்களை தெளிவுபடுத்தவதற்கு இலங்கை மத்திய வங்கி விரும்புகின்றது.  

13.05.2016 அன்று மத்திய வங்கியில் தேசிய கொடுப்பனவுத் தளமானது அறிமுகப்படுத்தப்பட்ட போது அது தொடர்பான மேலதிகத் தகவல்களை இலங்கை மத்திய வங்கி கோரியதுடன் இக்கோரலானது முறைமை அபிவிருத்தி, தொழிற்பாட்டு கைநூல்கள், முறைமை பாதுகாப்பு, முறைமைசார் நியமங்களுடனான இணங்குவிப்பு மற்றும் வெளியக முறைமைக் கணக்காய்வுக் கடட்மைப்பு போன்றவற்றின் மீதான விபரங்களை திரட்டும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கோரலானது தேசிய கொடுப்பனவுத் தளம் தொடர்பான மேலதிக அறிவினை பெற்றுக்கொள்வதற்காக ஒரே தடவையில் மேற்கொள்ளப்பட்டது. எனவே இலங்கை மத்திய வங்கியானது அதன் சாத்தியத்தன்மை மீது அறிவிக்கப்பட்டதொரு தீர்மானத்தை மேற்கொண்டது இருப்பினும், இன்றுவரை ஐசிரிஏ இலிருந்து அத்தகைய கரிசனைகள் தொடர்பில் எந்தவித பதிலிறுப்புக்களும் கிடைக்கப்பெறவில்லை. எனவே, எழுப்பப்பட்டுள்ள கரிசனைகள் வாடிக்கையாளர் கொடுக்கல்வாங்கல், தகவல் பாதுகாப்பு போன்றவற்றில் தாக்கமொன்றினைக் கொண்டுள்ள போதிலும், ஐசிரிஏ இலிருந்து எந்தவித பதில்களும் கிடைக்காமையினால் தேசியக் கொடுப்பனவுத் தளத்தின் ஆற்றல்கள் மீது இலங்கை மத்திய வங்கி விமர்சனம் தெரிவிக்கும் நிலையில் இல்லை. 

தேசியக் கொடுப்பனவுத் தளம் அல்லது ஏதேனும் கொடுப்பனவுத் தளமானது நாட்டினுடாக நிதியியல் உறுதிப்பாட்டில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தினைக் கொண்டிருப்பதனால், உலகின் ஏனைய பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதனைப் போன்ற ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என நாங்கள் விபரிக்க விரும்புகின்றோம். தளம் மற்றும் ஒருங்கிணைந்த முறைகள் பொதுமக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான பாதுகாப்பு வழிமுறைகளை கொண்டிருப்பதனையும், ஒட்டுமொத்தமாக நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பேணுவதனையும் உறுதிப்படுத்துவதற்காக ஒழுங்குபடுத்துநர்களின் பங்கு முக்கியமானதாகக் காணப்படுகிறது.

தேசிய கொடுப்பனவுத் தளமானது கொடுப்பனவுக் கோரலொன்றில் உள்ளடக்கக்கூடிய செய்தியனுப்புதலுக்கான ஓர் ஆரம்பத் தளமென பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும், கொடுப்பனவுச் செய்தி அனுப்புதல் போன்ற பணிகள் கொடுப்பனவுக் கொடுக்கல்வாங்கல்களின் நோக்குகளின் கீழ் காணப்படுவதுடன் அதனால் இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குவிதிகளுக்கு உட்பட்டு காணப்படுகின்றதெனவும் இலங்கை மத்திய வங்கி வலியுறுத்த விரும்புகிறது. மேலும், தேசிய கொடுப்பனவுத் தளமானது கொடுப்பனவு மற்றும் கொடுத்துத்தீர்த்தல் முறைமையின் கலவையொன்றினைக் கொண்டிருப்பதால், இது இயல்பாகவே இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குவிதிகள் மற்றும் மேற்பார்வையின் கீழ் காணப்படல் வேண்டும். 

இலங்கை மத்திய வங்கியானது நாட்டின் கொடுப்பனவு முறைமையின் மேலதிக அபிவிருத்திக்குப் பொறுப்பானதாகும். இது, பொருளாதாரத்தின் டிஜிடட்ல் மேம்பாட்டினைத் தடுக்கும் நோக்கமெதுவுமில்லை. இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பின் கீழ் இலங்கையானது அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையினை இப்பிராந்தியத்தில் 2003 நடைமுறைக்கிட்ட முதலாவது நாடாகக் காணப்பட்டதுடன் ஏனைய அயல் நாடுகளுக்கு முன்மாதிரியாகவும் காணப்படுகின்றது. அண்மைக் காலப்பகுதிகளில் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட ஏனைய அபிவிருத்தி தொடர்பான பங்களிப்புக்கள் சிலவற்றைக் கீழ்வருவன விளக்குகின்றன:

  1. 2004ஆம் ஆண்டு - லங்கா செக்குயர் - அரச பிணையங்கள் மற்றும் மத்திய வங்கிப் பிணையங்களின் தீர்ப்பனவு செய்தல் உரிமையாண்மையினைப் பதிவுசெய்தல் போன்றவற்றிறகு; வசதியளிப்பதற்காக பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமை மற்றும் பத்திரங்களற்ற பிணைய வைப்பக முறைமை போன்றவற்றை கொண்டுள்ளது. 
  2.  2006ஆம் ஆண்டு - தேசிய அளவிலான T + 1 காசோலை தீர்ப்பனவு - தெற்காசிய முதலாவது/ உலகின் இரண்டாவது - இது, காசோலை செயற்பாடடு; காலத்தினை ஒரு வாரத்திற்கும் அதிகமான நாட்களிலிருந்து ஒரு வேலை நாளுக்குள் குறைந்துள்ளதுடன் ரூ.10 றில்லியனுக்கு அதிகமான பெறுமதியைக் கொண்ட 52 மில்லியன் காசோலைகளை நடைமுறையில் தீர்ப்பனவு செய்துள்ளது.
  3. 2009ஆம் ஆண்டு - 'லங்காசைன்" இன் ஆரம்பம் - இலங்கையின் வர்த்தக ரீதியான தொழிற்பாட்டுச் சான்றிதழ் அதிகாரத்திற்கு மட்டும் - நடைமுறையில் அனைத்து வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள், வர்த்தக சங்கம் மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை போன்றன இலத்திரனியல் சான்றிதழினைப் பெற்றுள்ளன.
  4. 2010ஆம் ஆண்டு - தேசிய அளவிலான அதே நாள் இலத்திரனியல் நிதிய பரிமாற்றம் (சிலிப்ஸ்) தெற்காசியாவின் முதலாவது - நடைமுறையில், ஓர் ஆண்டில் ரூ.1.6 றில்லியனுக்கும் அதிகமான பெறுமதி கொண்ட 26 மில்லியனுக்கும் அதிகமான வங்கிகளுக்கிடையிலான சிலிப்ஸ் கொடுக்கல்வாங்கல்கள், செயற்படுத்தப்படுகின்றன. 
  5. 2013ஆம் ஆண்டு - 'லங்காபே" பொது தன்னியக்கக் கூற்றுப் பொறி வலையமைப்பின் ஆரமப்ம் - அனைத்து வங்கிகள் மற்றும் ஒரு சில வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களை இணைத்துள்ளதுடன் ஏறத்தாழ 4000 தன்னியக்கக் கூற்றுப் பொறிகளை தனது வலையமைப்பில் கொண்டுள்ளது. இது நாட்டிலுள்ள அனைத்து தன்னியக்கக் கூற்றுப் பொறிகளின் 99.5% மாகக் காணப்படும் வேளையில் ஓர் ஆண்டில் ரூ.214 பில்லியன் பெறுமதிக்கும் அதிகமான 38 மில்லியனுக்கும் அதிகமான கொடுக்கல்வாங்கல்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
  6. 2014ஆம் ஆண்டு - வங்கிக் கணனிப் பாதுகாப்பு நிகழ்வு பதிலளிக்கும் குழு ஆரமப்pக்கப்பட்டதுடன் 2015இல் அது நிதியியல் கணனிப் பாதுகாப்பு நிகழ்வு பதிலளிக்கும் குழு என மீளப் பெயரிடப்பட்டது - தெற்காசியாவின் முதலாவது - இலங்கை மத்திய வங்கியினால் தலைமை வகிக்கப்பட்டு வழிநடத்தும் குழுவின் கீழ் தொழிற்படுவதுடன், நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை உறுதிப்படுத்துவதற்காக SLCERT, SLBA, SLBA நியமன வங்கிகள் மற்றும் லங்கா கிளியர் போன்றவற்றிலான பிரதிநிதித்துவத்தினையும ;கொண்டுள்ளது. 
  7. 2015ஆம் ஆண்டு - பொது இலதத்pரனியல் நிதிய பரிமாற்ற ஆழியின் ஆரம்பம் - நடைமுறையில் இம்முறைமையூடாக ஆண்டொன்றில் ரூ.135 பில்லியனுக்கும் அதிக பெறுமதியான 1.7 மில்லியனுக்கும் அதிகமான கொடுக்கல்வாங்கல்கள் பரிமாற்றப்பட்டுள்ளன. 
  8. 2015ஆம் ஆண்டு - பொது விற்பனை மைய ஆழியின் ஆரம்பம் - நடைமுறையில் இம்முறைமையானது தயார் நிலையில் உள்ளதுடன், 2018 ஆரம்பத்தில் குறைந்தளவான செலவுக் கடட் மைப்பு மூலம் அட்டைகள் வழங்குதலை ஆரம்பிப்பதற்கு வங்கிகளை 2017 இறுதியளவில் இயலச்செய்யும். 
  9. 2015ஆம் ஆண்டு - பொது செல்லிட ஆழி - நடைமுறையில் இவ்வாழியானது தயார்நிலையிலுள்ள வேளையில், அனைத்து வங்கிகள் மற்றும் செல்லிட தொழிற்பாட்டாளர்கள் இச்சேவையில் இணைந்து கொள்ளும் செயற்பாட்டில் உள்ளனர். 
  10. 2015ஆம் ஆண்டு - அதேநேர ஐ.அ.டொலர் ஆரம்பம் - குறைந்த செலவில் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்வதற்காக நொஸ்ரோ கணக்கொன்றிற்குள் செல்லாது உள்நாடடு; வங்கிகளுக்கிடையில் ஐ.அ.டொலர் கொடுப்பனவுகளை முகாமைசெய்வதற்காக வங்கிகளுக்கான ஒரு முறைமை. 
  11. 2016ஆம் ஆண்டு - 'யஸ்ட்பே" அறிமுகம் - குறைந்த விசேட கட்டணத்தில் பொது இலத்திரனியல் நிதியப் பரிமாற்ற ஆழியின் தன்மைகளைப் பயன்படுத்தும் சிமாட ; செல்லிடத் தொலைபேசிகள் மற்றும் ஏனைய சிமாட ;கருவிகளைப் பயன்படுத்தி அவர்களுடைய கணக்குகளிலிருந்து சில்லறைக் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு வாடிக்கையாளர்களை இயலச்செய்கின்றது. 
  12. 2016ஆம் ஆண்டு - காசோலைப் பிரதிமை மற்றும் துணிதல் முறைமையின் அதேநேர பயன்முறையின் ஆரம்பம் - தெற்காசியாவின் முதலாவது - வங்கிகள் அதேநேர அடிப்படையில் காசோலைகளின் பிரதிமையைப் பரிமாற்றக்கூடிய காசோலைப் பிரதிமை மற்றும் துணிதல் முறைமையின் அதேநேரப் பரிமாற்று பயன்பாடு அறிமுகம். 
  13. 2017ஆம் ஆண்டு  - அதேநேர கொடுப்பனவுத் தள ஆரம்பம் - வாடிக்கையாளர் வெளிப்பாடுகளின் அதேநேர கொடுப்பனவுக்கு வசதியளித்தல், இது அரசாங்க சேவைக்கான ஏனைய கொடுப்பனவுகளுக்காக விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
  14.  2017ஆம் ஆண்டு - தேசிய அட்டைத் திட்டம் - புதிய பற்று அட்டைத் திட்டமொன்றினை வழங்குவதற்காக தேசிய அட்டை முறைமையினை நிறுவுதல்.

இலங்கை மத்திய வங்கியானது டிஜிட்டல் கொடுப்பனவு முறைகளை விருத்திசெய்ய முயலுகின்ற வேளையில் நியமங்களினை பேணுவதுடன் அரச தகவல் மற்றும் நிதியியல் முறைமைகளின் பாதுகாக்கின்றது. மேலும், இலங்கை மத்திய வங்கியானது அபிவிருத்திகளைத் தொடர்ச்சியாக கண்காணித்து வருவதுடன், தொழில்நுட்ப புத்தாக்கங்களுக்கு இணையாக பேணவும் முயல்கின்றது. தேசிய கொடுப்பனவுத் தளத்தின் ஒழுங்குபடுத்தல் விடயப்பரப்பின் மீதான வினாக்களுக்கு போதியளவான விளக்கத்தினைக் கொண்டுள்ள தற்போதைய, 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டம், 2005ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க கொடுப்பனவு மற்றும் கொடுத்துத்தீர்த்தல் சட்டம் போன்றவற்றின் மீது, இத்தகைய கரிசனைகளைக் கல்வியூட்டுவதற்காக இலங்கை மத்திய வங்கி விரும்புகின்றது. மேலும், நன்றாக தெரிந்தவகையில், சட்டங்களானது தொடர்ச்சியாக உருவாகி வரும் தொழில்நுட்ப மேம்பாடுகளை உள்ளடக்கிக் கொள்வதற்காக நாளாந்த அடிப்படையில் விதிக்கப்படுவதில்லை. எனினும், அவை பொதுமக்களின் நலன்களை பாதுகாப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் நிகழ்கால மற்றும் எதிர்கால தொழில்நுட்ப மேம்பாடுகளையும; சூழ்ந்துள்ளது. ஒழுங்குபடுத்தல் நோக்கங்களுக்காக, கொடுப்பனவு முறைமையின் பாதுகாப்பு, உண்மைத்தன்மை மற்றும் காத்திரத்தன்மை போன்றவற்றினை மேம்படுத்துவதன் மூலமும் இணைந்துள்ள ஆபத்துக்களை கட்டுப்படுத்துவதன் மூலமும் முழு நிதியியல் முறைமையின் ஒட்டுமொத்த உறுதித்தன்மைக்கு விதியளிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி கொள்கைகளை வடிவமைத்து அவற்றைத் தேசிய மட்டத்தில் நடைமுறைக்கிடுகின்றது.   

டிஜிட்டல் பொருளாதாரமொன்றினை நடைமுறைக்கிடும் நோக்கில், புதிய கண்டுபிடிப்புக்களை ஊக்கப்படுத்த வேண்டியது கட்டாயமானதாகும் என இலங்கை மத்திய வங்கி பலமாக நம்புகின்றது. எனினும், நாட்டினது நீண்டகால நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்திக்காக கொடுப்பனவு முறைமைச் சூழ்நிலைகளின் பாதுகாப்பு, காத்திரத்தன்மை மற்றும் வினைத்திறன் போன்றவற்றை பேணுதலும் ஊக்கப்படுத்தும் நோக்கில் தற்போதைய ஒழுங்குவிதிகளினைப் பின்பற்றுதல் முக்கியமானதாகும். இதன்படி, இலங்கை மத்திய வங்கியானது ஒரு நிலையான நிதியியல் முறைமையூடாக நாட்டினது பொருளாதார வளர்ச்சியினை உறுதி செய்வதற்காக கொடுப்பனவு முறைமைகளின் நேர்மைத்தன்மையினைத் தொடர்ந்தும் பேணும்.

Published Date: 

Tuesday, August 15, 2017